DIANA , SHORT LIFE HISTORY
நல்ல அழகியாக, ஒரு கட்டத்தில் இராணியினதும் இளவரசர் சார்ள்சினதும் அன்பிற்கும், பாசத்திற்கும் பாத்திரமானவராக, பிறிதொரு கட்டத்தில் அவர்கள் இருவருக்கும் வெறுப்பேற்றுபவராக தமது இரண்டு மகன்மாருக்கும் அருமையான தாயாராக, கெமராக்களால் அதிகம் படம் பிடிக்கப்பட்டவராக, பிரபல்யமான பத்திரிகைகள், சஞ்சிகைகளின் முன்பக்கக் கதாநாயகியாக, தாம் வாழ்ந்த காலத்தில் தினம் தினம் இறந்து, மரணமான பின்மக்கள் மனதில் நிரந்தரமாக வாழ்பவராக உலகத் தொழுநோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், எயிட்ஸ் நோயாளிகளின் சிநேகிதியாக, மக்களின் இளவரசியாக இருந்த டயானாவின் மரணம் இன்னமும் சரியாகத் துப்புத் துலக்கப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
தாம் வாழ்ந்த ஒரு காலகட்டத்தில் உலகப்புகழ் பெற்றவராக இருந்தாலும் டயானாவின் சிறுபராயமும் இளமைக்காலமும் தென்றல் வீசும் சோலையாக அமைந்துவிடவில்லை.
ஜானி—பிரான்சஸ் தம்பதியினருக்கு முதலிரண்டும் பெண் குழந்தைகள் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே மூன்றாவதாக ஆண்குழந்தை பிறந்து, அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் முன்பு குழந்தை பிறந்த வேகத்தில் இறந்து போனது. பத்துமணி நேரம் மட்டுமே அந்த ஆண்குழந்தை உயிர் வாழ்ந்தது. ஜானி—பிரான்சஸ் தம்பதியினர் மனம் தளர்ந்தனர்.
இந்நிலையிலேயே அடுத்ததாக டயானா பிறந்த போது இருவருக்குமிடையே எந்தவிதமான நல்லுறவும் இல்லை.
ஸ்பென்சர் குடும்பங்களில் ஆண்பிள்ளையைப் பெற்றுக்கொள்வதென்பது கெளரவம் மட்டுமல்ல, அத்தியாவசியமும் கூட. சொத்துக்களைக் கட்டிக்காக்க ஆண்வாரிசே பொருத்தமானது என்பது ஸ்பென்சர் குடும்பங்களில் எழுதப்படாத ஒரு சட்டம்.
ஒரு வழியாக நான்காவதாக ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அதற்கு முன்பு ஜானி– பிரான்சஸ் வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டிருந்தது. அப்போது டயானாவின் அம்மாவிற்கு வயது இருபத்தெட்டு. இளமையின் மிதப்பில் இருந்த அவர் வேறு துணை தேட ஆரம்பித்தார். அவர் நாடிச் சென்ற பீட்டர் ஏற்கனவே மணமானவர்.
தனது மகளின் நடவடிக்கை பிடிக்காத பிரான்சஸின் அம்மா முக்கிய முடிவொன்றை எடுத்தார். நான்கு குழந்தைகள் பெற்றெடுத்த தனது மகள், இன்னொரு ஆடவனோடு வாழ முடிவெடுத்ததை அவரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. தமது வீடான ‘பார்க் ஹவுஸில்’ அவருக்கு இடமில்லை என அறிவிக்கப்பட்டது.
தாயின் உத்தரவின்படி பார்க் ஹவுஸிலிருந்து தனது முதலிரண்டு பெண் குழந்தைகளுடன் வெளியேறினார் டயானாவின் அம்மா பிரான்சஸ். அதே வீட்டில் விபரம் புரியாத சிறுமி டயானா மற்றும் கடைசி மகன் சார்ஸ்சோடு வசிக்க ஆரம்பித்தார் டயானாவின் தந்தை ஜானி.
டயானாவிற்கு அப்போது விபரம் ஒன்றும் புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் புரிந்தது, ‘அம்மா இனிமேல் தன்னிடம் வரமாட்டார்’ டயானா சளைக்கவில்லை. ஆனால், சின்னஞ் சிறுவனான தம்பியைச் சமாளிக்கச் சங்கடப்பட்டார்.
தாயை நினைத்து அவன் தவித்து அழும்போது இரவு முழுவதும் கொட்டக் கொட்ட விழித்திருந்து சமாதானப்படுத்தி அவனை உறங்கவைத்து தனது துன்பத்தை மறந்து இளவயது இன்பத்தைப் பொருட்படுத்தாமல் வாழப் பழகிக்கொண்டாள். கல்வியில் மந்தமானாள். தோல்வி பயத்தினால் பொய்கள் பேசப் பழகினாள். டயானாவின் வாழ்க்கை தறி கெட்டுப் போவதைக் கண்டு பயந்த தந்தை ஜானி அவளுக்கு விருப்பமான வீட்டு விலங்குகளை வளர்க்க ஆரம்பித்தார். ‘டெடி பெயார்’ போன்ற பொம்மைகளை வாங்கிக் குவித்தார். விலைமதிப்புள்ள ‘கமரா’ ஒன்றைப் பரிசளித்தார். ‘கமராவும்’ புகைப்படங்களும் அழகி டயானாவின் வாழ்க்கையை மாற்றியது என்று கூறினாலும் அது மிகையல்ல.
இளவயதிலேயே டயானாவிடம் நிறைய நல்ல குணங்கள் துளிர்க்க ஆரம்பித்தன. மனநல மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று மனநல நோயாளிகளிடம் நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருப்பார். விதம் விதமான அழகிய நடனங்களை அவர்களுக்கு ஆடிக்காட்டி அவர்களை மகிழ்விப்பார்.
டயானா வின் மறுபக்கம்
சார்ல்ஸ் பிறந்தபோது இளவரசி எலிசபெத் மட்டும்தான் சார்ல்ஸிற்கு. மூன்றரை வயதிருக்கும் போது எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜோர்ஜ் காலமானார். எலிசபெத் இங்கிலாந்தின் இராணியானார். சார்ல்ஸ் ‘பிரின்ஸ் ஒப் வேல்ஸ்’ என்று அதிகாரப்பட்டம் சூட்டப்பட்டார்.
இளவரசர் சார்ல்ஸின் கண்ணில் முதற்பட்ட பெண்ணல்ல டயானா. ஆனாலும் அத்தனை பேரிலும் திருமணம் வரைக்கும் சென்ற ஒரே உறவு டயானாவுடையது மட்டும்தான். டயானாதான் தனது எதிர்காலம் எனத் தீர்மானிப்பதற்குள் சார்ல்ஸ் சற்றுத் தடுமாறினார் எனினும் அவரது காதலி கமீலாவோ “டயானாதான் உனக்கேற்றவள்” என்று பச்சைக் கொடி – காட்டியவுடன் டயானாவை மணம் புரிந்தார் சார்ல்ஸ்.
சார்ல்ஸ் பிறந்த தினம்14 நவம்பர் 1948; டயானாவின் பிறந்ததினம்1 ஜூலை1961 பதின்மூன்று வயது வித்தியாசம். இந்தக்குறை சார்ல்ஸ்ற்கு எப்போதுமே மனத்தை உறுத்திக் கொண்டிருந்தது. 1981 ஜூலை 29 சார்ல்ஸ்- டயானா திருமணம். எனினும் திருமணத்திற்கு முதல் நாள் இரவும் கூட தமது காதலி கமீலாவுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார் சார்ல்ஸ்- அப்போது உன்னை ஒரு போதும் பிரியமாட்டேன் என்று கமீலாவுக்கு சத்தியம் செய்து கொடுத்தார் சார்ல்ஸ்.
ஓர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்தால் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் என்பதைத் தன் திருமண நாளன்று அனுபவபூர்வமாக உணர்ந்தார் டயானா. 29/7/1981 அன்று சர்வதேச நட்சத்திரமானார் டயானா. இந்தத் திருமணத்தை 75 கோடி மக்கள் கண்டுகளித்தனர். ஆங்கிலம் தவிர 34 மொழிகளில் திருமண வர்ணனை மொழிபெயர்க்கப்பட்டது. காதுகேளாதோருக்காக விசேடமாகப் பதிவு செய்யப்பட்டது. இந்த திருமணத்தை ஏழரை மணிநேரம் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இளவரசி என்கிற வட்டத்திலிருந்து விலகி நின்று எல்லோரிடமும் பழகினார் டயானா. குடும்பம், உடல் நலன், செளகரியங்கள் போன்ற தனிப்பட்ட நலன்கள் மீது ஆர்வம் காட்டி விசாரிப்பார். இதனால் மிகவும் புகழ்பெறத் தொடங்கினார். பத்திரிகையாளர்கள் இவரைச் சூழ்ந்து கொண்டார்கள். புகைப்படக்காரர்கள் டயானாவை மொய்த்துக் கொண்டார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
‘மீடியா’ இளவரசர் சார்ல்ஸை கவனிக் கவில்லை, ஏன் புறக்கணித்தது என்றே கூறலாம். சார்ல்ஸ் டயானாவிற்கு விரிசல் ஏற்பட இதுவும் ஒரு காரண மெனலாம். 1982 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21 ஆம் திகதி வில்லியம் பிறந்தான். பிரசவநேரத்தின் போது அருகே இருந்து கவனித்துக் கொண்டார் கணவர் சால்ஸ். இது டயானாவிற்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. ஆனால் அந்த சந்தோஷம் நீண்டகாலம் நீடிக்கடிவில்லை. சார்ல்ஸ் கமீலா காதல் / தொடர்பு தொடர்ந்தது.
1984 செப்டெம்பர் 15 ஆம் திகதி ஹாரி பிறந்தான். அடுத்த வருடம் 1985ஆம் ஆண்டு பேரி மன்னகே என்கிற காவல்துறை அதிகாரி டயானாவின் பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரிய வந்தார். வாட்டசாட்டமான ஆள் சால்ஸை திருமணம் செய்தபின் எந்த ஆண்மகனையும் ஏறெடுத்துப் பார்க்காத டயானா சபதத்திற்கு ஆளானார். மன்னகே டயானாவிற்கு ஒரு ‘ரெடிபியரை’ அன்பளிப்புச் செய்தார். அது டயானாவின் படுக்கை அறையை அழகு செய்தது. செய்தி அரண்மனைக்கு எட்டியவுடன் மன்னகேயின் பதவி பறிக்கப்பட்டது. அடுத்த இரண்டு வருடங்களில் மன்னகே மீது கார்மோதி உயிரும் பறிக்கப்பட்டது. அவர் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என டயானா சந்தேகித்தார். மன்னகே புதைக்கப்பட்ட கொலை செய்யப் பட்டிருக்கலாம் என டயானா சந்தேகித்தார். மன்னகே புதைக்கப்பட்ட கொலை செய்யப் பட்டிருக்கலாம் என டயானா சந்தேகித்தார். மன்னகே புதைக்கப்பட்ட இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அன்றோடு டயா னாவின் முதலாவது சிற்றின்பம் முடிவுக்கு வந்தது.
அடுத்து டயானாவின் தொடர்பு ஜேம்ஸ்ஹெவிட் என்பவருடன் ஏற்பட்டது. போலோவீரர்; குதிரை ஏறிப் பழகும் காட்டில் அவரை நண்பராக்கிக் கொண்டார் டயானா. சில ஆண்டுகளாக சார்ல்ஸிடமிருந்து எதுவித சுகத்தையும் அனுபவிக்காத டயானாவுக்கு மாற்றாக விளங்கினார் ஜேம்ஸ் ஹெவிட் சார்ல்சிற்கு கமீலா டயானாவிற்கு ஹெவிட் என்று இருவரும் அவரவர்க்கு ஏற்ற பிடித்தமான வாழ்க்கையை வாழத் தொடங்கினார்கள். 1986 ஆம் ஆண்டு அரசாங்கப்பணி காரணமாக ஹெவிட் ஜேர்மனிக்குப் பயணமாக நேர்ந்தது. டயானா எவ்வளவோ சண்டை போட்டும் தொடர்ந்து டயானாவுடன் தொடர்பு வைத்துக்கொள்வது தனக்கு ஆபத்து என உணர்ந்து ஹெவிட் ஜேர்மனி சென்றார்.
சார்ல்ஸ் டயானா முறிவு கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்தது. வந்த வேகத்தில் மறைந்த மன்னகே சொல்லக் கேட்காமல் ஓடிப்போன ஹெவிட் ஆண் துணையில்லாமல் தவிர்த்தார் டயானா. அந்தக் குறையைப் போக்க டயானாவின் வாழ்க்கைக்குள் நுழைந்தார் ஜேம்ஸ் கில்பி என்பவர். டயானாவின் கில்பிக்கும் முதல் திருமணம் தோல்வியில் முடிந்திருந்தது. அதனைச் சாட்டாக வைத்து கில்பியுடன் ஒட்டிக்கொண்டார் டயானா. அதுவும் சொற்பகாலம்தான். அழகி டயானாவின் கடைசிக் காதலன் முகமத் அப்டெல் மொனிம் பயத் என்கிற முகமத் அல் பயத் செல்வாக்கான மனிதர் கோடீஸ்வரர் செல்லப்பெயர் கோடி, அவர் அமெரிக்கக் மொடல் அழகி கெல்பி பிள்ளர் என்ற பெண்ணைத் திருமணம் செய்ய இருந்தார்.
டயானாவை டோடிக்கு அறிமுகம் செய்து வைத்தார். பயத் பார்த்த மாத்திரத்திலேயே டோடியின் கன்னக் குழிச் சிரிப்புக்கு மனதைப் பறிகொடுத்து அடிமையானார் டயானா. அத்துடன் அந்த வேளையில் டயானாவிற்கு நல்ல, நம்பிக்கையான துணை ஒன்று அவசியமாகத் தேவைப்பட்டது. டோடியை எந்தச் சங்கடமுமில்லாமல் ஏற்றுக் கொண்டார்.
1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி டயானாவின் வாழ்க்கையில் முக்கியமான நாள். காலையில் உணவருந்திவிட்டு தனி விமானத்தில் பாரிஸ் செல்கிறார்கள். மாலை 3.20 மணிக்கு பாரிஸை அடைந்தபோது பத்திரிகைகளுக்கு செய்தி சென்று பத்திரிகையாளர்கள், படப்பிடிப்பாளர்கள் சூழ்ந்து தொல்லை கொடுக்கிறார்கள்.
இரவு உணவு அருந்தியபின் டோடியின் உத்தரவுப்படி ஹென்றிபால் என்கிற பாதுகாவலர் வரவழைக்கப்படுகிறார். அவர்தான் இருவரையும் பத்திரமாக சாம்ஸ் எலிஸிலுள்ள தமது அப்பார்ட்மென்டுக்கு அழைத்துவரவேண்டுமென பயத்தின் உத்தரவு முன்வாசலில் ஊடகவியலாளர்களின் தொல்லை இருப்பதனால், மெர்சிடஸ் எஸ் 280 காரை எடுத்துக்கொண்டு ரிட்ஸ் ஹோட்டலின்ட பின்பக்கம் வருமாறு பாலுக்கு தகவல் அனுப்புகிறார் டோடி. மோடி டயானா கீழிறங்கி வரும்வரை ‘சும்மா இருப்பானேன்’ என எண்ணி டிரிட்ஸ் மதுபானக் கூடத்தில் மது அருந்துகிறார். ஹென்றிபால்—அங்குதான் தவறு ஏற்பட்டது என்று இன்றும் சிலர் கருதுகிறார்கள்.
ஆகஸ்ட் 31 நள்ளிரவு 12 மணி டயானாவும் மோடியும் ஹோட்டலை விட்டு வெளியேற்றி மெர்ஸிடஸ் காரில் பின் சீற்றில் ஏறுகிறார்கள். முன் சீற்றில் மதுபோதையிலிருந்த ஓட்டுநர் ஹென்றிபாலும் பாதுகாவலர் ரீஸ் ஜோன்ஸும் அமர்ந்து கொள்ள கார் சீறிப்பாய்ந்து கொண்டு சென்றது.
தகவலறிந்த ஊடகவியலாளர்கள் மோட் டார் சைக்கிள்களில் காரை வெகு வேகமாகப் பின் தொடர்கிறார்கள். நள்ளிரவு 12.23 மணியளவில் டெல் அல்மா என்கிற சுரங்கப்பாதை வழியாக வண்டி வெகு வேகமாகச் சென்று கொண்டிருந்தது. மோட்டார் சைக்கிள்கள் துரத்துவதால் வேகத்தை அதிகரிக்கிறார் ஹென்றிபால் தமக்கு முன்னால் சென்ற வெள்ளை பியற்காரை பால் முந்திச் செல்கிறார். திடீரென மெர்ஸிடஸ் தனது கட்டுப்பாட்டை இழந்து நேராகப் பாலத்திலிருந்த பதின்மூன்றாவது கொன்கிறீட் தூணில் மூர்க்கமாக மோதுகிறது.
ரிட்ஸ் விடுதியிலிருந்து கிளம்பிய மூன்றாவது நிமிடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது கவனிக்கத்தக்கது. மோடியும், ஹென்றி பாலும் விபத்து நிகழ்ந்த ஓரிரு நொடிக ளில் காலமானார்கள். ‘சீட்பெல்ட்’ அணிந்திருந்தமையால் ரீஸ் ஜோன்ஸ் உயிர் தப்பினார். லா பிட்டிஸால் மருத்துவமனையில் டயானா மரணமானார். தமது பத்தொன் பதாவது வயதில் இளவரசர் சார்ல்ஸைத் திருமணம் செய்துகொண்டு சார்ல்ஸின் மனதில் இடம்பிடிக்க முடியாவிட்டாலும், உலகத் தொழு நோயாளிகள், எயிட்ஸ் நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அடித்தட்டு மக்களின் இதயத்தில் இடம்பிடித்தவர்இளவரசி டயானா.
மக்களின் இளவரசியாக கோடானுகோடி மக்களின் இதயத்தில் வாழ்கிறார் டயானா!
No comments:
Post a Comment