Friday 21 July 2017

BURMA TAMILS பர்மாவில் அகதிகளாக அழைத்து


BURMA TAMILS பர்மாவில் அகதிகளாக அழைத்து




வியாசர்பாடியின் மையத்தில் இருக்கும் சாஸ்திரி நகர், பி.வி.காலனி, இந்திரா காந்தி நகர் பகுதிகளில் நுழைந்தால் பர்மாவுக்குள் நுழைந்த உணர்வு வருகிறது. லுங்கியை சட்டைக்கு மேலே முடிச்சிட்டுக் கொண்டு வியாபாரம் செய்யும் ஆண்கள்... கம்மே-யேங்கி (பர்மாவின் பாரம்பரிய உடை) உடுத்திய பெண்கள்... இரண்டு கடைகளுக்கு ஒரு அத்தோ கடை. தெருவுக்கு நான்கு மோலசம் (பர்மாவின் பாரம்பரிய பானம்) ஜூஸ் கடை. 
அப்பெ, 
அம்மே, 
அட்டோ, 
மம்மா, 
அக்கோ என மொழியிலும் பர்மிய வாசனை. பர்மா உணவுகள்
வியாசர்பாடியின் இயல்போடு ஒட்டாமல் தனித்து வாழும் இந்த மக்கள், 1750-களில் பிழைப்புக்காக பர்மா சென்று அங்கே வேரூன்றி வாழ்ந்த தமிழர்களின் சந்ததிகள். 

1964-களில் பர்மாவில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக அழைத்து வரப்பட்டவர்கள்.
 50 ஆண்டுகளில் இம்மக்களின் வாழ்க்கை பெரும் மாற்றத்தை எட்டியிருக்கிறது. அரசு அதிகாரிகளாக, தொழிலதிபர்களாக, தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரி களாக பெரும் உயரத்தைத் தொட்டிருக்கிறார்கள். 

19-ம் நூற்றாண்டில், எந்தக் காலத்திலும் சந்தித்திராத கொடூரமான 12 பஞ்சங்களை தமிழகம் சந்தித்தது. குறிப்பாக, 1756-ம் வருடத்தில் ஏற்பட்ட ஒரு பஞ்சம், பல லட்சம் மக்களைக் காவு வாங்கியது. இந்தப் பஞ்சத்தை `பஞ்சங்களின் தாய்' என்று நாட்டுப்புற பாடல்கள் பாடுகின்றன. பஞ்சம் ஒரு பக்கம், அதன் காரணமாக ஏற்பட்ட கொடூர நோய்கள் இன்னொரு பக்கம், மக்கள் பரிதவித்துப் போனார்கள். சிலர், இந்த கொடூரத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல், மொரீசியஸ், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மேற்கிந்தியத் தீவுகள் என பல நாடுகளுக்குப் பிழைப்பு தேடி இடம்பெயர்ந்தார்கள். 

தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், வட ஆற்காடு, தென் ஆற்காடு, மதுரை, திருநெல்வேலி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமா னோர் பர்மாவுக்குப் பயணமானார்கள். 

`கூலித் தமிழர்' என்ற பதிவோடு, பாய்மரக் கப்பல்களில் அங்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள், ஒரு கட்டத்தில் பர்மாவின் பொருளாதாரத்தையே தீர்மானிக்கும் சக்திகளாக மாறியது வரலாறு. 
“1935 வரைக்கும் பர்மா, பிரிட்டிஷ் இந்தியாவோட ஒரு அங்கமாத்தான் இருந்துச்சு. அதுக்குப் பிறகு நிர்வாக வசதிக்காக வெள்ளைக்காரங்க அதை தனி நாடா பிரிச்சாங்க. அப்போ பர்மாவில நெல் விவசாயம் பெரிசா இல்லை. தங்கம், வைரம், கோமேத கம்னு நிறைய இயற்கை வளங்கள் இருக்கும். 

