Tuesday 25 July 2017

இரண்டாம் உலகப் போர்








இரண்டாம் உலகப் போர்


இரண்டாம் உலகப்போர் அல்லதுஉலகப்போர் 2 என அறியப்படுகிறதுஇருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காணப்பட்ட இரண்டு வெவ்வேறுபட்ட அரசியல், போரியல் முரண்பாடுகளின் சேர்கைக் காரணமாக உலகின் பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்ற பெரும் போரைக் குறிக்கும். முதல் முரண்பாடானது 1937 ஆம் ஆண்டுஆசியாவில் இரண்டாம் சீன யப்பானிய போராகவும் மற்றையது ஐரோப்பாவில்செருமனியின் போலந்து மீதான ஆக்கிரமிப்புப் போராகவும் தொடங்கியது. உலகலாவிய அளவில் நடைபெற்ற இந்தப்போரின் போது பெரும்பான்மையான உலக நாடுகள்நேச, அச்சு நாடுகள் என இரண்டாக பிளவுபட்டுப் போரிட்டன. மனித வரலாற்றில் மிகவும் அழிவுமிக்க சம்பவமான இப்போரின் போது 70மில்லியன் பேர் வரை கொல்லப்பட்டனர்[1].
இப்போரில் தான் முதன்முதலாகஅணுகுண்டு பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அமெரிக்காசின்னப் பையன்(little boy), கொழுத்த மனிதன்(fat man) என்று பெயரிடப்பட்ட இரு குண்டுகளை ஜப்பானின்ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய நகரங்கள் மீது வீசியது.

பின்னணி


முதல் உலகப் போரின் விளைவாக ஜெர்மனி வெர்சாய் ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டது.[2]. இது 14% நிலப்பரப்பை ஜெர்மனி இழப்பதற்கு காரணமாக இருந்தது; மற்ற நாடுகளை கைப்பிடிப்பதை தடுத்தது. ஜெர்மனியின் ராணுவ பலத்தை முட்டு கட்டியது. மேலும் பெரிய தொகையாக நட்டஈட்டை ஜெர்மனி மேல் திணித்தது.இரசியாவின் உள்நாட்டு போர் சோவியத் ஒன்றியத்தின் ஆக்கத்தை கொடுத்தது. சோவியத் யூனியன் ஜோசப் ஸ்டாலினின் சர்வாதிகாரம் கீழே பணிந்தது. இத்தாலியில்பெனிட்டோ முசோலினி பதவியை பாசிஸ்டு சர்வாதிகாரியாக கைப்பற்றி, புதிய ரோம இராச்சியத்தை உறுதிப்பாடு செய்தார்[3].
சீனாவில் கோமிங்டாங் கட்சி பிராந்திய போராண்டைகளுக்கு (warloads) எதிராக ஐக்கிய இயக்கத்தை ஆரம்பித்து. பேச்சளவில் சீனத்தை 1920களில் ஒன்று படுத்தியது. ஆனால் விரைவிலேயே, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் உள்நாட்டுப் போரில் இறங்கியது. 1931இல், போர் மனப்பான்மை கொண்ட சப்பானிய அரசு, ஆசியாவில் தன் அதிகாரத்தை அதிகரிக்க[4] முதல் படியாக முகடன் நிகழ்வைப் பயன்படுத்தி மஞ்சூரியாவைஆக்கிரமித்தது. அதனால் சீனாவும், ஜப்பானும் சாங்காய், ரேஹே, ஹீபை முதலிய இடங்களில் பல சிறிய போர்களில், 1933ல் ஏற்பட்ட டங்கு போர்நிறுத்தம் வரை ஈடுபட்டன

அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் தலைவராக 1933ல் ஆனார். அவர் மக்களாட்சியை ஒழித்து, இன வாரியான புது உலக அடைவை வற்புறுத்தினார். அதனால் ஜெர்மனியைப் புனரமைக்க ஊக்கத்தில் ஈடுபடுத்தினார்[5]. இது பிரான்சையும்,பிரித்தானியாவையும், இத்தாலியையும் கவலைக்குள்ளாக்கின[6]. பிரான்சு, இத்தாலியுடன் நட்பைப் பேணும் முகமாக, இத்தாலி கைப்பற்ற விரும்பிய எதியோப்பியாவில் தன்னிச்சையாக நடந்து கொள்ள அனுமதித்தது.
1935 இல் ஜெர்மனி சார்லாந்தை ஒருங்கிணைத்த போதும், அதன் பின் ஹிட்லர் வெர்சாய் ஒப்பந்தத்தைக் கைவிட்ட போதும் நிலைமை இன்னும் மோசமாகியது. அது மட்டுமல்லாது ஹிட்லர் கட்டாய இராணுவ சேவையையும், புனராயுதமாக்குதலையும் புகுத்தினர். ஜெர்மனிக்கு எதிராக பிரான்ஸ், பிரித்தன், இத்தாலிஸ்ட்ரேசா முன்னணியை வைத்தன. ஜெர்மனியின் கிழக்கு ஐரோப்பிய ஆக்கிரமிப்பு எண்ணங்களினால் கவலைப்பட்டு,சோவியத் ஒன்றியம் பிரான்சுடன் பரஸ்பர உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் அந்த ஒப்பந்தம் கூட்டு நாடுகள் உடன்பாட்டை நம்பி இருந்ததால், அது பலனில்லாமல் போயிற்று[7][8].
ஜூன் 1935 இல், பிரித்தானியா ஜெர்மனியுடன் கடற்படை ஒப்பந்தத்தை செய்து, ஜெர்மனியின் கடற்படை மீதான கட்டுப்பாடை தளர்த்தியது. அமெரிக்க நாடுகள் ஆசிய, ஐரோப்பிய கண்டங்களின் மோசமாகும் நிலை கண்டு, நடுநிலைமைச் சட்டத்தைஇயற்றியது[9]. அக்டோபரில் இத்தாலி எதியோப்பியாவை ஆக்கிரமித்த போது, ஜெர்மனி மட்டுமே அதற்கு ஆதரவு கொடுத்தது. அதனால் இத்தாலி ஜெர்மனியின் குறிக்கோளானஆஸ்திரியாவை கைப்பற்றுதலுக்கு, தன் ஆட்சேபங்களை கைவிட்டது[10].
வெர்சாய் மற்றும் லொசார்னோ ஒப்பந்தகளுக்கு எதிர்மாறாக , 1936ல் ஹிட்லர்ரைன்லாந்தை புனராயுதமாக்கினார்[11]. ஜூலையில், ஸ்பானிய உள்நாட்டுப்போர் தொடங்கிய போது, ஹிட்லரும், முசோலினியும் பாசிசத் தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோவை ஆதரித்தனர், சோவியத் ஒன்றியம் ஸ்பானியக் குடியரசை ஆதரித்தது. இரு தரப்புகளும் போரை புது ஆயுதங்களையும், புது போர் முறைகளையும் பரீட்சை செய்ய உபயோகித்தன[12]. பிராங்கோவின் தேசியவாதிகள் 1939 இல் வெற்றி பெற்றனர்.
சச்சரவு அதிகரிக்கையில், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த எத்தனங்கள் செய்யப்பட்டன. அக்டோபரில், ஜெர்மனியும், இத்தாலியும் ரோம்-பெர்லின் அச்சைஉண்டுபண்ணின. ஒரு மாதம் கழித்து ஜெர்மனியும், ஜப்பானும் சோவியத் ஒன்றியம் பெரிய உரப்பு எனக் கருதி, கோமிண்டன் எதிர்ப்பு ஒப்பந்தத்தைச் செய்தன, அதில் இத்தாலியும் சேர்ந்து கொண்டது. சீனாவில் கோமிங்டாங்கும், கம்யூனிஸ்டுகளும்ஜப்பானுக்கு எதிராக ஒருமுக அணியை ஏற்படுத்துவதற்காக, போர் நிறுத்த ஒப்பந்தம் செய்தனர்[13].

காலநிரூபணம்

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பம் பொதுவாக செப்டம்பர் 1, 1939 இல் நடந்த போலந்தின் மீதான் ஜெர்மன் ஆக்கிரமிப்பு என கருதப் படுகிறது. மற்ற தேதிகள்செப்டம்பர் 13, 1931ல்,[14][15] நடந்த மஞ்சூரியா மீது நடந்த ஜப்பானிய ஆக்கிரமிப்பு, ஜூலை 7, 1937ல்,[16][17] நடந்த இரண்டாவது சீன-ஜப்பானிய போர் அல்லது மற்ற சம்பவங்கள். சிலர் பிரித்தானிய சரித்திரவியலாளர் ஏ.ஜே.பி.டெய்லர் கருத்தான ஒரே சமயத்தில் கீழ் திசையில் சீன-ஜப்பனிய போர், இரண்டாவது ஐரோப்பிய போர் அகியவை நடந்தன - ஆனால் அவை 1941ல் ஐக்கியமாகும் வரை உலக யுத்தமாகவில்லை என்று கருதுகிறனர். இக்கட்டுரை பழக்கமான தேதிகளை பயன்படுத்துகிறது.[18]
போர் முடிவும் பல நாட்களை கொடுக்கிறன. சிலர் ஆகஸ்ட் 14, 1945 முடிவு ஒப்பந்தத்தை எடுக்கிறனர், சிலர் செப்டெம்பெர் 2, 1945ல் அதிகாரபூர்வமான ஜப்பானிய சரணாகதியைஎடுக்கிறனர். சில ஐரோப்பிய நாடுகளில், மே 8, 1945 ஐ.வெ. நாள் (ஐரோப்பாவில் வெற்றி)முடிவு என கருதப் படுகிரது. 1951 வரை ஜப்பானுடன் சமாதன ஒப்பந்தம் கையெழுத்துப் படவில்லை.

போரின் போக்கு

சீனப்போர்

1937 மத்தியில், மார்கோ போலோ பாலம் சம்பவத்தை அடுத்து, ஜப்பான் சீனத்தின் மேல் முழு ஆக்கிரமிப்பு தொடங்கிற்று.. சோவியத்துகள் உடனே சீனத்திற்கு ஆதரவு கொடுத்தனர், அதனால் சீன-ஜெர்மனிய கூட்டும் முறிந்தது. ஷாங்காயில் ஆரம்பித்து, ஜப்பான் சீன துருப்புகளை பின் தள்ளி, நாங்கிங்கை டிசம்பரில் கைப்பற்றியது. ஜூன் 1938ல் சீனர்கள் ஜப்பானிய முன்னேற்றத்தை தடுக்க மஞ்சள் ஆறு அணைப்புகளை உடைத்து, வெள்ளமாக்கினர். அதனால் வூஹான் நகரத்தின் பாதுகாப்பை அதிகரித்தாலும் , வூஹன் அக்டோபரில் ஜப்பானியருக்கு விழுந்தது..[19] அச்சமயம், ஜப்பானும் சோவியட் யூனியனும் கசான் ஏரி அருகே, சண்டையிட்டன. அது 1939ல், தீவிரமான எல்லைப் போரக மாறிற்று. [20]அது செப்டெம்பெர் 15 ஒப்பந்தப் படி முடிவுற்று பழைய நிலையை கொண்டு வந்தது..[21]

ஐரோப்பாவில் போர்
ஐரோப்பாவில் ஜெர்மனியும், இத்தாலியும் தைரியமாயின. மார்ச் 1938ல், ஜெர்மனி ஆஸ்திரியாவை கைப்பற்றினாலும், மற்ற ஐரோப்பிய சக்திகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு வரவில்லை..[22] அதனால் ஹிட்லர் செகோஸ்லாவகியாவின், ஜெர்மன் இனத்தவர்நிரைந்திருந்த சூடடன் பகுதியை இணைக்க கோரிக்கையை முன்வைத்தார். பிரான்சும், பிரித்தனும் செகோஸ்லாவகிய அரசின் எதிர்ப்புகள் இடையே, ஹிட்லரின் கோரிக்கைக்கு இனிமேல் ஆக்கிரமிப்பு நடக்காது என்ற சொல்லுறுதி மேல் ஒப்புக்கொண்டனர்..[23]. அதன்பிறகு, ஜெர்மனியும், இத்தாலியும், செகோஸ்லாவாகியாவை இன்னும் பிரதேசங்களை போலந்து, ஹங்கேரி நாடுகளுக்கு கொடுக்க வேண்டும் என வற்புரித்தன. மார்ச் 1939ல், ஜெர்மன்ய் மீதம் இருந்த செகோஸ்லாவிகாயை ஆக்கிரமித்து, ஜெர்மன் காப்பு பொஹீமியா, மொரேவியாஎனவும், ஜெர்மன் சாய்வுள்ள ஸ்லோவாகிய குடியரசு எனவும் பிளந்தன.
ஹிட்லர் டான்சிக் பற்றி போலந்து மேல் கோரிக்கைகளை வைத்ததை பார்த்து பயந்த பிரான்சும், பிரித்தனும் போலந்தின் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் கொடுத்தன. ஏப்ரல் 1939ல் இத்தாலி அல்பேனியாவை கைப்பற்றியதன் நிமித்தம், அதே உத்தரவாதம் கிரீஸ்,ருமேனியாவிற்கும் கொடுக்கப் பட்டது.]].[24] இதன் பிறகு ஜெர்மனியும், இத்தாலியும்,எஃகு இணைவு என்று தங்கள் கூட்டுரவை வலுப்படுத்துனர்]].[25]

ஆகஸ்ட் 1939ல், ஜெர்மனியும் சோவியட் யூனியனும் ஆக்கிரமிப்பினமை ஒப்பந்தத்தைசெய்தன. .[26]இவ்வொப்பந்தத்தின் ரகசிய ஷரத்துகள் படி, இரு நாடுகளும் போலந்தை பிளப்பதற்கும், கிழக்கு ஐரொப்பாவை தஙகள் அதிகார பிராந்தியங்களாக ஆக்குவதற்கும் வித்திட்டது..[27]

செப்டெம்பெர் 1, 1939ல், அடால்ஃப் ஹிட்லர் தன் போலந்து ஆக்கிரமிப்பை தொடங்கினார், பிரான்ஸ், பிரித்தன் மற்றும் பிரித்தானிய கூட்டியம் ஹிட்லர் மேல் போர் அறிவித்தாலும், போலந்துக்கு பெரிய உதவி செய்யவில்லை..[28] செப்டெம்பெர் 17, 1939ல் ஜப்பானியருடன் சமாதான ஒப்பந்தம் பிறகு , சோவியத் யூனியன் போலந்தின் மீது தன் ஆக்கிரமிப்பை தொடங்கிற்று..[29] போலந்து அதிகார பூர்வமாக சரணாகதி அடையாவிட்டாலும், அக்டோபர் முதலில் போலந்து போர் முடிந்தது - அதனால் போலந்து ஜெர்மனி, சோவியத் யூனியன், லித்வேனியா, ஸ்லோவாகியா இடையே பாக பிரிவினை செய்து கொள்ளப் பட்டது.[30]
போலந்து போரின் அதே சமயத்தில், ஜப்பான் பாதுகாப்பு நோக்கில் முக்கிய நகரானசங்க்‌ஷா நகரின் கைப்பற்ற முயன்றாலும், அது தோல்வி அடைந்து பின் வாங்கிற்று..[31]

போலந்து ஆக்கிரமிப்பு பிறகு, சோவியத் யூனியன், பால்டிய நாடுகளில் தன் துருப்புகளை முன்னேற்றியது. சோவியத் யூனியன் முன்னேற்றங்களுக்கு ஃபின்லாந்து தீவிர தடங்கல் கொடுத்ததால் நான்கு மாத பனிகாலப் போர் ஏற்பட்டு, அது ஃபின்லாந்து, சோவியத்துக்கு விட்டுக் கொடுப்பதில் முடிவடைந்தது.[32] பிரான்சும், பிரித்தனும் ஃபின்லாந்து மீதான ஆக்கிரமிப்பை ஜெர்மனி ஆதரவுப் போர் என கருதி, சோவியத் யூனியனை கூட்டுநாடுகளிடமிருந்து வெளியேற்ற முயன்றன. சீனத்திற்க்கு, மேற்கத்திய நாடுகள், சோவியத் யூனியன் இருவரும் வேண்டியவர்கள் ஆனதால், இருதலைக் கொள்ளியாகி, இந்த வெளியேற்ற முயற்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் கோபமுற்ற சோவியத் யூனியன், சீனத்திற்கு தன் எல்லா தளவாட ஏற்றுமதிகளை சஸ்பெண்ட் செய்தது..[33]. ஜூன் 1940ல், சோவியத் யூனியன் பால்டிக் நாடுகள் ஆக்கிரமிப்பை பூரணப்படுத்தியது.]].[34]

மேற்கு ஐரோப்பாவில், பிரித்தன் தன் ராணுவத்தை ஐரோப்ப கண்டத்திற்கு அனுப்பி வைத்தது , ஆனால் அச்சமயம் நேச நாடுகளும் ஜெர்மனியும் நேராக மோத வில்லை. சோவியத் யூனியனும், ஜெர்மனியும், பெப்ருவர்ய் 1940ல், ஒரு வணிக ஒப்பந்தம் செய்த்தனால், சோவியத் யூனியன் ஜெர்மனியிடமிருந்து ராணுவ, பொறி தளவாடங்களைப் பெற்று, பதிலுக்கு கச்சா பொருள்களை கொடுத்து, பிரித்தனின் தடுப்பு முயற்சிகளை முறியடிக்க உதவியது..[35] ஏப்ரலில், ஜெர்மனி சுவீடனிடமிம் இருந்து இரும்பு கச்சாப் பொருள் இறக்குமதியை பாதுகாக்க டென்மார்க், நார்வேயை ஆக்கிரமித்தது. டென்மார்க் உடனே கீழ்படிந்து விட்டது. ஆனால் நார்வேயை கைப்பற்ற 2 மாதங்கள் ஆயின..[36] நார்வே போரில் பிரித்தனின் செய்கைகளில் பிரித்தானிய மக்களும், மக்களவையும் அதிருப்தி அடைந்ததால், பிரித்தானிய பிரத மந்திரி நெவில் சேம்பர்லின் பதவி இறக்கப் பட்டு வின்ஸ்டன் சர்ச்சில் மே 10, 1940ல் பதவி ஏற்றார். .[37]

[தொகு]அச்சு நாடு முன்னேற்றங்கள்

ஜெர்மனி பிரான்ஸ் மற்றும் கீழ் நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு ஒரே நாளில் தொடங்கியது, நெதெர்லாந்தும், பெல்ஜியமும் சில வாரங்களில் பிளிட்ஸ்கிரீக் முறைகள் செய்த ஜெர்மனியால் கைப்பற்றப் பட்டன. ;[38]பிரான்சின் பாதுகாப்பிற்க்கு கட்டப் பட்டமாகினோ கோடு பிரான்சால் நுழையமுடியாதது என கருதப்பட்ட ஆர்டீன் காடுகளின் வழியே சென்று , அதனால் சுற்றப்பட்டு ஜெர்மானிய ராணுவத்தினால் கைப்பற்றப் பட்டது. பிரித்தானிய துருப்புகள் டங்கர்க் துறைமுகம் வழியாக, தங்கள் கனரக தளவாடங்கலை பின்னால் விட்டு விட்டு , ஐரோப்பிய கண்டத்திலிருந்து [[தப்பி ஓடினர். 10 ஜூன் அன்று, இத்தாலி பிரான்சின் மீது ஆக்கிரமிப்பு செய்து, பிரான்ஸ், பிரித்தன் இரண்டின் மேலும் யுத்தப் பிரகடனம் செய்தது. 12 நாள் கழித்து, பிரான்ஸ் ஜெர்மனிக்கு சரணடைந்து, ஜெர்மனிய, இத்தாலிய கைப்பற்று பகுதிகளாகவும், ஜெர்மன் கட்டுமைக்கு கீழிருந்த விசி அரசு எனவும் பிரிக்கப் பட்டது.]],[39] ஜூலை 14ம் நாள், பிரிதானிய கடற்படை அல்ஜீரியாவில் இருந்த பிரென்க்சு கப்பல்களையை, ஜெர்மனி கையில் விழாதிருக்கும் பொருட்டு, .[40] தாக்கியது.
பிரான்சு அடங்கியவுடன், ஜெர்மனி பிரித்தன் மீது ஆக்கிரமிப்புக்கு தயார் செய்யும் பொருட்டு, ஆகாயத் தாக்குதல்களை தொடங்கிற்று..[41] இந்த தாக்குதல்கள் தோல்வியில் முடிவுற்று, 1940 செப்டம்பரில் ஜெர்மனி பிரித்தன் மீது ஆக்கிரமிப்பை ரத்து செய்தது. புதிதாக கைப்பற்றப்பட்ட பிரென்சு துறைமுகங்களில் இருந்து ஜெர்மனி பிரித்தனின் அட்லாண்டிய கடற்படைக்கும், வணிகக் கப்பல்களுக்கும் எதிராக யு-படகுஎன்ற நீர்மூழ்கி அணிகளை அனுப்பி துவம்சம் செய்தது.[42] இத்தாலி மத்தியதரையில் தன் ஆக்கிரமிப்பு செயல்களை மால்டா தீவு மீது முற்றுகையுடன் தொடங்கிற்று; மேலும் பிரித்தானிய சோமாலிலாந்தை கைப்பற்றி, பிரிட்டன் வசம் இருந்த எகிப்து மேலும் ஆக்கிரமித்தது.. செப்டெம்பரில் ஜப்பான், இந்தொ-சீனாவின் வடக்கு கரையில் இருக்கும் பல துறை முகங்களை கைப்பற்றி, சீனாவை தடுப்பு வட்டத்திற்குள் வைத்தது..
அப்பொழுது, நடுநிலைமை அமெரிக்கா சீனத்திற்கும், மேற்கு நேச நடுகளுக்கும் ஓரளவு உதவி செய்தது.[43]. நவம்பர் 1939ல், அமெரிக்க நடுநிலைமை சட்டம், நேச நாடுகள்அமெரிக்கவிடன் தளவாடங்களை பணம் கொடுத்து வாங்க , மாற்றப் பட்டது.. 1940 ஜெர்மனி பாரிசை கைப்பற்றிய பிறகு, கடற்படை அளவை பெருமளவில் அதிகமாக்கியது. ஜப்பான் இந்தொ-சீன நாடுகளின் மீது ஆக்கிரமித்தவுடன், அதன் மேல் இரும்பு, எஃகு, பொறிகள் முதலியவற்றின் வணிகத்தை தடை செய்தது..[44]. செப்டம்பரில், பிரித்தனுடன் கடற்படை நிலயங்களுக்கு அழிகப்பல்கள்களை பதிலுக்கு கொடுத்தது..[45] இருந்தும் 1941 வரை அமெரிக்க பொது மக்கள் அபிப்பிராயம் அமெரிக்காவின் போர் பங்கு ஏற்றலை, எதிர்த்தது.
செப்டெம்பர் 1940 முடிவில், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி இடையே ஏற்பட்ட மூவர் உடன்பாடு அச்சு நாடுகள் ஒன்றாக செயல்படுவதை வலுப் படுத்தியது. அந்த உடன்பாடின் படி, எந்த நாடாவது மூவரில் ஒருவரை தாக்கினால், அந்த நாடு மூன்று நாடுகளின் எதிரியாகிவிடும்.[46]. அமெரிக்கா ஐக்கிய ராஜ்ஜியத்தை லெண்ட்-லீஸ் கொள்கை வழியாக ஆதரவு கொடுத்து வந்தது; மேலும் அட்லாண்டிக் சமுத்திரத்தில்பாதியை காப்பு பிரதேசம் என சொல்லி, இப்பிரதேசத்தில், பிரித்தானிய கடற்படைக்கு பாதுகாப்பு கொடுத்து வந்தது[47].[48]. அதனால் ஆத்திரமடைந்த ஜெர்மனி, அமெரிக்காவுடன் ஒரு பிரகடம் செய்யப் படாத கடல் போரில் ஈடு பட்டது..[49]

அச்சு நாடுகள் நவம்பர் 1940ல், ஹங்கேரி, ஸ்லோவாகியா, ருமானியா ஆகிய நாடுகளை சேர்த்து விரிவடைந்தது..[50] இந்நாடுகள் பிறகு ஜெர்மனியுடன் சோவியத் யூனியன் மீதான ஆக்கிரமிப்பில் கூட்டு சேர்ந்தன. மேலும் ருமானியாவின் சர்வாதிகாரி இயோன் அண்டோனெஸ்கு கம்யூனிச மேல் காழ்ப்பினால் அந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டர்.[51]
அக்டோபரில் இத்தாலி கிரீஸை ஆக்கிரமித்தது, ஆனால் சில நாட்களூல்லேயே, திருப்பி அடிக்கப் பட்டு அல்பேனியாவிற்குள் அனுப்பப் பட்டு, போர்மந்தம் ஆகியது..[52] இதற்கு பிறகு, பிரித்தானிய கூட்டமைப்பு படைகள் இத்தாலி எதிர்ப்பாக எகிப்திலும், கிழக்கு ஆப்பிரிக்காவிலும் ஆக்கிரமிப்பு நடத்தினர். 1941ல். இத்தாலிய துருப்புகள் லிபியாவிற்குள் தள்ளப் பட்டனர். இத்தாலிய கடற்படையும் பெரும் சேதத்திற்குள்ளாகியது, ஏனெனில் அரசு கடற்படை மூன்று இத்தாலிய போர் கப்பல்களை டரண்டோ கடல்நிலையத்தை தாக்கி அழைத்தது, பல இத்தாலிய கப்பல்கள்மடபன் முனையில் அழிக்கப் பட்டன.
ஜெர்மனி இத்தாலிக்கு உதவுவதற்கு முன் வந்தது. பெப்ருவரியில், ஹிட்லர் ஜெர்மன் துருப்புகளை லிபியாவிற்கு அனுப்பினார்; மார்ச் முடிவில் பிரித்தானிய கூட்டமைப்பு படைகளை விரட்டி அடித்ததில், நேச படைகள் எகிப்திக்கு உள்ளெ வந்தன. டொப்ருக்துறைமுகம் தான் கூட்டமைப்பு நாடு வசம் இருந்தது. கூட்டமைப்பு முயற்சிகள் மறுபடியும் மே, ஜூன் மாதங்களில் அச்சு நாடுகளை விரட்ட மேற்கொண்டாலும், அவை தோல்வியுற்றன. ஏப்ரலில் ஜெர்மன்ய் பால்கனிலும் கிரீஸ், யுகோஸ்லாவியா மீது ஆக்கிரமித்து உள்ளிட்டது. அவர்கள் அங்கு வேகமாக முன்னேறி, மேயில் கிரீஸின் கிரீட்தீவை கைப்பற்றினர்..[53]
நேச நாடுகளுக்கு சில வெற்றிகள் ஏற்பட்டன. கூட்டமைப்பு துருப்புகள் இராக்கில் ஒரு அரசாங்க கவிழ்ப்பு திட்டத்தை முறி அடித்தனர்,,[54]ஏனெனில் அத்திட்டம் ஜெர்மனியின் ஆதரவ்ய் பெற்றது. விடுதலை பிரான்சு துருப்புகளுடன் சேர்ந்து, சிரியா, லெபனான்நாடுகளை ஆக்கிரமித்து ஜெர்மன் சாதகமான அரசு கவிழ்ப்புகளை முறியடித்தனர்..[55]எல்லாவற்றிர்கும் மேலாக, பிரித்தானிய போரில், ராஜாங்க விமானப் படைலுஃப்ட்வாஃபின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது. [56]மே11, 1941 ஹிட்லர் பிரித்தன் குண்டடிப்பு போரை விலக்கிக் கொண்டார்..[57]

ஆசியாவில் சீனாவும், ஜப்பானும் ஆக்ரோஷத்துடன் பல ஆக்கிரமிப்பு நடத்தினாலும் போர்மந்தம் ஏற்பட்டது. சீன கம்யூனிஸ்டுகள் மத்திய சீனத்தில் ஜப்பான் எதிராக பெரும் போரை துவக்கினர். அதற்கு பதிலடியாக ஜப்பான் கொடுமையான சீரழிவுகளை செய்து, கம்யூனிஸ்டுகளின் ஆள், தடவாள வலுவை முறைக்க முயற்சித்தது..[58] சீன கம்யூனிஸ்டு - சீன தேசீயவாதிகளின் சச்சரவும் அதிகமாகி, அவர்கள் கூட்டுரவு முறிந்து ஒருவரை ஒருவர் போர் செய்யத் தொடங்கினர்..[59]

ஆசிய, ஐரொப்பிய நிலவரங்கள் ஓரளவு மந்தம் அடைய, ஜெர்மனி, ஜப்பான், சோவியத் யூனியன் அடுத்த கட்டத்திற்கு தயார் செய்து கொண்டன. ஜெர்மனி மேல் சந்தேகம் கொண்டதால், சோவியத் யூனியன் ஜப்பானுடன் சோவியத்-ஜப்பான் நடுநிலைமை உடன்படிக்கையை செய்தன..[60] அதே சமயம், சோவியத் யூனியன் மேல் ஆக்கிரமிக்க ஜெர்மனி தயார் செய்து கொண்டு, மிகப் பெரும் சேனைகளை சோவியத் எல்லையில் ரகசியமாக குவித்தது [61]

]யுத்தம் உலகமயமாகிரது

ஜூன் 22, 1941 அன்று, ஜெர்மனி மற்ற அச்சு நாடுகளுடன், 'பர்பரோசா இயக்கம்` என்று அழைக்கப் பட்ட படையெடுப்பில், சோவியத் யூனியன்குள் புகுந்தது. இந்த திடீர் படையெடுப்பின் முக்கிய இலக்குகள் [62]பால்டிய பிரதேசம், மாஸ்கோ, யுக்ரெயின், படையெடுப்பின் நோக்கம் 1941 முடிவிற்க்குள் போரை வெற்றியுடன் காண்பியன் - வெள்ளை கடல்கலை இணைக்கும் ஒரு கோடுவரை சென்று முடிப்பது. ஹிட்லரின் குறிக்கோள்கள் சொவியத் யூனியனை ராணுவ சக்தியாக முறித்தல், கம்யூனிஸத்தை அழைத்தல், மற்றும் ஜெர்மானியர்களுக்கு அங்கு வாழ் மக்களையும், இனங்களையும் விரட்டி அல்லது அழைத்து `வசிக்கும் இடத்தை` பிடித்தல்[63]]][64]. யுத்தத்திற்கு முன்செஞ்சேனை `திருப்பி அடித்தலுக்கு` ஆயத்தம் செய்து கொண்டிருந்தாலும்,[65], பர்பரோசா சோவியத் உயர் ராணுவ அதிகாரத்தை `யுக்தியான பாதுகாப்பு` முறைக்கு தள்ளியது. வெய்யில் காலத்தில் ஜெர்மனி சோவியத் யூனியனில் மாபெரும் வெற்றிகளை கொண்டு, சோவியத் ராணுவம் மேல் மாபெரும் ஆள், தளவாட சேதங்களை உண்டாக்கியது. ஆகஸ்டு நடுவில் ஜெர்மன் ராணுவ உயர் அதிகாரம் மத்திய ராணுவ இனத்தின் முன்னேற்றத்தை நிறுத்தி, இரண்டாவது பான்சர் இனத்தை மத்திய யுக்ரெயின், லெனின்கிராட் வழி முன்னேறிச் செல்லும் துருப்புகளுக்கு உதவியாக அனுப்ப முடிவு செய்தது..[66] கீவ் தாக்குதல் பெரும் வெற்றியில் முடிந்து, 4 சோவியத் படைகளை அழித்து, கிரைமியாவிலும், தொழில் முன்னேற்றம் அடைந்த கிழக்கு யுக்ரெயினிலும் உள் செல்வதற்கு சாதகமாக இருந்தது.
பிரான்சில் இருந்த முக்கால்வாசி அச்சுத் துருப்புகள் கிழக்கு யுத்தத்திற்கு அனுப்பப் பட்டுது [67][68]ஐக்கிய ராஜ்ஜியத்தை தன் `பெரிய யுக்தி`யை பரிசீலனை செய்ய தூண்டியது. .[69] ஜூலையில் சோவியத் யூனியனும் ஐக்கிய ராஜ்ஜியமும் ஜெர்மனிக்கு எதிராக ராணுவ கூட்டு செய்தன.]][70] உடனே இரானை ஆக்கிரமித்து இரானின் எண்ணை வளங்களை தன் வசம் செய்தன,.[71] பாரச்சிக குறுவழியையும் தன் வசம் செய்தன. ஆகஸ்தில் அமெரிக்க நாடுகளும் ஐக்கிய ராஜ்ஜியமும் அட்லாண்டிக் பிரகடனம்செய்தன.]].[72] நவம்பரில் கூட்டு நாடுகள் வடக்கு ஆப்பிரிக்காவில் ஜெர்மனி எதிராக எதிரடி கொடுக்க குரூசேடர் இயக்கம் ஆரம்பத்து , ஜெர்மனி, இத்தாலி செய்த எல்லா ஆதாயங்களையும் திருப்ம்பி பிடுங்கினர். [73]

ஜப்பான் முந்தைய வருடம் தன் மேற்கு நாடுகளுக்கு எதிராக ராணுவ வலுவை அதிகரிக்க இந்தோ-சீனத்தை கைப்பற்றியது..[74] அமெரிக்கா, பிரித்தன், மற்ற மேலை நாடுகள் இந்தொ-சீனத்தின் புடுங்கதலுக்கு எதிர் பதிலாக ஜப்பனிய செல்வம், பொருள்கள் மேல் தடை வைத்தனர்; ஜப்பானின் 80% எண்ணை இறக்குமதிகளை கொடுத்திருந்த அமெரிக்கா, ஜப்பானுக்கு எல்லா எண்ணை ஏற்றுமதிகளை தடை செய்தது.[75] .[76]அதனால் ஜப்பான், ஆசியாவில் அதன் ஆசைகளை கைவிடுவதா அல்லது இயற்கை வளைங்களை வலுக் கட்டாயமாக மற்ற நாடுகளிடம் பிடுங்குவதா என்ற தீர்மானத்தை செய்ய வேண்டியிருந்தது. ஜப்பானிய தரைப் படை முதல் தீர்மானத்தை வெறுத்தன, மேலும் எண்ணை தடைகளை பேசாத போர் முழக்கமாக கருதின..[77] அதனால் ஜப்பானிய சாம்ராஜ்ய ராணுவ தலைமையகம் வேகமாக ஆசியாவில் ஐரோப்பிய காலனீய நாடுகளை கைப்பற்றி , மத்திய பசிபிக் சமுத்திரம் வரை பரவிய ஒரு பாதுகாப்பு வளையத்தை திட்டமிட்டது. தென்கிழக்கு ஆசிய இயற்கை வளங்களை ஜப்பான் சுரண்டி, நேச நாடுகளை பாதுகாப்பு போரில் ஈடுபட வைக்கலாம்.. அமெரிக்க உள்ளீட்டத்தை தடுக்க, அமெரிக்க நாடுகள் பசிபிக் கடற்படையை முதலிலேயே அழிக்க தீர்மானித்தனர்..[78]

அக்டோபரில், அச்சுவின் இலக்குகள் யுக்ரெயினிலும், பால்டிய பிரேசத்திலும் பூர்த்தி ஆயின; லெனின்கிராட் [79]மற்றும் செவஸ்தாபோல் முற்றுகைகள்தான் முடியவில்லை,[80]மாஸ்கோ நோக்கி மாபெரும் படையெடுப்பு புதுப்பிக்கப் பட்டது.. 2 மாதமான கொடும் போர்களுக்கு பிறகு, ஜெர்மன் ராணுவம் மாஸ்கோவின் புறநகரப் பகுதியை அடைந்தது, அங்கு சோர்வையுற்ற ஜெர்மானிய துருப்புகள் படை எடுப்பை தள்ளி வைத்தனர்.[81] .[82]பிரமிக்க வைக்கும் பிரதேச பிடுங்கல்கலை செய்தாலும், இரு முக்கிய இலக்குகள் அச்சுக்கு இன்னும் கைக்கெட்ட வில்லை - இரு நகரங்களும் (மாஸ்கோ, லெனின்கிராட்) சோவியத் கைகளில் இருந்தன; சோவியத் யூனியனின் தடுப்பு சக்தி குறையவே இல்லை, சோவியத்தின் ராணுவ பலம் அழிக்கப் படாமல் இருந்தது..[83]

டிசம்பர் முதல் நாட்களில், புதிதாக செய்யப்பட்ட துருப்புகள்[84] அச்சு ராணுவத்துடன் எண்ணிக்கை சமன்பாட்டை ஏற்படுத்தியது. மேலும் சோவியத் ராணுவ உளவின் கணிப்பில், கீழ் திசையில் ஜப்பானின் துருப்புகள் குறைவினால், அங்கு போர் பயம் அதிகமில்லை.[85] அதனால் சோவியத் யூனியன் அச்சு ராணுவம் மேல் மாபெரும் எதிரை கொடுக்க தீர்மானித்து, அது டிசம்பர் 5ம் நாள் 1000 கிமி அகலத்தில் தொடங்கி, ஜெர்மன் துருப்புகளை 100-250 கிமி பின் தள்ளீயது..[86]

2 நாள் பிறகு, டிசம்பர் 7ம் நாள், ஜப்பான் அமெரிக்க கடற்படையை பேர்ல் ஹார்பர் துறைமுகத்தில் தாக்கி, அதே சமயம் மத்திய பசிபிக்கிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் படையெடுத்தது. மலாயா, தாய்லாந்து முதலியவற்றில் துருப்புகளை இறக்கியது.
அதனால் அமெரிக்க நாடுகள், ஐக்கிய ராஜ்ஜியம், ஆஸ்ட்ரேலியா, சீனா ஆகிய நாடுகள் ஜப்பான் மேல் போர் அறிவிப்பு செய்தன. ஜெர்மனியும், மற்ற மூவர் உடன்பாடு நாடுகள் பதிலுக்கு அமெரிக்க நாடுகள் மேல் போர் அறிவிப்பு செய்தன. ஜனவரியில், அமெரிக்க நாடுகள், பிரித்தன் உள்ளிட்ட 26 மற்ற நாடுகள் ஐக்கிய நாடுகள் சாசனத்தை வெளியிட்டு அட்லாண்டிச் பிரகடனத்தை ஊர்ஜிதம் செய்தன.[87]
ஏப்ரல் 1942 வாக்கில், ஜப்பான் தோராயமாக மொத்தமாக பர்மா, பிலிபீன்ஸ், மலாயா,டட்சு ஈஸ்ட் இண்டீஸ், சிஙகபூர், முக்கிய கடல் தளமான ரபௌல் முதலிவற்றை கைப்பற்றி [88] , நேச நாடுகளுக்கு பெரும் சேதத்தையும் அழிவையும் கொடுத்து, பெருமளவு போர் கைதிகளை பிடித்தது.. ஜப்பனிய கடற்படை தென்சீன கடல், ஜாவா கடல், இந்துமகா சமுத்திரம் ஆகியவற்றில் பெரும் வெற்றிகளை கொண்டு,[89]ஆஸ்திரேலியாவின் டார்வின் துறைமுக நேச கடல்முகாமை குண்டு போட்டு தாக்கியது. அந்த மாதஙக்ளில் நேச நாடுகளின் ஒரே வெற்றி ஜப்பானியரை சங்க்‌ஷாவில் ஜனவரி 1942ல் தோற்கடித்ததாகும்..[90] தயாரில்லாத நேச நாடுகளின் மீதான சுலப வெற்றிகள் ஜப்பானுக்கு அதி-சுயநம்பிக்கையை கொடுத்து கெட்டன. மேலும் அப்போது ஜப்பானின் ராணுவ சக்திகள் அதிவிரிவடைந்தன.
ஜெர்மனியும் பல வெற்றிகளை கண்டது. ஜெர்மானிய கடற்படை பல அமெரிக்க கப்பல்களை அட்லாண்டிக்கில் மூழ்கடித்தது..[91] பலத்த சேதம் அடைந்தாலும், அச்சு நாடுகள் சோவியத்தின் முக்கிய எதிரடியை தெற்கு, மத்திய ரஷ்யாவில் நிறுத்தினர். வட ஆப்பிரிக்காவில், ஜனவரியில் ஜெர்மனி பெரும் படையெடுப்பை ஆரம்பித்து, பெப்ருவரி முதலில்,[92] பிரித்தானிய ராணுவத்தை கசால கோடு வரை பின் தள்ளியது[93]

போர் தசையின் திருப்பம்

மே முதலில் ஜப்பான் மாரிஸ்பி துறைமுகத்தை நிலநீர் தாக்குதலில் கைப்பற்ற எத்தனித்தது.; அதனால் அமெரிக்க ஆஸ்திரேலிய போக்குவரத்தை துண்டிக்க நினைத்தது. ஆனால் நேச நாடுகள் ஜப்பானிய தாக்கு படையை அடித்து திருப்பி, ஆக்கிரமிப்பை தடுத்தனர்.[94] ஜப்பானின் அடுத்த திட்டம் மிட்வே அடோலை கைப்பற்றி, அமெரிக்க தூக்குகப்பல்களை அழிப்பது.; இதை மறைக்க ஒரு படையை அலூஷியன் தீவுகளை கைப்பற்ற அனுப்பிற்று[95]. மே முதலில் திட்ட செயல்பாட்டில் ஜப்பான் இறங்கிற்று; ஆனால் அமெரிக்கா ஜப்பானிய கடற்படை சங்கேத மொழியைகண்டுபிடித்ததால் , ஜப்பானிய திட்டத்தையும் படை விரிப்புகளையும் நன்றாக அறிந்து கொண்டு,[96] அவ்வறிவை ஜப்பானிய சாம்ராஜ்ய கடற்படையின் மேல் ஆணித்தரமாக ஒரு தோல்வியை செலுத்தினர். மாரிஸ்பி துறைமுக கைப்பற்று திட்டம் தோல்வி அடைந்ததால், அதை தரை வழியாக பாபுவாவில் சண்டையிட்டு கைப்பற்ற முயன்றனர்.[97] ஜப்பானிய பசிபிக்கின் முக்கிய தளமான ரபௌலை கைப்பற்றுவதற்கு முதல் அடியாக[98], அமெரிக்கர்கள் ஜப்பானை சாலமன் தீவுகளில் , குறிப்பாககவுடல்கனாலில் தாக்க திட்டமிட்டனர். இருவர் திட்டமும் ஜூலை முதலில் தொடங்கப் பட்டன; கவுடல்கனால் போர் ஜப்பானியருக்கு முக்கியமாக தெரிந்தது; அதனால் தன் புது கினீ துருப்புகளை மாரிஸ்பீயிலிருந்து விலகி, தீவின் வட பகுதிக்கு வர ஆணையிட்டனர்; அங்கு ஜப்பானியர் அமெரிக்க ஆஸ்திரேலிய கூட்டு துருப்புகளைபூனா-கோனா போரில் சந்தித்தனர்[99] . கவுடல்கனால் இரு தரப்புக்கும் மிக முக்கியமாகி, பல துருப்புகளும், கப்பல்களும் போரில் எரியப் பட்டன. 1943 தொடக்கத்தில், ஜப்பான் புது கினீ தீவில் தோற்கடிக்கப் பட்டு, வெளியேற்றப் பட்டனர்.[100]

பர்மாவில் காமென்வெல்து படைகள் இரு போர்களை இயக்கின. முதலாவது, அராகன்பிராந்தியத்தில் படை எடுப்பு பெரும் சேதத்தில் முற்றி, இந்தியாவிற்குள் பின்வாங்க நேரியது.[101] இரண்டாவது , ஜப்பானிய அணிகளின் பின்புறம் கொரில்லா வீரரகளைஅனுப்பியது, விளக்கமற்றதாக முடிந்தது.[102]

