Friday 7 August 2020

MATA HARI ,DOUBLE AGENT SPY SHOT DEAD IN PARIS ஆகத்து 7, 1876 -1917 OCTOBER 15



MATA HARI ,DOUBLE AGENT SPY SHOT DEAD IN PARIS ஆகத்து 7, 1876 -1917 OCTOBER 15



மாட்ட ஹரி (Mata Hari, இயற்பெயர்: மார்கரெத்தா கெர்த்துரூதா செல்லே, ஆகத்து 7, 1876 – அக்டோபர் 15, 1917), டச்சு நடன மாது. இவர் முதலாம் உலகப் போரில் செருமனியருக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, பிரான்சிய இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு பாரிசுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.[1]

மாட்ட ஹரி , என்றால் காலை நட்சத்திரம் என்று பொருள். ஜாவா தீவில் ஹவாய் நடனம் கற்ற இவர் பாரிசு நகரத்தில் கேபரே நடனக்காரி ஆனார். இந்த நடனம் பார்க்க வரும் பிரான்ஸ் படை ஆபீசரிடம் இரவெல்லாம் கூடி குலாவி ரகசியத்தை செருமனிக்கு சொல்லி வந்தார். இவர் அடையாள எண் H-21. இவர் பெரிய ரகசியம் எதையும் சொல்லவில்லை என்றாலும் பிரித்தானியர் இவரைப் பிடித்து எச்சரிக்கை செய்தனர். என்றாலும் படை அதிகாரிகளை வளைத்து போடுவதை நிறுத்தவில்லை. 1917 அக்டோபர் 15 இல் சுட்டு கொல்லப்பட்டார்.

பிறப்பும் இளமை பருவமும்

மார்கரெத்தா ஆலந்தில் லியூவார்டன் என்ற நகரில் பிறந்தார். இவர் ஆடம் செல்லே என்ற தொப்பி வணிகருக்கும், ஆன்டி ஜெ என்பவருக்கும் 1876 ஆகத்து 7 இல் பிறந்தார். இவருடைய தாயார் மார்கரெத்தா 15 வயது இருக்கும் போதே இறந்தார். எனவே இவரும், இவர் உடன் பிறந்தவர்களும் சொந்தங்களை நாடி பிரிந்து செல்ல நேரிட்டது. 1895 களில் செய்தித்தாளில் வந்த மணமகன் தேவையைக் கண்டு அவருக்கு வயது 40 என்றாலும் மணக்க சம்மதம் தெரிவித்து அசத்தலான போட்டோவை அனுப்பினார். 19 வயது மார்க்ரெட்.

திருமண வாழ்கையும் மணமுறிவும்
இவர் 18 வயதில் மெக்லியோட் என்ற , ஸ்காட்லாந்தை சேர்ந்த ,டச்சு படைதலைவரை 1895 ஜூலை 11 இல் மணம் புரிந்தார் .திருமணத்திற்கு பின் அழகிய வீட்டில் வசித்தார்.இந்நிலையில்ஜாவா தீவுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் . கணவருடன் சென்றார் ஒன்பது வருட தாம்பத்தியத்தில் கணவர் குடிகாரன் ஆகி விட , பிற ஆடவர்களுடன் கூடி மகிழ்ந்தார் .இவர்களுக்கு ஒரு பையனும் ,பெண்ணும் பிறந்தனர், 1899 இல் பையன் மூன்று வயதில் விஷமிட்டு கொல்லப்பட்டான் . 1900 களில் மகளை தன் பொறுப்பில் தூக்கி கொண்டு கணவன் ஓடிவிட்டான் இவ்வாறாக தாம்பத்தியம் முடிவுக்கு வந்தது .ஆனால் மணவிலக்கு பெற்றுக்கொண்டு ஜாவாவிலிருந்து ஹாலந்து திரும்பினார் . 1903 ஆம் ஆண்டு பாரிஸ் வந்தடைந்தார் .அங்கே நடனம் ,மற்றும் மாடலிங் வேலை செய்தார் . சுமார் 9 வருடங்களில் அவருடைய புகழ் பாரிஸ்,பெர்லின் ,வியன்னா ,ரோம் ,லண்டன் முழுவதும் பரவியி ருந்தது . செக்ஸ் மற்றும் நிர்வாண நடனமே இப் புகழுக்கு காரணம் .

புனைகதை
தான் இந்தியாவில் மலபாரில் பிறந்ததாகவும் ,தாயார் ஒரு நடனக்காரி- தாசி என்றும் ,தன்னை பெற்று விட்டு பிரசவத்தில் இறந்து போய் விட்டதாய் கதை கட்டினார். மேலும் தான் சிவன் கோவிலில் வளர்ந்ததாக புளுகினார் .தன் பெயர் மட ஹரி என்றும் , இதன் பொருள் தாயை கொன்றவர் என்றும் கதை கட்டினார் .

