Wednesday 26 July 2017

Myanmar (Burma) ,A SHOCKING HISTORY






Myanmar (Burma) : ஒரு அதிர்ச்சி வரலாறு!





ர்மா என அறியப்படும் மியன்மார் நாடு மிக அண்மையில் தான்மக்களாட்சி முறைக்குத் திரும்பியுள்ளதுசுமார் 50 ஆண்டுகளுக்கும்அதிகமாக இராணுவ ஆட்சியில் சிக்கித் தவித்த மியன்மார்கொஞ்சம் கொஞ்சமாக மக்களாட்சிக்கு திரும்பி வந்ததுஇதற்காகப்பெரிதும் போராடியவர் ஆங்க் சாங்க் சூ கி ஆவார்உலக நாடுகளில்எழுந்துள்ள சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரான ஒரு சூழலும்,அழுத்தமும் கூட இதற்கு ஒரு காரணமாகும்இந்த நிலையில்உலகமே கூர்மையாக மியன்மாரை அவதானித்து வந்த நிலையில்ஏற்பட்ட சோகமே ரொகிங்கியா கலவரம்.

ரொகிங்கியா : ரொகிங்கியா எனப்படும் இஸ்லாமிய வங்காளிமொழி பேசும் மக்கள் சுமார் 800, 000 பேர் வரை மியன்மாரின் மேற்குமாநிலமான அரக்கான் மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றார்கள்.ரொகிங்கியாக்கள் ஏனைய நாட்டில் வாழும் பிற முஸ்லிம்களிடம்இருந்து தனித்துவமானவர்கள்பல நிலைகளில் ரொகிங்கியாக்கள்காலம் காலமாக வாழ்ந்து வருவதாகக் கூறினாலும். 1950-களுக்குமுன்னர் ரொகிங்கியாக்கள் மிகவும் சிறிய இனமாகவே இருந்தனர்.பெரும்பாலானோர் வங்கதேசத்தில் இருந்து கூலிகளாகமியன்மாரில் வேலை செய்தவர்களே ஆவார்கள்.

மியன்மாரின் இதரப் பகுதிகளில் இந்திய முஸ்லிம்கள்மலாய்முஸ்லிம்கள்சீன முஸ்லிம்கள் ரங்கூன் போன்ற நகரத்தில்வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள்இவர்கள் யாவரும்ஆங்கிலேயேர் காலத்தில் இங்குக் குடியேறியவர்கள்அத்தோடுமட்டுமில்லாமல் ரங்கூன்மண்டலாய் போன்ற பகுதிகளில் சிலபர்மிய முஸ்லிம்கள் சில நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்.இவர்களையும் ரொகிங்கியாக்களையும் பெரிதும் குழப்பிக்கொள்பவர்களும் உண்டுரங்கூன் பகுதிகளில் முஸ்லிம்களைப்போலவே தமிழர்களும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்களே.ஆனால் பெரும்பாலானோர் மியன்மாரிய விடுதலைக்குப் பின்னர்வெளியேற்றப் பட்டு விட்டார்கள்ஒரு சிலர் மட்டுமே மியன்மார்குடியுரிமை வழங்கப்பட்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

ரொகிங்கியாக்கள் பெரிதும் வியாபாரம் போன்ற தொழில்களில்ஈடுபடுவதில்லைபலர் நினைப்பது போல முகாலய மன்னர்காலத்தில் குடியேறிய வியாபாரிகளின் வழி வந்தவர்களும் அல்லஇவர்கள்வங்கதேசத்தின் சித்தங்காங்க எல்லைப் பிரதேசவழியாகக் கூலி வேலைக்குச் சென்றவர்களே ரொகிங்கியாக்கள். 1950-களுக்குப் பின் பல ஆயிரம் வங்காளி முஸ்லிம்கள் கள்ளத்தனமாக மியன்மாரில் குடியேறத் தொடங்கினார்கள்வங்கதேசவிடுதலைப் போர் காலங்களில் மேலும் ஆயிரம் ஆயிரம் வங்காளிமுஸ்லிம்கள் மியன்மாருக்குள் நுழைந்து அங்கேயே குடியேறிவிட்டனர்.

ரொகிங்கியாவின் வரலாறு : ரொகிங்கியா என்ற வார்த்தைபெரும்பாலும் 1990-களிலேயே பத்திரிக்கைகளில் இடம் பெறத்தொடங்கினரொகிங்கியாக்களைப் பற்றி ஆய்வில் ஈடுபடத்தொடங்கிய கின் மாங்க சா என்பவர் பல அதிர்ச்சித்தகவல்களையும்ஆச்சர்யமான விடயங்களையும் கண்டறிந்தார்.ரொகிங்கியா என்ற வார்த்தை மியன்மாரின் அராக்கன் மொழிவார்த்தையே அல்லஅராக்கன் மாநிலத்தில் பேசப்படும் எந்தவொருமொழியிலும் ரொகிங்கியா என்ற வார்த்தை இடம்பெற்றதேஇல்லைஅதனால் வங்காள மொழியில் இந்தச் சொல்லை தேடியபோதும் அப்படி ஒரு சொல் இடம்பெறவே இல்லைஆகவே அவர்பல இலக்கியங்கள்ஆவணங்களில் தேடிய போதும் ஏமாற்றமேமிஞ்சியதுபிரித்தானிய ஆட்சியின் போது மியன்மார் குறித்துப் பலநூல்களை எழுதிய மோரிஸ் காலிஸ் ரொகிங்கியா என்ற சொல்லைஎங்கும் குறிப்பிடவே இல்லை.

பர்மாவில் 1921-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணிப்பின்போது பர்மாவில் வாழ்ந்த இனங்கள்அனைத்தும் குறிப்பிடப்பட்டுஇருந்ததுஆனால் அவற்றில் கூடரொகிங்கியா என்ற சொல்இடம்பெறவே இல்லைஆர்.பி.ஸ்மார்ட் என்பவரால் கொகுக்கப்பட்ட பர்மா கெஸ்ட்டிலும் இவர்கள்பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

முஜாஹித்கள் :

1950களில் வங்கதேச எல்லைப் புறக் காடுகளில் முஜாஹித்கள்எனப்படும் தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வந்ததுஇவர்களின்தலைவனாக மிர் காசிம் என்னும் வங்காள மொழி பேசுபவன்செயல்பட்டு வந்தான்அராக்கான் மாநிலத்தின் வடப் பகுதிகளைக்கைப்பற்றிக் கிழக்குப் பாகிஸ்தானில் இணைக்க வேண்டும் எனச்செயல் பட்டு வந்தான்இந்த இயக்கத்தில் இருந்த உறுப்பினர்கள்அனைவருமே வங்காளத்தில் இருந்து சட்ட விரோதமாக அராக்கான்மாநிலத்தில் இடம் பெயர்ந்து வந்தவர்களேகாஸிமின் குழுவில்இருந்தவர்கள் பலர் பாகிஸ்தானில் சென்று பயிற்சியும் பெற்றுவந்தார்கள்இந்த நிலையில் காஸிமை பிடிக்க மியன்மாரிய அரசுபரிசு அறிவித்ததுஇருந்த போதும் அவன் பிடிப்படவில்லைஇந்தநிலையில் மியன்மாரிய இராணுவம் முஜாஹிதுகளைத்தோற்கடித்ததுஇதனால் காஸிம் கிழக்கு பாகிஸ்தானாகஅறியப்பட்ட வங்கதேசத்துக்கு ஓடிப் போனான்அங்கு அவன் ஆள்தெரியாத நபரால் காக்ஸ் பஜாரில் வைத்துக் கொல்லப்பட்டான்பலமுஜாஹித்கள் அரசுப் படையால் கைது செய்யப்பட்டனர்இவர்கள்தங்களை ரொகிங்கியாக்கள் என அறிவித்துக் கொண்டனர்.
1960-களில் யு நூஅதிபராகத் தேர்தலில்வெற்றிப் பெற்றதும்மியன்மாரியஇனங்களுக்குத்தனிமாநிலங்களைஉருவாக்கத்திட்டமிட்டார்இதன்அடிப்படையில்மியன்மாரின் ராக்கின்இன மக்கள் வாழும்அராக்கன் மாநிலம்உருவானதுஇந்த நிலையில் அராக்கனில் வாழ்ந்த வங்காளிகள்தமக்கும் தனி மாநிலம் தர வேண்டும் என்ற கோரிக்கையைவைத்தனர்ஆனால் அவர்கள் யாவரும் வெளிநாட்டில் இருந்துவந்தவர்கள் என்பதால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது


போலி வரலாறு :

இந்த நிலையில் அராக்கனில் வாழ்ந்த வங்காளி முஸ்லிம்கள்போலி வரலாற்றுத் தகவல்களை வெளியிடத் தொடங்கினார்கள்.அதன் படி அரபு வணிகர்கள் வந்த கப்பல் அராக்கனில் மூழ்கிவிடஅங்கிருந்து தப்பி வந்து அவர்கள் அராக்கானில் குடியேறி பர்மியபெண்களை மணந்தத்தாகவும்அவர்களே ரொகிங்கியாக்கள் எனக்கதைக் கட்டி விட ஆரம்பித்தார்கள்பல வரலாற்று ஆய்வாளர்கள்முஸ்லிம்களின் இந்தக் கூற்றை மறுத்தும் வந்தனர்.

ஆனால் ம்ராக் யூ அரசர்களின்படையில் சில முஸ்லிம்போர்வீரர்கள் இருந்தார்கள்.அவர்கள் பர்மிய பெண்களைமணந்து வாழ்ந்தார்கள்.அவர்களின் வாரிசுகள் சிலர்இன்றளவும் அராக்கன்மாநிலத்தில் வாழ்ந்துவருகின்றார்கள்இவர்களின்எண்ணிக்கை சில நூறே ஆகும்இவர்களின் தோற்றமும்,மொழியும் அராக்கானில் வாழும் ரக்கீங்களை ஒத்து இருக்கும்.ஆனால் மியன்மாருக்கு வெளியே இருப்பவர்கள் இவர்களையும்ரொகிங்கியாக்களையும் குழப்பிக் கொள்பவர்கள் மிக அதிகம்

வங்காளிகளின் வருகை :

இரண்டாம் உலக யுத்த காலங்களில் ஜப்பானை படைகள் பொழிந்தகுண்டு மழைகளுக்கு அஞ்சிய பர்மிய ராக்கீன் இன மக்கள்வங்கதேசத்துக்கு அருகே உள்ள கிராமங்களில் இருந்து வெளியேறிஅராக்கான் மாநிலத்தில் உள்ள நகரப் பகுதிகளுக்குச்சென்றுவிட்டனர்பின்னர் ஆள் அரவமற்ற பகுதிகளாகஇக்கிராமங்கள் மாறிப் போனதுஇதனால் இப்பகுதிகள் ருவாகாங்க்என்றழைக்கப்பட்டனருவாகாங்க் என்றால் பழைய கிராமங்கள்அல்லது ஆள் இல்லாத கிராமங்கள் என்று அர்த்தப்படும்இந்தநிலையில் வங்காளத்தில் இருந்து குடியேறிய கூலித்தொழிலாளர்களும்சட்ட விரோத குடியேறிகளும் இந்தக்கிராமங்களில் குடியேறி வாழத் தொடங்கினார்கள்இந்த நிலையில்அராக்கான் பகுதிகளில் உள்ள நகரங்களுக்குக் கூலி வேலைசெய்யப் போகும் வங்காளிகள் தாம் எங்கிருந்து வருகின்றனர் எனக்கேட்கும் கேள்விகளுக்குத் தாம் ருவாகாங்க காஜா எனச்சொல்வார்களாம்அதாவது ருவாகாங்கில் இருந்து வருகின்றோம்எனஅவர்களுக்குத் தெரியாது ருவாகாங்க் என்றாலே பழையகிராமங்கள் என்று அர்த்தமாகும்இதுவே காலப் போக்கில்ரொகிங்கியாக்கள் என்ற சொல்லாக மருவியது.

ஆனால் 1960-களில் தமக்கான வரலாறுகளாகப் பொய்களைப்புனைய தொடங்கிய பல இஸ்லாமியர்கள் தாம் 9-ம் நூற்றாண்டில்இருந்தே வாழ்ந்து வருவதாகக் கதைக் கட்ட ஆரம்பித்தனர்.

முகாலயர்களின் வாரிசுகள் : 
ரொகிங்கியாக்களில் சிலர்தாம் முகாலயர்களின்வாரிசு என அறிவித்துக்கொண்டார்கள்.ஆனாலும் அதுவும்உண்மை இல்லைஎன்பதைப் பர்மியவரலாற்று ஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர். 16-ம்நூற்றாண்டில் ஷா சுஜாஎன்னும் இளவரசன் இருந்தான்ஔரங்கசீப்பின் இளையதம்பியான இவன் அரசராக முயன்றான்ஆனால் அம்முயற்சிதோல்வி காணவே உயிருக்கு அஞ்சி அராக்கானில் ஆட்சி செய்தசண்ட துத்தம்மா என்னும் மன்னனிடம் அடைக்கலம் புகுந்தான். 1660-களில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்த மன்னன்பின்னர்அவனின் மகளை மனைவியாக்கிக் கொள்ள ஆசைப்பட்டுப் பெண்கேட்க போனான்ஆனால் இதனைச் சம்மதிக்க மறுத்துவிட்டான்ஷா சுஜாஇதனால் கோபமுற்ற மன்னன் சண்ட துத்தம்மாஅனைத்து முகாலயர்களிலும் வெட்டிப் போடும் படிஉத்தரவிட்டான்அதன் படி அனைவரும் கொல்லப்பட்டனர்.இதனைக் கேள்வியுற்ற முகாலய மன்னர்கள் சண்டதுத்தம்மாவிடம் போர் தொடுத்து வந்தனர்இதனால் அராக்கான்மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்த சித்தாங்கோங்க் பகுதியைமுகாலயரிடம் இழந்துவிட்டான்இன்றளவும் சித்தாங்கோங்க்வங்கதேசத்தின் ஒரு பகுதியாகவே இருக்கின்றதுஆனால் அங்குவாழும் பெரும்பான்மையினர் பர்மிய மொழி பேசும்பௌத்தர்களாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது

ஆகவே பாரசீக மொழிபேசிய முகாலயர்களின்வாரிசுகள் தான்ரொகிங்கியாக்கள் எனவிடப்பட்ட கதையும் ஒருபுனைவே என்பதுஉண்மையாகிவிட்டது.ஏனெனில் ரொகிங்கியாக்கள்உருவத்தால்கருப்பானவர்கள்வங்காளமொழி பேசக் கூடியவர்கள்.ஆனால் முகாலயர்களோதுருக்கிய இனத்தைச்சார்ந்தவர்கள் வெள்ளை நிறமானவர்கள்பாரசீக மொழி பேசக்கூடியவர்கள்அத்தோடு அவர்கள் யாவரும் அராக்கான் மன்னனால்கொலை செய்யப்பட்டு விட்டதாகவே வரலாறு கூறுகின்றது.

பர்மிய மொழிய தெரியாத ரொகிங்கியாக்கள் :


பர்மாவில் குடியேறியஇந்திய வம்சாவளிமுஸ்லிம்கள் பலர்ரங்கூனில்வாழ்கின்றார்கள்.இவர்கள் சரளமாகப்பர்மிய மொழி பேசக்கூடியவர்கள்பர்மியஅரசவையில் போர்வீரர்களாக இருந்த சிலமுஸ்லிம்கள் பர்மியர்களோடு கலப்புற்று பர்மிய மொழி பேசிஅராக்கன் உட்படச் சில பகுதிகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்குடியேறிய தமிழர்கள்தெலுங்கர்கள்தமிழ் முஸ்லிம்கள்மலாய்முஸ்லிம்கள் போன்றோரும் பர்மிய மொழியே பேசிவருகின்றார்கள். 17-ம் நூற்றாண்டில் பர்மாவில் குடியேறியபோர்த்துகேசிய கத்தோலிக்கர்களும் சிரியம் என்ற நகரில் வாழ்ந்துவருகின்றார்கள்அவர்களும் பர்மிய மொழியே பேசிவருகின்றார்கள்ஆனால் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்துவருபவர்களாகக் கூறிக் கொள்ளும் ரொகிங்கியாக்கள் பலருக்குசுத்தமாகப் பர்மிய மொழியோஅராக்கனிய மொழியோ பேசத்தெரியாதுஉடைநடைபாவனைகள்உணவு பழக்க வழக்கம்,உருவ ஒற்றுமை எனப் பலவற்றிலும் ரொகிங்கியாக்கள்பர்மியர்களோடு ஒத்துப் போவதே இல்லைசில நூறுஆண்டுகளுக்கு முன் வந்த தமிழர்களே பர்மிய மொழி சரளமாகப்பேசும் போது ஏன் இவர்களால் பேச முடியவில்லை என்பதை நாம்கவனிக்க வேண்டும் ?

ஏழாம் நூற்றாண்டில் கப்பலில் வந்த கதை : 
ஏழாம் நூற்றாண்டில் கப்பலில் வந்தஅரபு வாணிகர்களின் கப்பல் உடைந்து,அவர்கள் தப்பி வந்து அராக்கானில்இருந்த ம்ராக் யூ மன்னராட்சிக்காலத்தில் குடியேறியவர்களே இந்தரொகிங்கியாக்கள் எனக்கூறப்படுகின்றதுஆனால் இதுவும்உண்மையல்ல ! ஏழாம் நூற்றாண்டில்ம்ராக் யூ மன்னர்களே ஆட்சிசெய்யவில்லை ! மாறாகத் தன்யாவட்டி மன்னர்களே அப்போதுஆட்சியில் இருந்தனர்தன்யாவட்டி மன்னர் காலத்தில் பர்மாவில்முஸ்லிம்கள் இருந்தமைக்கான ஆதாரங்களோஎந்தவிதக்குறிப்புகளுமோ இல்லவே இல்லைஅக்காலத்தில் வேறு மதம்இருந்தது எனில் அது இந்து மதம் மட்டுமே எனப் பர்மியவரலாறுகள் கூறுகின்றன.

கம்யூனிஸ்ட்களின் சதி வேலை :



1950-களில்முஜாஹித்களோடுதொடர்பு வைத்திருந்தசெஞ்சட்டைகம்யூனிஸ்ட்போராளிகளேரொகிங்கியா என்றவார்த்தையைமுஜாஹித்களைக் குறிப்பிட பயன்படுத்தியதாக யு தாங்க் என்றவரலாற்று ஆய்வாளர் கூறுகின்றார்ஆனால் அதன் சரியானஅர்த்தம் என்னவெனத் தெரியாது என அவர் கூறுகின்றார்.செஞ்சட்டை கம்யூனிஸ்ட்கள் முஜாஹித்களுக்குப் பர்மியகுடியுரிமையைக் கள்ளத் தனமாகப் பெற்றுக் கொடுக்கவும்முயன்றுள்ளனர் என அவர் கூறுகின்றார்.

ரொகிங்கியாக்களின் எதிர்காலம் :

இது போன்ற இனக்கலவரங்கள் பல முறை கடந்த பதினைந்துஆண்டுகளில் நடந்துள்ளனஆனால் அப்போது எல்லாம் இவற்றைஇவ்வளவு பெரிதாக ஊடகங்கள் கூறவில்லைஆனால் தற்போதுஜனநாயக ஆட்சியைத் தழுவ நினைக்கும் மியன்மாரில்பிரச்சனைகளை உண்டுப் பண்ணவும்சீனச் சார்பு நிலையில்இருந்து அமெரிக்கச் சார்பு நிலைக்கு மாறி வரும் மியன்மார் மீதுஅழுத்தங்களைக் கொடுக்கவே இப்படியான கலவரங்கள்தூண்டப்பட்டுஅவற்றைப் பற்றிய பல அவதூறு செய்திகளைப்பரப்பி வருகின்றனர்குறிப்பாகப் பாகிஸ்தானை மையமாகவைத்துச் செயல்படும் இணையத் தளங்கள்செய்தி ஊடகங்கள் பலதான் இந்தச் செய்திகள் பலவற்றை வெளியிட்டு பரப்பிவருகின்றனர்இதே போன்ற கலவரங்கள் நைஜீரியாவிலும்நிகழ்த்தப்பட்டு வருகின்றனஆனால் ஊடகங்கள் அவற்றுக்குமுக்கியத்துவம் கொடுப்பதில்லைஏனெனில் அங்குப்பாதிக்கப்படுவது கறுப்பின கிருத்தவர்கள் என்பதால்.

அதே போல ரொகிங்கியாக்களைப் பர்மிய முஸ்லிம்களோடுகுழப்பிக் கொள்வதும்சட்ட விரோதமாகக் குடியேறிரொகிங்கியாக்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டதை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பர்மாவில் புறக்கணிக்கப்படுவதாகச்செய்திப் பரப்பி வருவதும்அண்மையில் ஏற்பட்டஇனக்கலவரங்களில் பர்மிய ராணுவம் 20,000 முஸ்லிம்களைக்கொன்று விட்டதாகவும் போலிச் செய்திகள் பலவற்றை இணையத்தளங்களில் உலவ விட்டுள்ளனர்இவை யாவும் மிகைப்படுத்த பட்டசெய்திகளே ஆகும்.
அண்மையக் கலவரம்ஏற்படப் புத்த பிக்குகள்கேக் சாப்பிட்ட கதையும்இப்படியான ஒருமிகைப்படுத்தலே.உண்மையில் பர்மியஇளம் பெண்ணை சிலரொகிங்கியாக்கள் கடத்திகற்பழித்துக் கொன்றுவிட்டனர்இதனால்எழுந்த பிரச்சனையே இந்தக் கலவரம்முதலில் அராக்கனியமக்களின் வீடுகளுக்குத் தீ வைத்தவர்களும் ரொகிங்கியாக்கள் தான்.இவற்றில் 20 ,000 பேர் இறந்ததாகக் கூறப்படுவதும் மிகைப்படுத்தபட்டவையேஇந்தக் கலவரத்தில் இறந்தவர்கள் 50 பேர் ஆவார்கள்.இவற்றில் இருசாராரும் அடங்குவார்கள்அதே போலக்கலவரங்களைப் பெரிதுப் படுத்தியதில் பாகிஸ்தானிய உளவுத்துறைக்கும் சம்பந்தம் இருப்பதாகவும்கலவரங்களை ஏற்படுத்திய20 பேரை மியன்மார் அரசு கைது செய்துள்ளதுதற்போதுகலவரங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாகக் குடியேறும் எந்தவொரு மக்களையும்எந்தவொரு அரசும் குடியுரிமை வழங்கிவிடாதுஆனால்மனிதாபிமான அடிப்படையில் சில காரியங்களைச் செய்யலாம்.சட்டத்துக்கு உட்பட்டு குடியேறிய மலையகத் தமிழர்கள்விடயத்தில் இந்திய – இலங்கை அரசு செய்தது போல ! மியன்மார்அரசும் – வங்கதேச அரசும் ஒப்பந்தம் ஒன்று போட்டுரொகிங்கியாக்களில் ஒரு பகுதியினருக்கு மியன்மார்குடியுரிமையும்ஒரு பகுதியினருக்கு வங்கதேச குடியுரிமையும்வழங்கலாம்இன்னும் ஒரு பகுதியினரை இதர முஸ்லிம் நாடுகள்அகதிகளாக ஏற்றுக் குடியுரிமை வழங்க முன்வரலாம்
ரொகிங்கியாக்கள் சட்டவிரோதகுடியேற்றவாசிகள்எனினும் அவர்களுக்குஎதிரான மனித உரிமைக்குற்றங்களை நாம்வன்மையாகக்கண்டிக்கின்றோம்.ரொகிங்கியாக்களின்பிரச்சனையைத்தீர்ப்பதற்கு மியன்மார்வங்கதேசம் மற்றும் சர்வதேச சமூகத்துக்குமுழுப் பொறுப்புகள் உள்ளனஇந்த இனக்கலவரங்களை முடிவுக்குகொண்டு வர செயல்பட்ட மியன்மாரிய அரசும்பாதுகாப்புபடைகளும் பாராட்டப் படவேண்டியவையேரொகிங்கியாக்கள் –ரக்கீன் மக்களுக்குள் இடையிலான பிணக்குகளுக்கு மதச் சாயல்பூசப்படுவதும்தீவிரவாதங்களை வளர்க்க முனைவரும்கண்டிக்கப்பட வேண்டியவையே.

பர்மிய வரலாறுரொகிங்கியா பற்றிய தகவல்களைத் தொகுத்துஅளிப்பதில் உதவியாக இருந்த பர்மிய வலைப்பதிவர்களுக்கும்,வங்கதேச தோழர்களுக்கும் எனது நன்றிகள் !



மியன்மாரின் பழைய பெயர் பர்மா 6,76552 சதுர மைல்கள் கொண்டது. பர்மா நாட்டின் வடமேற்கு எல்லையில் இந்தியாவும், பங்களாதேசும் இருக்கின்றன. வடகிழக்கு எல்லையில் žனாவும் லாவோசும் இருக்கின்றன. தென் கிழக்கு எல்லையில் தாய்லாந்து இருக்கிறது. பர்மா ஆங்கில ஆட்சியில் 1936 வரை இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இருந்தது. அரிசி, தேக்கு, நவரத்தினம், முத்து போன்றவை அதன் பாரம்பரியச் சொத்து.

