KANIKA , FILM ACTRESS ,DUBBING ARTIST,SINGER


KANIKA , FILM ACTRESS ,DUBBING ARTIST,SINGER




திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட கனிகா, ஓர் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் கன்னட, மலையாள, தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பிள்ளைப் பருவம்[மூலத்தைத் தொகு]

திவ்யா, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில் பிறந்தவர், இவரின் பெற்றோர் இருவரும் பொறியாளர்கள். மதுரையிலிருந்த பிரபலமான பல்ளியொன்றில் படித்த திவ்யா, மாநில அளவிலான கல்விக்கான விருதினைப் பெற்றுள்ளார் [1] பின்னர் இராஜஸ்தானில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்னுட்ப நிறுவனத்தில் (பிட்ஸ்) இயந்திரவியல் பயின்றார். சிறு வயதிலிருந்தே தன் பாடும் திறனை மேம்படுத்திக் கொண்ட திவ்யா, பல இசைப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியே இவர் திரைத்துறைக்கு வரக் காரணமாக இருந்தது.

பின்குரலும் பாடுதலும்[மூலத்தைத் தொகு]

இவரின் இனிய குரலும் சரியான தமிழ் உச்சரிப்பும் இவர் பின்னணிப் பாடகராக உதவின. திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போதே, பின்குரலும் கொடுத்து வந்தார். இவர் நடித்த திரைப்படமான பைவ் சுடாரின் கருப்பாடலிலும் பாடினார். சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கும், அன்னியன் திரைப்படத்தில் சதாவுக்கும், சிவாஜி திரைப்படத்தில் சிரேயாவுக்கும் குரல் கொடுத்தார்.. [2

ஃபை ஸ்டார் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கனிகா. நான் என் கணவரை பிரிந்துவிட்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது அவை வதந்தி என்று கூறியுள்ளார்.

இந்த வதந்தி தொடர்பாக கனிகா கூறுகையில், எனக்கும், ஷ்யாமுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. எங்களுக்கு ரிஷி (வயது 5) என்ற மகன் இருக்கிறான். அவனை தமிழ் கலாச்சாரப்படி வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் சென்னைக்கு வந்தேனே தவிர கணவரை பிரிந்து விடவில்லை.

நானும் என் கணவரும் நல்ல நண்பர்கள். எங்கள் மகன் தான் எங்களுடைய உலகம். நான் சைவம். ஆனால், என் கணவர் அசைவம். அவருக்காக நான் அசைவமாக மாறிவிட்டேன். எனவே என் கணவரை பிரிந்து விட்டதாக வெளியான இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாகவும், இது தொடர்பாக என் உறவினர்களும் என்னிடம் கேள்வி எழுப்பினர். நான், இது வெறும் வதந்தி தான் என்று அவர்களுக்கு பதில் தெரிவித்தேன் என்றும் கூறியுள்ளார்.

சென்னை மழை: உங்கள் வளர்ப்பு பிராணிகளைப் பாதுகாத்திட இங்கே வாருங்கள் - கனிகா

சென்னை: "மழையால் தவிக்கும் உங்கள் செல்ல பிராணிகளைப் பாதுகாத்திட இங்கே கொண்டு வாருங்கள்" என்று நடிகை கனிகா தெரிவித்திருக்கிறார். மழை, வெள்ளத்தால் மக்கள் படும் அவஸ்தைகளை விட வாயில்லாப் பிராணிகள் படும் துன்பங்கள் தான் அதிகம். பேசத் தெரிந்த மனிதர்களே இவ்வளவு துன்பங்களை அனுபவிக்கையில் வாயில்லாத அந்தப் பிராணிகள் படும்பாடு எழுத்தில் அடங்காது.

இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவிகள் செய்து வரும் நடிகை கனிகா பின்வரும் தகவல் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். "டிடிகே ரோட்டில் உள்ள சங்கரா ஹால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செல்லப் பிராணிகளுக்க திறந்திருக்கிறது.

 உங்களிடம் செல்லப் பிராணிகள் இருந்து அவற்றிற்கு மருத்துவ உதவியும், தங்குமிடமும் தேவைப்பட்டால் நீங்கள் இங்கே வரலாம். உங்களுக்கு வரும் வழி தெரியவில்லை அல்லது ஏதேனும் உதவி தேவையெனில் நீங்கள் இந்த எண்ணில்(04424990870) எங்களைத் தொடர்பு கொள்ளலாம். 

நாங்கள் தொண்டு செய்வோர் மற்றும் மருத்துவ உதவியுடன் இங்கே காத்திருக்கிறோம்"என்று கனிகா கூறியிருக்கிறார். உங்கள் பக்கத்தில் யாரேனும் செல்லப் பிராணிகளை வைத்திருந்தால் அவர்களுக்கு நீங்கள் இந்தத் தகவலை தெரிவிக்கலாமே!

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER