Wednesday 5 July 2017

MADURAI SULTANATES 1335-1378 மதுரை சுல்தானகம்


MADURAI SULTANATES 1335-1378 
மதுரை சுல்தானகம்



மதுரை சுல்தானகம் 1335 -1378
, பதினான்காம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு செயல்பட்ட ஒரு சிற்றரசாகும். பாண்டிய பேரரசு வீழ்ச்சியடைந்தபின் நடைபெற்ற இஸ்லாமிய படையெடுப்புகளால் தோன்றிய இந்த சுல்தானகம், பின்னர் விஜயநகரப் பேரரசின் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது. இதுவே தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்த ஒரே இஸ்லாமிய அரசு.[

பின்புலம்[தொகு]
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் (1268 – 1308) மரணத்திற்கு பிறகு, அவரது மகன்கள் சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையே உள்நாட்டுப் போர் மூண்டது. இஸ்லாமிய வரலாற்றாளர்கள் அப்துல்லா வசாஃப், அமீர் குஸ்ரோ ஆகியோரின் குறிப்புகள், வீரபாண்டியன் அந்தப் போரில் டெல்லி சுல்தானகத்தின் படைத் தலைவர் மாலிக் கஃபூரின் துணையை நாடினார் என்று கூறுகின்றன. இதனால் கஃபூரின் படைகள் கி. பி. 1310-11ல் மதுரையைக் கைப்பற்றி சூறையாடின. இதன் பின்னால், பாண்டிய உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடை பெற்றது. மேலும் இருமுறை டெல்லி சுல்தானகப் படைகள் குஸ்ராவ் கான் தலைமையிலும் (1318), உலூக் கானின் (1323) தலைமையிலும் மதுரையை சூறையாடின. உலூக்கான் மதுரையை டெல்லி சுல்தானகத்துடன் இணைத்து விட்டார். பாண்டிய நாடு, மாபார் என்ற பெயருடன் டெல்லி சுல்தானகத்தின் ஐந்து தென்னிந்திய பிரதேசங்களுள் (மாபார், தேவகிரி, டிலிங்க், கம்பிலி, துவாரசமுத்திரம்) ஒன்றாகியது.[2][2][3]
1325 ஆம் ஆண்டு உலூக் கான் முகமது பின் துக்ளக் என்ற பெயருடன் டெல்லி சுல்தானாக முடி சூடினார். பாரசீகம் மற்றும் கொரோசான் (தற்கால ஆஃப்கானிஸ்தான்) நாடுகளின் மீது அவரது படையெடுப்பு முயற்சிகள் அவரது கருவூலத்தைக் காலி செய்தன. இதனால் அவரது படையினருக்கு ஊதியம் சரிவர வழங்க இயலவில்லை. அவரது பேரரசின் எல்லையோரப் பிரதேசங்கள் பிரிந்து செல்ல ஆரம்பித்தன. முதலில் வங்காளம் போர்க்கொடி தூக்கியது. பின்னர் மாபார் ஆளுனர் ஜலாலுதீன் ஆசன் கான் மதுரையை சுதந்திர நாடாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான 1335 ஆம் ஆண்டே மதுரை சுல்தானகம் தோன்றிய ஆண்டாகக் கருதப்படுகிறது, சுல்தானகம் வெளியிட்ட நாணயங்களும் இவ்வாண்டே தொடங்குகின்றன. ஆனால் பாரசீக வரலாற்றாளர் ஃபிரிஷ்தா 1340 ஆம் ஆண்டு மாபார் பிரிந்து போனதாக குறிப்பிட்டுள்ளார்.[3
சுல்தான்கள்[தொகு]
ஜலாலுதீன் ஆசன் கானின் நாணயம்


ஜலாலுதீன் ஆசன் கான், மதுரையின் முதல் சுல்தான் 1335 ஆவார். இவரது மகன் இப்ராஹீம் டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக்கிடம் பணியாற்றினார். மாபார் பிரிந்து சென்ற செய்தியை கேட்டவுடன் ஆத்திரம் அடைந்த  துக்ளக் மகன்  இப்ரஹீமை ரம்பத்தினால் அறுத்து கொடுமைப்படுத்தி கொலை செய்தார்.
துக்ளக் நியமித்த ஆட்களை கொன்று வஞ்சம் தீர்த்தான் .கருணை மிகுந்த இறைவனின் பேருதவியை நம்பும் அசன்ஷா சுல்தான் என்று பெயர் பொறித்து புதிய சகாப்தத்தை தொடங்கினான்    

 பெரும் படையுடன் மாபாரை மீண்டும் கைப்பற்ற தெற்கு நோக்கி கிளம்பினார். 