தமிழர் குடியேறிய வரலாறு :


கிறிஸ்து தோன்றுவதற்கு முன்பே தமிழகத்திற்கும் பர்மாவுக்கும் தொடர்பு இருந்து வந்தது. அத்தொடர்பு வணிகத்தை நோக்கமாகக் கொண்டது. பர்மாவை-பட்டினப்பாலை 'காழகம்' என்கிறது. 'காழகத்து ஆக்கமும்' என்ற வரிகள் இதனை உணர்த்துகின்றன. 'அருமணதேயம்' என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. 

கி.மு. 200 முதல் 300 வரை காஞ்சிபுரத்திலிருந்து புத்த சமயக் கருத்துக்களுடன் பல்லவ எழுத்து, நாகரிகம், பண்பாடு மூலம் தமிழகத் தொடர்பும், நட்பும் ஏற்பட்டன. 'தட்டாம்' எனப்படும் சுவர்ண பூமிக்குப் புத்த துறவிகளால் அவை கொணரப்பட்டன எனப் பர்மியப் பண்பாட்டு வரலாறு என்ற நூல் கூறுகிறது என ந.வீரப்பனார் தெரிவிக்கிறார். காஞ்சிபுரத்தைப் பற்றியும், புத்த சமய அறிஞர் தர்மபாலரைப் பற்றியும் தலைங் (Talaing Records) ஆவணத்தில் குறிப்புள்ளது. பல்லவரை அடுத்து, சோழர் காலத்தில் இராஜேந்திர சோழனுடைய கடாரப் படையெடுப்பு பற்றி அதிகளவு செய்திகள் கிடைக்கின்றன. 

இராஜேந்திரச் சோழனின் கடாரம் படையெடுப்பு கி.பி. 1025 இல் நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இரண்டுமுறை கடல் வழியாகவும், ஒரு முறை நிலவழி அதாவது வங்காளம் வழியாகவும் பர்மாவின் மீது இராஜேந்திரச் சோழன் படையெடுத்தான் என்று ஆர்.சி. மசூம்தார் தெரிவிக்கிறார். பெகுவிற்கு அருகே இரண்டு கருங்கல் தூண்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. அதில் "திருமன்னி வரை இரு நில மடந்தையும்" என்ற சிதைந்த வரி உள்ளது. இராஜேந்திரனின் வெற்றியைப் பறை சாற்றும் நோக்கத்துடன் இந்த வெற்றித் தூண்களை (ஜெயஸ்தம்பம்) அமைத்துள்ளான் என பர்மிய தொல்லியளாளரான டெசெயங்கோ கூறியுள்ளார். 

காண்க: (Archalogical Report on Burma 1908 Para 25) இவருடைய கருத்தை உறுதிப்படுத்துவது போல மற்றொரு செய்தி: பர்மாவில் உள்ள பப்பாளத்தை இராஜேந்திரன் கைப்பற்றினான். மற்றொரு கல்வெட்டு ஆய்வாளரான வெங்கைய்யா அவர்களின் ஆராய்ச்சிப்படி, பர்மாவில் உள்ள துறைமுக நகரம் பப்பாளம், இந்நகரைப் பற்றி மகாவம்சமும் குறிப்பிடுகிற படியால் ஒரே இடத்தில் இருப்பதாலும் இராஜேந்திரனுடைய படையெடுப்பு பற்றிக் கல்வெட்டு குறிப்பிடுகிறவை மெய்தான் என்றாகிறது. மேலும் கி.பி.1084-1112 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த சான்žத்தர் என்ற பர்மிய மன்னர் சோழப் பேரரசனோடு உறவு கொண்டிருந்தார் என்கிற கல்வெட்டும் கிடைத்துள்ளது. 


தமிழ்க் கல்வெட்டு :

பர்மாவில் பாகாங்கு என்னும் இடத்தில், ஒரு தமிழ்க் கல்வெட்டு கிடைத்து இருக்கிறது. அக்கல்வெட்டு கி.பி.13-ஆம் நூற்றாண்டில் வழங்கிய தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது. (சேரமான்) குலசேகர ஆழ்வாரின் 'முகுந்தமாலா' என்ற வடமொழி நூலில் உள்ள ஆறாம் சுலோகத்தோடு தொடங்கி, கீழ் காணும் தமிழ்ப் பகுதியோடு முடிகிறது. 
"சுவஸ்திஸ்ரீ புக்கம் ஆன அரிவர்த்தனப்
புரத்து நானாதேசி விண்ணகர்
ஆழ்வார் கோயில் திருமண்டபமும்
திருக்கதவும் கிட்டேன், மலைமண்டலம்
துய மகோதையர் பட்டினத்து
ஈராயிரான சிறியனான ž குலசேகர
நம்பியேன்
"


(Epigraphia Indica. Vol. 1-7; P.197) என்பது கல்வெட்டு வாசகம். புக்கம்-என்ற அரிமர்த்தனப் புரத்தில் 'நானாதேசி'கனாகிய வணிகர்ன் குலசேகர நம்பி, விண்ணகர் ஆழ்வார் கோயில் கட்டினான் என்றும், அவன் சேர நாட்டிலுள்ள மகோதையர் பட்டினத்தைச் சேர்ந்தவன் என்றும் தெரியவருகிறது. சைவ, வைணவ பக்தி இயக்கத்தை வெளிநாடுகளுக்கும் தமிழர்கள் கொண்டு சென்றதை இதன் மூலம் உணர முடிகிறது. 

தமிழக பண்பாட்டுத் தொடர்பு 

பல்வர்காலத்தில் தமிழக வைணவம் மியன்மாருக்குச் சென்றது. புத்தம் எப்படி தமிழகத்திலிருந்து சென்றதோ, அதுபோலவே வைதீகமதமும் சென்றது என்பதற்கு அதிகளவு ஆதாரங்கள் மியன்மார் அருங்காட்சிக் கூடத்தில் உள்ளது. இதுபோலவே சமஸ்கிருத மொழியும் பரப்பப்பட்டுள்ளது. அங்குள்ள கட்டடக்கலையின் சாயல் தென்னகத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. புத்தரின் சிற்பத்திலும் நம் கலையின் வீச்சை உணர்கிறோம்.

