Friday 24 September 2021

DIGESTING TRACT FUNCTIONGS


உயிரணுவும், கழிவு நீக்கமும்



கழிவு நீக்கத் தத்துவத்தை இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.


செல்களில் உருவாகும் கழிவுகளை மூன்றாகப் பிரிக்கலாம்.


🔸

1. சாதாரணக் 

               கழிவுகள்


நம் உடலில் கழிவுகள் உருவாதல் என்பது உணவைச் செரிக்கும் போது உடலுக்குத் தேவையற்ற பொருட்கள் பிரித்தெடுக்கப்

படுவதுதான். சாதாரண நிலையில் உடலில் கழிவுகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இக்கழிவுகளை உடலே வெளியேற்றிக் கொள்கிறது. தினமும் 

வியர்வை மூலமும், சிறுநீர் மூலமும், மலம் மூலமும் இன்னும் பிற வழிகளிலும் இப்படியான சாதாரணக் கழிவுகள் வெளியேறுகின்றனஇப்படி தொந்தரவுகள் எதுவும் தராமல் வெளியேறும் கழிவுகள்  சாதாரணக் கழிவுகள் ஆகும்.


🔸

2. தேக்கமுற்ற 

                கழிவுகள்

சாதாரணக் கழிவுகளை உடல் இயல்பாக வெளியேற்றும். நாம் நம்முடைய இயற்கை விதிகளை 

(பசி, தாகம் தூக்கம்,...) 

மீறும் போது உடல் தன்னியல்பில் இருந்து சற்றே விலகுகிறது. எளிமையாக வெளியேறியிருக்க வேண்டிய கழிவு  வெளியேறாமல் தேங்குகிறது. 

இந்த கழிவுகள் தான் தேக்கமுற்ற கழிவுகள்.





🔸

இவற்றையும் 

உடல் தான் வெளியேற்றுகிறது. ஆனால், 

சாதாரணக் கழிவுகள் போல இயல்பாக வெளியேறாமல், 

பல வகையான தொந்தரவுகள் மூலம் வெளியேற்றப்

படுகிறது. 


🔸

தேக்கமுற்ற 

            கழிவுகள் வெளியேறும் 

            போது ஏற்படும் 

         இடர்களைத் தான் நாம்         

        நோய்கள் 


என்ற பெயரால் அழைக்கிறோம்.


🔸

3. இசாயனக் 

                கழிவுகள்.


தேக்கமுற்ற கழிவுகள் தொந்தரவுகளோடு வெளியேற்றப்

பட்டுக் கொண்டிருக்கும் போது நாம் இரண்டு தவறுகளைச் செய்கிறோம். 


🔸

ஒன்று 

கழிவு தேங்குவதற்குக் காரணமான இயற்கை விதி மீறல்களை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது. 


🔸

இரண்டு  கழிவுகள் வெளியேறு

வதற்காக 

உடலால் உருவாக்கப்பட்ட தொந்தரவுகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கான முயற்சிகள்.


🔸

இக்காரணங்களால் தேக்கமுற்ற கழிவுகள் மறுபடியும் செல்லினுள் தேங்குவது தான்  இரசாயனக் கழிவுகள்.


🔸

இராசாயனக் 

             கழிவுகள்


சாதாரணக் கழிவுகள் தேக்கமடைந்

-தவையாக மாறும் போதே அதன் தன்மை மோசமானதாக மாறுகிறது. எடுத்துக்காட்டாக, நாம் தினமும் 

மலம் கழிக்கிறோம். இது ஒரு அன்றாட பழக்கமாக இருக்கும் போது அன்றாடம் உருவாகும் மலம் உடனே வெளியேற்றப்

படுவதால் அதன் தன்மை சாதாரணமாக இருக்கும். ஆனால், நமக்கு திடீரென்று இரண்டு, மூன்று நாட்கள் மலம் போகவில்லை என்று வைத்துக் கொள்வோம். இப்படி ஏற்பட்ட மலச்சிக்கலுக்குப் பின்பு மூன்று நாட்களுக்குப் 

பிறகு மலம் வெளியேறினால் அதன் தன்மை எப்படி இருக்கும்? சாதாரணமாக வெளியேற்றும் மலத்திற்கும், தேங்கி பின்பு வெளியேறும் மலத்திற்கும் தன்மை வேறுபாடு இருக்குமல்லவா? தேங்கிய மலம் குறுக்கப்பட்ட தன்மையோடும், அதன் அமிலத்தன்மை 

மிக அதிகமாகவும், கடுமையான ஒட்டும் தன்மை மற்றும் துர்நாற்றம் போன்றவற்றோடும் இருக்கும். 

