Friday 24 September 2021

SPLEEN AND ITS FUNCTIONS

 

SPLEEN AND ITS FUNCTIONS




மறைவான 

   உறுப்புகளும், 

       செரிமானமும்


🔸


இங்கு நாம் பார்த்த உறுப்புகள் மட்டுமல்லாமல் இன்னும் சில உறுப்புகள் செரிமானத்திற்

கான அடிப்படை வேலைகளைச் செய்கின்றன. உடலியல் அமைப்பில் செரிமான உறுப்புக்களாக

இவை கருதப்படுவ

தில்லை. ஆனால், செரிமான இயக்கத்தில் பெரும் பங்காற்றுகின்ற இவ்வுறுப்புகள் இல்லையென்றால் செரிமானம் நடைபெறாது.





🔸

மண்ணீரல்


இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும், வயதான இரத்த அணுக்களைக் கொல்லும் ஒரு இடமாகவே மண்ணீரல் கருதப்படுகிறது. ஆனால், மரபுவழி அறிவியல்

விளக்கும் செரிமானத்தின் 

மிக முக்கியமான உறுப்பு மண்ணீரல் ஆகும். உணவுப் பொருளை 

நாம் வாயில் 

இடும் போதே உழிழ்நீர்ச் சுரப்பிற்கு வழிகாட்டுவது மண்ணீரல் ஆகும். வாயில் செரிமானம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து உணவு ஆற்றலை மண்ணீரல் பெற்று, உடலிற்கு வழங்குகிறது. ஆற்றலைக் கருவிகளால் பார்க்க முடியாமல் போவதால் 

கருவி வழி நவீன அறிவியல் இக்கருத்து முதன்மை பெறவில்லை. ஆனால் நடைமுறையில் இதை நாம் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.


🔸


உணவு முழுமையாகச் செரித்து, அதன் ஆற்றல்கள் இரத்தத்தை அடைய இரண்டரை மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை ஆகும் என்று கூறுகிறது 

நவீன அறிவியல், தொடர்ந்து நான்கு, ஐந்து நாட்களாக பட்டினி கிடக்கும் ஒருவருக்கு கண்கள் பஞ்சடைத்துப் போகும். காதுகளின் கேட்கும் திறன் குறைந்து போயிருக்கும். உடல் பலவீனம் அடைந்து சோர்ந்து போயிருக்கும் இப்போது அவருக்கு உணவைக் கொடுத்துப் பாருங்கள். 


🔸

முதல் கவள உணவை வாயில் இட்டு, மென்று கொண்டிருக்கும் போதே அவருடைய கண்களும், காதுகளும் ஆற்றல் பெறும். அவருடைய குரல் வலிமை பெறுவதையும் நம்மால் பார்க்க முடியும், வாயில் இட்ட உணவு இரைப்பைக்குள் போவதற்கு முன்பே அவரது உடல் ஆற்றல் பெறுகிறது. இந்த ஆற்றலை

அளிப்பதுதான்          

     மண்ணீரல். 


🔸


உணவு வாயில் அரைக்கப்படும் போதே அதிலிருந்து ஆற்றலை மண்ணீரல் பிரித்தெடுத்து உடலுக்கு

அளிக்கிறது. உடலில் அமைந்திருக்கும் எல்லா, உள்

உறுப்புக்களுக்கும் 

ஆற்றல் அளிப்பது மண்ணீரலின் வேலையாகும். உள்ளுறுப்புக்களின் சுருங்கி விரியும் இயக்கம், அதன் நிலைத்தன்மை போன்றவற்றை மண்ணீரல் பராமரிக்கிறது. வாயில் செரிமானம் துவங்குவது முதல் பெருங்குடலில் கழிவாக வெளியேற்றப்படும் வரை 

ஒவ்வொரு 

         நிலையிலும் மண்ணீரல் 

         முக்கியப் பங்காற்றுகிறது.


🔸

   பிற

              உறுப்புகள்


நுரையீரல்,     

         

            சிறுநீரகம், 


இருதயம் 

                    

போன்ற உறுப்புக்களும் செரிமானத்தில் மறைமுகப் பங்காற்றுகின்றன. செரிமானத்தில் உணவு செரிக்கப்படும் போது அது எரிக்கப்படுகிறது. அங்கு காற்றின் பங்கு முக்கியமானது. 

முழு உடலிற்கும் நேரடியாகக் காற்றையும், 

காற்று ஆற்றலை அளிப்பது நுரையீரல் ஆகும். 

அதே போல, உணவை நாம் வாயில் இடுவதற்கும் முன்பாக அதன், மணம் மூக்கின் வழியே உள்ளே போகிறது. அவ்வாறு நுரையீரலின் வெளிப்புற உறுப்பான மூக்கு உள்ளே அனுப்பும் மணம் உமிழ் நீர்ச் சுரப்பில் முக்கியப் பங்காற்றுகிறது. செரிமானத்தின் 

           துவக்கமே மூக்கில் 

        இருந்து தான் துவங்குகிறது.


🔸


செரிமான இயக்கத்தில் நீர்த்தேவை மிக முக்கியமானது. உடலில் எங்கெல்லாம் நீர்த்தேவை ஏற்படுகிறதோ அதை தாகம் மூலம் அறிவிப்பதும், உணவில் உள்ள 

நீர் ஆற்றலை பிரித்து முழு உடலுக்கு அளிப்பதும் சிறுநீரகத்தின்  

         முக்கியமான வேலையாகும். செரிமானத்தில் சிறுநீரகத்தின் வேலையை இன்னும் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு 

பசி உணர்வே இருக்காது. அப்படியே சாப்பிட்டாலும் உணவை செரிக்கிற தன்மை உடலிற்கு குறைந்து போயிருக்கும். செரிமானத்தின் முக்கியத் தேவையான 


🔸

நீர்ச் 

   செரிமானத்தை நடத்துவது 

        சிறுநீரகம் ஆகும்.


🔸

அதே போல, இதயம். செரிமானத்திற்குத் தேவையான வெப்பத்தை அளிப்பதும், உணவில் இருந்து கிடைக்கும் வெப்பத்தை 

முழு உடலுக்கு அளிப்பதும் இதயத்தின் வேலையாகும். செரிமானத்தின் இறுதியில் கிடைக்கும் 

உயிர் வேதியியல் பொருட்களை இரத்தத்தின் மூலம் முழு உடலிற்கும் கிடைக்கக் செய்வது இதயம் ஆகும். 


🔸

மேற்கண்ட 

முக்கிய உறுப்புகள் அல்லாமல் இன்னும் சிறு உறுப்புகளும் செரிமானத்தில் பங்கேற்கின்றன. அதில் சில உறுப்பு  குடல்வால். சிறுகுடலும், பெருங்குடலும் சந்திக்கும் பகுதியில்தான் அப்பெண்டிஸ் 

                 என்ற குடல்வால் அமைந்துள்ளது. பெருங்குடலிற்குள் செல்லும் கழிவுகளில் இருந்து சத்துக்களைப் பிரிந்தெடுப்பதற்கு, குடல்வாலில்    

         சுரக்கப்படும் நீர் 

பயன்படுகிறது.


🔸

நம் உடலில் 

உள்ள ஒவ்வொரு அணுவும் 

உடலில் நிகழும் எல்லா இயக்கங்களிலும் பங்கு பெறுகின்றன. 

அது போலவே, செரிமானம் என்பது தனித்தனியான உறுப்புகள் தொடர்பான தனி வேலையில்லை. முழு உடலும், 

அதன் உறுப்புகளும் பங்கு பெறும் ஒருங்கிணைந்த இயக்கம் தான் செரிமானம். உடலில்  

ஐந்து  மூலகங்களும்

(நிலம்,நீர், நெருப்பு, காற்று, மரம்) 

தம் உறுப்புகளின் வாயிலாக நடத்தும் ஆற்றல் பெறும் இயக்கமே செரிமானம் ஆகும்.


🔸

உடலின் 

ஒட்டு மொத்த இயக்கத்தையும் முழுமையாகப் புரிந்து கொள்வதற்காக, மண்டல வாரியான பகுப்பு பயன்படுகிறது. மண்டலங்கள் 

மூலம் நாம் புரிந்து கொள்வது உடல் இயக்கத்தின் 

ஒரு பகுதிதான் என்பதையும், உடலின் 

ஒவ்வொரு இயக்கத்திலும் 

முழு உடலும் ஒருங்கிணைந்து பங்கேற்கிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையை 

நாம் மறந்து விடும் போது உடலை உயிரற்ற இயந்திரமாக பார்க்கும் தவறான பார்வைக்குள் சிக்கிக் கொள்வோம்.


🔸

        நாளை....


 இரத்த

        சுற்றோட்ட

            மண்டலம்....


🔸

நன்றி 


அக்குபங்சர் மருத்துவர்

அ.உமர் பாரூக் 

M.Acu, M.Sc(Psy), D.Litt,

No comments:

Post a Comment