Sunday, 29 March 2020

paravai MUNIYAMMAA DIED ON MARCH 29,2020




paravai MUNIYAMMAA  DIED ON MARCH 29,2020



பரவை முனியம்மா மரணம் : தொடர் இழப்புகளால் திரையுலகினர் அதிர்ச்சி

இயக்குனர் விசு, நடிகர் சேதுராமனை தொடர்ந்து பரவை முனியம்மா என ஒரே வாரத்தில் 3 திரையுலக பிரபலங்கள் மரணமடைந்துள்ள நிகழ்வு, திரைவட்டாரத்தில் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் பெரும்...மதுரை மாவட்டம் சமயநல்லூருக்கு அருகில் உள்ள பரவை பகுதியை சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புற பாடல்கள் பாடுவதிலும், கிராமிய பேச்சாலும் அப்பகுதி மக்களால் பிரபலமாக பேசப்பட்டு வந்தார். இவர் மதுரை குரு தியேட்டர் பகுதியில் கடையையும் நடத்தி வந்தார்.தரணி இயக்கத்தில் விக்ரம், ஜோதிகா நடிப்பில் உருவான தூள் படத்தில், ஜோதிகாவின் பாட்டியாக நடித்தார். அந்த படத்தில் சிங்கம் போல நடந்துவந்தான் செல்ல பேராண்டி என்ற பாடலை பாடியதன் மூலம், சர்வதேச அளவில் புகழ் பெற்றார். இதனை தொடர்ந்து அவர் பல படங்களிலும் நடித்து வந்தார்.

தூள், சண்டை, காதல் சடுகுடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். . 2000க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் தன் பாடல் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இவரின் இயலாமையை கருதி, அரசும், திரையுலகினரும் அவ்வப்போது மருத்துவ உதவிகளை செய்து வந்தனர். இந்நிலையில், இன்று (29ம் தேதி) அதிகாலை அவர் மரணமடைந்தார்.இயக்குனர் விசு, நடிகர் சேதுராமனை தொடர்ந்து பரவை முனியம்மா என ஒரே வாரத்தில் 3 திரையுலக பிரபலங்கள் மரணமடைந்துள்ள நிகழ்வு, திரைவட்டாரத்தில் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகினர், பரவை முனியம்மாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment