Wednesday 12 July 2017

GAUTAMI , TALENTED FILM ACTRESS , T.V.ACTRESS


GAUTAMI , TALENTED FILM ACTRESS , T.V.ACTRESS 




கௌதமி (பிறப்பு 2 ஜூலை 1965) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் கௌதமி. தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவ மைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார். வட இந்திய தொழிலதிபர் சந்தீப் என்பவரை திருமணம் செய்து பின் விவகாரத்து பெற்றார். இந்த விவகாரத்துக்குப் பின்ன் கமலஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் கவுதமி. இருவரும் கடைசியாக பாபநாசம் திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.

ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில் Nidadavole என்கிற ஊரில் 1965 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் தேதி பிறந்தவர் நடிகை கவுதமி.
விசாகப்பாட்டினம் GITAM கல்லூரியில் படித்தவர், அவருடைய பதினெட்டவது வயதில் ரஜினிகாந்த், ஹேமமாலினி நடித்த அந்த கானுன் இந்திப் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானார். இந்தப் படம் 1983ல் வெளியானது.
அதன் பிறகு 1987ல் அவரது உறவினர் தயாரித்த Dayamayudu என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதே ஆண்டில் காந்திநகர் ரெண்டாவது வீதி, சீனிவாச கல்யாணம் என இரண்டு தெலுங்கு படங்கள், எலு சுட்டின கோடு என்கிற ஒரு கன்னடப் படம் என மூன்று படங்களில் நடித்திருந்தார் இவர்.

1988 ஆம் ஆண்டு ரஜினி நடித்த குரு சிஷ்யன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதே ஆண்டில் வெளியான ராமராஜன் நடித்த எங்க ஊரு காவக்காரன் படம் அவருக்கு நல்ல குடும்ப பாங்கான முகம் கொண்ட நடிகை என்கிற அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
1989 ஆம் ஆண்டில் அவர் நடித்த 19 படங்கள் வெளியானது. அதே போல 1990ல் 18 படங்களும், 1992ல் 16 படங்களும் என 1988 முதல் 1998 வரை பத்து ஆண்டுகளில் 107 படங்களில் நடித்தார்.

ரஜினியுடன் நடித்த குருசிஷ்யன், ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், கமலுடன் நடித்த அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன் படங்கள் வெற்றிகரமாக ஓடின.
இவர் நடித்த படங்கள் வெற்றிகரமாக ஓடிய போது, தமிழில் பிசியாக இருந்த நேரத்தில் பல தெலுங்கு பட வாய்ப்புகளும், தெலுங்கில் பிசியாக இருந்த போது பல தமிழ்பட வாய்ப்புகளும் ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு குவிந்தன. என்னற்ற படங்களை அப்படி இழந்தவர் இவர். தமிழில் அப்போது இருந்த அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்தவர் இவர்.
மலயாளத்தில் மம்மூட்டியுடன் துருவம், மோகன்லாலுடன் அப்துல்லா, அரவிந்தசாமியுடன் டாடி என பல படங்களில் நடித்துள்ள இவர் கன்னடத்தில் Elu Suttina Kote, Chikkejamanru மற்றும் Cheluva பொன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டு முன்னணி கதாநாயகர்களுடன் பல படங்களில் நடித்தார்.

Pyar Hua chori chori,
Janata ki Adalat,
Haiwan,
Admi,
Appoo Raja,
Trimurti, Dhaal, என பல படங்கள் அவரது திறமைக்கு சான்றாக அமைந்தன.

இமேஜ் பற்றி கவலைப் படாத நடிகை இவர். இளம் பருவத்திலேயே தர்மதுரை படத்தில் வயதான தோறத்தில் நடித்திருக்கிறார். பட்டத்து ராணி படத்தில் வயதான விஜயகுமாருக்கு ஜோடியாக நடித்தார். ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே என்கிற ஒரு பாடலுக்கு பிரபுதேவாவுடன் இணைந்து நடனம் ஆடினார்.

1990 ஆம் ஆண்டு ’நம்ம ஊரு பூவாத்தா’ படத்திற்கு தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற இவர், 1991 ஆம் ஆண்டு ’நீ பாதி நான் பாதி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது, மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் பெற்றார்.

தொழிலதிபர் சந்தீப் பாட்டியா என்பவரை 1998 ஆண்டு திருமணம் செய்து கொண்டார் கவுதமி. இவர்களுக்கு 1999 ஆம் ஆண்டு சுபலட்சுமி என்கிற மகள் பிறந்தாள். திருமணம் ஆன இரண்டாவது ஆண்டே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இவர் கடைசியாக நடித்த மகேந்திரனின் சாசனம் என்கிற படம் 2006–ல் வெளியானது. அதன் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். நிறைய பட வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை.


