WHY YOU AVOID SHAVING IN SECRET PARTS
அந்தரங்க பகுதியில் உள்ள முடியை ஏன் ஷேவ் செய்யக்கூடாது?... காரணம் இதுதான்...
Samayam Tamil | Updated:02 Mar 2020, 02:11 PM
இப்பொழுதுள்ள பெண்கள் தங்கள் மேனி வழுவழுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதன் விளைவு உடம்பில் மட்டுமல்ல அந்தரங்க பகுதியில் உள்ள முடிகளையும் அடிக்கடி நீக்க தொங்குகின்றன. ஷேவிங் மூலமாக, கெமிக்கல்கள் கலந்த க்ரீம்கள் மூலமாக இப்படி வித விதமான முறைகளைக் கொண்டு நீக்குகின்றன. ஆனால் நம் அந்தரங்க பகுதியில் உள்ள முடிகள் ஏதோ ஒரு காரணத்திற்காக படைக்கப்பட்டது. இது நம் இனப்பெருக்க உறுப்புகளை பாதுகாக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.சமீபத்தில் நடந்த அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ ஆய்வின் மூலம் அந்தரங்க பகுதியில் உள்ள முடிகளை நீக்கும் நிறைய பெண்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 60 சதவிகித பெண்களுக்கு அந்தரங்க முடி அகற்றுதலால் எபிடெர்மல் சிராய்ப்பு
(தோலில் கண்ணுக்கு தெரியாத வெட்டுகள் ) மற்றும் வளர்ந்த முடிகள் இவற்றால் ஒரு நோய்த்தாக்குதலாவது ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் சரும எரிச்சல், தொற்று நோய்கள், பாலுறவு மூலம் பரவக் கூடிய நோய்கள் போன்றவை அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளதாம். இப்படி அந்தரங்க பகுதியில் உள்ள முடிகளை நீக்குவது சரியா? இல்லை ஆபத்தானதா என்பது குறித்து பிரபல மருத்துவர் நம்மிடம் தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்.
நன்மைகள்
பிறப்புறுப்பு முடிகள் அந்த பகுதியில் இயற்கையாகவே எண்ணெய்யை சுரக்க செய்து சருமத்தை காக்கிறது
பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் வைரஸ் தொற்றுகள் ஏற்படாது வண்ணம் பாதுகாக்கிறது
பிறப்புறுப்பு முடிகள் பெரோமோன்ஸின் சுரப்புக்கு உதவி புரிகிறது. இந்த பொருள் தான் பாலியல் தூண்டலுக்கு காரணமாக அமைகிறது. எனவே முடிகளை நீக்கும் போது இந்த பெரோமோன்ஸின் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. இதனால் பாலியல் ஈர்ப்பும் குறைபாடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உடலுறவு சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது
பிறப்புறுப்பு பகுதி முடிகள் குஷன் மாதிரி அமைந்து உடலுறவின் போது உராய்வு ஏற்படுவதை தடுக்கிறது.
புண்கள் ஏற்படும்
நீங்கள் அந்தரங்க பகுதியில் உள்ள முடிகளை நீக்கும் போது உங்களுக்கே தெரியாமல் அந்த பகுதியில் வெட்டுகள் அல்லது புண்கள் ஏற்படலாம். இந்த புண்களின் வழியாக அல்லது மயிர்க்கால்கள் வழியாக பாக்டீரியாக்கள் உள் நுழைய நிறையவே வாய்ப்புள்ளது. இப்படி போகும் பாக்டீரியாக்களால் நிறைய பாதிப்புகள் இனப்பெருக்க பகுதியில் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு சில நேரங்களில் ஆன்டி பயாடிக் அல்லது அறுவை சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை கூட ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அந்தரங்கப் பகுதியில் மிகவும் கூர்மையான ரேசர்களைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத் தடிப்புகளும் காயங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் மிகவும் சென்சிடிவ்வான பகுதியான அந்தரங்கப் பகுதியில் புண்கள், எரிச்சல் ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு
வாக்சிங் - ஷேவிங் எது சிறந்தது?
அந்தரங்க பகுதியில் உள்ள முடிகளை ஷேவிங் செய்வது சுலபமான ஒன்று. இதுவே நீங்கள் வேக்சிங் முறையை பயன்படுத்தும் போது முடிகள் எல்லாம் முழுவதுமாக நீக்கப்படாமல் தோலினுள் வளர்ந்த முடிகள் அப்படியே இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் . எனவே இந்த தோலினுள் இருக்கும் முடிகள் மீண்டும் சீக்கிரமே வளரத் துவங்கும். அதுமட்டுமல்லாமல் முடிகள் குத்துவதற்கும் சருமத்தில் கீச்சுவதற்கும் நிறைய வாய்ப்புள்ளது. இப்படி பாதியாக நிற்கும் முடிகள் உங்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும்.
ஆனால் அடிக்கடி அந்தரங்கப் பகுதியில் இருக்கும் முடியை நீக்குவது அவ்வளவு நல்லதல்ல. தொற்றுக்கள் எளிதாகப் பரவ அது வழிவகுத்துவிடும்.
v
No comments:
Post a Comment