ஜெர்மனியின் கிழக்கு போர் முனைகளில், அச்சு சோவியத் படையெடுப்புகளை கெர்ச்பீடபூமியிலும், கார்காவிலும் தோற்கடித்து[103], தெற்கு ரஷ்யாவில் வெய்யில் கால படையெடுப்புகளை ஜூன் 1942ல் தொடங்கினர். சோவியத்துகள் ஸ்டாலின்கிராடில்ஜெர்மானியர்களை எதிர்து, தடுக்க முடிவெடுத்தனர். நவம்பர் நடுவில் ஜெர்மனி கிட்டத்தட்ட எல்லா ஸ்டாலின்கிராடையும், தெருவுக்கு தெரு போரின் பின்பு கைப்பற்றிவிட்டனர். அப்போது சோவியட்டுகள் பனிகால எதிர்-படையெடுப்பைதொடங்கி, ஸ்டாலின்கிராடில் இருந்த ஜெர்மன் துருப்புகளை சுற்றி வளைத்தனர்[104]. பெப்ருவரி 1943ல். ஜேர்மானியர்களுக்கு மிகப் பெரும் ஆள் அழிப்பு நடந்து, சோவியத் ராணுவத்திற்கு சரணாகதி அடைந்தனர். ஜெர்மானியர், மிகவும் பின் தள்ளப்பட்டலும், கர்காவ் மீது தாக்கி, குர்ஸ்க் என்ற இடத்தில் ஒரு வலுவான முகாம் போட்டனர்.[105]
மேற்க்கே, ஜப்பான் விசி அரசு வைத்திருந்த மடகாஸ்கர் தீவை கைப்பற்றி விடுமோ என அஞ்சி, பிரித்தன் மே 1942ல், மடகாஸ்கரை கைப்பற்றியது[106] . ஆனால் இந்த வெற்றி லிபியாவில் அச்சு படையெடுப்பினால் திருத்தப்பட்டது. அச்சு படையெடுப்பினால் நேச படைகள் எகிப்திற்குள் தள்ளப் பட்டன. ஐரோப்பாவில் நேச படைகள் குறிப்பிட்ட அச்சு முகாம்கள் மீது கமாண்டோ படைகளை அனுப்பியன.[107]. ஆகஸ்தில், நேச நாடுகள் வட ஆப்பிரிக்காவில் எல்-அலாமின் மீதான ஜெர்மன் தாக்குதலை திருப்பி அடித்தனர், மேலும் முற்றுகையில் இருந்த மால்டா தீவிற்கு அவசிய பொருள்களை அனுப்பினர்[108]. சில மாதங்களில் நேச துருப்புகள் ஜெர்மானிய துருப்புகளை வட ஆப்பிரிக்க பாலவனங்களின் வழியாக துரத்தி[109], லிபியாவை கைப்பற்றினர். விரைவிலேயே, பிரித்தானிய-அமெரிக்க துருப்புகள் பிரெஞ்ச் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்தனர், அதனால் பிர்ஞ்ச் வட ஆப்பிரிக்கா நேச நாடுகள் பக்கம் சேர்ந்தது.. பிரெஞ்ச் காலனிகளில் கட்சி மாற்றத்தை கண்டு கோபப்பட்ட ஹிட்லர், விசி பிரான்சை படையெடுத்து கைப்பற்றுமாறு ஆணையிட்டான். விசி பிரென்சு ஹிட்லரை தடுக்காவிட்டாலும், தங்கள் போர் கப்பல்களை, ஹிட்லர் கையில் விழாதவாறு தாங்களே மூழ்கவைத்தனர்[110] . அச்சு படைகள் டுனீசியாவிற்கு பின்வாங்கின; அதையும் நேசப் படைகள் மே 1943ல் கைப்பற்றின.[111]

[தொகு]நேச நாடுகள் வேகமடைகின்றன

ஆசியாவில், ஜப்பானியர் இரு முந்தாக்குதல்களை தொடங்கினர். முதலாவது, மார்ச் 1944ல் தொடங்கிற்று. அதன்படி அஸ்ஸாமில் இருந்த பிரித்தானிய படைகளை தாக்கி[112], விரைவில் காமன்வெல்த் படைகளை இம்பாலிலும் கொஹிமாவிலும்முற்றுகை இட்டனர்[113]; ஆனால் மேயில் 1943ல் பர்மாவில் உள்ளே புகுந்த சீன துருப்புகள் ஜப்பானியரை மிகினாவில் முற்றுகை இட்டனர்[114]. இரண்டாவது முந்தாக்குதல் சீனத்தில் நடத்தப்பட்டது. அதன் இலக்குகள் சீனத்தின் படைகளை அழிப்பது, ஜப்பானியர் வசம் இருந்த பிரதேசங்களினிடை ரயில் போக்குவரத்தை துவங்குவது மேலும் நேச நாடுகளின் ஆகாய விமான தளங்களை கைப்பற்றுவது ஆகியவை[115]. ஜூன் மாதத்தில், ஜப்பானியர் ஹேனான் மாகாணத்தை தன் கைவசம் கொண்டனர், மேலும் ஹுனான் மாகாணத்தில் சங்க்‌ஷா நகரை தாக்கினர்.[116]

கவுடல்கனால் செயல்களுக்கு பிறகு, நேச நாடுகள் ஜப்பானுக்கு எதிராக, பசிபிக்கில் பல செயல்களை ஆரம்பித்தனர். மே 1943ல், அமெரிக்க பட்டாளம் ஜப்பானியரைஅலூஷியன் தீவுகளிலிருந்து வெளியேற்றுவதற்கு அனுப்பபட்டது[117], அப்பட்டாளம் ரபௌலை அதன் சுற்றுமுற்று தீவுகளை கைப்பற்றி அதனை தனியாக்குவதிலும்,கில்பர்ட், மார்ஷல் தீவுகளில் ஜப்பானிய மத்திய பசிபிக் அதிகாரத்தை உடைப்பதிலும் ஈடுபட்டனர்[118]. ஜனுவரி 1944ல், நேச நாடுகள், இந்த இலக்குகளையும் தாண்டி,கரோலின் தீவுகளில் இருந்த முக்கிய ஜப்பானிய ராணுவ தளத்தை அழித்தனர். ஏப்ரலில், மேற்கு புது கினீயை கைப்பற்றுவதற்கு ஒரு செயலை தொடங்கினர்.[119]

மத்தியதரை கடல் பகுதியில், நேச நாடுகள் ஜூலை 43ல், சிசிலி மீது படை எடுத்தன. இத்தாலிய மண் மீது போர் துவங்கியதாலும், ஏற்கனவே பல தோல்விகளை சந்தித்ததாலும், இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி பதவியில் இருந்து தள்ளப் பட்டு, கைது செய்யப்பட்டார்[120]. செப்டெம்பெரில் இத்தாலி நேசநாடுகளுடன் போர்நிருத்த உடன்பாடு செய்ததை அடுத்து[121], நேச பாட்டாளங்கள் இத்தாலிய நாட்டில் குதித்தன. செப்டெம்பெர் 8 அன்று, இந்த உடன்பாடு பொதுமக்கள் அறிவிப்பு செய்யப்பட்ட உடன் ஜெர்மானிய துருப்புகள் பதிலுக்கு இத்தாலிய துருப்புகளை ஆயுதமிலி ஆக்கி[122] , இத்தாலிய ராணுவ பகுதிகளை கைப்பற்றி, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்[123]. செப்டெம்பெர் 12ம் தேதி, ஜெர்மானிய விசேஷ பட்டாளங்கள் முசோலினியை தைரியமான செயலில் விடுவித்து, இத்தாலியில் ஜெர்மனிக்கு அடிபடியும் அரசு ஒன்றை நிறுவினர்[124]. நேசப்படைகள் பல சண்டைகளிட்டு, நவம்பர் மத்தியில் ஜெர்மனியின் முக்கிய பாதுகாப்புக் கோடை அடைந்தனர்[125]. ஜனவரி 1944ல், நேசபட்டாளங்கள்,மாண்டி கசீனோ அருகில் இந்த கோடை தாக்கி, உடைக்க முயன்றனர்; அதே சமயம்அன்சியோவில் கடலிலிருந்து துருப்புகளை இறக்கினர்.. மே கடைசியில் இவ்விரு நேச செயல்களும் வெற்றியாகி, ஆனால் பல ஜெர்மன் டிவிஷன்களை தப்பவிட்டு, ரோம்ஜூன் 4 அன்று கைப்பற்றப் பட்டது[126] .

அட்லாண்டிக்கிலும் ஜெர்மன் செயல்கள் ஸ்தம்பித்தன. மே, 1943 வாக்கில் ஜெர்மானியநீர்மூழ்கி கப்பல்களின் நஷடங்கள் முகவும் அதிகமானதால், நேச நாடுகளின் எதிர் யுக்திகள் பல வெற்றிகள் பெற்றதால், கடல் செயல்களை தாற்காலிகமாக ஒத்திவைத்தது.[127]

சோவியத் யூனியனில், 1943 இளவேனிர் காலத்தையும், வெய்யில் காலத்தையும்குர்ஸ்க் பகுதியில் பெரும் முன்னடி செய்ய தயார் செய்து கொண்டிருந்தனர்; சோவியத்துகள் இதை எதிர்பார்த்து, ஜெர்மானியரை முறியடிப்பதற்கு தயார் செய்து கொண்டிருந்தனர் [128]. ஜூலை 4ல், ஜெர்மானியர் தன் முன்னடிப்பை தொடங்கினர், ஆனால் சீக்கிரமே ஹிட்லர் இச்செயலை ரத்து செய்து விட்டார்[129]. சோவியத்துகள் இதன் பிறகு பெருமளவு திருப்பி அடித்தலை தொடங்கினர், அதன் பிறகு, ஜூன் 1944ல், எல்லா ஜெர்மானிய துருப்புகளையும் சோவியத் நாட்டிலிருந்து வெளியேற்றி[130] ,ருமானியா மீதும் தாக்கத் தொடங்கினர்.
நவம்பர் 1943ல், ஃப்ராங்ளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் இருவரும், சீன அதிபர்சியாங்கைஷெக்கை கெய்ரோவிலும், அதன் பிறகு ஜோசப் ஸ்டாலினை தெஹரானிலும்சந்தித்தனர். முதல் சந்திப்பில் போருக்கு பின்பு நாட்களில் ஜப்பானிய பகுதிகளை திருப்பி எடுப்பது பேசப்பட்டது; இரண்டவது சந்திப்பில் மேற்கு நேச நாடுகள் ஐரோப்பாவை 1944 படையெடுக்கும் திட்டமும், சோவியத் யூனியன் ஜெர்மனியின் தோல்விக்கு 3 மாதங்களுக்கு முன் ஜப்பான் மீது போர் தொடுக்கும் தீர்மானிக்கப் பட்டன.
ஜனவரி 1944ல். சோவியத் பட்டாளம் ஜெர்மானியரை லெனின்கிராட் பகுதியிலிருந்து வெளியேற்றி, அது சரித்திரத்தில் மிக நீண்ட, மிகக் கொடிய முற்றுகையைமுறித்தது[131].