பாரிசில் ஆடம்பர வாழ்கை
1905 இல் ஓரியண்டல் நடனங்கள் புளித்து போயின .அப்போது மட ஹரி செக்ஸ் நடனங்களை ,இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து மத சாயலில் விரசமான நடனத்தை ஆடி பார்வையாளர்களை கவர்ந்தார் .மட ஹரி மேடையில் வெள்ளை குதிரையில் 90 சதவீத நிர்வாணத்தில் தோன்றுவார். மூடப்படாத பின்புறமும் , பிரா அணியாத நட்டு போன்ற ஆபரணத்தை மார்பிலும் , கால்களின் இடைப்பகுதி துருத்தி இருக்குமாறு தோன்றுவார். என்றாலும் இந்த கவர்ச்சி சில வருடங்களில் ,இளம் பெண்கள் வருகையால் தடையுற்றது .அதன் பின்னரே உளவாளி ஆகி நிறைய சம்பாதிக்கும் ஆசை வந்தது .

பிரான்ஸ் உளவாளி
1916 வயது 40 இல் 21 வயது ருஷ்ய படை அதிகாரி விளாமித்தீர் டே மஸ்லோவை காதலித்தார் .அவர் படையின் முன்னணியில் போரிடுகையில் ஒரு கண்ணை இழந்தார் .எனவே ஏற்கனவே பழக்கமான ஜார்ஜ் லடோக்ஸ் மூலமாக நடன வேலையோடு உளவு வேலையையும் செய்ய பிரான்ஸ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டாள். மட ஹரி ஜெர்மன் படை தலைவர்களை வளைத்து அவர்களிடம் இருந்து தகவல்களை பிரான்சிற்கு தெரியப்படுத்த நியமிக்கப்பட்டார் .மாறாக பிரெஞ்சு ரகசியங்களை ஜெர்மனிக்கு கசியவிட்டது தெரிய வந்தது . ஆனால் உண்மையில் இவர் ஜெர்மனிக்கு தான் விசுவாசமாக இருந்து பிரான்சுக்கு தவறான தகவல் கொடுத்தார்.

விசாரணையும் தீர்ப்பும்
செயின்ட் லசர் ஜெயிலில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர் .படைத்தலைவர் பியரி போச்சார் டான் விசாரித்தார் .இவர் பாரிஸ் வாழ்கை நன்கு அலசப்பட்டது .இறுதியாக ஜெர்மனியில் இருந்து 20000 மார்க் பெற்றதை ஒப்புக்கொண்டாலும் ,அவை களவு போன பொருளுக்கு கிடைத்த நஷ்ட ஈடு என்றும் , தான் உளவாளி அல்ல ,வெறும் டான்சர் தான் என்று கூறியதை எவரும் ஒப்புக்கொள்ளவில்லை . மட ஹரி பெற்ற பணம் அனைத்தும் ஜெர்மன் எம்பசியால் தரப்பட்டவை என்றும் ,செக்ஸ் சேவைக்கு தரப்பட்டதாகவோ இதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அரசாங்க தரப்பு வாதிட்டது . இவ்வாறு 45 நிமிடத்துக்குள் விசாரணை முடிவுற்றது . என்றாலும் இந்த குற்றத்தை இறுதி வரை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார்

இறப்பு

1917 அக்டோபர் 15 .மட ஹரி நீலநிற கோட் , மற்றும் மும்முனை தொப்பி அணிந்திருந்தார் .மரண இடத்திற்கு ஒரு மந்திரியும் இரண்டு கன்னியாஸ்திரிகளுடன் வந்திருந்தார் .இவர்கள் மரண ஜெபம் ஜெபித்து முடித்தவுடன் மரண இடத்திற்கு சென்றார் . அவர் ஒரு எல்லைகல்லில் இறுக கட்டப்பட்டார். அவர்பி ன்னர் சுட்டுக்கொள்பவர்க்கு நன்றி சொல்லும் விதமாக பறக்கும் முத்தத்தை விடுத்தார் .இருவர் அவரை சுட்டனர் .அவர் தலை தொங்கியது.

நியூயார்க் டைம்ஸ் இவரைப்பற்றிய செய்தியை நான்கு பத்திகளில் வெளியிட்டது . இவருடைய கதை ஆர்வமாய் எல்லோராலும் விவாதிக்கப்பட்டது .மேலும் 1931 இல் மட ஹரி என்ற திரைப்படத்தில்கிரேடோ கார்போ கதாநாயகியாக நடித்தார்

No comments:

Post a Comment