Wednesday 12 July 2017

QUEENS , WHO THEY RULED THE WORLD


 QUEENS  , WHO THEY RULED THE WORLD






பொதுவாக மன்னரின் மறைவுக்கு பின்னர் தான், அவரது மனைவிகள் ஆட்சி நடத்த முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சில சக்தி வாய்ந்த பெண்கள், வரலாற்றில் அவர்களது தைரியம் மற்றும் சிறப்பால் ராணியாக, அரசாட்சியை புரிந்துள்ளனர். இதற்கு அவர்களது மன தைரியமும், தன்னம்பிக்கையும் தான் பெரும் காரணம். அதனால் தான் அவர்கள் அனைவராலும் மறக்க முடியாத வகையில் வரலாற்றில் மட்டுமின்றி, மனதிலும் இடம் பெற்றுள்ளனர். அத்தகைய ராணிகளுள் அனைவருக்கும் தெரிந்தவர்கள் என்றால், எலிசபெத், கிளியோபட்ரா, ஜான்சி ராணி லட்சுமிபாய் போன்றோர் தான். ஆனால் அவர்களுடன், வேறு சில ராணிகளும், தங்களது வலிமை மற்றும் சிறப்பான ஆட்சியால், வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். மேலும் சில ராணிகள், திருமணம் செய்து கொள்ளாமலேயே அரியணை ஏறி, ஆட்சி புரிந்துள்ளனர். வேறு சிலர், மன்னர் இருக்கும் போதே, அரசாட்சியை மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு வரலாற்றில் இடம்பெற்ற, புகழ்பெற்ற சில ராணிகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

 எகிப்து கிளியோபாட்ரா 





எகிப்தின் அரசியாக இருந்தவர் தான் கிளியோபாட்ரா. இவர் அவரது பன்னிரெண்டாம் வயதில் ஆட்சிக்கு வந்தார். மேலும் தனது இரண்டு சகோதரர்களையும் மணந்து, எகிப்தின் ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றினார். 




ஜான்சி ராணி லட்சுமி பாய் 


ராணி லட்சுமிபாய், வட இந்தியாவில் உள்ள ஜான்சி நாட்டின் ராணியாக இருந்தவர். இவர் உண்மையில் ஒரு ஏழ்மையான பிராமின் குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய பெண்களுள் இவர் முக்கியமானவர். இந்தியாவில் இவரை மறந்தவர் எவரும் இலர்.

 ராணி எலிசபெத் 



இங்கிலாந்தின் முதல் ராணி மற்றும் திருமணமாகாமல் ஆட்சி புரிந்த ராணி என்றால், அது ராணி எலிசபெத் (Queen Elizabeth) தான். இவர் இங்கிலாந்தில் நல்ல முறையில் ஆட்சி புரிந்து வந்தார். 




பிரான்ஸின் ராணி மேரி 


ராணி மேரி (Marie) மிகவும் பிரபலமானவர்களுள் ஒருவராக இல்லாவிட்டாலும், உண்மையில் இவர் பிரான்ஸில் அதிகார செல்வாக்கு உடையவர். அதிலும் அவரது கணவரின் அரசியல் முடிவுகளை எடுப்பதும் இவரே ஆவார். 


ராணி நெபர்டிட்டி 

எகிப்து நாட்டின் மற்றொரு ராணியான நெபர்டிட்டி (Queen Nefertiti), உலகிலேயே மிகவும் அழகான பெண்களுள் ஒருவராவார். மேலும் இவர் எகிப்து நாட்டின் அகேநதன் (Akhenaten) மன்னனின் இரண்டாம் மனைவியுமாவார். இவருக்கு 6 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். 

ஜெநோபிய பல்மைரா, 


அதாவது புதிய சிரியாவின் ராணியாக இருந்தவர் தான் ஜெநோபிய (Zenobia). இவர் ரோமானியர்களை எதிர்த்து ஆயுதமேந்திய கலகம் செய்தார். ஆனால் இறுதியில் இவர் இறந்துவிட்டார். இருப்பினும் அவரது தைரியமான செயல் இன்னும் அனைவரது மனதிலும் இருக்கும். 

மேரி, ஸ்காட்லாந்து ராணி 

ஸ்காட்லாந்தின் ராணியாக இருந்தவர் தான் ராணி மேரி (Mary). இவரும் பிரான்ஸ் நாட்டின் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். இவரது ஆட்சி மிகவும் மோசமானதாக இருந்தது. மேலும் இவர் ராணி எலிசபெத்தால் 18 ஆண்டுகள் சிறையிலிடப்பட்டு, இறுதியில் தூக்கிலிடப்பட்டார். 

இங்கிலாந்து ராணி ஆன் போலெய்ன் 


ஆன் போலெய்ன் (Anne Boleyn) என்னும் பெண், மிகவும் சக்திவாய்ந்த கத்தோலிக்க தேவாலயத்தை உடைத்து, இங்கிலாந்தின் ராணியாக வந்தவர். இவரது செயலால் எட்டாம் ஹென்றி, இவரை தனது இரண்டாவது மனைவியாக்கி, ராணியாக்கினார். 

கேதரின் தி கிரேட், 

ரஷ்யா பேரரசி ஜெர்மன் இளவரசி தான் கேதரின் (Catherine). இவர் ரஷ்யாவின் ஆர்க் டியூக்கை, தனது 16 வயதிலேயே மணந்து, இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்த அவளது கணவர், கொஞ்ச நாட்களிலேயே சிறப்பான ஆட்சியால் ரஷ்யாவின் மன்னரானார். மேலும் கேதரின் தனது இரும்பு கரம் கொண்டு ஆட்சி புரிந்து, ஒரு வெற்றிகரமான ராணியாகவும் இருந்தார்.

No comments:

Post a Comment