முகமது பின் துக்ளக்கி ஆனால் வழியில் உடல் நலக்குறைவினால் படையெடுப்பை கைவிட நேர்ந்தது. ஜலாலுதீனின் ஆட்சிக்கு வந்த ஆபத்து நீங்கியது. 

 ஜலாலுதீனின் மகளை மொரோக்கோ நாட்டின் வரலாற்றாளர் இப்னு பதூதா மணந்திருந்தார். 1340 ஆம் ஆண்டு ஜலாலுதீன் அவருடை பிரபு (சிற்றரசர்) அலாவுதீன் உதாஜியால்  கொலை செய்யப்பட்டார்.


அலாவுதீன் உதாஜி, 1340-41
உதவ்ஜிக்கும் மூன்றாம் வல்லாள தேவனுக்கும்  உதவ்ஜி வெற்றி பெற்றான் .அவ்வேளையில் உதவ்ஜி தண்ணீர் குடிக்க தன் தலைக்கவசத்தை கழட்டினான் .அப்போது எதிர்பாராத வகையில் அம்பு ஒன்று கண்ணில் தாக்க  உதவ்ஜி  உயிர் இழந்தான் 

குதுப்துதீன் ஃபிரோஸ் 40 DAYS
அலாவுதீன் உதாஜி, யின் மருமகன் இவன் .அரியணையில் வீற்றிருந்தார் .வெறும் 40  நாட்களிலே மரணம் அடைந்தான் . கொன்றவர் மருமகன் கியாசுதீன் தம்கானி 

கியாசுதீன் தம்கானி

 கியாத்துதீன் முகமது தம்கானியின் ஆட்சியின் கீழ் வந்தது. இபுன் பத்தூதா கியாத்துதீனின் ஆட்சி காலத்தில் மதுரைக்கு வந்தார். அவரது குறிப்புகள் கியாத்துதீன் ஆட்சி ஒரு கொடுங்கோலனின் ஆட்சி என்று வர்ணிக்கின்றன. கியாத்துதீன், போசள மன்னர் மூன்றாம் வீர வல்லாளன் மோதினார். முதலில் தோல்வி அடைந்தாலும் பின்னர் கண்ணனூர் கொப்பம் கோட்டையின் முற்றுகையின் (1343) போது வல்லாளரை சிறைபிடித்தார். வல்லாளரைக் கொன்று, வைக்கோல் அடைக்கப்பட்ட அவரது உடலை மதுரை கோட்டை சுவர்களில் காட்சிக்கு வைத்தார். இந்துக்களில் ஆண்களை கழுவேற்றியும் ,பெண்கள் ,குழந்தைகளை கழுத்தை நெரித்தும் கொன்றான் 1344 ஆம் ஆண்டு வீரிய மருந்து ஒவ்வாமை காரணமாக, கியாத்துதீன் மரணமடைந்தார்.

நஸ் ருதீன் தம்கானி 1344-47

நஸ் ருதீன் தம்கானி கியாசுதீனின் சகோதரனின் மகன் .கியாசுதீனின் விசுவாசிகளை முதலில் களை  எடுத்தான் .அடுத்து கியாசுதீனின் மருமகனை கொன்றான் .அப்புறம் இறந்தவனின்  மனைவியை திருமணம் புரிந்தான் .
1347  இல் மரணம் அடைந்தான் 

குர்பத் ஹாசன் 

1347  இல் நஸ்ருதீன் மரணம் அடையவே அதன் பின் கூறப்பட் ஹாசன் என்போர் 

ஆட்சிக்கு வந்தார் .இவரும் மோசமான ஆட்சி நடத்தி இந்துக்களை கொலை புரிந்தார் எனவே விஜயநகர தோற்றுவிப்பாளர் முதலாம் புக்கர் என்பவரால் 1352  இல் கொல்லப்பட்டார்  

ஷம்சுதீன் ஆதில் ஷா கிபி 1352–1358
குறிப்பிடும் படி இவரை பற்றி தகவல் எதுவும் இல்லை 

ஃபக்ரூதின் முபாரக் ஷா கிபி 1358–1371


விஜய நகர் படைகள் சம்புவரையர்களை வென்று, ஸ்ரீரங்கத்தை கைப்பற்றி மதுரையை நோக்கி முன்னேறின. சுல்தான்களுடனான இறுதி யுத்தத்தில், கம்பண்ணர், முபாரக் ஷாவுடன் தனியே போரிட்டு சுல்தான் தலையை வெட்டி சாய்த்ததாக மதுரா விஜயம் கூறுகிறது. சிக்கந்தர் மற்றும் ஃபக்ருதீனின் சமாதிகள் மதுரை நகரில் உள்ள கோரிப்பாளையம் தர்காவில் உள்ளன. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவும் சிக்கந்தர் ஷாவின் நினைவாக எழுந்ததாக நம்பப்படுகிறது.[5][6]

 மதுரை சுல்தானகம் வலுவிழந்தது. விஜயநகரப் பேரரசின் படைகள் இளவரசர் முதலாம் புக்கரின் இளைய மகன் குமார கம்பண்ண உடையாரின் தலைமையில் தெற்கு நோக்கி படையெடுக்கத் தொடங்கின. கம்பண்ணரின் மனைவி கங்கதேவி எழுதிய மதுரா விஜயம் என்ற நூலில் இப்படையெடுப்பு விவரிக்கப்பட்டுள்ளது-1371 காலகட்டத்தில் , ஃபக்ரூதின் முபாரக் ஷா,  மதுரையின் சுல்தான்களாக இருந்தனர். 

அலாவுதீன் சிக்கந்தர் ஷா  1378

இவர் ஃபக்ரூதின் முபாரக் ஷா வின்  மகன் . மதுரையில் விஜயநகர அரசு ஸ்தாபிக்கப்பட்டாலும்  சிறு சிறு கலகங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன ,எவ்வகையிலோ ,எவராலேயோ சிக்கந்தர் ஷா திருப்பரங்குன்றம் மலையில் பதுங்கியிருந்தார் என்றும் ,ஆட்சியாளர்கள் அவரை அங்கேயே கொன்று விட்டதாகவும்  ,உடல் தகப்பனார் பக்கத்தில் கோரிப்பாளையத்தில் 
அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது   

சுல்தான் ஆட்சி காலம்

ஜலாலுதீன் ஆசன் கான் கிபி 1335–1339
அலாவுதீன் உதாஜி கிபி 1339
குதுப்துதீன் ஃபிரோஸ் கிபி 1339–1340
கியாத்துதீன் முகமது தம்கானி கிபி 1340–1344
நசுரீதின் தம்கானி கிபி 1344–1347
குர்பத் ஹாசன்  1347-52
ஷம்சுதீன் ஆதில் ஷா கிபி 1352–1358
ஃபக்ரூதின் முபாரக் ஷா கிபி 1358–1371
அலாவுதீன் சிகந்தர் ஷா கிபி 1368–1378

ஆட்சி குறிப்புகள்[தொகு]
மதுரை சுல்தானகத்தைப் பற்றி அறிய இரு சமகாலத்திய சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். இபுனு பதூதாவின் குறிப்புகளும், கங்கதேவியின் மதுரா விஜயம் இரண்டுமே, மதுரை சுல்தான்களை கொடுங்கோலர்களாகவும், இந்து குடிமக்களை கொடுமை படுத்தியவர்களாகவும் சித்தரிக்கின்றன. கியாத்துதீன் இந்துகளுக்கு இழைத்த கொடுமைகளைக் கண்டு மனம் வருந்திய பதூதா, “இக்கொடுமைகளின் காரணமாகவே இறைவன், கியாத்துதீனின் மரணத்தை துரிதப்படுத்தினார்” என்று குறிப்பிடுகிறார். மதுரா விஜயம் “குளிக்கும் பெண்களின் மார்பில் பூசிய சந்தனம் கலந்து வெளிர் நிறமாக ஓடிய தாமிரபரணி, சுல்தான்களின் ஆட்சியில் பலியிடப்பட்ட பசுக்களின் ரத்தம் கலந்து சிவந்து ஓடியது” எனக் குறிப்பிட்டுகிறது.[8


