Sunday, 2 August 2020

V.DAKSHIA MOORTHY ,MUSIC DIRECTOR BORN 1919 DECEMBER 9 - 2013 AUGUST 2




V.DAKSHIA MOORTHY ,MUSIC DIRECTOR BORN 
1919 DECEMBER 9 - 2013 AUGUST 2


பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி (வயது-93) ( 9 டிசம்பர் 1919 – 2 ஆகஸ்ட் 2013). இயற்பெயர் வெங்கடேசுவரன் தட்சிணாமூர்த்தி. இவர் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 125 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை பூர்விகமாக கொண்ட தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தினர், கேரள மாநிலத்துக்கு தொழில் நிமித்தம் சென்றனர். ஆலப்புழையில் வசித்து வந்த தட்சிணாமூர்த்தி மலையாள திரைப்பட இசையில் கர்நாடக சங்கீதத்தை அறிமுகம் செய்தவர்.

அடிப்படையில் கர்நாடக இசை வாய்ப்பாட்டுக்காரரான இவர் பழம்பெரும் பின்னணிப் பாடகி பி.லீலாவுக்கு வாய்ப்பாட்டு கற்றுத் தந்தார். லீலாவின் தந்தை மூலம் தட்சிணாமூர்த்திக்கு திரைப்பட வாய்ப்பு வந்தது.

1948-ல் வெளிவந்த “நல்லதங்காள்’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது.  நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர் போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணா மூர்த்தி.”ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை இசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகரை திரைப்பட உலகுக்கு அறிமுகம் செய்தவர் இவர்.பின்னாளில் ரஹ்மான் இளம் வயதில் தட்சிணாமூர்த்தியின் இசையில் கீபோர்டு வாசித்துள்ளார். கே.ஜே.யேசுதாஸின் தந்தை அகஸ்டின் ஜோசஃப், யேசுதாஸ், அவரது மகன் விஜய் யேசுதாஸ் என மூன்று தலைமுறையினர் இவரது இசையில் பாடியுள்ளனர்.

பல மலையாள திரைப்படங்களுக்கு இவரது இசையில் இசையமைப்பாளர் இளையராஜா கிடார் வாசித்துள்ளார்.

பின்னர் தட்சிணாமூர்த்தியிடம் சிறிது காலம் கர்நாடக இசை பயின்றார் இளையராஜா. அவரது மகள் பவதாரிணியும் இவரிடம் கர்நாடக இசை பயின்றவர்.

குருவாயூரில் உள்ள பிரபல கிருஷ்ணன் கோயில் நிர்வாகம் “நாராயணீயம்’ என்ற பக்தி செய்யுள்களுக்கு இசை அமைக்க இவரைத் தேர்ந்தெடுத்தது. மலையாள திரையிசை உலகில் இவரை “ஸ்வாமி’ என்று அழைப்பர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு தட்சிணாமூர்த்தி இசையமைத்துள்ளார்.

சிறந்த இசையமைப்பாளருக்கான கேரளா மாநில திரைப்பட விருது;
சுவர்ணமால்யா யேசுதாசு விருது;
கேரளா மாநிலத்தின் தானியல் வாழ்நாள் சாதனை விருது;
மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம் போன்றவைப் பெற்றுள்ளார்.

நன்றி:- logo
.
எஸ். தட்சிணாமூர்த்தி (சுசர்லா தட்சிணாமூர்த்தி சாஸ்திரி, இளையவர், நவம்பர் 11, 1921 - பெப்ரவரி 9, 2012) ஓர் இந்திய இசைக் கலைஞர் ஆவார். திரைப்பட இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், கருநாடக சங்கீத வித்துவான், வயலின் வாத்தியக் கலைஞர், இசைத்தட்டுத் தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர்.[1] தமிழ், தெலுங்கு, இந்தி, சிங்களம் மொழித் திரைப்படங்களுடன் ஹாலிவூட் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.[1][2]

இவரது தாத்தாவான சுசர்லா தட்சிணாமூர்த்தி சாஸ்திரி சீனியர் கருநாடக மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகப்பிரம்மம் தியாகராஜர் சுவாமிகளின் நேரடி சிஷ்ய பரம்பரையில் வந்தவராவார்.[2]
இளமைக்காலம்
எஸ். தட்சிணாமூர்த்தி 1921 நவம்பர் 11-ஆம் நாள் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள பெதகல்லேபள்ளி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சுசர்லா கிருஷ்ணபிரம்ம சாஸ்திரி ஒரு சங்கீத ஆசிரியராவார். தாயார் அன்னபூரணம்மா. ஆந்திரா பல்கலைக் கழகத்தில் கருநாடக இசையில் இளங்கலை பட்டம் பெற்றார்.[1]

தொழில் வாழ்க்கை
1938 ஆம் ஆண்டில் ஹெச். எம். வி. இசைத்தட்டுக் கம்பெனியில் ஆர்மோனியம் வாசிக்கும் கலைஞராக பணியில் அமர்ந்தார். பின்னர் அனைத்திந்திய வானொலி நிலையத்தில் 'ஏ' தர இசை வித்துவானாக பணியாற்றினார். பின்னர் தென்னிந்திய பகுதிக்கான இயக்குநராகப் பதவியுயர்வு பெற்றார்.