கடல் தொழில் நடக்கும். இங்கிருந்து போன நம்ம மக்கள், வனப்பகுதிகள்ல தங்கி, காடுகளை அழிச்சு, நிலத்தைச் சமன்படுத்தி விவசாயம் செய்ய ஆரம்பிச்சாங்க. பர்மாவில அற்புதமான தட்பவெப்பசூழல் உண்டு. சித்திரை 15-ல மழை ஆரம்பிச்சா ஐப்பசி வரைக்கும் சீரா பெய்யும். ஆடி, ஆவணி, புரட்டாசியில கடுமையான மழை இருக்கும். நம்ம பிரம்மபுத்திராவுல இருந்து பிரிஞ்சு பர்மாவுக்குள்ள ஓடுற ஐராவதி நதி, சால்வின் நதி, சிண்டுவின் நதின்னு மூணு வற்றாத நதிகளும் உண்டு. அதனால விவசாயம் ரொம்ப செழிப்பா நடந்துச்சு. 

`சவனே"-ன்னு ஒரு அரிசி... 
நம்ம பாசுமதி அரிசி மாதிரி அவ்வளவு ருசியா இருக்கும். 
பர்மா அகதிகள்
பர்மா மக்கள் நம்ம ஆட்கள்கிட்ட வேலை செய்வாங்க. அவ்வளவு மரியாதை கொடுப்பாங்க. யாராவது பெரிய மனுஷங்களைப் பாத்தா, தூரத்துலயே செருப்பைக் கழட்டிப் போட்டுட்டு, `அய்யாஜி'-ன்னு சொல்லி வணக்கமும் வைப்பாங்க. நம்ம மக்கள் 10 ஏக்கர், 20 ஏக்கர்னு நிலங்களை உருவாக்கிக்கிட்டு செழிப்பா வாழ்ந்தாங்க. 

படிப்படியா தமிழகத்துல இருந்த சொந்தக்காரங்களையும் அழைச்சுக்கிட்டாங்க. ஆனா, அதெல்லாம் ஒரு கட்டத்துல முடிவுக்கு வந்திடுச்சு. யுத்தம், துவேஷம்ன்னு தமிழர்களைக் கண்டாலே அடிச்சு விரட்டுல நிலை வந்திடுச்சு. ஒரு கட்டத்துல எப்படிப் போனாங்களோ அப்படியே திரும்பி வர வேண்டியதாயிடுச்சு..."- ஆழ்ந்து யோசித்து யோசித்துப் பேசுகிறார் சாஸ்திரி நகரைச் சேர்ந்த லூர்துசாமி. 
பர்மா லூர்துசாமிலூர்துசாமியின் வேர் பரவிக்கிடப்பது ராமநாதபுரத்தில். தாத்தா காலத்தில் பர்மாவுக்குப் போன குடும்பம், லூர்துவின் 18 வயதில், போன வழியிலேயே திரும்பியிருக்கிறது. ஆனாலும் பர்மாவோடு கொண்டான்-கொடுத்தான் தொடர்பு இன்னும் இருக்கிறது. பர்மாவில் இருந்துதான் மகனுக்கு பெண் எடுத்திருக்கிறார். 

பர்மா, தமிழ்நாட்டுக்கு நேர் கிழக்காக 1000 கடல் மைல் தொலைவில் இருக்கும் நாடு. இப்போது மியான்மர், மியாம்மா என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. பிரிட்டிஷாரும், ஜப்பானியர்களும் போட்டி போட்டுக்கொண்டு இந்நாட்டை துவம்சம் செய்தார்கள். 

பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து தங்களை மீட்கும் மீட்பர்களாக ஜப்பானை நம்பினார்கள் பர்மிய சுதந்திரப் போராளிகள். பர்மாவுக்குள் நுழைந்த ஜப்பானிய ராணுவம் பிரிட்டிஷ் ராணுவ முகாம்களை அழிக்கிறோம் என்ற பெயரில் பர்மாவை அங்குலம் அங்குலமாக அழித்தது. இதில் மாண்டுபோனவர்களில் பெரும்பாலானோர், பர்மாவை மீட்டுருவாக்கம் செய்ய உழைத்துக் களைத்த தமிழர்கள். 


“ஜப்பான்காரங்களுக்கும் பிரிட்டிஷ்காரங்களுக்கும் நடுவில பர்மா மாட்டிக்கிச்சு. 1941-42ல பிரச்னை உச்சமாயிடுச்சு.. பர்மா மக்கள் மட்டுமில்லாம பிழைக்கப்போன மக்களும் பெரிய இன்னலுக்கு ஆளானாங்க. குறிப்பா ஜப்பான்காரங்க ரொம்பவே கொடுமைப்ப டுத்தினாங்க. சரியா வணக்கம் சொல்லலன்னாக் கூட அடிப்பா ங்க. எப்போ யார் தலையில குண்டு விழுமோனு ஒரே பயமா கிடந்துச்சு.. இன்னொரு பக்கம் பர்மிய இளைஞர்கள் நம்ம ஆட்களைக் குறிவச்சு பிரச்னை பண்ணத் தொடங்கிட்டாங்க.

 வர்த்தகம், விவசாயம்ன்னு தமிழர்கள் செழிப்பா வாழ்ந்தது, உள்ளூர் இளைஞர்கள் கண்ணை உறுத்திடுச்சு. பயங்கர ஆயுதங்களோட ஊருக்குள்ள புகுந்து மக்களை தாக்கி, கிடைச்சதை எல்லாம் பறிக்கத் தொடங்கிட்டாங்க. ஏகப்பட்ட உயிர்ச்சேதம். ஆடு, மாடு, நிலம்னு இருந்த சொத்துக்களை எல்லாம் அப்படி அப்படியே விட்டுட்டு, உயிர் பிழைச்சாப் போதும்னு நகரங்களுக்கு ஓடுனாங்க நம்ம மக்கள். அங்கே போய் சிறு சிறு கடைகளைத் தொடங்கினாங்க. 
பர்மா தமிழர்கள்
1947, ஜனவரி 4ம் தேதி பர்மாவுக்கு சுதந்திரம் கிடைச்சுச்சு. எல்லாப் பிரச்னைகளையும் கடந்து நம் மக்கள் ஓரளவு வளமா மாறத் தொடங்கின தருணத்துல, அத்தனை வணிக நிறுவனங்களையும் அரசு நாட்டுடைமை ஆக்கிடுச்சு. கடை நடத்தின மக்கள் எல்லாம் தெருவுக்கு வந்துட்டாங்க. தலைக்கு இவ்வளவுனு வரிவேற போட ஆரம்பிச்சாங்க. 

பள்ளிக்கூடங்கள்ல பர்மாவைத் தவிர வேறெந்த மொழியும் கத்துக்கொடுக்கக்கூடாதுன்னு அறிவிச்சுட்டாங்க. இனிமே இங்கிருந்தா, உயிரும் மிஞ்சாதுன்னு உணர்ந்தபிறகு, மக்கள் இந்திய தூதரத்துக்கு முன்னாடி போராட்டம் பண்ண ஆரம்பிச்சாங்க. இங்கிருந்து ஒரு மத்திய அமைச்சர் பர்மாவுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதுக்கப்புறம் இந்திய அரசு கப்பலுக்கு ஏற்பாடு பண்ணுச்சு... தலைமுறை, தலைமுறையா உழைச்சுச் சேர்த்த அத்தனை உடைமைகளையும் விட்டுட்டு உயிரை மட்டும் எடுத்துக்கிட்டு திரும்பி வந்தோம்..." என்கிறார் வி.கே.செல்லம். பர்மா தமிழர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர். 

பர்மா வி.கே.செல்லம்
வி.கே.செல்லத்துக்கும் ராமநாதபுரம் தான் பூர்வீகம். தாத்தா காலத்தில் பர்மாவுக்குப் போன குடும்பம். பர்மாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இளைஞர்கள் பிரிவான பாலசேனாவில் இருந்தவர். சுதந்திரத்துக்குப் பிறகு பர்மிய ராணுவத்திலும் டிரைவராக வேலை செய்தார். எல்லா மட்டத்திலும் ஊடுருவித் தகித்த பர்மியர்-இந்தியர் பாகுபாட்டைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இருந்த வீடு, நடத்திய கடை என எல்லாவற்றையும் விட்டுவிட்டு குடும்பத்தோடு தாயகம் திரும்பி விட்டார்.  
2 சவரன் தங்கம், 15 ரூபாய் பணம்... இது மட்டும்தான் கொண்டு வர முடியும். மக்கள் வேண்டி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாலியை மட்டும் பர்மிய அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு கப்பலில் 1500 பேர் பயணித்தார்கள். ரங்கூனில் இருந்து சென்னைக்கு தொடர்ச்சியாக மூன்று அகதிக் கப்பல்கள் இயக்கப்பட்டன. 

“அவ்வளவு சுலபமா மக்கள் அகதிக் கப்பல்ல ஏற முடியலே. ஏகப்பட்ட கெடுபிடிகள். `அந்த ஆவணம் வேணும், இந்த ஆவணம் வேணும்'ன்னு அலைக்கழிச்சுட்டாங்க. 5 நாள் பயணம் பண்ணி சென்னையில வந்து இறங்குனோம். இங்கே பக்தவச்சலம், முதல் முதல் மந்திரி. `எல்லாத்தையும் விட்டுட்டு வர்றோமே, எப்படி பிழைக்கப்போ றோம்'ன்னு ஒரு பயம் இருந்துச்சு. 

மக்கள் வர, வர பல நகரங்களுக்கு முகாம்கள் போட்டு அனுப்பி வச்சாங்க. நாங்கள்லாம் கும்மிடிப்பூண்டி முகாமுக்குப் போனோம். ரேஷன் கொடுத்தாங்க. தாய்லாந்து அரிசின்னு ஒன்னு உண்டு. இங்கே சமைச்சா, பெரம்பூர்ல நாறும். அதைத்தான் சமைச்சுச் சாப்பிட்டோம். ஆனாலும் தமிழ்நாடு அரசாங்கம் எங்களை கைவிடலே. இங்கிருக்கிற நூற்பாலையில வேலை கொடுத்தாங்க. கண்டக்டர் வேலை, போலீஸ் வேலை எல்லாத்திலயும் முன்னுரிமை கொடுத்தாங்க. வாழ்க்கை மேல நம்பிக்கை இழந்து துவண்டு கிடந்த மக்களுக்கு அதுக்கப்பு றம்தான் நம்பிக்கை வந்துச்சு..." என்கிறார் லூர்துசாமி.

தமிழகத்துக்கு வந்து, இங்கே வாழ்வாதாரம் கிடைக்காமல், `செத்தாலும் பர்மாவில் சாவோம்' என்ற எண்ணத்தில் பர்மாவுக்குப் பயணப்பட்டவர்களும் உண்டு. மலைகளையும் விளிம்புகளையும் நடந்தே கடந்து, மணிப்பூர் எல்லை வரை சென்று, பர்மாவுக்குள் நுழைய முடியாமல் வனத்துக்குள்ளேயே தங்கிவிட்டார்கள் பலர். அப்படித் தங்கியவர்களின் சந்ததிகள் தமிழ் அடையாளங்களோடு இன்னும் அங்கு வசித்து வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் பூர்வீகத் தொடர்பை விடவில்லை. வியாசர்பாடி பர்மா மக்கள் மத்தியில் பெண் கொடுத்தும் எடுத்தும் உறவு வளர்க்கிறார்கள்.   
பர்மா மோலசம் ஜூஸ்
பி.வி.காலனி, சாஸ்திரி நகரெல்லாம் அந்தக்காலத்தில் ஏரிகள். பெரம்பூர் நூற்பாலையில் வேலை செய்த பர்மாத் தமிழர்கள், சங்கம் அமைத்து, இந்தக் குடியிருப்பை உருவாக்கிக் கொண்டார்கள். இன்று பழைய அடையாளங்கள் ஏதும் இல்லை. பெரு நகராக வளர்ந்தி ருக்கிறது. ஆனால், எல்லாவற்றிலும் பர்மாக்கலப்பு. 
“ஏரியாவுல மட்டுமில்லை. எங்க வாழ்க்கையிலயும் சரிபாதிக்கு பர்மாதான் இருக்கு. பெரும்பாலான குடும்பங்கள்ல பர்மிய மொழி யிலதான் பேசிக்கிறாங்க. பர்மாவுல பெரும்பாலும் எல்லோரும் மனத்தடை இல்லாம ஒத்துமையா இருப்போம். பிழைக்கப்போன இடத்துல ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசை பண்ணிக்கிறது வழக்கம்தானே. இங்கேயும் அது தொடருது. அந்த ஒற்றுமைதான் இன்னைக்கு வரைக்கும் எங்களுக்குப் பாதுகாப்பா இருக்கு. 