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



மதுரை  சுல்தான்கள் வரிசையை துக்ளக்கின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஆசன் கான் துவக்கி வைத்தான் என்று பார்த்தோம். இதைக் கேள்விப்பட்ட முகமது பின் துக்ளக் அவனைக் கொல்ல ஒரு படையை அனுப்பி வைத்தான். ஆனால், அந்தப் படைவீரர்களுக்கு லஞ்சம் கொடுத்துத் தன் பக்கம் திருப்பிக்கொண்டான் ஆசன்கான். இதைக் கேள்விப்பட்டு கடும்கோபம் அடைந்த துக்ளக் ஆசன்கானின் மகனை சித்ரவதை செய்து, இரு துண்டுகளாக வெட்டிக் கொலை செய்தான். துக்ளக்கின் அவையில் இருந்தவரும் அக்காலத்திய பயணக்குறிப்புகளை எழுதியவருமான இபின் பதூதா, ஆசன் கானின் மகளை மணம் புரிந்திருந்தார். மைத்துனனுக்கு நேர்ந்த கதி தமக்கும் நேரலாம் என்று அஞ்சி அவர் நாட்டை விட்டுக்கிளம்பினார்.  ஆனால் இலங்கைக்கு அருகில், அவர் பயணம் செய்த கப்பல் புயலில் சிக்கிக்கொண்டது. தப்பிப் பிழைத்த அவர் மதுரை வந்து சேர்ந்தார். மதுரையில் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அங்கு ஆசன் கானின் இன்னொரு மகளைத் திருமணம் செய்த கியாசுதீன் கான் ஆட்சி செய்துகொண்டிருந்தார் (1340). தன் 'சகலையை' மரியாதையுடன் வரவேற்று சில காலம் அங்கேயே தங்கச்செய்தார் கியாசுதீன். அங்கு, தாம் பார்த்தவைகளைக் குறிப்புகளாக எழுதிவைத்திருக்கிறார் பதூதா.

அந்தக் குறிப்புகளில் ஒன்று, இந்த நிகழ்ச்சியை விவரிக்கிறது. ஒருநாள் கியாசுதீனும் பதூதாவும் காட்டில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு ஒரு கோவிலில் வழிபாடு நடந்துகொண்டிருந்தது. அங்கு வழிபாடு செய்துகொண்டிருந்தவர்களை அருகில் அழைத்த  கியாசுதீன், அவர்களை இரவு முழுவதும் கூடாரமொன்றில் அடைத்து வைத்தான். மறுநாள் காலையில், அவர்களில் ஆண்களை கூராகச் சீவப்பட்ட குச்சிகளில் கழுவேற்றியதாகவும், பெண்களையும் குழந்தைகளையும் கழுத்தை வெட்டிக் கொலை செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார் பதூதா. "ஒருநாள் நானும் காஜியும் சுல்தானுடன் உணவருந்திக்கொண்டிருந்தோம், அப்போது ஒரு தம்பதியும் அவர்களது ஏழுவயது மகனும் அங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களின் தலையை வெட்டி விடுமாறு சுல்தான் உத்தரவிட்டான். நான் தலையைத் திருப்பிக்கொண்டேன், மீண்டும் அங்கு பார்த்தபோது அவர்களின் தலை அவர்கள் உடலில் இல்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார் பதூதா. அதேபோல் இன்னொரு நிகழ்ச்சியும் பதூதாவின் குறிப்புகளில் இடம்பெற்றிருக்கிறது.   ஹொய்சாள அரசரான வீர வல்லாளர் (மாலிக்கபூருக்கு வழிகாட்டி வந்தவர்) கியாசுதீன் மீது போர்தொடுத்தார். கண்ணனூர் கொப்பம் (சமயபுரம்) என்ற இடத்தில் நடந்த போரில் முதலில் வல்லாளர் வெற்றி அடைந்தாலும், மின்னல்வேகத்தாக்குதல் ஒன்றை நடத்திய கியாசுதீன் ஹொய்சாளப்படைகளைத் தோற்கடித்தான். வல்லாளரைச் சிறைப்பிடித்து, அவர் தோலை உரித்து வைக்கோலை அடைத்து மதுரை கோட்டைவாயிலில் தொங்கவிட்டான் கியாசுதீன். இப்படி பல கொடுமைகள் நடந்ததாலோ என்னவோ, மதுரையில் பிளேக் நோய் பரவியது. மதுரை மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்தனர். கியாசுதீனும் அவன் குடும்பமும் இந்த நோய்க்குப் பலியானார்கள். அவரை அடுத்து நசிரூத்தீன் ஷா பதவியேற்றார்.  இப்படியாக மொத்தம் ஏழு சுல்தான்கள் மதுரையை ஆண்டனர்.

