Tuesday 10 March 2020

ANCIENT CITY OF MONKEY TOWN IN HONDURAS FOUND



ANCIENT CITY OF MONKEY TOWN 
IN HONDURAS FOUND 


1000 ஆண்டுகளுக்கு முன்னர் ஹோண்டுராஸ் நாட்டில் புதைந்து போன குரங்கு கடவுள் நகரம் கண்டுபிடிப்பு !
1000 ஆண்டுகளுக்கு முன்னர் புதைந்து போன நகரம் ஒன்று ஹோண்டுராஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள மஸ்கியூடியா பகுதியின் அடர்ந்த வனப்பகுதியில், மண்ணுக்குள் புதைந்த பழங்கால நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘லிடார்’ என்ற அதிநவீன முறையில் விண்ணில் இருந்து கதிர்வீச்சுகளை பாய்ச்சி அந்த நகரத்தை கண்டுபிடித்துள்ளனர்.இது கி.பி. 1000–வது ஆண்டு முதல் 1400 ஆண்டு வரை இருந்திருக்க வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இங்கு மண்ணுக்குள் புதைந்த பிரமிடுகளும், அதில் புதைக்கப்பட்டவர்களின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.எனவே இந்த நகரத்தில் மனிதர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்திருக்கின்றனர் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நகரத்துக்கு வெள்ளை நகரம் அல்லது குரங்கு கடவுள் நகரம் என பெயரிடப்பட்டுள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதையுண்ட நகரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஹோண்டுராஸ் அரசு ஈடுபட்டுள்ளது

No comments:

Post a Comment