Tuesday 14 September 2021

ARABHU NATTU ALAGI 1961 SONGS

 


ARABHU NATTU ALAGI 1961 SONGS

Movie Name
Arabu Naattu Azhagi (1961) (அரபு நாட்டு அழகி)
Music
Vijaya Bhaskar
Year
1961
Singers
P. B. Srinivas, P. Susheela
Lyrics
Kuyilan

இணையில்லாத ஓர் மன்னன் மகள் நீ
துணையில்லாத ஓர் ஏழை மகன் நான்
உயர் விண்மீன் நீ இருள் மின்மினி நான்
நினைப்பதெல்லாம் அன்பொன்றுதானே..

மனக்கோட்டை தீர்ந்ததனால்
மறப்பாயா பேரன்பையே..ஹோய்....
மறப்பாயா பேரன்பையே

மறக்கும் நிலைதான் வருமோ
நிலைக் கொண்ட நின் பேரன்பையே ஹோய்..
நிலைக் கொண்ட நின் பேரன்பையே...

புவியாள் மன்னரின் பெண் மீதுள்ள பிரேமை
தவறென்று பகர்ந்தாரே பாரில்
புவியாள் மன்னரின் பெண் மீதுள்ள பிரேமை
தவறென்று பகர்ந்தாரே பாரில்

மையல் கொண்ட மாது மனத் துன்பம் தணிய
மறக்காது பாடும் தன் பேரை...
மறக்கும் நிலைதான் வருமோ
நிலைக் கொண்ட நின் பேரன்பையே ஹோய்..
நிலைக் கொண்ட நின் பேரன்பையே...


Movie Name
Arabu Naattu Azhagi (1961) (அரபு நாட்டு அழகி)
Music
Vijaya Bhaskar
Year
1961
Singers
A. M. Rajah, P. Susheela
Lyrics
Kuyilan

கண்ணீர் துளியால் என்றும் காதல்
சோலை மலரும் என்பதே நியதியா
அன்புக்கடிமை நெஞ்சம்
துன்பக் கடலாகிடும் என்பதே நியதியா
சோதனை கொடிதல்லவோ......

ஆசை இன்பத் தேனே உன்
நேசத்தைப் பெற்றேனே ஆறாது நெஞ்சமே
உள்ளம் தணலாக ஓயாது ஏங்கி சாக
உண்டாச்சே தனிமை உண்டாச்சே தனிமை
கசப்பான நிலைமை

நட்பைத் தேடுதல் பிழை
என்பதும் நியாயமோ இதுதான் நியதியா
அன்புக்கடிமை நெஞ்சம்
துன்பக் கடலாகிடும் என்பதே நியதியா
கண்ணீர் துளியால் என்றும் காதல்
சோலை மலரும் என்பதே நியதியா

நெஞ்சில் தைக்க வாளாய்
உன் வாழ்க்கை பாதை தன்னில்
நின்றேனே காதலா

நீங்காதே என் நெஞ்சில் தேன்பாகு என்று நீயே
நிற்கின்றாய் என்றுமே நிற்கின்றாய் என்றுமே
கற்கண்டே கன்னலே

காதல் கொண்டால் பழிப்பார் இந்த
உலகில் பொல்லார் என்பதே நியதியா
கண்ணீர் துளியால் என்றும் காதல்
சோலை மலரும் என்பதே நியதியா

அன்புக்கடிமை நெஞ்சம் துன்பக்
கடலாகிடும் என்பதே நியதியா
சோதனை கொடிதல்லவோ......



Movie Name
Arabu Naattu Azhagi (1961) (அரபு நாட்டு அழகி)
Music
Vijaya Bhaskar
Year
1961
Singers
A. M. Rajah, P. Susheela
Lyrics
Kuyilan

உன் அன்பை தேடுகின்றேன்
மாது எந்தன் மாறன் வா வா
என் உள்ள தாமரைத் செந்தேன்
சுவைக்க ராணி வா வா
வா வா வா வா வா வா வா வா....

எந்நாளும் இணைந்தே சென்றின்பம் காண்போம்
கண்ணாளனே எந்தன் காதல் இளராஜா
மன்னர் தன்னாசை கண்மணி நீயே
மையல்தான் கொண்டாயா சொன்ன சொல் மாறாதா
கண்ணே என் காதல் உயர் காதல் மறக்காது வாவா (உன்)

நம்முள்ளம் இன்றே ஒன்றாக கண்டு
மன்ற நல் மாருதம் இசைக்குது பண்ணே
ஒய்யார பெண்ணே இசை மேவும் மானே
அன்பூறும் வாழ்க்கை விருந்தளிப்பேனே
புது முல்லை இன்று புன்னகை பொங்கவே நீ ஆடி வாவா (உன்)

No comments:

Post a Comment