பின்னர் திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கி தெலுங்கு, தமிழ், கன்னடம், சிங்களம் ஆகிய மொழிப் படங்களுக்கு இசையமைத்தார். ஹாலிவூட்டில் ஜங்கிள் மூன் மென் (1955) உட்பட பல திரைப்படங்களுக்கு ரீரிக்கார்டிங் எனப்படும் பின்னணி இசை வழங்கினார்.[1]
இறப்பு
நீரிழிவு நோய் காரணமாக 1972 ஆம் ஆண்டில் ஒரு கண்ணில் பார்வையை இழந்தார். பின் 1987 ஆம் ஆண்டில் மறு கண்ணிலும் பார்வையை இழந்தார். 2012 பெப்ரவரி 9-ஆம் நாள் மூச்சுத் திணறல் காரணமாகச் சென்னையிலிருந்த அவரது இல்லத்தில் காலமானார்.[3]


பழம்பெரும் இசையமைப்பாளர்

பிரபல இசைக்கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளருமான வி.தட்சிணாமூர்த்தி (V.Dakshinamoorthy) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தவர் (1919). இவரது முழுப்பெயர், வெங்கடேஸ்வர தட்சிணாமூர்த்தி. தாத்தா, அம்மா, தாய்வழி மாமன்கள் அனைவருமே இசைக் கலைஞர்கள் என்பதால், சிறுவயது முதலே இசை ஆர்வம் கொண்டிருந்தார்.

* ஆலப்புழையில் உள்ள சனாதன தர்ம வித்யாசாலையில் 5-ம் வகுப்பு வரை பயின்றார். 13-ம் வயதில் அம்பாலபுழா ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் முதன் முதலாக இசைக் கச்சேரி செய்தார். திருவனந்தபுரத்தில் மூல விலாசா மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.

* கர்னாடக இசைக் கலைஞர் பொட்டி வெங்கடாசலத்திடம் இசை பயின்றார். 16-வது வயதில் வைக்கம் சென்ற இவர், இசைப் பயிற்சி செய்துகொண்டே இசை கற்றுக்கொடுக்கவும் தொடங்கினார். குருவாயூர் கிருஷ்ணன் கோயில் நிர்வாகம், ‘நாராயணீயம்’ செய்யுளுக்கு இசையமைக்கும் பணியை இவருக்கு வழங்கியது.

* 1948-ல் அகில இந்திய வானொலி நிலையத்தில் வேலை கிடைத்ததால் பெற்றோருடன் சென்னை வந்தார். இவரிடம் இசை கற்றுக்கொண்ட பாடகி பி.லீலாவின் தந்தை மூலம் திரையுலக அறிமுகம் கிடைத்தது. இளையராஜா உள்ளிட்ட பல இசைக்கலைஞர்களுக்கு இவர்தான் குரு.

* 1950-ல் மலையாளத்தில் வெளிவந்த ‘நல்லதங்கா’ என்ற திரைப்படத்தின் மூலம் இவரது திரை இசைப் பயணம் தொடங்கியது. மலையாளத் திரை இசையின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். 1952-ல் இவர் இசையமைத்த ‘ஜீவித நவுகா’ என்ற திரைப்படம் அதே ஆண்டில் இவரது இசையில் ‘பிச்சைக்காரி’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்தது.

* வசந்த கோகிலா, எம்.எல்.வசந்தகுமாரி, பி.சுசீலா, கல்யாணி மேனன் உள்ளிட்ட பல பின்னணிப் பாடகிகளுக்கும் இசை கற்றுத் தந்தார். ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ‘அம்மா’, ‘பிறவி’ உள்ளிட்ட ஏராளமான தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

* கர்னாடக இசை வடிவங்களை மிக நேர்த்தியாக திரையிசையாக மாற்றித் தந்தவர் என்ற பெருமை பெற்றார். ‘நந்தா நீ என் நிலா’ என்ற பாடல் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். 1977-ல் தமிழிலும் மலையாளத்திலும் வெளிவந்த ‘ஜகத்குரு ஆதிசங்கரர்’ திரைப்படத்தில் இவரது இசையில் வந்த பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

* குறிப்பாகத் தமிழில் பாடப்பட்ட ‘மறுபடி ஜனனம் மறுபடி மரணம்’ என்ற பஜகோவிந்தம் பாடல் மிகவும் பிரபலமடைந்தது. இவரது இசையில் வெளிவந்த ‘ஒரு கோவில் இரு தீபம்’, ‘ஆண்டவன் இல்லா உலகம் எது’, ‘நல்ல மனம் வாழ்க’ உள்ளிட்ட பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன.

* மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் 850-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 90-வது வயதில் ஒரு மலையாளம் திரைப்படத்துக்காக நான்கு பாடல்களுக்கு இசையமைத்தார். இறுதிவரையிலும் இசையமைத்து வந்தவர்.

* சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள மாநில விருது, கேரள அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் கவுரவங்களையும் பெற்றுள்ளார். மலையாளத் திரைப்பட உலகில் நான்கு தலைமுறைப் படங்களுக்கு இசையமைத்த பழம்பெரும் இசை மேதை வி.தட்சிணாமூர்த்தி 2013-ம் ஆண்டு மறைந்தார்.


பழம்பெரும் இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94.நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர் போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணா மூர்த்தி.இவர் இளையராஜா, பி.சுசீலா, ஜேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 3 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்தார்.
இன்று மாலை 6–30 மணிக்கு தட்சிணா மூர்த்தி சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவர் மலையாளப்பட உலகில் ‘சாமி’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர்.இவர் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 125 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.தட்சிணா மூர்த்தியின் இறுதிச்சடங்கு இன்று(சனிக்கிழமை) நடக்கிறது.
நன்றி: நக்கீரன்
.

No comments:

Post a Comment