Saturday 14 March 2020

INDIA`S FIRST TALKIE MOVIE "ALAM ARAA "HINDI RELEASED MARCH 14,1931


INDIA`S FIRST TALKIE MOVIE  
"ALAM ARAA "HINDI RELEASED 
MARCH 14,1931




இன்று கதையே இல்லாமல் திரைப்படங்கள் வருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திரைப்படத்துறை குழந்தையாக இருந்தபோது, பேசும்மொழி படங்கள் கிடையாது. சத்தம் கிடையாது, மௌன படம் தான் பார்க்க வேண்டும். சைகையும், உடல் அசைவும், உதட்டு அசைவுகளும் அன்று கதையை பார்வையாளர்களுக்கு உணர்த்தின. அதன்பின் தொழில்நுட்ப வளர்ச்சியால் பேசும்மொழி படங்கள் வெளிவந்தன.

'தி ஜாஸ் சிங்கர்' என்கிற திரைப்படம் தான் உலகின் முதல் முழு நீள பேசும்படம். இந்தப்படம் வெளிவந்தது 1927 அக்டோபர் மாதம். அதற்கடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் முதல் பேசும்படம் வெளியானது. அந்தப்படம் ஆலம் ஆரா. இந்தியில் தான் முதன் முதலாக இந்தப்படம் வெளிவந்தது. 1931 மார்ச் 14ந்தேதி இந்த திரைப்படம் வெளிவந்தது. இந்தப்படத்தை இம்பீரியல் பிலிம் கம்பெனி என்கிற நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அர்தசிர் இரானி என்பவர் ஆவார். இந்த படத்தை இயக்கியவரும் இவரே.

இப்படத்தின் கதை பார்ஸி மொழியில் எழுதப்பட்டது. கதையில் ஒரு மன்னர் அவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டு மனைவிகளுக்குள்ளும் தன் மகன்களை தான் இளவரசராக்க வேண்டும் என்று. இந்த நேரத்தில் இளைய இராணியோடு சேர்ந்துக்கொண்டு தளபதி திட்டமிட்டு மன்னரை கொல்வதோடு, இளையராணியையும் கொல்கிறார். இதில் இளைய ராணியின் மகள் மட்டும் தப்பிவிடுகிறார். முதல் இராணியின் மகன் சிறைவைத்துவிட்டு நாட்டை ஆள்கிறான் தளபதி. தப்பிய இளையராணியின் மகள் ஆலம்ஆரா நாடோடிகளால் வளர்க்கப்பட்டு, அந்த நாடோடிகள் மூலமாக படை திரட்டி வந்து தளபதியை வென்று இளவரசரை ஆட்சியில் அமர்த்துவதே கதை. கதையை நாடகங்களில் நடத்திக்கொண்டு இருந்தனர். அந்த கதையை வாங்கி படமாக எடுத்தார் இரானி. ஜோசப் டேவிட் என்பவர் இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து தந்தார்.

பிரித்வீராஜ் கபூர் மன்னராக நடித்திருந்தார், இந்தியின் பிற்காலத்தில் பெரிய நடிகையாக இருந்த சுபைதா ஆலம்ஆராவாகவும், இளவரசராக மாஸ்டர் விட்டல், ஜில்லு, சுசீலா போன்றோர் முதல் பேசும்படத்தில் நடித்திருந்தனர்.





இந்தியாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா. (உலகத்தின் ஆபரணம் என்று அர்த்தம்) 1931 மார்ச் 14 அன்று வெளியானது. அது இந்தியில் பேசியது.