பர்மாவுல பெரும்பாலும் கூட்டுக் குடும்பம்தான். தாத்தா, பாட்டியில ஆரம்பிச்சு, மகள், மருமகன் வரைக்கும் ஒரே குடும்பமா இருப்பாங்க. ஐம்பது வருஷங்கள் கழிச்சு இன்னைக்கும் அந்த மரபை நாங்க விடலே. எந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சாலும் வீடு நிறைய மனுஷங்க இருப்பாங்க. ஏன்... என் குடும்பத்திலேயே 52 பேரு. பெரிய அண்டாவை வச்சுத்தான் சமைக்கிறோம். எப்பப் பாத்தாலும் அடுப்பு எரிஞ்சுக்கிட்டுத்தான் இருக்கும். மகனுங்க, மருமக்க, மாப்பிள்ளைக ள்னு வீடே கலகலனு கிடக்கும். பர்மாவுல எங்களுக்கெல்லாம் கல்வி கிடைக்கலே. இங்கே எங்க பிள்ளைகளை நல்லாப் படிக்க வச்சோம். 

எனக்கு 8 பிள்ளைங்க. அதுல 7 பேரு அரசாங்க வேலையிலதான் இருக்காங்க. ஆண்டவன் புண்ணியத்துலயும், அரசாங்கத்தோட கருணையிலயும் பர்மாவுல இருந்து திரும்பி வந்த யாரும் இங்கே கஷ்டப்படலை. நல்லாத்தான் இருக்கோம். அதேநேரம், உடையில இருந்து உணவு வரைக்கும் பர்மா எங்களை விட்டு விலகலே. இப்பவும் இங்கேயிருந்து பர்மாவுக்குப் போறதும், அங்கேயிருந்து இங்கே வர்றதும், பர்மாவுல பெண் எடுக்கிறதும், கொடுக்கிறதும் சர்வசாதாரணமா நடக்குது..." என்கிறார் வி.கே.செல்லம்.

பர்மாவில் காதல் திருமணம் முழுமையாக அங்கீகரிக்கப்படும். சாதி, மதத் தடைகள் எதுவும் இல்லை. வி.கே.செல்லம் உள்பட பெரும்பா லான தமிழர்கள் அங்கு காதல் திருமணம் செய்தவர்களே! தமிழ்ப் பெண்கள் மட்டுமின்றி, பர்மியப் பெண்களைக் காதலி த்துத் திருமணம் முடித்தவர்களும் இருக்கிறார்கள். 

அப்படியான பலர் இப்போது இப்பகுதியில் வசிக்கிறார்கள். ராமநாதபுரத்தைப் பூர்வீகமா கக் கொண்ட மாணிக்கம் திருமணம் செய்தது பர்மாக்காரரான செவஸ்திமாவை. நெருக்கடிக் காலத்தில் மாமியார் மேரியையும் அழைத்துக்கொண்டு தமிழகம் வந்திரு க்கிறார். இப்போது அனைவரும் இணைந்து சர்மா நகரில்
 'அத்தோ' கடை நடத்துகிறார்கள். 

No comments:

Post a Comment