சின்னத்திரையிலும் முத்திரை பதித்த இவர், கமல் நடித்த தசாவதாரம் படத்திற்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி சிறந்த காஸ்டியூம் டிசைனருக்கான விஜய் டிவி விருதும் பெற்றார்.

சில வருடங்களுக்கு முன்பு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார் இவர். அதில் இருந்து அவர் மீள்வதற்கு கமல் உறுதுணையாக இருந்தார். தற்போது கமலுடன் வாழ்ந்து வருகிறார் கவுதமி.

என் வாழ்க்கையின் தூண் என்பதை விட அதை விடவும் மேலானவர் கமல்ஹாசன் என்கிறார் கவுதமி.

முடிவுக்கு வந்தது கமல்ஹாசனுடனான லிவிங் டூ கெதர் வாழ்க்கை- நடிகை கவுதமி பகிரங்க அறிவிப்பு!


சென்னை: நடிகர் கமலஹாசனும், நடிகை கௌதமி இருவரும் கடந்த 13 ஆண்டு காலமாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிரிவதாக கௌதமி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மகள் சுப்புலட்சுமி எதிர்காலத்தை முன்னிட்டு கமலஹாசனை விட்டு பிரிவதாக தெரிவித்துள்ளார். மேலும் 29 ஆண்டுகால கமலஹாசனுடனான நட்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், தெரிவித்துள்ளார்.
மிகுந்த கவலையுடன் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கௌதமி தெரிவித்துள்ளார்.
என் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு விஷயத்தை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மாற்றம் இன்றியமையாது என்பதே அதுவாகும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் இயல்பானவையே. அப்படி நிகழும் மாற்றங்கள் அனைத்துமே நாம் எதிர்பார்த்ததாக, நாம் முன்னரே முடிவு செய்து வைத்ததாக இருப்பது அவசியமில்லை. நான் தற்போது எடுத்துள்ள முடிவு ஒரு பெண் தனது வாழ்நாளில் எடுக்கக்கூடிய மிகக் கடினமான முடிவாகும். ஆனால், மிக அவசியமான முடிவு. ஏனெனில், முதலில் நான் ஒரு தாய். எனது குழந்தைக்கு பொறுப்பானவளாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
என் குழந்தைக்கு நான் சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன். அவ்வாறாக என் குழந்தைக்கு நான் ஒரு சிறந்த தாயாக இருக்க வேண்டுமானால் எனக்குள் அமைதி நிலவ வேண்டும். அந்த அமைதியை பெறுவதற்காகவே இந்த முடிவை எடுத்து உள்ளேன்.
திரைத்துறைக்கு வருவதற்கு முன்னதாக இருந்தே கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகையாவேன். இப்போதும்கூட அவருடைய சாதனைகள், அவருடைய திறமைகளைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். அவர் சவால்களை எதிர்கொண்டபோது எல்லாம் அவருக்கு துணையாக இருந்திருக்கிறேன். அவருடன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய நாட்களில் நிறைய தொழில்முறை நுணுக்கங்களைக் கற்று கொண்டிருக்கிறேன். அவருடைய படங்களில் அவரது கனவுகளுக்கு நியாயம் செய்திருக்கிறேன் என்ற வகையில் பெருமிதம் கொள்கிறேன். இனிவரும் நாட்களிலும் அவருடைய ரசிகர்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு அவரது படைப்புகள் இருக்கும். நானும் அவற்றை பாராட்டுவேன்.
இந்த வேளையில் என்னுடைய அதிமுக்கிய முடிவை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான காரணமும் இருக்கிறது. என் வாழ்க்கைப் பயணம் முழுவதும் ரசிகர்களாகிய உங்களுக்கு மத்தியிலேயே நான் கவுரவமாக கடத்தியிருக்கிறேன். கடந்த 29 ஆண்டுகளாக நீங்கள் எனக்கு அளித்த அன்பும், ஆதரவும் அளப்பரியது. அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பும், ஆதரவுமே என் வாழ்நாளின் கடினமான தருணங்களில் எனக்கு பெருந்துணையாக நின்றிருக்கிறது,” என்று கூறிஉள்ளார்.
இதுதொடர்பாக செய்தி சேனலுக்கு பேட்டி அளித்து பேசிய கவுதமி, கமல்ஹாசனுடன் பிரிவது என்பது உடனடியாக எடுக்கப்பட்டது கிடையாது, தீவிரமாக யோசித்த பின்னரே இம்முடிவை எடுத்து உள்ளேன், என்றார். தொடர்ந்து கமல்ஹாசனுடன் திரைப்படங்களில் பணியாற்றுவேன் என்றும் கவுதமி கூறிஉள்ளார்.

No comments:

Post a Comment