அர்தேஷிர் இரானி என்பவர் அவரது நிறுவன மான இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி மூலம் இதைத் தயாரித்தார். இந்தப் படத்தில் மாஸ்டர் விட்டல், சுபைதா, ஜில்லூ, சுசீலா, பிருத்விராஜ் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

1931 மார்ச் 14ந்தேதி முதன் முதலாக இந்தப்படம் மும்பையில் உள்ள மெஜஸ்டிக் திரை கொட்டகையில் திரையிடப்பட்டது. முதல் பேசும் படம் என்பதால் இந்தியாவில் பெரும் ஆச்சர்யம் ஏற்பட்டது. பொம்மைங்க பேசுது பாரேன் என மக்கள் பேசும் அளவுக்கே அன்றைய பெரும்பான்மை மக்களின் புரிதல் இருந்தாலும் இந்தப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்தின் பிரிதி ஒன்றை புனோவில் உள்ள இந்திய திரைப்பட ஆவண காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுயிருந்தது. 2003ல் ஏற்பட்ட தீ விபத்தில் ஆலம் ஆராவின் பிலிம் ரோல் தீக்கு இறையானது. இதனால் இந்தியாவின் முதல் பேசும்படத்தின் பிரிண்ட் இப்போது இந்தியாவில் எங்கும்மில்லை என்பது குறிப்பிடதக்கது.
ஆலம் ஆரா இந்தியத் திரைப்படமாகும். இத்திரைப்படம் இந்தியாவின் முதல் பேசும் படம்[1][2]. இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931ல் வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானி என்பவரது நிறுவனமான இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி தயாரித்தது.[3]

இந்தப் படத்தில் மாஸ்டர் விட்டல், சுபைதா, ஜில்லூ, சுசீலா, பிருத்விராஜ் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

அர்தேஷிர் இரானி
இந்தப்படத்தை தயாரித்தது பற்றி இந்திய சினிமா வெள்ளி விழா நிகழ்வில் அர்தேஷிர் இரானியின் கூற்று: "பின்பற்றுவதற்கு எங்களுக்கு எந்த முன்மாதிரியும் அன்று இருக்கவில்லை, ஒலிப்பதிவு பற்றி ஒரு மாதம் பயிற்சி பெற்றோம், பார்ஸி நாடகமேடையிலிருந்து திரைக்கதை அமைத்துக் கொண்டோம். வசன எழுத்தாளர் இல்லை, பாடல் ஆசிரியர் இல்லை, ஒழுங்கற்ற கிறுக்கல்கள் மீது ஒவ்வொன்றையும் திட்டமிட்டோம். ஆரம்பித்தோம், நாடக மேடையில் பாடப்பட்டு வந்த பாடல்களை நானே தேர்ந்தெடுத்தேன். மெட்டுக்களைத் தேடிப்பிடித்தேன், தபேலா, ஹார்மோனியம், வயலின் இந்த மூன்றும் தான் இசைக்கருவிகள்"

ஜோசப் டேவிட் என்பவர் எழுதிய பார்ஸி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட காதல் சினிமா இது. ஒரு இளவரசன் நாடோடிப்பெண்ணை காதலிப்பதாக அது இருந்தது. படம் வெளியான அன்று கூட்டம் சமாளிக்க முடியாததால் போலீஸாரின் பாதுகாப்பு கேட்டு வாங்கப்பட்டது. அந்தத் திரைப்படத்தின் படச்சுருள் தற்போது இல்லை. காணாமல் போய்விட்டது.


