டாக்டர் ராஜேந்திர பிரசாத்
இருமுறை, இந்திய ஜனாதிபதியாக இருந்த பெருமை, டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு உண்டு. ஜனாதிபதியான அவர், தன் தமக்கை படவதி தேவியுடன் வசித்து வந்தார். ஜன., 25, 1960ம் ஆண்டு இரவு, தமக்கை படவதிதேவி காலமாகி விட்டார்.
அடுத்த நாள் காலை, குடியரசு தினம்.
தமக்கை இறந்த செய்தி வெளியானால், குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கருதிய, ராஜேந்திர பிரசாத், அதை வெளியிடவில்லை. அடுத்த நாள், ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டு, ராஜ்பவனுக்கு திரும்பிய சில நிமிடங்களுக்கு பிறகே, தமக்கையின் மரண செய்தி வெளியில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment