வெள்ளையனே வெளியேறு -
விருதுநகரில் போராட்டம் AUGUST 11,1942
1942 ஆகஸ்டு 8 இல் பம்பாயில் கூடிய அனைத்து இந்திய காங்கிரஸ் குழு வெள்ளையனே வெளியேறு என்று ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார் அவர் ஷேக்ஸ்பியரின் ஹாம்லட் நாடக பாணியில் ஒரு பன்ச் டயலாக் ஒன்றை முன் மொழிந்தார் - TO BE OR TO BE என்ற பாணியை கடைப்பிடித்தார் அவர் சொன்ன மந்திரச்சொல் " செய் அல்லது செத்து மடி"
1942 ஆகஸ்டு 9
மறுநாள் மஹாத்மா காந்தி ,மஹாதேவ் தேசாய் ,மற்றும் கண்ணுக்கு தெரிந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் -காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது
மறுநாள் மஹாத்மா காந்தி ,மஹாதேவ் தேசாய் ,மற்றும் கண்ணுக்கு தெரிந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் -காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது
மறுநாள் ஆகஸ்ட் 10
காமராஜ் ,கஸ்துரிபாய் கைது செய்யப்பட்டனர் -மதுரையில் கலவரம் நடந்தது .போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 வயது சிறுவன் மாண்டான் .எனவே தமிழ் நாடெங்கும் எழுச்சியும்,கிளர்ச்சியும் ஏற்பட்டது
ஆகஸ்ட் 11,1942
விருதுநகர் தெப்பக்குளம் தெற்கு படித்துறையில் போலீஸ் குதிரைப்படை நிறுத்தப்பட்டிருந்தது - ஒவ்வொரு குதிரையும் 6 அடி உயரத்திற்கு குறையாமல் நிறுத்தப்பட்டிருந்தன ..
விருதுநகர் தெப்பக்குளம் தெற்கு படித்துறையில் போலீஸ் குதிரைப்படை நிறுத்தப்பட்டிருந்தது - ஒவ்வொரு குதிரையும் 6 அடி உயரத்திற்கு குறையாமல் நிறுத்தப்பட்டிருந்தன ..
இங்கிருந்து மூன்று வழிப்பாதை தொடங்குகிறது -தெற்குசாலை முனிசிபாலிட்டி வழியாய் நேராய் சாத்தூர் செல்லும் பாதை -மேற்கே சரிவலாக சென்றால்
காமராஜர் வீடு வரும்
கிழக்கில் மிகப்பெரிய புளியமரம் 5 படிக்கட்டுகள் இறங்கினால் மாலைக்கோவில் தெரு வரும் .அங்கிருந்து 6 இளைஞர்கள் சுமார் 15 வயதுக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர் .அந்தக்காலத்தில் பெரிய வசதியானவர்கள் மட்டுமே சட்டை போட முடியும் .மற்றபடி பள்ளிக்கூடம் போக ஒரு செட் துணி இருக்கும்
இதில் கனிராஜ் ,காளியப்பன் ,ராமசந்திரன் மற்றும் 4 இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . வாலிபர்கள் தெற்கு பக்கத்தில் இருந்து போலீசார் மீது கல்லை விட்டு எறிந்தனர் -உடனே போலீஸ் அவர்களை துரத்திக்கொண்டு ஓடியது -
உடனே இந்த மாலைக்கோவில் தெரு நண்பர்கள் தெப்பம் கிழக்கு படித்துறைக்கு வந்து துரத்தி ஓடிக்கொண்டிருக்கும் போலீசார் மீது கற்களை எறிந்தனர் -இதில் ஒரு சார்ஜெண்ட் காயம் பட போலீசார் இவர்களை துரத்த ஆரம்பித்தனர் .
துரத்தி வந்த போலீசார் புளிய மரம் வரை வந்து நோட்டமிட்டனர் -அதில் எந்த எந்த வீட்டில் இருந்து கலவரக்காரர்கள் வந்து கலந்து கொண்டனர் என்பது தெளிவாய் தெரிந்தது -ஏனென்றால் ஓடியவர்கள் அவரவர் வீட்டுக்குள் ஓடி மறைந்தனர் -இன்று கூட அங்கிருந்து பார்த்தால் எல்லா வீடுகளும் தெரியும் வண்ணம் தெரு அமைக்கப்பட்டிருக்கும்
பின்னர் மதியம் வரை இந்த கல்வீச்சு ,துரத்தல் வேலை நடை பெற்றது அப்புறம் கைது படலம் ஆரம்பம் ஆயிற்று .அப்போது கலெக்டர் உத்தரவு ஒன்று வந்திருந்தது
.சிறுவர்கள் கலவரத்தில் ஈடு பட்டிருந்தால் அவர்கள்
எச்சரிக்கை செய்யப்பட்டு அபராதம் வசூலிக்க ஆணையிடப்பட்டிருந்தது மற்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம்
எச்சரிக்கை செய்யப்பட்டு அபராதம் வசூலிக்க ஆணையிடப்பட்டிருந்தது மற்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம்
அன்று சாயங்காலம் 5 மணி -இரண்டு போலீசார் கல்லெறியில் ஈடுபட்ட ஒவ்வொரு பையன் வீட்டிலும் அபராதம் வசூலித்து சென்றனர்
குறிப்பு :
இதில் கனிராஜ் என்பவர் மதுரையில் மிகப்பெரிய செல்வந்தர் ஆனார் 1990 வாக்கில் இறந்து போனார் -
ராமச்சந்திரன் என்பவர் விருதுநகரில் மிகப்பெரிய செல்வந்தர் ஆனார் - 1994-95 வாக்கில் இறந்து போனார் -
இதில் காளியப்பன் மட்டும் நேர்மை ,நீதி என்று பெட்டிஷன் போட்டு அரசாங்கத்துடன் போராடியே வறுமையில் வாடினார் - இவர் 1984 அக்டோபர் 18 இல் மரணம் அடைந்தார் -
இவரே எனது தந்தையும் ஆவார்
இவரே எனது தந்தையும் ஆவார்
No comments:
Post a Comment