Thursday 6 July 2017

WADIYAR DYNASTY AND IT`S CURSES வோடையார் சாம்ராஜ்யம்.



WADIYAR DYNASTY  AND IT`S CURSES வோடையார் சாம்ராஜ்யம்.



1399ல் யதுராஜா என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதுதான் வோடையார் சாம்ராஜ்யம்.. அவர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தனர். யதுராஜாவும் அவருடைய சந்ததிகளும் இருனூறு வருஷங்களாக ஆண்டு வந்தனர். அவர்கள் அவர்களுடைய அளுகைக்குள்ப்பட்ட ராஜியத்தையும் விரிவுப்படுத்தி வந்தனர்..

அவ்வாறு அந்த வம்சத்தின் ஒன்பதவாது தலைமுறையில் வந்தவர் தான் ராஜ வோடையார்..(1578-1617)அவர் மிகுந்த வீரமுடையவராகவும், கலை,கலாச்சாரம் அகியவற்றை போற்றுபவராகவும் இருந்தார். அவருடைய தலைமையின் கீழ் அவர்களுடைய எல்லைகள் விரிவாக்கப்பட்டன.


முதலாம் இராச உடையார் (2 சூன் 1552 - 20 சூன் 1617) என்பவர் மைசூரின் மன்னராக 1578 முதல் 1617 வரை இருந்தவர்.[1] இவர் மைசூர் மன்னர் நான்காம் சாமராச உடையாரின் மூத்த மகனாவார்.

ஆட்சி விரிவாக்கம்[தொகு]
இராச உடையார் துவக்கத்தில் 33 சிற்றூர்களுக்கும் 300 வீரர்களுக்கும் தலைவனாக இருந்தார். விசயநகர குறுநில மன்னரான இவர், பேரரசின் வலிவு குன்றியதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, படிப்படியாக புதிய பகுதிகளை வென்று தன் அரசை விரிவுபடுத்தினார். 1612 இல் மண்டலத் தலைநகரான சீரங்கப்பட்டணத்தை கைப்பற்றினார். இவ்வெற்றியினால் மைசூர் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது. சீரங்கப்பட்டணம் உடையார்களின் அரசியல் மையமானது. சீரங்கப்பட்டண வெற்றியைத் தொடர்ந்து, இராச உடையார் தன் நாட்டின் வட பகுதியில் இருந்த செகதேவிராயர்களின் ஆட்சிப் பகுதிகளையும், தென்பகுதியிலிருந்த பாளையக்களையகாரர்களின் தெற்கு, கிழக்கு பகுதிகளையும் வென்று தன் அரசோடு இணைத்துக்கொண்டான்.[2]


தலக்காடுவில் முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்கள் பூமிக்குக் கீழ் புதைந்துள்ளன என்று இந்திய தொல் பொருள் ஆய்வுக் கழக குறிப்பு தெரிவிக்கிறது. அது எங்கிருக்கிறது? எப்போது தோன்றி இருக்கக்கூடும்? சற்றே புராண காலம் வரை சென்று விட்டு வரலாம்.

தல மற்றும் காடு என்ற பெயர் கொண்ட வேடர் இருவர், அடர்ந்த வனத்தில் ஓரிடத்தில் தினமும் சில யானைகள் ஒரு மரத்தை வலம் வந்து, துதிக்கையை உயர்த்தி வணங்குவதைக் கண்டனர். செழித்து வளர்ந்திருந்த அந்த மரத்தை ஒருநாள் வேடர்கள் வெட்ட, அதிலிருந்து குருதி கொட்டத் தொடங்கியது. பயந்துபோனார்கள் வேடர்கள். அப்போது அசரீரி ஒலித்தது. அதன் வாக்குப்படி அங்கிருந்த மூலிகைகளால் குருதியை நிறுத்த, பின்னர் பால் கொட்டத் தொடங்கியது. அப்போது அங்கு வந்த யானைகள், அந்தப் பாலை அருந்தி முக்தி அடைந்தன.
தேவலோகத்தைச் சேர்ந்த அவர்கள், ஒரு சாபத்தினால் யானைகளாகப் பிறந்து அவ்வனத்தில் வாழ்ந்து வந்தார்கள். வேடர்களால் அவர்களுக்கு சாபவிமோசனம் கிட்டியது. அந்த வனமே பின்னர் அவ்வேடர்கள் பெயரால் தலக்காடு என்று வழங்கப்பட்டது. பிற்காலத்தில் அங்கு நகரமும், கோயில்களும் உருவாயின.
கங்க மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய தலக்காடு. பின்னர் சோழர்கள் வசம் வந்தது. காவிரி பாயந்து மிகச் செழிப்பாக விளங்கிய அப்பகுதியை அனைத்து அரசர்களும் ஆள ஆசைப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஹொய்சாள மன்னன் விஷ்ணுவர்தன், சோழர்களை வென்று "தலக்காடு கொண்டான்' என்ற பட்டம் பெற்றான். அந்த வெற்றியைக் கொண்டாட ஐந்து இடங்களில் விஷ்ணு ஆலயங்களை எம்பெருமான் ராமனுஜரின் அறிவுரையின் பேரில் அமைத்தான். அவை பஞ்சநாராயண திருத்தலங்கள் என்று அறியப்படுகின்றன. ஒரே நாளில் ஒரே நேரத்தில் அவை ஸ்தாபிக்கப்பட்டன. அவை தலக்காடு கீர்த்தி நாராயணர் கோயில்; குண்டல்பேட் விஜயநாராயணர் கோயில்; தொண்டனூர் நம்பி நாராயணர் கோயில்; பேலூர் சென்னகேசவ நாராயணர் கோயில்; கதக் வீர நாராயணர் கோயில்.
இப்பொழுது நாம் பார்க்க இருப்பது தலக்காடு கீர்த்தி நாராயணர் கோயில். அலமேலம்மாவின் சாபத்திற்கு பல நூற்றாண்டுக்கு மேலம்மாவின் சாபத்திற்கு பல நூற்றாண்டுக்கு முன்பு, 1117ம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயம், ஏககூட வகையைச் சேர்ந்த கோயில், நட்சத்திர நடிவ பீடம் மீது எழுப்பப்பட்டுள்ளது. உட்புறம் நவரங்கா, சுகனாசி, கருவறை உள்ளது. நவரங்க மண்டபத்தில் ராமானுஜர், முதலியாண்டான், தேசிகர் விக்ரகங்களை தரிசிக்கலாம்.

கருவறையில் நின்ற கோலத்தில் எட்டடி உயரத்தில் சதுர புஜ நாயகனாக சங்கு, சக்கர, கதை, பத்மம் தாங்கி, இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகே வடிவான கீர்த்தி நாராயணர் தரிசனம் கிடைக்கிறது. இவரை தரிசித்தால் எப்படிப்பட்ட சாபமும் விலகும் என்பது நம்பிக்கை. ஒரு காலத்தில் சீரோடும் சிறப்புடனும் திகழ்ந்த இக்கோயில், தற்போது தொல் பொருள் ஆய்வுக் கழகத்தின் கட்டுப்பாட்டில் புனரமைப்பு செய்யப்படுகிறது.
சாபங்களைப் போக்கும் தலக்காடு தலத்தை நீங்களும் தரித்து வரலாமே!

 மைசூரிலிருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ளது, தலக்காடு.

தலக்காட்டில், ஒரு காலத்தில் சிவனை யானைகள் பூஜித்ததால், கஜாரண்யம் என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு. தலக்காடு வைத்தியநாத சுவாமியின் முன் மண்டபத்தை கட்டியது தமிழன் ராஜேந்திர சோழன். இந்தக் கோயிலின் முன் வாயிலில் செய்யப்பட்டுள்ள சித்திர வேலைப்பாடுகள் நின்று ரசிக்க வைக்கும். வாசலில் கம்பீரமான துவார பாலகர்களைக் காணலாம். வலப்புறத்தில் மூஞ்சூறு மீது அமர்ந்த வித்தியாசமான கணபதி.


மூஞ்சூறை அதட்டி உருட்டி இயக்க ஏதுவாய் அவர் கையில் கடிவாளமும் உள்ளது! கோயிலுக்குள் நடராஜர், துர்க்கை, பத்ரகாளி, காளிகாம்பாள் உட்பட பலர் உள்ளனர். கருவறை நுழைவாயிலில் தமிழ்நாட்டு பாணியில் இருபுறமும் முருகனும் கணபதியும் உள்ளனர். உள்ளே வைத்தியநாதரை, ஏழு தலை நாகத்துடன் கூடிய வெள்ளிக் கவசத்துடன் காண பரவசம் ஏற்படும். தாயார் பெயர் மனோன்மணி. மே மாதத்தில் வைத்தியநாத சுவாமி காட்சியளித்த தினம் கொண்டாடப்
படுகிறது. கார்த்திகை சோமவாரம் ரொம்ப விசேஷம். பங்குனியில் பிரமோத்ஸவம், தீர்த்தவாரியும் உண்டு. அருகில் இரு மண் மலைகளைக் கடந்து சென்றால்
பாதாளேஸ்வரர் ஆலயத்தைக் காணலாம். இங்குள்ள சிவன் பெயர் வாசுகீஸ்வரர். இங்கும் விநாயகர், பைரவர், வீரபத்திரர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். மேற்கில் சென்றால் மருளீஸ்வரர் கோயிலை அடையலாம்.

கருவறையில் பெரிய லிங்கம் உள்ளது. பிரம்மா, தன் சாபம் நீங்குவதற்காக இந்த லிங்க த்தை பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். கிழக்கில் சென்றால் அர்க்கேஸ்வரரை தரிசிக்கலாம். இது வைத்தியநாத சுவாமி கோயிலிலிருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவு. இது தனியாக உள்ளது. வைத்தியநாத சுவாமி கோயிலிலிருந்து பார்த்தால் முடுக்குத்துறை குன்று தெரியும். அதில் ஸ்ரீமல்லிகார்ஜுன சுவாமி கோயில் உள்ளது. இங்கு பெரிய நந்தியை தரிசிக்கலாம். ஸ்ரீமல்லிகார்ஜுனர் சின்ன லிங்கம். அதன்மீது காமதேனுவின் கால் பதிந்த தடயம் உள்ளதாக காட்டுகிறார்கள். இங்குள்ள தாயாரின் பெயர் பிரமராம்பிகை. தனிச்சந்நதி கொண்டுள்ளாள். இந்த ஐந்து சுவாமிகளையும் ஒரே சமயத்தில் காண்பது பாக்கியம். வைத்தியநாத சுவாமி கோயிலில் பகவான் பிரதிஷ்டைக்கு காரணமாக இருந்த இருவேடர்களும் சிலாரூபத்தில் காட்சி தருகின்றனர். பாதாளேஸ்வரர் கோயிலைக் கடந்து சிறிது தூரம் நடந்தால் கீர்த்தி நாராயணர் கோயில் உள்ளது. 1911ல்தான் இந்தக் கோயில் மண்ணிலிருந்து அகழ்வாராய்ச்சி மூலம் வெளிக்கொணரப்பட்டது. இங்கு தாயார், நம்மாழ்வார் சிலைகளும் உள்ளன. கருட பீடத்தில் 9 அடி உயர கம்பீர கீர்த்தி நாரா யணர் காணப்பட வேண்டியவர். ராமானுஜரால் கட்டப்பட்ட ஐந்து நாராயணர் கோயில்களில் இதுவும் ஒன்று. இந்த இடத்திற்கு நல்ல துணையுடன், பொழுது புலர்ந்த பின்பு சென்று தரிசித்து பொழுது மறையும் முன் இருப்பிடம் திரும்புவது நல்லது.


ரத்தினங்கள் பதித்த தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, பட்டாடையில் மிளிரும் சாந்தம் தவழும் அந்த முகத்தை, வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள், ராணி அலமேலம்மா.
அவள் தரிசித்தது ரங்கநாயகி தாயாரைத்தான். பூஜை முடிந்ததும் தாயாருக்கு அணிவிக்கப்பட்ட நகைகளை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குக் கிளம்பிவிட்டாள். என் அநியாயம் இது என்கிறீர்களா?

அலமேலம்மா அப்படித்தான்! அவை அவளுடைய நகைகள்தான்! அதனால் பூஜை முடிந்தவுடன் நகைகளை தன்னுடனேயே எடுத்துச்சென்று விடுவாள். தன் அருகிலேயே வைத்துக் கொள்வாள். அப்படிச் செய்வதால், தாயார் எப்போதும் தன்னுடனேயே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும் அவளுக்கு.
அமைதியாகப் போய்க் கொண்டிருந்த நாட்கள் அல்லல்படுத்தும் நாட்களானது ரங்கநாயகித் தாயார் அவளை ஆட்கொள்ளும் நேரம் வந்தது. அலமேல ம்மாவின் கணவன் ஸ்ரீரங்கபட்டினத்தில், விஜயநகர பேரரசின் பிரதிநிதியான திருமலைராயன். நோய்வாய்ப்பட்ட அவன் ஆட்சிப் பொறுப்பை அவளிடம் விட்டுவிட்டு வேறு நகருக்குச் செல்கிறான்.

அலமேலம்மாள், தன் கணவர் இருக்கும் இடமான தலக்காடு என்ற இடத்திற்கு தாயாரின் நகைகளையும் எடுத்துக் கொண்டு ஓடினாள். விஷயம் அறிந்த ராஜா, தன் படையை அனுப்பி அலமேலம்மாவை நகைகளுடன் பிடித்த வரச் சொன்னார்.

காவிரியின் வடகரையான மாலங்கி என்ற இடத்திற்கு வந்த அவள், எதிரிகள் பின் தொடர்வது கண்டு, ஒரு சிறிய மூக்குத்தியை மட்டும் விட்டுவிட்டு மற்ற நகைகளுடன் அங்கிருந்து காவிரி நதியில் குதித்தாள் விழும் முன்,
"'மலங்கி, சுழல் நிறைந்த ஆழமான பகுதி ஆகட்டும்!
தலைக்காடு மணல் நிறைந்த மண் மேடாகட்டும்!
மன்னர் வம்சம் சந்ததி அற்றுப் போகட்டும்!
என்று சாபம் கொடுத்து விட்டு காவிரியில் மூழ்கினாள்.

வீரர்களால் நகைகளையோ, அவளையோ கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் அளித்த சாபம் அறிந்த ராஜா உடையார் மிகவும் மனம் வருந்தினார். அந்த வருடம் நடந்த தசரா விழாவின் ஒன்பதாம் நாளில் இளவரசன் மரணித்தான்.

கலங்கிய மன்னன், அலமேலம்மாவின் பிரதிமை ஒன்றை அரண்மனைக்குள் ஸ்தாபிதம் செய்து வழிபடத் தொடங்கினார். அன்றிலிருந்து இன்றுவரை தசரா விழாவின் ஒன்பதாம் நாளன்று குடும்பத்தினர் மட்டும் பங்கு பெறும் பூஜை ஒன்று இன்றுவரை உடையார் வம்சத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் நடந்து நானூறு வருடங்கள் ஆகிவிட்டது. தலக்காடு மணல் மேடாகிவிட்டது. காவிரி தன் பாதையை மாற்றி மாலங்கியை சுழல் நிறைந்த பகுதியாக்கிவிட்டது. உடையார் வம்சத்தில் ஒரு தலைமுறை விட்டு அடுத்த தலைமுறைக்கு நேரடி வாரிசி இல்லாமல் போய்விட்டது.




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




No comments:

Post a Comment