இரண்டாம் கட்டக் குடியேற்றம் :

1852-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் பர்மாவைக் கைப்பற்றியதும் இந்தியர்கள் அதிகளவில் இரங்கூனில் குடியேறினர். ஆங்கிலேயர் கீழைப் பர்மாவைக் கைப்பற்றியதும் அங்கும் சென்று குடியேறினர். சென்னை, வங்காளம் மாநிலங்களிலிருந்துதான் பெருமளவில் குடியேறினர். 1874-84 ஆண்டுகளுக்கிடையே 83,197 பேர் சென்றனர். 1850-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே மொய்மீன் பகுதியில் குடியேறியவர்கள் தமிழகத்து செட்டியார்கள். 1913-ஆம் ஆண்டு முதல் 1929 வரை 45 இலட்சம் இந்தியர்கள் பர்மாவிற்குச் சென்றனர். இவர்களில் 60 விழுக்காட்டிற்கு மேல் தமிழர்கள் இருந்தனர். இரங்கூன் இந்திய நகரமாகவே மாறிவிட்டது. 1901-ஆம் ஆண்டு இரங்கூனில் மொத்த மக்கள் தொகையில் 48 விழுக்காடு இந்தியர்கள் இருந்துள்ளனர். 1931-இல் 52 விழுக்காடாக இருந்தது. 1937-ஆம் ஆண்டு பர்மா இந்தியாவிலிருந்து பிரிந்தது. மற்றும் இரண்டாம் உலகப் போரின் காரணமாகவும் பர்மாவிற்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கியது.

1938-ஆம் ஆண்டு இந்தியர்களுக்கு எதிரான கலகம் தோன்றியது. ஜப்பானியர் படையெடுப்பின் போது 5 இலட்சம் இந்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். 1948-ஆம் ஆண்டு பர்மா குடி மக்களாக அங்கீகரித்த தமிழரின் எண்ணிக்கை 10,000 மட்டுமே. 

1962-66-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் எல்லாக் கடைகளும் தேசிய மயமாக்கப்பட்டன. மண்ணின் மைந்தர்களுக்கே வேலை வாய்ப்பு என்ற தேசிய கொள்கை வந்தபோது பாதிப்படைந்த தமிழர் எண்ணிக்கை 62,412 பேர். இவர்கள் தமிழகம் வந்தனர். 1974-ஆம் ஆண்டு சட்டமும் 1982-ஆம் ஆண்டுச் சட்டமும் மண்ணின் மைந்தரல்லாதவர் முக்கிய பதவிகள் வகிக்க முடியாது எனக் கூறிவிட்டது. இதனால் அல்லல் உற்றவர்கள் ஏராளம். 

தமிழரின் இன்றைய நிலை : 

இன்று மியன்மாரில் 2,50,000 தமிழர்கள் வாழ்கின்றனர் என்று ஞானசூரியன் தெரிவிக்கிறார். இன்று மியன்மாரில் இருக்கும் 4 இலட்சம் இந்தியர்களில் 2 இலட்சம் பேர் நாடற்றவர்களாக இருக்கின்றனர். ஒரு இலட்சம் பேர் மியன்மார் நாட்டுக் குடிமகன்களாக இருக்கின்றனர். 1 இலட்சம் பேர் அனுமதி žட்டு பெற்று (Resident permit) வாழ்கின்றனர் என்று 17-9-1988 இந்து நாளிதழ் தெரிவிக்கிறது.

தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இரங்கூன் மத்தியப் பகுதி, கிழக்குப் பகுதி, வடக்கு, மத்திய பகுதிகள். இலாமூடா, தட்டாகலே கம்மாகச்சி, தட்டோன், கம்பை, கலாபஸ்தி, இன்சின், மினிக் கோன், தெ அவுக்கலப்பா, தாம்புவே, தல்லா, கீழந்தான், கம்மாயுட், தீங்காஞ்சூன், சூரியம்-டாம்பின்குயின், மண்டலை, மோல்மின், பாகான். பொதுவாக இந்தியர்கள் இரங்கூன், அராகன், ஐராவதி ஆற்றங்கரையோரம், தென்னாசரீம், மாக்னே முதலிய இடங்களில் வாழ்கின்றனர். 


சமயம் :

மயன்மரில் உள்ள பழைய கோயில்கள் சித்தி விநாயகர் கோயில் (1860); காளிகோயில் (1860); தாட்டானில் உள்ள தண்டபாணிக் கோயில் (1888); இரங்கூன் மகாமாரியம்மன் கோயில் (1903); வரதராச பெருமாள் கோயில் (1927). 1933 வரை 62 ஆலயங்கள் பர்மா செட்டியார்கள் பேராதரவுடன் கட்டப்பட்டன. மோல் மீனில் உள்ள வேல்முருகன் கோயில் மலையில் உள்ளது. இதுவே பர்மாவில் உள்ள பெரிய இந்துக் கோயிலாகும். தமிழ் கத்தோலிக்கர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தனித்தனிக் கோயில்களுண்டு. பர்மாவில் தமிழ்க் கத்தோலிக்கர் ஆலய நூற்றாண்டு விழா (1877-1977) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 1946-க்குப்பின் கத்தோலிக்க சமயத் தலைவர்களாக தமிழர்களே உள்ளனர்.

அகில பர்மா இந்து மத்திய வாரியத்தின் கீழ் 75 கோயில்களும், கழகங்களும் சேர்ந்துள்ளன. இவ்வாரியம் ஐந்து மாநாடுகளை நடத்தியுள்ளது. வெள்ளி விழா மலரை ஆங்கிலத்தில் 1978-ஆம் ஆண்டு வெளியிட்டது. தமிழர் நடத்தும் விழாக்களில் (தைபூசம்) பர்மியரும் கலந்து கொள்வார்களாம். தீமிதி, தேரோட்டத்தில் ஏராளமாக கலந்து கொள்வார்கள் என்று பலரும் தெரிவிக்கின்றனர். பொங்கலும், தீபாவளியும் கொண்டாடப்படுகின்றன. 


உடை :

தமிழர்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் வேட்டி, துண்டு, சட்டையுடன் காட்சியளிப்பார்கள். மற்ற இடங்களில் பர்மியரைப் போலவே வாழ்கின்றனர். 
உணவு : 

நெல் சோறே பெரும் உணவு. இட்லி, புட்டு, தோசை வடை எல்லாம் தமிழகம் போலவே இங்கும் உண்டு. 

