M.D.PARTHASARATHY ,MUSIC DIRECTOR
BORN 1910 SEPTEMBER 21
எம். டி. பார்த்தசாரதி (M.D. Parthasarathy) (பிறப்பு: செப்டம்பர் 21, 1910 – ) கருநாடக இசைக் கலைஞரும், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளருமாவார். திரைப்படப் பாடகர், திரைப்பட நடிகர், நாடக நடிகர் எனும் பரிமாணங்களையும் கொண்டிருந்தவர்.
தஞ்சாவூர் மாவட்டம், வேதாந்தபுரம் இவர் பிறந்த ஊர். ரங்கசாமி-ஆண்டாள் பெற்றோர். இத்தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள். அவர்களில் நாலாவதாக 1934-இல் பிறந்தவர் ஆர்.பார்த்தசாரதி. இவரது ஆறாவது வயதிலேயே இவரது தந்தை காலமாகிவிட்டார்.
கணவர் இறந்தபின் ஆண்டாள் அம்மாள் 1940-இல் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அதோடு மட்டுமின்றி தன் துக்கத்தை மறக்க ஆர்.பார்த்தசாரதி-க்கு முறையாக சங்கீதம் சொல்லிக்கொடுத்தார். மற்றபடி ஒருவரிடமும் உதவியாளராகவோ, வாத்தியக் கலைஞராகவோ இருந்ததில்லை. தனது இசையறிவால் மட்டுமே இசையமைப்பாளராக வந்தவர் ஆர்.பார்த்தசாரதி.
பள்ளிப் படிப்பை சென்னை, புரசைவாக்கத்திலுள்ள முத்தையா செட்டியார் பள்ளியில் பயின்றார்.பள்ளிப் படிப்பின் போதே சிறந்த பாடகர் பரிசை வென்றவர். இவர் ஒரு பட்டதாரியுமாவார்.
நடிகர் கே.பாலாஜி, இதயம் பேசுகிறது ”மணியன்”, எழுத்தாளர்கள் சுந்தா, மா.ராமச்சந்திரன் [மா.ரா] ஆகியோரால் நடத்தப்பட்ட “வளர் பிறை” நாடக மன்றத்தில் முதன் முதலாக இசையமைப்பாளரானார்.
இவர் முதல் முதலாக இசையமைத்தது 1957-இல் ஸ்ரீராம், குமாரி தங்கம், பி.எஸ்.வீரப்பா நடித்து வெளியான “மகதல நாட்டு மேரி” என்ற தமிழ்த் திரைப்படத்தில் தான். இப்படத்தில் தான் எஸ்.ஜானகி முதன் முதலாக பாடி வெளி வந்த படம். பி.பி.ஸ்ரீநிவாஸுடன் இணைந்து பாடிய அந்த பாடல் கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரகை, எஸ்.வி.பொன்னுசாமி, கே.ராணி பாடிய கண்ணும் கண்ணும் ஒண்ணுக்கொண்ணு, எஸ்.வி.பொன்னுசாமி பாடிய கதை கேளுங்க,நல்ல கதை கேளுங்க, பி.சுசீலா பாடிய கண்ணாடி நான் ஒரு கண்ணாடி, பறந்து செல்லும் வெண் புறாவும் போன்ற பல பாடல்கள் வெற்றி பெற்றாலும் படம் சரியாக ஓடாததால் தொடர்ந்து இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் மொழி மாற்றுப் படங்கள் பலவற்றிற்கு இசையமைத்தார். வேதாவின் இசையில் உருவான பாடல்களைக் கொண்ட “வீராங்கனை” படத்தின் பின்னணி இசையை இவர் மேற்கொண்டார். அதேபோல் “வேலுத்தம்பி தளவாய்” என்ற மலையாளப் படத்தின் பாடல்களுக்கான இசையை தட்சிணாமூர்த்தி மேற்கொள்ள இவர் பின்னணி இசையை மேற்கொண்டார்.
1964-இல் சி.எல்.ஆனந்தன், பி.எஸ்.ரவிச்சந்திரன், நாகேஷ், ஆர்.எஸ்.மனோகர், கே.ஆர்.விஜயா, ராஜஸ்ரீ நடித்து வெளிவந்த “கல்யாண மண்டபம்” படத்திற்கு இசையமைத்தார். இதில் ரி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா பாடிய “நான் உன்னைத் தொடலாம் நீ என்னைத் தொடலாம், தென்றல் உன்னைத் தொடலாமா”, பி.பி.ஸ்ரீநிவாஸுடன் பி,சுசீலா பாடிய பூத்திருக்கும் விழியெடுத்து மாலை தொடுக்கவா, பி.சுசீலா பாடிய “பசும்புல் தரையில் பனி கொட்டும் இரவில்”, எஸ்.ஜானகி பாடிய “என் பிள்ளை முகம் தெரிகிறது” போன்ற பாடல்கள் பிரபலமடைந்தன.