இது போலத்தான் சாதாரணமாக செல்லில் இருந்து வெளியேற வேண்டிய கழிவுகள் தேங்கி தேக்கமுற்ற கழிவுகளாக மாறுகிறது. 

இப்படி மோசமான தேக்கமுற்ற கழிவுகள் 

இரசாயனக் கழிவுகளாக மாறினால் 

செல் என்ன ஆகும் ?


🔸


சாதாரணக் கழிவுகளைப் போல, இவற்றை எளிதாக வெளியேற்றி

விட இயலாது. நுரையீரல் செல்களில் 

சளி என்ற சாதாரணக்கழிவு இருந்தால் இருமல் மூலம் வெளியேற்றலாம். ஆனால், ரசாயனக் கழிவை இவ்வாறு வெளியேற்றினால் நுரையீரலின் 

பிற பகுதிகள் பாதிக்கப்படும். கழிவு பயணிக்கும் ஒவ்வொரு பகுதியும் பாதிப்படையும், எனவே, 

நம்முடைய செல் இரசாயனக் கழிவை வெளியேற்ற 

புதிய உத்தியைக் கையாள்கிறது.


🔸

செல்லின் 

படத்தைப் பாருங்கள். அதில் சிறிய துகள்கள் போல செல் சுவரின் அருகில் 

இருப்பவை தான் லைசோ

           சோம்கள் இவை செல்களால் தேவைக்கேற்ப உருவாக்கப்

படுகின்றன.


🔸

லைசோ 

           சோம்கள் என்ற அழிக்கும் பொருட்கள்

நம்முடைய செல்களில் இரசாயனக் கழிவுகள் தேங்குகிற போதே, அது செல்லினில் உள்ள திரவத்தில் கலந்து விடாதவாறு ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்கிறது. 


🔸

நம் செல், 

ஏற்கனவே இரசாயனமாக இருக்கக்கூடிய இக்கழிவு 

செல் திரவத்தில் கலந்து விட்டால் இது செல்லை அழித்து விடும் அல்லவா ? எனவே கழிவுப் பொருளைச் சுற்றி ஒரு சவ்வு போன்ற அமைப்பை செல் ஏற்படுத்துகிறது. கழிவுகளின் இரசாயனத் தன்மை செல்லை பாதிக்காதவாறு இந்த சவ்வுப் 

                பொருள் பாதுகாக்கிறது. 

இது தற்காலிக ஏற்பாடுதான் ஏனென்றால் ஏற்கனவே கழிவுகள் உருவாகக் காரணமான நம்முடைய இயற்கைக்கு மாறான பழக்க வழக்கங்கள் தொடர்ந்து கொண்டிருந்தா

லோ, இரசாயன மருந்துகள் மூலம் கழிவுகளை உடலுக்குள் அமுக்க முயன்றாலோ, செல்களில் உள்ள இரசாயனக் கழிவுகள் பெருகலாம். அல்லது அதன் தன்மை இன்னும் மோசமாகலாம். எனவே இந்தச் சவ்வு அமைப்பை செல் தற்காலிகமாக ஏற்படுத்திக் கொள்கிறது.


🔸

நாம் ஏற்கனவே பார்த்த லைசோசோம்கள் தான் இரசாயனக் கழிவுகளை அழிக்கும் போர் வீரர்கள். 

லைசோ சோம் என்ற மருத்துவச் சொல்லிற்கு அழிக்கும் 

               பொருள் என்று அர்த்தம். ஆங்கிலத்தில் 

சூசைட் சாக்ஸ் (தற்கொலைப் 

            பைகள்) 

என்றும் இதை அழைப்பார்கள். உலகத்தின் முதல் தற்கொலைப்

படையை உருவாக்கியது மனித உடலின் செல்களாகத் தான் இருக்கும்.