[தொகு]நேசநாடுகள் உடும்புப் பிடி

ஜூன் 6, 1944(டி-டே எனவும் அறியப் படும்) மேற்கு தோழர்கள் வடக்கு பிரான்சில் படையெடுத்தனர், அது பல டிவிஷஙள் தெற்கு இத்தாலியில் இருந்து கொண்டுவரப் பட்டவை[132]. இந்த கரையிறக்கங்கள் வெற்றியாகி, பிரான்சில் ஜெர்மானிய பட்டாளங்களின் தோல்விக்கு வித்திட்டன. பாரிஸ் ஆகஸ்து 25ம் தேதி விடுதலை செய்யப் பட்டது[133]. பிறகு நேச நாடுகள் ஜெர்மனியை பிரான்சிலிருந்து வெளியேற்ற முயலும் செயல்களை மேற்கொண்டன. ஹாலந்து நாட்டிர்க்குள் ஒரு பெரும் ஆகாயவிமான செயல்கள் தோல்வியுற்றன[134]. நேச நாடுகள் இத்தாலியுள்ளும் முன்னேறி, பெரிய ஜெர்மன் தடுப்பை சந்தித்தனர்.
ஜூன் 22 அன்று, சோவியத்துகள் பெலாருச்சில் யுக்தி முன்னடிப்பை (பக்ராசியான் செயல்)தொடங்கி, ஜெர்மன் மத்திய ராணுவ குரூப்பை முழுமையாக அழித்தனர்[135]. சீக்கிரமே, இன்னொரு சோவியத் யுக்தி முன்னடிப்பு ஜெர்மன் துருப்புகளை மேற்குயுக்ரெயின், மற்றும் கிழக்கு போலந்திலிருந்து முழுமையாக வெளியேற்றியது. சோவியத் துருப்புகளின் முன்னேற்றத்தினால், போலந்து மக்கள் ஜெர்மனிக்கு எதிராக பல கலகங்களை செய்தனர். ஆனால் வார்சா கலகம் சோவியத் ராணுவத்தினால் ஒரு உதவியும் பெறவில்லை.அதனால் வார்சா எழுச்சி ஜெர்மனியரால் மிகக் கொடூரமாக அடக்கப்பட்டு, வார்சா தரைமட்டம் ஆக்கப் பட்டது[136].கிழக்கு ருமானியாவில்சோவியத்தின் யுக்தி முன்னடிப்பு பல ஜெர்மனிய ராணுவங்களை துண்டித்து, அழித்து, ருமானியாவிலும் பல்கேரியாவிலும் வெற்றிகரமாக அரசு கவிழ்ப்பு செய்யப் பட்டது. இவ்விரண்டு நாடுகளும் நேசநாடுகள் பக்கம் சேர்ந்தன. செப்டெம்பர் 1944ல்.யுகோஸ்லாவியாவினுள் சோவியத் துருப்புகள் புகுந்ததை அடுத்து, ஜெர்மானியர் வேகமாக கிரீஸ், அல்பேனியா, யுகோஸ்லாவியாவில் இருந்து துண்டிப்பில் இருந்து காப்பதற்கு தஙகள் பட்டாளங்களை வாபஸ் செய்தனர். அப்பொது தெற்கு யுகோஸ்லாவியாவில் ஜோசிப் பிராஸ் டீடோவின் தலைமையில் போரிட்டகம்யூனிஸ்ட் கொரில்லாக்கள், ஜெர்மானியர் மீது பலத்த சேதம் விளைவித்தனர். வடக்கு செர்பியாவில், சோவியத் செஞ்சேனை, யுகோஸ்லாவிய கலகக் காரர்களின் உதவியுடன் தலைநகர் பெல்கிரேடை அக்டோபர் 20ம் நாள் விடுதலை செய்தனர். சில நாட்களில் ஆரம்பித்த ஹங்கேரிக்கு எதிரான சோவியத் முன்னடிப்பு பெப்ருவரி 1945 வரை நீண்டு, தலைநகர் புடாபெஸ்டின் விடுதலையில் முடிந்தது.[137]
பால்கனில் செம்மையான வெற்றிகளுக்கு மாறாக, சோவியத் ராணுவம் கரேலிய குறுதரையில் ஆணித்தரமான ஃபின்லாந்து எதிர் தடுப்பால் தடுமாறியது. அதனால் சோவியத்துகள் ஃபின்லாந்தை கைப்பற்ற முடியாமல் போய், சோவியத்-ஃபின்லாந்திய போர்முடிப்பு உடன்பாட்டில் முடிவுற்றது[138][139]. பிறகு ஃபின்லாந்து நேசநாடுகளில் சேர்ந்தது.
ஜூலை ஆரம்பத்தில், காமன்வெல்த் பட்டாளங்கள் அஸ்ஸாமில் ஜப்பனிய முற்றுகையை உடைத்து, ஜப்பனியரை சிண்ட்வின் நதிக்கு தள்ளினர்[140]. சீனத்தில் ஜப்பனியர்களுக்கு வெற்றிகள் கிடைத்தன. சங்க்‌ஷாவை ஜூன் மத்தியிலும்,ஹெங்யங்கை அகஸ்திலும் கைப்பற்றினர்[141] . மேலும் குவான்சி மாகானத்தை படையெடுத்து, சீனர்களுக்கு எதிராக கூலின், லூசௌ ஆகிய இடங்களில் நவம்பரில் வெற்றி கண்டு[142] , சீனாவிலும் இந்தோ-சீனாவிலும் இருந்த பட்டாளங்களை டிசம்பரில் இணைத்தனர்[143] .
பசிபிக் சமுத்திரத்தில், அமெரிக்கர்கள் ஜப்பானின் வெளிவேலியை பின்னுக்கு தள்ளிக் கொண்டே இருந்தனர். ஜூன் 1944 மத்தியில், ஜப்பானியருக்கு எதிரான மரியானா, பலாவுதீவுகளில் முன்னடிபப்பு செய்து, சில நாட்களுள்ளேயே ஃபிலிபின் கடலில்ஆணித்தரமான வெற்றியை கண்டனர். இந்த தோல்விகளால் ஜப்பனின் பிரதமர்டோஜோ ராஜினாமா செய்தார். அமெரிக்கர்களுக்கு ஜப்பானின் முக்கிய பகுதிகளூக்கு எதிராக குண்டடிப்பு நடத்துவதற்கு,இவ்வெற்றிகள் பல ஆகாய விமான தளங்களைகொடுத்தன. அக்டோபரில், அமெரிக்கர்கள் பிலிப்பீனின் லெய்தே தீவின் மீது படை எடுத்தனர், சீக்கிரமே லெய்தே வளைகுடா போரில் மாபெரும் வெற்றி கண்டனர். அப்போர், சரித்திரத்திலேயே, மிகப் பெரிய கப்பல் போர் ஆகும்.[144].

அச்சு வீழ்வு,நேச நாடுகள் வெற்றி

டிசம்பர் 16, 1944ல், ஜெர்மன் துருப்புகள் நேச நாடு சக்திகள் எதிராக ஆர்டீன் பகுதியில் பதிலடி கொடுத்தன. நேசப் பட்டாளத்திற்கு அதை முறியடிக்க ஆறு வாரங்கள் ஆயிற்று. சோவியத்துகள் ஹங்கேரியை தாக்கினர், அதே சமயம் ஜெர்மானியர் கிரீஸ், அல்பேனியாவை கைவிட்டு ஓடினர். தெற்கு யுகோஸ்லாவிலும் கொரில்லா போராளிகள் ஜெர்மானியர்கலை துரத்தி வெளியேற்றினர்.[145] இத்தாலியில் ஜெர்மன் பாதுகாபு கோடு அருகில் நேச சக்திகள் மந்தமாயின.. ஜனுவரி 1945 நடுவில், சோவியத்துகள் போலந்தில் தாக்குதலை ஆரம்பித்து, விஸ்தூலா ஆற்றிலிருந்து ஓடர்நதிக்கு முன்னேற்றம் தொடங்கினர், கிழக்கு பிரஷ்யாவை கைப்பிடித்தனர்[146] .
பெப்ருவரி 4ம் நள், அமெரிக்க, பிரித்தானிய, சொவியத் தலைவர்கள் யால்டாவில்சந்தித்து, போருக்கு பின்பு ஜெர்மனியை அதிகாரம் செய்வது பற்றி தீர்மானம் செய்தனர்[147], மேலும் எப்பொழுது சோவியத் யூனியன் ஜப்பான் எதிரான போரில் பங்கேற்கும் எனவும் பேசப் பட்டது.[148] .
பெப்ருவரியில் சோவியத்துகள் சைலீசியாவையும் பொமரேனியாவையும்ஆக்கிரமித்தனர், அதே சமயம் மேற்கு தோழர்கள் மேற்கு ஜெர்மனியுள் புகுந்தனர். மார்ச்சில், நேச துருப்புகள் ரைன் நதியை ரூர் பகுதியில் வடக்கிலும், தெற்கிலும் தாண்டி பெரும் ஜெர்மானிய ராணுவங்களை வளைத்தனர். சோவியத் பட்டாளம் வியன்னாவைநோக்கி சென்ர்றது. கடைசியாக ஏப்ரல் முதலில், நேச பட்டாளம் இத்தாலியில் ஜெர்மன் துருப்புகளை அகற்றி, மேற்கு ஜெர்மனிக்குள் படையெடுத்தனர். ஏப்ரல் கடைசியில் சோவியத்துகள் பெர்லினை பிடித்தனர். இரு ராணுவங்களும் ஏப்ரல் 25ம் தேதி, எல்புஆற்றின் கரையில் சந்தித்தனர்.
அக்காலத்தில், பல தலைமை மாற்றங்கள் ஏற்பட்டன. ஏப்ரில் 12ம் நாள், அமெரிக்க ஜனாதிபதி ரூசவெல்டு இறந்தார், ஹாரி ட்ரூமன் பதிவியேற்றார். பெனிடோ முசோலினி கலகக் காரர்களால் ஏப்ரல் 26ம் தேதி கொல்லப்ப்பட்டார்[149]. 2 நாள் கழித்துஹிட்லர் தற்கொலை செய்தார். அவருக்கு பின் கிராண்ட் அட்மிரல் காரல் டோனெட்ஸ்தலைமை ஏற்றார்[150] .

இத்தாலியில் ஜெர்மானிய துருப்புகள் ஏப்ரல் 29ல் சரணடைந்தனர்; மேற்கு ஐரோப்பாவில் மே 7 அன்று சரண் அடைந்தனர்[151]. ஆனால் சண்டை கிழக்கில் தொடர்ந்து, மே 8ல் சோவியத்திடம் ஜெர்மன் துருப்புகள் சரண் அடைந்தனர். பிராகில்மே 11ல் சரணடைந்தனர்.
பசிபிக்கில், 1944 முடிவில், பிலிபீன்சீல் அமெரிக்கர்கள் முன்னேறி, ஜப்பானியரை துரத்தினர். ஜனுவரி 1945ல் லுசானிலும், மார்ச்சில் மிண்டநாவிலும் தரையிறங்கினர்[152]. அக்யோபரில் இருந்து மார்ச் வரை சீன-பிரித்தானிய படைகள் ஜப்பானிய்ரை வட பர்மாவில் தோற்கடித்தன்ர், மே 3ல், பிரிட்டிஷர் ரங்கூனை கைப்பிடித்தனர்[153]. அமெரிக்கர்களும் ஜப்பானை நோக்கி முன்னேறி, மார்ச்சில் இவோ ஜிமாவையும், ஜூனில் ஓகினாவாவையும் பிடித்தனர்.[154]. ஜப்பானிய நகரங்ஜ்களை அமெரிக்கரகள்குண்டடி விமானங்களால் குண்டடித்து பயங்கர சேதம் செய்தனர், அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் படை ஜப்பானியரின், இறக்குமதிகளை முழுமையாக தடுத்தது.[155] .ஜூலை 11ம் நாள், நேச நாட்டுத் தலைவர்கள் ஜெர்மனியில் பாட்ஸ்டாமில் சந்தித்தனர். அது பழைய உடன்பாடுகளை ஊர்ஜிதப் படுத்தி[156], ஜப்பானின் நிர்பந்தனையற்ற சரணாகதியைகோரிக்கையாக வைத்தது"[157]. அந்த சந்திப்பின் போது, பிரித்தானிய பொது தேர்தல்களில் கிளெமெண்ட் அட்லீ பிரதமர் ஆனார்.
ஜப்பான் பாட்ஸ்டம் கோரிக்கைகளை நிராகரித்தது. அமெரிக்க நாடுகள் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மேல் அணுகுண்டுகளை ஆகஸ்து ஆரம்பத்தில் வீசியது. இரு குண்டுகளுக்கு இடையில் சோவியத் யூனியன் ஜப்பானின் மேல் படை எடுத்தது. ஆகஸ்து 15ம் நாள், ஜப்பான் சரணடைந்தது

பின்விளைவுகள்

உலக அமைதியை காக்க நேசநாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பை தொடங்கியன, அது அதிகாரபூர்வமாக அக்டோபர் 24, 1945 அன்று அரம்பித்தது.