1965-இல் எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி, எம்.ஆர்.ராதா நடித்த “அவன் பித்தனா” இவர் இசையமைத்தார். ரி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா பாடிய “இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்”, கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவக்குதடி”, ”ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன் ஆனால் உனக்கல்ல”, பி.சுசீலா பாடிய “மாப்பிள்ளை இந்த மாப்பிள்ளை”, எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ”ஆண்டவன் படைப்பிலே ரகசியம்” போன்ற பாடல்கள் மிகப் பிரபலமடைந்த போதும் படம் தோல்வியைத் தழுவியதால் இவரைத் தமிழ்த் திரையுலகம் வீணடித்துவிட்டது.
இவரது இசையமைப்பில் 1968-இல் வெளிவந்த “பால் மனம்” படத்தில் ரி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா பாடிய “நிலவுப்பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி”, ரி.எம்.சௌந்தரராஜன் பாடிய கன்னியொருத்தியிடம் எத்தனைக் கிளி” போன்ற பாடல்கள் பிரபலமாயின.
இவர் இறுதியாக இசையமைத்த படம் 1969-இல் வெளிவந்த “கல்யாண ஊர்வலம்”. இதில் சுசீலா பாடிய என்றன் உயிர்க் காதலன் கண்ணன்,கண்ணன், கே.ஜே.யேசுதாஸ் பாடிய “கூந்தலிலே நெய் தடவி”, சுசீலா பாடிய “ஊரெல்லாம் பாக்கு வைத்து”, ரி.எம்.சௌந்தரராஜன் பாடிய “ஆண்டவன் முகத்தப் பாக்கணும் நான் அவனிடம் ஒண்ணே ஒண்ணு கேக்கணும்” ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமடைந்தன.
12 வருடங்கள் இசைத்துறையில் நீடித்து பல நல்ல பாடல்களைக் கொடுத்தும் பல படங்கள் சரியாக ஓடாததால் இவரால் நீடிக்க முடியவில்லை. அதனால் 1970-இல் அமெரிக்காவிற்குச் சென்று அங்கு நியூயார்க்கில், குவீன்ஸ் என்ற இடத்தி குடியேறியதோடு அமெரிக்கக் குடிமகனாகவும் ஆகிவிட்டார்.
உதவி:- இலங்கை வானொலி, திரு.வாமனனின் திரை இசை அலைகள், விக்கிப்பீடியா
இசையாளர்
எம். டி. பார்த்தசாரதி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றவர். ‘தஞ்சாவூர் நால்வர்’ எனப்புகழ் பெற்றவர்களில் ஒருவரான பொன்னையா பிள்ளை, சங்கீத கலாநிதி டி. எஸ். சபேச ஐயர் ஆகியோர் அப்போது அங்கு ஆசிரியர்களாக இருந்தார்கள். 1930களின் ஆரம்பத்தில் பட்டம் பெற்று வெளியேறியதும் எம். டி. பார்த்தசாரதி சென்னை சென்றார். தமிழ்த் திரைப்படங்கள் அப்போது தான் “பேசும் படங்களாக” வெளிவரத் தொடங்கிய காலம். பாடக்கூடிய, இசை ஞானம் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் நிறைந்திருந்த காலம். புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு திரைப் படங்கள் வெளிவந்தன. மேடை நடிகர்களும், சங்கீத வித்துவான்களும் திரைப்படங்களில் நடிக்க வந்தார்கள். இசையில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த எம். டி. பார்த்தசாரதிக்கு திரைப்பட வாய்ப்புகள் இலகுவாகக் கிடைத்தன.
நடித்த திரைப்படங்கள்
சக்குபாய் (1934)
ஸ்ரீநிவாச கல்யாணம் (1934)
கருட கர்வபங்கம் (1936)
சேது பந்தனம் (1937)
ராஜபக்தி (1937)
ராஜதுரோகி (1938)
இசையமைத்த திரைப்படங்கள்
மதனகாமராஜன் (1941)
நந்தனார் (1942)
பக்த நாரதர் (1942)
அருந்ததி (1943)
தாசி அபரஞ்சி (1944)
கண்ணம்மா என் காதலி (1945)
துளசி ஜலந்தர் (1947)
ஞானசௌந்தரி (1948)
சக்ரதாரி (1948)
சந்திரலேகா (1948)
அபூர்வ சகோதரர்கள் (1949)
லட்சுமி (1953)
நம் குழந்தை (1955)
ஔவையார் (1953)
வானொலிப் பணி
எம். டி. பார்த்தசாரதி திருச்சி வானொலி நிலையத்தில் நிலையக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். வானொலி நாடகங்களில் அவரது பங்களிப்பு பாராட்டு பெற்றது. பின்னர், திரைப்படத்துறையிலிருந்து முற்றாக விலகியபின், அனைத்திந்திய வானொலியின் பெங்களூர் நிலையத்திலும் பணியாற்றினார்.
No comments:
Post a Comment