ஜன., 26, 1930ல் தான், '
முழு சுவராஜ்யம் மொத்த சுதந்திரம்
இந்திய அரசியலமைப்பு சட்டம், ஜனாதிபதியின் கையெழுத்தை பெற்று, அமலுக்கு வந்த நாளை தான், இந்திய குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.
ஜனவரி, 26ம் தேதியன்று கொண்டாட காரணம், ஜன., 26, 1930ல் தான், 'முழு சுவராஜ்யம் மொத்த சுதந்திரம்' என்ற கோரிக்கையை வைத்தது, காங்கிரஸ்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, அம்பேத்கருடன் இணைந்து இறுதி வடிவம் கொடுத்த பிரபலங்கள்: ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, வல்லபாய் படேல், கணேஷ் வாசுதேவ் மாவலன்கர், சியாமா பிரசாத் முகர்ஜி, ராஜேந்திர பிரசாத், கே.என்.முன்ஷி, அபுல்கலாம் ஆசாத் மற்றும் பல்வந்த்ராய் மேத்தா ஆகியோர்.
இவர்களை தவிர, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், என்.கோபாலசாமி, முகமது சதுல்லா, பி.எல்.மிட்டர் மற்றும் டி.பி.கைத்தான் ஆகியோரை ரகசிய உறுப்பினர்கள் என கூறுவர்.
இந்த அரசியலமைப்பு சார்ந்த தொகுப்பு முழுவதையும், தன் அழகான கையெழுத்தால் எழுதியவர், பிரேம் பீகாரி நரைன் ரெய்சதா.
ஒரே சமயத்தில், ஹிந்தி, ஆங்கிலம் என, இரண்டிலும் அரசியலமைப்பு சட்டம் உருவானது. கையால் உருவாக்கப்பட்ட காகிதத்தில், இது எழுதப்பட்டது. ஆங்கிலத்தில், 221 பக்கங்களுடன்,
13 கிலோ எடை கொண்டது. ஹிந்தியில், 251 பக்கம்.
இதில், 284 உறுப்பினர்களும் கையெழுத்திட்டனர்; அதில், 15 பேர் பெண்கள். முழுமையாக கையெழுத்து பெற்ற பின், ஜன., 26, 1950ல் நடைமுறைக்கு வந்தது. 395 நிரந்தர விதிகள் மற்றும் 12 அட்டவணைகள் இதில் அடக்கம்.
முதன்முதலில், பிரேம் பீகாரியால், கையால் எழுதப்பட்ட, அரசியலமைப்பு சட்டம் அழிய, 1,000 ஆண்டுகள் ஆகுமாம்.
16 x 22 அங்குலம் கொண்டது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ஒரு பெட்டியில், ஹிந்தி அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை, 'பார்லிமென்டின் லைப்ரரி'யில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
'இது, முழுக்க முழுக்க என்னுடைய அரசியலமைப்பு தொகுப்பு அல்ல; பெரும்பாலானவை, 1935ம் ஆண்டு சட்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவையும் உண்டு...' என, அப்போதே கூறியுள்ளார், அம்பேத்கர்.
இந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு, இன்று, பல திருத்தங்கள் வந்து விட்டன. முதல் திருத்தம், 1951ல் வந்தது. அது, 'ஜமின்தாரி முறை' ஒழிக்கப்பட்டது; பின்தங்கிய வகுப்புகள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரின் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பது என்பவை, இதில் இடம்பெற்றன.
அடுத்து, ஏழாவது திருத்தம். 1956ல் வந்த இதில் தான், மொழிவாரி மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஏற்படுத்த வழி செய்யப்பட்டன.
மூன்றாவது, 86வது திருத்தம்.
2002ம் ஆண்டு வந்த இதில், படிப்பு அடிப்படை உரிமையாக மாற்றப்பட்டது.
'ஆர்.டி.இ., ஆக்ட்...' என்பது, அதன் பெயர்.
நான்காவது, 101வது திருத்தம். 2016ல், ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்டு, மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டன. ஏப்., 1, 2010ல், இதை அமல்படுத்த முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக, செப்., 8 2016ல், ஜனாதிபதியின் கையெழுத்து கிடைத்த பின்தான் அமலுக்கு வந்தது.
ஜன., 12, 2019ல், 103வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, பொது பிரிவில், ஏழைகளுக்கு, 10 சதவீத ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்.வெங்கட்ராமன், ஜனாதிபதியாக இருந்தபோது தான், அதிகபட்சமாக, 14 திருத்தங்கள் ஏற்கப்பட்டன. இதில், முக்கியமானது, 61வது திருத்தம். இதன்படி ஓட்டு போடுபவர்களின் வயது, 21லிருந்து, 18 ஆக குறைக்கப்பட்டது.
No comments:
Post a Comment