இது ஒருபுறம் இருக்க, துங்கபத்ரா நதிக்கரையில் விஜயநகரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசு ஒன்று உருவாகியிருந்தது. ஹரிஹரர், புக்கர் என்ற இரு சகோதரர்கள் குரு வித்யாரண்யரின் வழிகாட்டுதலில் இந்த அரசை ஏற்படுத்தியிருந்தனர். சிறிது சிறிதாக தென்னிந்தியாவின் பல பகுதிகளை தங்கள் அரசின் கீழ் கொண்டுவந்தனர் அவர்கள்.  புக்கரின் மகனான கம்பண்ணர் 1364ம் ஆண்டு வாக்கில் காஞ்சிபுரத்தின்மேல்  படையெடுத்து, அந்த நகரைக் கைப்பற்றி அங்கேயே தங்கியிருந்தார். அவரோடு அவர் மனைவியான கங்காதேவியும் வந்திருந்தார். கம்பண்ணரின் திக்விஜயத்தில் நடந்த நிகழ்ச்சிகளை 'மதுரா விஜயம்' என்ற பெயரில் ஒரு அழகான காவியமாக பின்னால் எழுதினார் கங்காதேவி. காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த கம்பண்ணரை சந்திக்க வந்தார் ஒரு பெண். தமிழகத்தின் இருண்ட நிலையைப் பற்றிக்கூறிய அவர், திருவரங்கமும், சிதம்பரமும், மதுரையும் அடைந்த அழிவுகளை எடுத்துரைத்தார். அங்குள்ள கோவில்களில் பூஜைகள் நின்றுபோய்விட்டதையும், பல கோவில்கள் மண்ணடித்துப் போனதையும் சொல்லிய அவர், பாண்டியர்களுக்கு இந்திரன் அளித்த வாளை எடுத்து கம்பண்ணரிடம் கொடுத்தார். தாம் மீனாட்சி தேவியே என்றும், மதுரையை இந்த வாளின் துணைகொண்டு மீட்குமாறும் சொல்லி மறைந்தார் என்று மதுராவிஜயம் கூறுகிறது.





திருவிழாவின் ஆறாம் திருநாள் - விடை வாகனத்தில் அம்மையும் அப்பனும் 

தமது படைகளைத் திரட்டிக்கொண்டு 1378ம் ஆண்டு மதுரை நோக்கி வந்தார் குமார கம்பண்ணர். மதுரையை அப்போது சிக்கந்தர்கான் என்ற சுல்தான் ஆண்டுகொண்டிருந்தார். அவரது படைகள் கம்பண்ணரிடம் தோற்றோடின. மதுரையை விட்டுத் தப்பித்த சுல்தான், திருப்பரங்குன்றம் மலைமேலேறி பதுங்கிக்கொண்டான். கம்பண்ணரின் படைகள் திருப்பரங்குன்றம் மலையைச் சூழ்ந்து முற்றுகையிட்டன. சுல்தானின் படைபலம் சொற்பமே என்று உணர்ந்த கம்பண்ணர், அவரை தன்னுடன் 'ஒண்டிக்கு ஒண்டி' வருமாறு அழைத்தார். இருவருக்கும் இடையே திருப்பரங்குன்றம் மலைமீது துவந்த யுத்தம் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்று, சிக்கந்தரைக் கொன்றார் கம்பண்ணர். அவருக்கு அந்த மலைமேல் ஒரு சமாதியும் எழுப்பச்செய்தார்.

பின் படைகளை அழைத்துக்கொண்டு வெற்றி வீரராக மதுரை திரும்பி, மீனாட்சி அம்மையின் கோவிலை அடைந்தார், இடிபாடுகளை அகற்றி,  மண்ணை நீக்கி, கருவரையின் முன் வைக்கப்பட்ட, சுல்தான்களின் படைகளால் சேதம் செய்யப்பட்ட லிங்கத்தை எடுத்து வைத்துவிட்டு, கருவரையின் மூடப்பட்ட சுவரை இடித்து உள்ளே நுழைந்தார். அங்கு சொக்கநாதரின் மேல் சார்த்தப்பட்ட மாலை வாடாமல், கருவறையை மூடிய போது ஏற்றப்பட்ட தீபம் அணையாமல் அவருக்கு தரிசனம் கிடைத்தது. அதன்பின், கம்பண்ண உடையார் மதுரையில் தங்கி நகரையும் கோவிலையும் சீர்ப்படுத்த முனைந்தார்.






சுல்தான்களால்  சேதப்பட்ட லிங்கம், இன்று சுவாமி சன்னதியின் இடப்புறத்தில், எல்லாம் வல்ல சித்தர் சன்னதிக்கு அருகில் உள்ளது.





@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

திருவண்ணாமலை கோவிலில் சில விநோதச் சடங்குகள்


OLYMPUS DIGITAL CAMERA
கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன்
ஆய்வுக் கட்டுரை எண் -1623; தேதி 5 பிரவரி 2015
இந்துக்களின் கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டும் அல்ல. அவை கலா கேந்திரங்கள்; பல்கலைக் கழகங்கள்; காலாகாலமாக இருந்துவரும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் அகியவற்றின் மூல ஆதாரங்கள். உள்ளூரில் வசித்த சாது சந்யாசிகளின், புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பாதுகாத்து வைக்கும் பெட்டகங்கள்.
தமிழ் நாட்டுக் கோவில்கள் வரலாற்றுப் பதிவேடுகள். அங்கிருக்கும் பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகள்தான் தமிழக வரலாற்றின் ஆதாரங்கள். இசை, நடனம், தமிழ் பக்தி இலக்கியங்கள், சிற்பகலைக்கு அஸ்திவாரமாக விளங்குபவை. விழாக்கள் மூலம் மக்களை ஒன்று சேர்க்கும் சமுதாயச் சீர்திருத்தக் கூடங்கள். சுற்றுலாப் பயணிகளையும் யாத்ரீகர்களையும் வெளிநாட்டுப் பயணிகளையும்  ஈர்க்கும் காந்தங்கள் —- என்று இப்படி கோவில்களைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம்.
ஒவ்வொரு கோவிலிலும் உள்ள விநோதச் சடங்குகள், பழக்க வழக்கங்கள் மக்களுக்கு எவ்வளவோ பாடங்களைப் போதிக்கின்றன. திருவண்ணா மலையிலும் இரண்டு பாடங்களைக் கற்பிக்கும் நிகழ்ச்சிகள் உண்டு.

வீரவல்லாளன் (1291-1343) என்ற மாமன்னன் இந்து மதத்தின் காவலனாக விளங்கினான். அவன் ஒரு ஹோய்சாள மன்னன். அவனுக்கு மூன்றாம் வல்லாளன் (கன்னடத்தில் பல்லாளன்) என்ற பெயரும் உண்டு. அவனுக்குத் திருவண்ணாமலையின் மீது தனி அன்பும் பக்தியும் உண்டு. அடிக்கடி அண்ணாமலைக்கு வந்து சென்றவன் பிற்காலத்தில் அருணசமுத்ர வீர வல்லாளன் பட்டணம் என்று அந்த ஊருக்குப் பெயர் சூட்டி அதை ஹோய்சாள ராஜ்யத்துக்கு இரண்டாம் தலைநகரமாகவும் ஆக்கினான். அருணகிரிநாதர், ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், யோகி ராம்சுரத் குமார் போன்ற எத்தனையோ மகான்களைக் காந்தமாக இழுத்தது அண்ணாமலை. ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்னதாக அங்கு சென்றவன் ஹோய்சாள மாமன்னன் வீர வல்லாளன்.
Hoysala_emblem
ஹோய்சாளர் சின்னம்: சிங்கத்தை வீழ்த்தும் வீரன்
பஞ்சபூதத் தலங்களில் அக்னியின் அம்சமாக விளங்குவது திரு அண்ணாமலை. சிவன் அடியார்களால் பாடல் பெற்ற தலம். அக்கோவிலுக்கு வீர வல்லாளன் எவ்வளவோ திருபணிகளைச் செய்தான். வீர வல்லாளன் திருவாசல் என்று அழைக்கப்படும் பெரும் கோபுரத்தையும், மதில் சுவரையும் பல மண்டபங்கலையும் அவன் கட்டினான. அவனது 9 கல்வெட் கள் கோவிலில் இருக்கின்றன. அவை அவனது நீண்ட விருதுகளையும் பட்டங்களையும் அவனும் ராணியின் அளித்த தான தருமங்களையும் எடுத்துரைக்கின்றன.
வல்லாளன் கன்னட, ஆந்திர, தமிழகப் பகுதிகளை ஆண்ட காலம் மிகவும் கொந்தளிப்பான ஒரு காலம். வடக்கே டில்லியில் இருந்த சுல்தான்களின் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திய காலம். கோவில்களை அழித்து அதன் செல்வங்களைச் சூறையாடுவது அவர்கள் வழக்கம்.