தகவல் தொடர்பு சாதனங்கள் :

1962-ஆம் ஆண்டிற்குப்பிறகு வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் தமிழர்களுக்கு இடம் இல்லை. செய்தித்தாள், புத்தக வெளியீடு மட்டும்தான் தமிழரின் தகவல் தொடர்பு சாதனமாகும். 1936-இல் 'லோகமான்யா' என்ற இதழ் புதன் கிழமை தோறும் வெளிவந்தது. இவ்விதழைப் பவானி நடேன் ஆசிரியராக இருந்து வெளியிட்டிருக்கிறார். 1931க்கு முன் 'இஸ்லாம் அலின்' என்ற ஏட்டை தமிழறிஞர் பா. தாவுத்சா நடத்தியிருக்கிறார். 'சாந்தி' எனும் நாளிதழை எம்.கே. இபுராகிம் நடத்தினார். இவ்வேடு 1952-ஆம் ஆண்டு வரை வெளிவந்தது. பின்னர் இவரே 'தொண்டன்' என்ற நாளேட்டையும் நடத்தினார். இது 40 ஆண்டு காலம் வெளி வந்திருக்கிறது. 1981-இல் இவர் காலமான பின் 'தொண்டன் நினைவு மலர்' 1982-இல் பாதி தமிழிலும், பாதி பர்மிய மொழியிலும் வெளிவந்தது. இவை தவிர சத்திய சோதி, தமிழ் உள்ளம் ஆகிய இதழ்களும் வெளிவந்தன. சாமிநாத சர்மா 'ஜோதி' என்ற இதழை பர்மாவில் நடத்திவிட்டு தமிழகம் திரும்பினார்.
தமிழ் மொழியின் நிலை 

பிரஞ்சு குடியேற்ற நாடுகளில் ஏற்பட்டது போல மொழியை இழந்த நிலை இங்கு இல்லை. தமிழகத்துடன் விடாத தொடர்பு இருப்பதே இதற்குக் காரணம். 1877-இல் விக்டோரியா பேரரசிக்குத் தமிழில் வாழ்த்துப்பாவை பாடியவர் இராமசாமிப்புலவர். இரண்டாம் பதிப்பாக அதை 1877-இல் வெளியிட்டிருக்கிறார்.

பர்மா-ஆங்கிலம்-தமிழ்-இந்தி அகராதியை சோசப் என்பவர் எழுதி வெளியிட்டிருக்கிறார். எம்.என். நாகரத்தினம் 'அறங்காவலன்' (1983) ஏட்டில் புத்தரின் 'தம்மபத'த்தை மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறார். பாலிமொழியிலிருக்கும் சுலோகங்களின் விரிவுரையும் வெளிவருகிறது. இவ்வேடு அகிலபர்மா இந்து மத்திய சபையால் வெளியிடப்படுகிறது.

கம்பை நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் நடத்தும் கல்வி வாரியம் 1964-இல் திருக்குறளை பர்மிய மொழியில் வெளியிட்டது. இதைப் பர்மிய அறிஞர் ஊர்மியோ தாண்ட் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்தார். தட்டான் திருக்குறள் இயக்கம், திருக்குறளைப் பரப்புகிறது. தட்டானில் வள்ளுவர் கோட்டம் பெரிய அளவில் உருவாகி வருகிறது.

1908-இல் 'மானிட மர்ம சாஸ்திரம்' என்ற ஆயிரம் பக்க நூல், அறிஞர் எஸ். சாமிவேல் அவர்களால் எழுதப்பட்டு ரங்கூன் தமிழ் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது. பத்தாண்டுக்குப் பின் இரண்டாம் பதிப்பு கண்டது. மதுரைப்பிள்ளை, இராமச்சந்திர புலவர் போன்ற பெரும் பண்டிதர்கள் இங்கு வாழ்ந்தனர் என்கிறார் வீரப்பனார். இன்றுள்ள எழுத்தாளர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்: பூ.செ.புதியணன் ஆவார். இவரை ஆசிரியராகக் கொண்ட இலக்கிய ஏடு-காலாண்டிதழாக 1981-முதல் வெளிவருகிறது. 'தாயும் தாய்மையும்' என்ற நூலை 1981-இல் இவர் வெளியிட்டார். இது பர்மிய ஆசிரியர் சிட்சன்வின் எழுதிய நூலின் தமிழாக்கமாகும். மேலும் தமிழ்-பர்மிய அகராதியை தொகுத்து வருகிறார். அண்ணா நூல் வெளியீட்ட கத்தை நடத்தி வருகிறார்.


கல்வி

1898-99-ஆம் ஆண்டுகளில் இந்தியர்களுக்கு என்று 45 பள்ளிகள் இருந்தன. பர்மா விடுதலை பெற்றபின்பு பர்மிய மொழி ஆட்சி மொழியானதால் தமிழ்க் கல்வி புறக்கணிக்கப்பட்டது. பர்மிய மொழியும், துணை மொழியாக ஆங்கிலமுமே கற்று கொடுக்கப்படுகின்றன. அயல் நாட்டினரின் கல்வி, பண்பாடு நடவடிக்கைகளுக்கு 1972-ஆம் ஆண்டு தடையாணை விதிக்கப் பட்டது. சர்வாதிகாரி நிவினின் தேசியமயக் கொள்கையால் தமிழ்க் கல்வி பறிபோனது. பர்மியப் பள்ளிகளில் தமிழ் வகுப்பு இல்லை என்றாலும், சில தமிழ்க் கோயில்களில் மாலை, இரவு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பேகான் கோயிலிலும், கமாயூட் மாரியம்மன் கோயில், மினிக் கோன் சுப்பிரமணியர் ஆலயம் முதலியவை தமிழ்ப்பணி ஆற்றுகின்றன. கோயில்களும், கழகங்களும் ஞாயிறுதோறும் தமிழைக் கற்பிக்கின்றன. இக் கோயில் பள்ளிகளில் பர்மாவில் வெளியிடப்படும் பாலர் நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பி. சுப்பிரமணியன், மா. சந்திரன் என்பவர்கள் 'அண்ணா அரிச்சுவடி' எனும் பாலர் பாடநூலை 1981 இல் வெளியிட்டனர். 'கலைமகள் அரிச்சுவடி நூலை' பாலர் பள்ளிக்காக வேறுறொருவர் வெளியிட்டுள்ளார். ஒளவையார் ஆத்திச்சூடி வெளியிட்ட தமிழ்ப்புலவர் எம்.என். நாகரத்தினம் பாலர் பாடம் என்ற முதல் வகுப்பு, 2-ஆம் வகுப்பு நூல்களை 1980 முதல் வெளியிட்டு வருகிறார். வடபர்மாவில் தமிழ்ப் படிப்பு குறைந்து வருகிறது. தமிழ்ப் படிப்பிக்க எல்லா கோயில்களிலும் கட்டாயமாக்க பர்மிய இந்துச் சங்கம் முயன்று வருகிறது. 

இலக்கியம் :

பர்மிய தமிழர்கள் கவிதையில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் கதைகளையும் எழுதி வருகின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கோர்: கலைதாசன், திலகம், வசந்தி, பாணபட்டன், வாணவளவன், பாரதிநேசன், ரத்னா, கிருஷ்ணகுரு, தமிழ்மணி, பி.எஸ்.பி அப்துல் வகாப், கே.ஓ.எம் முகம்மது இஸ்மாயில், கார்முகில் கவிராயன், கவி கே.ஏ.மஜ“து, ஹாஜி. எஸ்.ஏ.ரகீம், எஸ்.எம்.யூனுஸ், தமிழ்பித்தன், சிறுத்தொண்டன் முதலியோர். 

அமைப்புக்கள் :

கீழ்கண்ட தமிழகம் சார்ந்த அரசியல், சமூக அமைப்புகள் உள்ளன.


1. திராவிட முன்னேற்றக் கழகம் 
2. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
3. பர்மா இந்துத் தமிழ் மன்றம்
4. பர்மா திராவிடக் கலாச்சாரக் கழகம்
5. பர்மா தமிழர் கலாச்சாரக் கழகம் (1977)
6. மக்கள் கவி பாரதியார் முன்னேற்றக்கலை மன்றம்
7. தமிழ் இளைஞர் பொது நலக்குழு
8. பர்மா தமிழ் இளைஞர் சங்கம் (1954)
9. பர்மா ஈழ மாணவர் பொது மன்றம் (1976)
10. அறிஞர் அண்ணா அறிவகம்
11. அறவழி அன்பர்கள் குழு
12. தமிழர் முன்னேற்றக் கழகம் 


ஆண்டு தோறும் அறிஞர் அண்ணா விழாவும், பொங்கலையும் தமிழர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். பெரியார் நூற்றாண்டு விழாவும், பாரதியார் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டன. பர்மாவில் வீரமாமுனிவர் விழா, திருவள்ளுவர் திருநாள், டாக்டர் அம்பேத்கார் விழா, பாரதி விழா போன்றவை இச்சங்கங்களால் கொண்டாடப்படுகின்றன.

சோழர்காலத்தில் சென்ற தமிழர்கள் சோலியா முஸ்லீம்களாக வாழ்ந்து வருகின்றனர். 



அவர்கள் அமைப்புகள் :

1. சோலியா முசுலீம் சங்கம் 
2. சோலியா முசுலீம் சன்மார்க்கச் சேவையகம்
3. சோலியா முசுலீம் மார்க்க நிதி ஸ்தாபனம்
4. பர்மா வாழ் வீர சோழன் முசுலீம் ஜமாஅத்.


தமிழர் சாதனை :

பர்மா நாட்டுத் தமிழர் தலைவர் சி. சத்தியானந்தன் ஆவார். இவர் தமிழர்களுக்காக பாடுபட்டவர்களில் முக்கியமானவர் ஆவார். கடைசியாக நடந்த தேர்தலின் போது சிறையிலிடப் பட்டு தேர்தலன்று காலமாகி விட்டார். பர்மாவில் முதன் முதல் இரங்கூனில் அமைக்கப்பட்ட முதல் தொழிற்சங்கம் 'தென்னிந்திய ஓட்டல் தொழிலாளர் சங்கம்' இதன் தலைவராகப் பணியாற்றியவர். டி.எஸ்.மணி. இது போலவே 1946-இல் அகில பர்மா தமிழர் சங்கம் அமைத்தனர். இதில் முக்கிய பங்காற்றியவரும் டி.எஸ். மணி ஆவார். இவரைப் போலவே பெரியவர் பாண்டியன், ஜோசப் போன்றவர்களும் தமிழர்களுக்காக உழைத்து வருகின்றனர்.தொடர்ந்து நடந்து வரும் இராணுவ ஆட்சியில் தமிழரின் கல்வி, வேலைவாய்ப்பு முதலியவை பாதிக்கப்பட்டுள்ளன. 
வணிகம்-தொழில் புரிவோர் விபரம் :
பர்மாவில் குடியேறிய தமிழர்களில் செட்டியார்களே அதிகளவு தொழிலில் ஈடுபட்டனர். வட்டித் தொழிலிலும், நெல் ஏற்றுமதியிலும் ஈடுபட்டனர். பர்மாவில் செட்டியார்களின் 1655 கடைகளில் 5 1/2 கோடி ஸ்டெர்லிங் பவுன் மூலதனத்துடன் இயங்கி வந்தன. அப்போது அவர்களிடம் மூன்றரை லட்சம் ஏக்கர் நெல் வயல்களும் வேறு உடைமைகளும் இருந்தன. 1930-க்கு முன் மலேயாவுக்கு அடுத்த நிலையில் 400 கிட்டங்கிகளில் வட்டித்தொழில் நில அடைமானம், ஆலை நிர்வாகம், முதலிய தொழில்களில் முதலீடு செய்தனர். 1105 கிட்டங்கிகளில் கிடைத்த 75 கோடி ரூபாயில் பர்மியர்கள் கடனாக பெற்றது 35 கோடி; தமிழர்கள் வாங்கியது 40 கோடி ரூபாய்; 1929-30 இல் 5,70,000 ஏக்கர் கீழ் பர்மாவில் இவர்களுக்கு சொந்தமாகியது. இது 1938 இல் 24,68,000 ஏக்கராக உயர்ந்தது. இதுவே 30.12.1947 இல் 50 இலட்சம் ஏக்கராக உயர்ந்து விட்டது. "செட்டிநாடு பாங்" என்ற பெரிய அமைப்பையே தமிழர்கள் இயக்கினார்கள். 1938-க்குப் பிறகு எல்லாம் சரிவை நோக்கி சென்றது 1938-ஆம் ஆண்டு இந்தியர்களுக்கு எதிராக கலகம் வெடித்ததும் இரண்டாம் உலகப்போரின் போக்கும் இதற்குக் காரணமாக அமைந்தன. 1950க்குப் பிறகு அரசு அலுவலர்கள் சிறுகடை வியாபாரிகள், நெல் விவசாயிகள், மரம் அறுப்போர், தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் என்றே பெரும்பாலான தமிழர் வாழ்கின்றனர். தற்போது தட்டோன் பகுதியில் நெல் வயல் உரிமையாளராக பலர் உள்ளனர். அவர்களில் நெ.மாரிமுத்துவும் ஒருவர். 

தொகுப்பு : ப.திருநாவுக்கரசு.













No comments:

Post a Comment