உலகின் முதல் சினிமாவைத் தயாரித்து வெளியிட்டவர்கள் லூமியர் சகோதரர்கள். முதல் சினிமா 1895 , டிசம்பர் மாதம் பாரீசில் உள்ள 'ஈடன் சினிமாஸ்’ என்ற திரையரங்கில் திரையிடப்பட்டது. இப்படம் வெளியான, ஆறு மாதத்திற்குள்ளாகவே, லூமியர் சகோதரர்கள்  இந்தியாவில் உள்ள பம்பாய் வாட்சன் ஹோட்டலில் திரையிட்டுக் காட்டினர்.இந்தியாவில் குறும்படங்கள்
1896 ல் இந்தியாவில் முதல் சினிமா திரையிடப்பட்ட நாள் முதல் 1913 வரை வெளிநாட்டுப்படங்களே திரையிடப்பட்டு வந்தன. இந்தியாவின் முதல் குறும்படமான A Dancing Scene ஐ  இயக்கியவர், ஹிராலா சென், 1913 ஆம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் எடுத்துள்ளார். இவர் தனது முதல் படத்தை ஒரு ஆங்கிலேயரிடமிருந்து இரவல் வாங்கிய கேமராவைக் கொண்டே எடுத்துள்ளார்.
இந்தியாவின் முதல் திரையரங்கம் 1907  கல்கத்தாவில் எல்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ் என்ற பெயரில் கட்டப்பட்டது. இந்தியாவின் முதல் திரையரங்கம் இதுதான்.
இந்தியாவின் முதல் படமான
இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கபடும் 'தாதாசாகேப்பால்கே' அவர்களின் இயக்கத்தில் 'ராஜா ஹரிச்சந்திரா' (1913 மே 3 ஆம் தேதி) வெளியான இந்தியா வின் முதல் முழு நீளத் திரைப்படம் இதுதான்.
இந்தியாவின் முதல் பேசும்படம்: மார்ச் 14, 1931 இல், இம்பீரியல் மூவிடோன் தயாரிப்பில் வெளியான ஆலம் ஆரா (ஓடும் நேரம் : 124 நிமிடங்கள்). இயக்கியவர் 'அர்தேஷிர் இரானி’. இந்தியாவின் முதல் கலர் சினிமா 1937யில் மோதி பி கிட்வாணி இயக்கத்தில்  வெளியான "கிசான் கன்யா"
திரைப்படம்தான் இந்தியாவின் முதல் கலர் திரைப்படம்.

தமிழகத்தில் சினிமா உருவான வரலாறு...

1905ல் திருச்சியில் தென்னிந்திய ரெயில்வேயில் குமாஸ்தாவாக இருந்த, சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் டியூப்பாண்ட் என்ற பிரெஞ்சுக்காரரிடமிருந்து ஒரு சினிமா புரொஜெக்டரை முதன் முதலாக விலைக்கு வாங்கி கோவை டவுன் ஹால் ரோட்டில், சாமிக்கண்ணு வின்சென்ட் கட்டிய 'வெரைட்டி ஹால்’ தென்னிந்தியாவின் தொடக்ககால சினிமாவை திரையிட்டு  சினிமா காட்டினார். இதன் பின்னர்
தெலுங்கு சினிமாவின் தந்தை இரகுபதி வெங்கையா நாயுடு. தென்னிந்தியாவில் முதன்முதலில் 'கெயிட்டி’ என்ற முதல்  திரையரங்கதை 1912ல் சென்னையில் கட்டினார்.
தென்னிந்தியாவில் முதல் மௌனப் படம்
1916 ஆம் ஆண்டு  திரு. R. நடராஜ முதலியார். உருவாக்கிய முதல் படம் 'கீசக வதம்',. தென்னிந்தியாவின் முதல் மௌனப் படம் இதுதான். இதன் பின்னர் 1931யில் ஆர்.எம். ரெட்டி அவர்களின் இயக்கத்தில் வெளியான தென்னிந்தியாவில் முதல் பேசும் படமான காளிதாஸ்  திரைபடம்தான் தமிழகத்தின் முதல் பேசும் படம் .
பின்னர் 1956யில்  புரட்சித்தலைவர் MGR , பானுமதி அவர்களின் நடிப்பில் T.R.சுந்தரம் அவர்களின் இயக்கத்தில் வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற திரைப்படம்தான் தமிழில் முதன்முதலில் வெளிவந்த கலர் திரைப்படமாகும்.
இப்படிதான் சினிமா நமது உள்ளங்களிலும் இல்லங்களிலும் நீங்கா இடம் பிடித்து திரையில் நமக்கு நல்ல சினிமாக்களை காட்டி அதன்மூலம் சிறந்த திரை நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியது மட்டும் அல்லாமல் நமது சினிமாதுறை தென்னிந்தியாவிற்க்கு  ஐந்து முதலமைச்சர்களை அள்ளித்தந்து  அரசியல் வரலாற்றை மாற்றி அமைத்து நமது சினிமாதுறைதான் என்பது நிதர்சனமா உண்மையே....!
நன்றி ! அன்புடன் உங்கள் பாரதிபாபு .



.

No comments:

Post a Comment