     லாவுதீன் கில்ஜியின் அடிமைச் சேவகன் — தளபதி மாலிக்காபூர் திடீரென படை எடுத்து வந்த போது வல்லாளன் அவனது தலைநகரில் இல்லை. அவன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மகன்கள் இடையே ஏற்பட்ட சண்டையில் பங்கேற்க வந்திருந்தான். தலைவன் இல்லாத் தலை நகரம் சூறையாடப்பட்டது. பீன்னர் ஒருவாறாக சமாதானத்தின் பேரில் அவனுக்கு நாட்டைத் திரும்பித் தந்தான் அலவுதீன் கில்ஜி. பின்னர் முகமது பின் துக்ளக் படையெடுத்தான். இதற்குப் பின்னர் மதுரையை ஆண்ட உடௌஜி என்பவன் போர்தொடுத்தான். ஆனல் அவன் மர்மமாக வந்த ஒரு அம்பினால் மாய்ந்தான். இனி அமைதியான ஆட்சி எண்ணி இருந்த தருவாயில் மதுரையை ஆண்ட சுல்தான் கியாஸ் உதீன் தம்கானி என்பவன் தாக்கினான். ஆறு மாத முற்றுகையின் போது, சமாதானம் செய்வதாகச் சொல்லி முன்வந்து, எதிர்பாரத தாக்குதல் நடத்தினான் சுல்தான். இது கண்ணனூர் குப்பம் என்ற இடத்தில் நடந்தது. இந்தத் தாக்குதலில் வீர வல்லாளன்  சிறைப் பிடிக்கப்பட்டுச் சிரச் சேதம் செய்யப்பட்டான.
வல்லாளனின் தலையை மதுரைக் கோட்டைச் சுவரில் தொங்கவிட்டான். அப்போது மதுரைக்கு யாத்திரை வந்த இபின் பட்டுடா என்னும் அராபியப் பயணி இந்த தலை தொங்குவதைப் பார்த்து குறிப்பேட்டில் எழுதிவைத்தான்.
வல்லாளனின் முடிவு பரிதாபமான முடிவு என்றாலும் அவன் புகழ் திருவண்ணாமலை கோபுரம் அளவுக்கு இன்றும் உயர்ந்து நிற்கிறது. 700 ஆண்டு காலமாக புகழ் பரப்பும் அக்கோபுரம் இன்னும் ஆயிரம் ஆண்டுக்கும் அவன் புகழைப் பரப்பும். அவனுடைய சிலைகள் கோவிலில் பல உருவங்களில் பல இடங்களில் உள்ளன. இன்றும் அந்தச் சிலைக்கும் பூமாலை சாற்றி போற்றி வருகின்றனர்.
vallala
இந்து மதக் காவலன் வீர வல்லாளன்
வல்லாளன் புகழை,  14-ஆம் நூற்றாண்டுப் புலவர் எல்லப்ப நாயனார் பாடிய அருணாசல புரானத்தில் காணலாம். வல்லாளனைத் தீர்த்துக் கட்டீய மதுரை சுலதானை விஜய நகரப் பேரரசனின் படைத்தளபதி குமார கம்பண்ணன் வந்து நிர்மூலம் செய்தான். முஸ்லீகளால் சூறையடப்ப்பட்டு 40 ஆண்டுக்காலத்துக்கு மூடிக்கிடந்த மதுரை மீனாட்சி கோவிலையும் திறந்து வைத்தான். இத்தனையயும் போர்க்கால பத்திரிக்கை நிருபர் போல அவன் மனவி கங்காதேவி மதுரா விஜயம் என்னும் அற்புதமான சம்ஸ்கிருத காவியத்தில் எழுதிவைத்துள்ளாள். உலகின் முதல் நேரடி வருணை செய்த (பத்திரிக்கை நிருபர்) பெண்மணி மகாராணி கங்காதேவி.