🔸

தற்கொலைப்படை எவ்விதமாக தன் எதிரிகளை அழிக்கிறது? அழிக்கும் தன்மையுள்ள வெடி பொருட்களோடு எதிரியின் மீது தாக்குதல் நடத்துகிறது. தானும் அழிந்து எதிரியையும் அழிப்பது தான் தற்கொலைப்படை அதே போலத்தான் இந்த 

லைசோ சோம்கள். கழிவுகளின் தன்மையையும், அளவையும் பொறுத்து 

லைசோ சோம்கள்.. உருவாகி வளர்கின்றன. செல்லில் நலமான சூழல் நிலவுகிற போது கழிவுகளைத் தாக்குகின்றன. நலமான சூழலை விரதம், 

              ஓய்வு 

என்று நாம் ஏற்படுத்தினாலும் சரி, அல்லது காய்ச்சல், 

               சோர்வு என்று உடலே ஏற்படுத்திக் கொண்டாலும் சரி அவற்றை செல்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.


🔸

லைசோ 

                சோம்கள் ரசாயனக்கழிவு

களின் மேல் மோதுகின்றன. இங்கு ஒரு சந்தேகம் வரலாம். 

லைசோ சோம்கள் இருப்பது செல்சுவரின் அருகில், 

ரசாயனக் கழிவுகள் இருப்பது இன்னொரு இடத்தில். 

எப்படி அங்கு சென்று மோதும் ? 

செல்லில் இருக்கும் செல்திரவத்தின் மீதுதான் எல்லா உறுப்புகளும் மிதந்து கொண்டிருக்

கின்றன. (கோழி முட்டை போல). லைசோசோம் 

எங்கு சொல்ல முடிவெடுக்கிறதோ அங்கு நகர்கிறது தாக்குதல் நடத்துகிறது. 


🔸

மனிதன் 

       என்பவன் ஒரு உயிர் அல்ல. உடலில் உள்ள ஒவ்வொரு      

          செல்லும் 

               ஒரு உயிர். 

அதிலும், செல்லிற்குள் இருக்கும் 

லைசோ சோம் தனியாக முடிவெடுக்கிறது. தனியாகப் பிறந்து, தனியாகச் செத்தும் போகிறது. அதுவும் ஒரு உயிர் தான். எண்ணற்ற உயிர்களால் ஆனதுதான் 

மனித உடல்.


🔸

லைசோ சோம் தாக்குதலில் சிக்கிய ரசாயனக் கழிவுகள் அழிந்து போகின்றன. தாக்குதல் நடத்திய லைசோ      

          சோம்களும் 

அழிந்து போகின்றன. தற்கொலைப் 

              பைகள் என்று எவ்வளவு பொருத்தாமாகப் பெயர் சூட்டியிருக்

கிறார்கள் உயிரியல் விஞ்ஞானிகள். அழிந்த கழிவுகளில் இருந்து நுண்ணிய துகள்கள் கூட எஞ்சாத அளவுக்கு இத்தாக்குதல் நடந்து முடிகிறது. செல்லிற்கும் பாதிப்பில்லை. உடலுக்கும் பாதிப்பில்லை. அப்படியானால் லைசோசோம் தான் அழிந்து விட்டதே வேறு 

லைசோ சோமுக்கு செல் என்ன செய்யும் ? 

இப்போது மறுபடியும் செல்லின் படத்தை பாருங்கள். ஒரு செல்லில் நிறைய லைசோ சோம்கள் இருக்கின்றன. அப்படியும் செல்லுக்கு புதிதாக 

லைசோ 

             சோம்கள் தேவைப்பட்டால் உருவாக்கிக் கொள்ளும்.


🔸

உடலின் 

மிகச் சிறிய துகளான செல்லில் நடைபெறும் 

இயக்கம் இது ! 

உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டுமா, அல்லது அழிக்கப்பட வேண்டுமா ? என்பதை ஒவ்வொரு செல்லும் தானே முடிவு செய்து, தானே இயங்குகிறது.


🔸

இந்த செல்லின் அடிப்படையைக் கொண்டு, ஒவ்வொரு உள்ளுறுப்பையும், உடலின் இயக்கங்களையும் அணுகுவோ

மானால் - 

உடலை முழுமையாகவும், எளிமையாகவும் புரிந்து கொள்ள முடியும்.


🔸

நாளை....


     செரிமான 

          மண்டலம்.....

🔸

நன்றி 


அக்குபங்சர்    

          மருத்துவர்

அ.உமர் பாரூக் 

M.Acu, M.Sc(Psy), D.Litt,

No comments:

Post a Comment