மேற்கு நேசநாடுகளுக்கும், சோவியத் யூனியனுக்கும் உறவு போர் முடிவதற்கு முன்பே கெட ஆரம்பித்தது[158]. விரைவில், இரு சக்திகளும் தஙகள் அதிகார மண்டலத்தைநிறுவத் தொடங்கியன[159].ஐரோப்பாவில் இரு சக்திகள் பிளவு இரும்பு சுவர் என்றழைக்கப் பட்டது. இந்த ‘சுவர்’ ஆதிக்கப்பட்ட ஜெர்மனி, ஆஸ்திரியா வழியாக பாய்ந்தது.ஆசியாவில், அமெரிக்க நாடுகள் , ஜப்பானை கைப்பற்றி, தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்து, ஜப்பானின் பசிபிக் தீவுகளை நிர்வகித்தது; அதே சமயம் சோவியத் யூனியன் ஜப்பானின் சகாலின் மற்றும் குரில் தீவுகளை தனதாக்கியது.கொரியாவில்இருந்த முன்னாள் ஜப்பானிய அதிகரம், இரண்டாக பிளக்கப்பட்டு ஆதிக்கம் செய்யப்பட்டது. அமெரிக்க சோவியத் சச்சரவுகள் அமெரிக்க தலைமையில் நேடோ(வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) மற்றும் சோவியத் தலைமையில் வார்சா உடன்பாடு அமைப்புகளில் முடிந்து, பனிப் போருக்கு ஏதுவாயிற்று[160].

உலகின் பல பாகங்களில் உலகப் போர் முடிந்து சில காலங்களில் சண்டைகள் அதிகரித்தன. சீனாவில் தேசீயவாதிகளும் கம்யூனிஸ்டுகளும் உள்நாட்டு போரில்ஈடுபட்டனர். கடைசியில் கம்யூனிஸ்டுகள் வென்று சீன மக்கள் குடியரசுஅமைப்புங்கால், தேசீயவாதி ராணுவம் தய்வான் தீவில் தஞ்சம் புகுந்தது. கிரீஸில் மேற்கு நாட்டு ஆதரவு பெற்ற ராஜாவாதி ராணுவமும், கம்யூனிஸ்ட் எழுச்சியாளர்களும் போர் துவங்கினர். கொரியாவில், சோவியத் ஆதரவு பெற்ற வடகொரியாவிற்கும், மேற்கு ஆதரவு பெற்ற தென் கொரியாவிற்கும் போர் மூண்டது.
உலகப் போரின் முடிவு ஐரோப்பிய காலாநீய சக்திகள் தங்கள் காலனீய ஆதிக்கங்களை கைவிடுமாறு ஆக்கியது. இந்தோ-சீனம், மடகாஸ்கர், இந்தோனேசியா, அல்ஜீரியா தவிற மற்ற நாடுகளில் காலனீய ஒழிப்பு சமாதான மாக முடிந்தது[161]. இன, மத வேறுபாடுகளால் சில இடங்களில் போர்கள் ஏற்பட்டன. பாலஸ்தீனின் ஐநா அதிகாரம் முடிந்தது, இஸ்ரேல் நாட்டை பிறப்பித்தது. அது மேற்காசியாவில் சச்சரவுகளுக்கு வித்திட்டது.
பொருளாதார புனர்வாழ்வு பல நாடுகளில் பல வேகங்களில் நிறைவேரியது. மேற்கு ஜெரம்னி வேகமாக பொருளாதார சக்தியாக எழுந்தது[162]; இத்தாலி போரினால் பாதிக்கப்பட்டாலும், 10 வருடங்களில் பெறும் முன்னேற்றங்களை கண்டது[163] [164] . ஐக்கிய ராஜ்ஜியம் போரில் மிகச் சேதமடைந்து, புனர் எழுச்சி அடைய பல தசாப்தங்கள் ஆயின்[165].ஃபிரான்சும், சோவியத் யூனியனும் வேகமாக குதித்தன[166]. ஜப்பான் பொருளாதாரமும், தொழில் வளர்ச்சியும் அசுர வேகத்தில் சென்று, ஜப்பானைபொருளாதார சக்தியாக்கின.உள்நாட்டுப் போர் முடிவில், சீனம் திவால் நிலையில்இருந்தது. பிறகு அங்கும் வேகமாக தொழில், பொருளாதாரம் முன்னேறியன.[167]. போரின் முடிவில் அமெரிக்க நாடுகள் உலக உற்பத்தியில் பாதி பங்கை கொடுத்தன[168] .

போரின் தாக்கங்கள்


மனித இழப்புகளும், போர்க் குற்றங்களும்

எவ்வளவு பேர் மடிந்தனர் என்ற கணிப்பு வேறுபடுகிறது. ஆனால் பொதுவாக 60 மில்லியன் சாவுகள், இவற்றில் 20 மில்லியன் படையினர், 40 மில்லியன் பொதுமக்கள் என கணக்கிடப்படுகிறது.[169][170][171]. பல சிவிலியஙள் நோய், பசி, குண்டடிப்பு,படுகொலைகள் மற்றும் வேண்டுமென்றே செய்த இன அழிப்பில் மாண்டனர். சோவியத் யூனியன் 27 மில்லியன் மக்களை இழந்தது.[172] , அது தோராயமாக எல்லா நாட்டு இழப்பில் பாதி ஆகும்.மொத்த இழப்புகளில் , 85% நேசநாடுகள் (சோவியத் யூனியன், சீன உட்பட) பக்கம்.15% அச்சு நாடுகள் பக்கம்.ஒரு கணக்கின் படி 12 மில்லியன் மக்கள் நாஜிகுவிப்பு முகாம்களில் மாண்டனர்,[173]. 1.5 மில்லியன் மக்கள் குண்டடிப்புகளில் இறந்தனர், ஐரொப்பவில் 7 மில்லியன் இதர காரணங்களினாலும், சீனாவில் 7.5 மில்லியன் இதர காரனங்களினாலும் மடிந்தனர்[174]. கணிப்புத் தொகைகள் ஏன் மாறுபடுகின்றன என்றால், பெரும்பாலான் இறப்புகள் ஆவணம் செய்யப்படவில்லை.
இதில் பெரும்பான்மை இறப்புகள் ஜெர்மானியரின், மற்றும் ஜப்பனியரின் இன அழிப்பு கொள்கைகளால் ஏற்பட்டவை. ஜெர்மன் அட்டுழியங்களில் மிகப் பெரிதுஹோலோகாஸ்ட், அதாவது திட்டமிட்டு செயல்பட்ட யூதர்களின் மொத்த இன அழிப்பு; அதாவது ஜெர்மனியின் அதிகாரங்கள் கீழ் வந்த நாடுகளின் மொத்த யூத மக்களையும் கொல்ல , செய்யப் பட்ட திட்டம். நாஜிக்கள் ரோமா (குறுவிக்காரர்), ஸ்லாவியர்இனங்களையும் ஒருபால் சேர்க்கையாளர்களையும் கூட இன அழிப்பு செய்து, அவ்வாறு 5 மில்லியன் மக்களை கொன்றனர்.[175]. அச்சுநாடு சேர்ந்த உஸ்தாசா அரசின் கொலை இலக்குகள் முக்கியமாக செர்பியர்கள்[176]. மிகவும் தெரியப்பட்ட ஜப்பானிய அட்டூழியம் , பல லக்ஷம் சீனர்களை கொன்றும், கற்பழிப்பும் செய்த நாங்கிங் படுகொலைஆகும்[177].ஜப்பானிய ராணுவம் 3 முதல் 10 மில்லியன் சீன சாதாரண மக்களை கொன்றது[178].
சிறிய அளவு ரசாயன, உயிரிய ஆயுதங்களையும் அச்சு நாடுகள் பயன்படுத்தின. இத்தாலியர்கள் அபிசீனியா போரின் போது வாயுக் குண்டுகளை உபயோகித்தனர்[179].ஜெர்மானியர்களும், ஜப்பானியர்களும் அவ்வித ஆயுதங்களை மக்கள் மீதும், போர் கைதிகள் மீதும் பிரயோகித்தனர்.)[180][181][182] [183]

இப்படி அச்சு நாடுகளின் அட்டுழியங்கள் சர்வதேச நீதிமன்றங்களுக்கு கொண்டு வந்தாலும்,[184], நேச நாடுகள் செய்த பிரயத்தினங்கள் நீதிக்குள் கொண்டுவரப்படவில்லை. உதாரணமாக, சோவியத் யூனியனில் மக்கள் கூட்டங்களும், இனங்களும் வேறு பிரதேசங்களுக்கு அனுப்பப் பட்டன]],[185], சோவியத் கட்டாய பணி முகாம்கள் (குலக்)[186] இருந்தன. போலந்து சிவிலியஙள் சோவியத்துகளால் படுகொலை செய்யப் பட்டர்கள், மேலும் டோகியோ, டிரெஸ்டன்[187] போன்ற நகரங்கள் நேசநாடுகளின் குண்டடி விமானங்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு , படும் மக்கள் அழிப்பு நடந்தது.


குவிப்பு முகாம்களும், அடிமைப் பணியும்

நாஜிக்கள் ஹோலோகாஸ்ட் என்றழைக்கப் படும் திட்டமிட்டு செய்யப் பட்ட 6 மில்லியன்யூதர்களின் கொலை, மற்றும் 2 மில்லியன் போலந்து இனத்தவர், 4 மில்லியன் ’வாழ்க்கைக்கு தகுதியற்றவர்’ என அழைக்கப்பட்ட மற்றவர்கள் (இதில் உடல், மனம் ஊனமுற்றோர், சோவியத் போர்கைதிகள், ஒருபால்சேர்க்கையாளர், ஃப்ரீமேசன்கள்,ஜெஹோவாவின் சாட்சிகள், ரோமா என்ற குறுவிகாரர்கள் அடங்குவர்). 12 மில்லியன் மக்கள், பெரும்பான்மையாக கிழக்கு ஐரோப்பியர், ஜெர்மனியின் போர் பொருளாதாரத்தில் அடிமைகளாக வலுக்கட்டாயமாக வேலை வாங்கப்பட்டனர்]][188] . இதைத் தவிர குலக் எனப்படுகிற சோவியத் கட்டாய பணி முகாம்கள்களில் போலந்தினர், லாட்வியர், எஸ்டோனியர், லிதுவேனியர், மற்றும் ஜெர்மன் போர் கைதிகள், ஜெர்மனிக்கு ஆதரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட சோவியத் குடிமகன்கள் கொல்லப் பட்டனர்[189] .ஜெர்மானியர் கையில் 60% சோவியத் போர் கைதிகள் மடிந்தனர். 5.7 மில்லியன் சோவியத் போர் கைதிகள் இருந்ததாக கணக்கு.[190]. அதில் 57% அல்லது 3.6 மில்லியன் கொல்லப் பட்டனர்.[191]. அதிலிருந்து எப்படியோ பிழைத்த போர்கைதிகள் சோவியத் யூனியனுக்கு திரும்பி போகும் போது , ஸ்டாலினால் ‘துரோகிகள்’ எனக் கருதப்பட்டு சிட்சை வாங்கினர் [192] .
ஜப்பானிய போர் கைதி முகாம்களிளும் கட்டாய வேலைகளினால் இறப்பு வேகம் அதிகம். தொலைகிழக்கு சர்வதேச ராணுவ நீதிமன்றம் கைதிகளில் இறப்பு எண்ணிக்கை 27.1% (அமெரிக்க கைதிகளுக்கு 37%)[193] seven times that of POWs under the Germans and Italians[194]என கணக்கிட்டது. ஜப்பானிய கைதி முகாம்களில் சீனர்களின் இறப்பு வேகம் இன்னும் அதிகம். ஒரு ஜப்பானிய அரசு ஆணை சீன கைதிகளுக்கு சர்வதேச நீதிகளின் கீழ் பாதுகாப்பு கிடையாது என்று சொல்லிற்று[195]. போர் முடிந்தவுடன், 37583 மேற்கத்திய கைதிகளை ஜப்பான் விடுதலை செய்தது, ஆனால் 56 சீனர்கள் தான் அப்படி விடுதலை ஆயினர்[196]. 10 மில்லியன் சீன மக்கள் கட்டாய வேலைக்கு ஜப்பானிய ராணுவத்தால் பிடித்து வைக்கப் பட்டனர் என ஒரு கணக்கு[197]. அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் ஜாவாவில் ஜப்பானியர் 4 முதல் 10 மில்லியன் மக்களை கட்டாய பணிக்கு இழுத்துச் சென்றனர் என சொல்கிறது.
பெப்ருவரி 19, 1942 அன்று ரூசவெல்ட் ஆணை 9066 க்கு கையெழுத்திட்டார். அதன்படி அமெரிக்காவில் இருந்த ஜப்பானியர்கள், ஜெர்மானியர், இத்தாலியர் முதலானோர்அடைப்பு முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர்.