தென்னாட்டில் முஸ்லீம் ஆதிக்கத்துக்குச் சாவு மணி அடித்தவன் குமார கம்பண்ணன். அவன், அவர்களை வட நாட்டிற்கு விரட்டினான். அங்கு சுல்தான் ஆட்சி போய், மொகலாய ஆட்சி வந்து அட்டூழியங்களைத் தொடர்ந்தது. சிவாஜி என்னும் மாமன்னன், மலை ஜாதி மக்கள் இடையே தோன்றினான். உலகின் முதல் கெரில்லா யுத்தத்தை நடத்தி மொகலாய ஆட்சிக்கு சாவு மணி அடித்தான்.
வல்லாளனுக்கு குழந்தை இல்லை என்றும் இதுபற்றி அவன் அண்ணாமலையானிடம் முறையிட்டபோது நாமே உமக்குக் குழந்தையாக வருவோம் என்றும் சொன்னதாக ஒரு கதை உண்டு. ஆக ஒரு மாசி மாதத்தில் மன்னன் இப்படிக் கொடூரமாக இறந்த செய்தியை அர்ச்சகர்கள் சிவனிடம் அறிவிக்கவே அவர் நாமே அவனது இறுதிச் சடங்குககளை நடத்துவோம் என்று சிவன் சொன்னதாகவும் உடனே பள்ளிகொண்ட பட்டு என்னும் இடத்தில் அவருடைய இறுதிச் சடங்குகள் நடந்ததாகவும் கோவில் வரலாறு கூறுகிறது.
hoysala king
ஹோய்சாளமன்னன் சிலை
இதை ஒட்டி ஆண்டுதோறும் இப்போதும் அந்த இறுதிச் சடங்கை சிவ பெருமானே செய்துவருகிறார். இது ஒரு புறமிருக்க திருவண்ணா மலையில் ஆண்டுதோறும் நடக்கும் பத்து நாள் உற்சவத்தில் அர்ச்சகர்களும் ஊழியர்களும் சுவாமியை வல்லாளன் திருவாசல் வழியாகக் கொண்டு செல்ல முயன்றபோது அவ்வாயில் வழியாக போக முடியாமல் தடங்கல்கள் வந்தன. உடனே பத்து நாள் உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் வேறு வழியாக சுவாமியையும் அம்மனையும் திரு உலா எடுத்துச் சென்றனர். வல்லாளன் மாபெரும் கோவில் கோபுரத்தைக் கட்டிவிட்டோம் என்று மமதை கொண்டிருந்ததால் இப்படி நடந்தது.
சுவாமியின் பல்லக்கு இப்படி செல்ல மறுப்பதை அறிந்த வல்லாள மாமன்னன் தாமே அங்கே வந்து இறைவனிடம் கண்ணீருடன் மன்றாட பத்தாம் நாளன்று அந்த சப்பரம் வல்லாளன் திருவாசல் வழியாக தடங்கல் இன்றிச் சென்றது. இதை நினைவு கூறும் விதத்தில் இன்றும் பத்தாம் நாளன்று மட்டும் வல்லாளன் திருவாசல் வழியாக சுவாமி ஊர்வலம் புறப்படும்.
இவ்விரு விநோத நிகழ்ச்ழ்ச்சிகள் நமக்கு உணர்த்தும் இரு விஷயங்கள்: 1)அம்மா அப்பா இல்லாதோருக்கு, தந்தை-தாய் ஆகிய எல்லாம் இறைவனே. மகன் இல்லார்க்கு தானே மகவாக வருபவனும் அவனே. 2)மமதை, அகந்தை (யான் எனது என்னும் செருக்கு) இருந்த எல்லோருக்கும் பாடம் கற்பித்து நல் வழிப்படுத்தி, உய்ய வைப்பதும் இறைவனே.
அண்ணாமலைக்கு அரோஹரா!!

No comments:

Post a Comment