போர்கால உற்பத்தி நிலைகள்

ஐரோப்பாவில், போருக்கு முன், நேசநாடுகள் மக்கள் தொகையிலும், உற்பத்தி திறனிலும் கை ஓங்கி இருந்தனர். 1938ல் ஐரோப்பிய நேச நாடுகள் அச்சு நாடுகளைவிட 30% அதிக மக்கள் தொகையும், 30% அதிக உற்பத்தியும் செய்தனர். ஐரோப்பிய காலனிகளை சேர்த்துக் கொண்டால் , நேச நாடுகள் 5:1 விகிதத்தில் அச்சின் மேல் பலம் கொண்டிருந்தனர்[199]. 1939-41 அச்சு நாடுகளின் மின்னலடி தாக்குதல்களால், இந்த பலங்கள் பெருமளவு குறைந்தன. ஆனால் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நேசநாடுகள் பக்கம் செர்ந்தவுடம், மறுபடியும் ஒப்பு பலம் அவர்கள் பக்கம் திரும்பியது. அதற்கப்புரம், போர் அழிவு போராக மாறியது.[200]. நேச நாடுகளுக்கு அதிக இயற்கை வளங்கள் இருந்தாலும், அச்சு நாடுகள் பெருமளவில் அடிமை வேலையை வாங்கின. ஆனால் அச்சு நாடுகள் ஓரளவு பெண்களை தொழிலாளர்களாக்குவதற்கு மனம் கொடுக்கவில்லை]],[201][202] ஆதலால், அவர்கள் தொழிலாளர் பலம் அதிகரிக்கவில்லை. ஜெர்மனியோ[203], ஜப்பானொ பல வருடம் இழுத்து அடிக்கக்கூடிய போருக்கு திட்டமிடவில்லை, அவர்களுக்கு அப்படிப்பட்ட திறனும் இல்லை.[204][205] தங்கள் உற்பத்தியை பெருக்க ஜப்பானும், ஜெர்மனியும் பல மில்லியன் அடிமை தொழிலாளர்களை உட்படுத்தியது. ஜெர்மனி 12 மில்லியன் கட்டய தொழிலாளர்களையும்[206] , ஜப்பான் 18 மில்லியன் கட்டாய தொழிலாளர்களையும் வைத்திருந்தது.[207].


போர்க்கால நாடுபிடிப்பு அதிகாரங்கள்

ஐரோப்பாவில், நாடுபிடிப்பு 2 உருவங்களில் வந்தது. மேற்கு, வடக்கு, மத்திய ஐரோப்பாவில், தான் கைப்பற்றிய இடங்களில் (பிரான்ஸ், நார்வே, டென்மார்க், பெல்ஜியம், ஹாலந்து) பொருளாதார கொள்கைகளால் , ஜெர்மனி 70 பில்லியன் ரைக்மார்க்கை உருவியது. இதில் பெருமளவு தொழிலுற்பத்திப் பொருட்கள், தளவாடங்கள், கச்சா, இதர பொருள்கள் கொள்ளை சேர்த்தி இல்லை. பிடித்த நாடுகளிடமிருந்த கிடைத்த ஆதாயம், ஜெர்மனியின் உள்நாட்டு வரி போன்ற வருமானத்தில் 40% ஆகியது[208].[209] .சோவியத் கிழக்கில் நிறைய வருமானம் கிடைக்க்வில்லை; ஏனெனில் கடும் போர்கள் ஏற்பட்டன, மற்றும் சோவியத் மக்கள்எரிந்த பூமி கொள்கை - அதாவது பின்னேறும் போது எல்லா பொருள்களையும், வளங்களையும் எரிப்பது - கடைப்பிடித்தார்கள். ஜெர்மானிய இனக் கொள்கைகளினால் ஜெர்மானிய ராணுவ வெற்றிகள் பின்னால் சுட்டு கொலை செய்யும் குழுக்கள் செயல்பட்டன[210]. தத்தம் நடுகளில் ‘தடுப்பு சக்திகள்’ செயல் பட்டாலும், அவை ஜெர்மானிய போர் பணிகளை ரொம்பவும் குறைக்க 1943 கடைசி வரை தவறினர் until late 1943. . ஆசியாவில் ஜப்பானியர் தாம் பிடித்த நாடுகளை ஜப்பானிய அகண்ட ஆசியா சுபிட்ச மண்டலம் என்றொரு அமைப்பை ஏற்படுத்தி[213], ஐரோப்பிய காலனீயத்திற்கு எதிர்நேர் என பிரசாரம் செய்தனர். ஜப்பானியர்கள் கொடுங்கோல், ஆசிய மக்களை அவர்களுக்கு எதிரில் திருப்பியது..[214]


பொறியியல், போர்முறை முன்னேற்றங்கள்

போரின் போது, விமானங்கள் வேவு பார்த்தல், சண்டையிடுதல், குண்டடித்தல், தரைப்படை ஆதாரம் முதலிய வேலைகளை முதல் யுத்தத்திலிருந்து செய்து வந்தாலும், இவை கணிசமாக முன்னேறின, விமானங்களுக்கு மேலும் இரு முக்கிய பணிகள் விமானதூக்கல், அதாவது ஆட்களையும், தளவாடங்களையும் துரிதமாக வேண்டிய இடத்திற்கு கொண்டு போவது[215], மற்றும் யுக்தி குண்டடித்தல் அதாவது எதிரியின் தொழில், உற்பத்தி பலம், மனோ பலம் குறைக்கும் படி இலக்கு தாக்குதல்கள், ஏற்பட்டன [216]. விமான எதிர் ஆயுதங்களும்,குறிப்பாக ஜெர்மானிய 88 மிமி துப்பாக்கி, முன்னேறி, ராடார் வளர்ந்தது. ஜெட் விமானங்களும் சிறிய அளவு பயன்படுத்தப்பட்டன..[217]

கடலில், எல்லா கப்பல் போர் துறைகளிலும் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன; குறிப்பாக விமான தூக்கிகள், மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள். டரண்டோ, பேர்ல் துறைமுகம், தெற்கு சீன கடல் , கோரல் கடல் இவற்றில் விமான தூக்கி கப்பல்கள் பெரும் பங்கு வகித்து, வெற்றிக்கு ஏதுவாயின.[218][219]. அட்லாண்டிக்கில் துணை கப்பல்கள் நேசநாடு கப்பல்கலை காப்பாற்ற நல்ல பங்கு வகித்தன[220].மேலும் விமானம் தூக்கி கப்பல்கள் போர்கப்பல்களை விட சிக்கனமானவை[221]. நீர்மூழ்கி கப்பல்கள் முதல் உலகப்போரிலேயே பெரும் பங்கு வகித்ததால்[222] , எல்லா நாடுகளும் இரண்டாம் போரிலும் அதன் முக்கியத்தை முதலிலேயே உணர்ந்தன. பிரித்தன் நீர்மூழ்கி கப்பல் எதிர் ஆயுதங்களை வளமாகியது - இதில் பேரொலி அலைகலை வைத்து எதிரி கப்பல்களை தேடும் சோனார் ஆயுதமும் அடங்கும். ஜெர்மானியர் முன்னடிப்பு ஆயுதங்களில் கவனம் செலுத்தி.[223] , டைப் 4 நீர்மூழ்கி டிசைஙளை செய்து, ஓநாய் கூட்ட தாக்குதல் போன்ற முறைகளை கையாண்டனர். இதற்கு பதிலாக நேச நாடுகள் பல புது வித டார்பீடோக்களை உருவாக்கினர்.
தரைப்போர் முதல் உலக யுத்த அசையாத முன்னணி முறைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டு, வேகமாக அசையும் அணிகளாகியது[224][225]. முதல் முறையாக கூட்டடித்த ஆயுதங்கள் , அதாவது பல வகை தளவாடங்களும் போர் துறைகளும் ஒன்றுபட்டு செயல்படுவது அமலாகியது. டாங்கி இரண்டாம் உலகப் போரில் பெரும் முன்னேற்றம் கண்டது. ராணுவ சிந்தனையாளர்கள் முதலில் டாங்கியை கொண்டு டாங்கி தாக்குதலுக்கு பதுகாப்பு தேடலாம் என நினைத்தனர். ஆனால் பல போர்கள் இக்கருத்தை வழக்கொழிய செய்து விட்டன. உதாரணமாக ஜெர்மானியர் டாங்கி - டாங்கி போரை தவிர்தனர் .அதனால் பிளிட்ஸ்கிரீக் போன்ற முறைகளில் பெரும் வெற்றி கண்டனர்.
தன் துருப்புகளுக்கு அரை தானியங்கி ரைபிள்களை கொடுத்த ராணுவம், அமெரிக்க ராணுவம். M1-Grand. மெஷின் கன்களில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எ.கா ஜெர்மானிய MG42. பல உப மஷின் கன்களும் , நகர, காட்டு,ஆள் சமீப சண்டைகளுக்காககண்டுபிடிக்கப் பட்டன. தாக்கு ரைபிள் , போரின் கடைசி கட்டத்தில் வந்தது, அது ரைபிள்மற்றும் உபமஷின் கன்னின் சிறந்த குணங்களை உள் கொண்டது. போருக்கு பின் எல்லா ராணுவங்களும் துருப்புகளுக்கு தாக்கு ரைபிள்களை கொடுத்தன.
தூரதொடர்பு துறையில் பாதுகாப்பு பிரச்சினைகளை சமிஞ்னை , கிரிப்டாகிராபி, உளவுப் பொறிகள் இவற்றல் சமாளிக்கப் பார்த்தார்கள். ஜெர்மனியரின் எனிக்மா பொறி புகழ் பெற்றது[226]. மேலும் ராணுவ உளவுத்துரை பல ஏமாற்றல் செய்கைகலை செய்து, எதிரிக்கு தன் பலம், பலவீனங்களை மறைத்தது. அதில் மிகச் சிறந்தது நேசநாடுகளின் நார்மண்டி தரையிரக்கம், சிசிலி தரையிரக்கம் முன்பு ஜெர்மானியர்களை தன் இலக்குகலை பற்றியும், பலங்களை பற்றியும் ஏமாற்றியது.
இதற்கு மேல் முதல் கணினிகள், ஜெர்மானியரின் V1 ,V2 ராக்கெட்டுகள், அமெரிக்கவின்அணுகுண்டு முதலியவை மாபெரும் முன்னேற்றங்கள் ஆகும்.

No comments:

Post a Comment