SUDHAKAR BETHA ,TELUGU ACTOR
BORN 1959 MAY 18
.Sudhakar Betha is a South Indian film actor. He acted more than 600 films in Telugu, Tamil languages. He produced several films in Telugu, including the super hit Yamudiki Mogudu.
Background
Sudhakar was born in Markapuram, Prakasam district. His father was a deputy collector who traveled all across Andhra Pradesh.[1] He studied till intermediate in Andhra-Christian College, Guntur and then joined a Madras film institute and ventured into films.
Film career
Telugu films
In the beginning days in the Telugu film industry he was a lead actor in Srushti Rahasyalu, Oorikicchina Maata, Bhogi Mantalu, Konte Kodallu and others. He then started doing comedy roles which fit him well. He is famous for his peculiar voice modulation. He became a popular comedian in the 1980s and 90s by his dialogue pronunciation.
Tamil films
After intermediate, Sudhakar went to Madras and joined the Madras Film Institute in 1976. There he met Chiranjeevi and Hari Prasad who were his classmates. Among the three, Sudhakar got the first chance to act as a hero with actress Radhika in a Tamil movie Kizhakke Pogum Rail which was a super hit. He then established himself as an actor in Tamil, enjoyed a 100-day run in three of his very few Tamil movies. He and Radhika were a hit pair, acting together in 11 films.
Awards
He won the Nandi Award for best comedian twice for the films Peddarikam and Snehitulu.
தெலுங்கு நடிகரும், பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்துள்ளவருமான நடிகர் சுதாகர் கவலைக்கிடமாக உள்ளார். கோமாவில் விழுந்துள்ள அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்.தெலுங்குத் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகஇருப்பவர் சுதாகர். ஆனால் இவர் ஒரு காலத்தில் தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி ஹீரோவாக இருந்தவர்.கிழக்கே போகும் ரயில் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சுதாகர். தொடர்ந்து சுவர் இல்லாத சித்திரங்கள், எங்கள் வீட்டு ராஜாத்தி உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
நாளைடவில் தெலுங்கில் காமெடி நடிகராகி விட்டார் சுதாகர். 54 வயதாகும் சுதாகருக்கு சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது சிறுநீரகமும், மூளையும் சரிவர செயல்படவில்லை. இதையடுத்து அவர் தற்போது கோமாவுக்குப் போய் விட்டார். அடுத்த 48 மணி நேரம் வரை எதுவும் சொல்ல முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
70களில் சென்னையில் நடிப்பு வாய்ப்பு தேடி ஸ்டுடியோ ஸ்டுடியோவாக ஏறி இறங்கிய காலகட்டத்தில், சுதாகர் தங்கியிருந்த அறையில் அவருடன் இருந்து வாய்ப்பு தேடி வந்தவர் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இருவரும் ஒன்றாக சேர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் எண்ணற்ற நடிகர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே தொடர்ந்து உச்சத்திலேயே இருந்திருக்கிறார்கள்.
பலர் சில வருடம் முன்னணி இடத்துக்கு சென்றவுடன் தன்னிலை மறந்து ஆடி தன்னுடைய இடத்தை இழந்துள்ளனர். சமீபத்தில் கூட சில நடிகர்கள் கொஞ்சம் வெற்றிகள் வந்தவுடன் சரியான முறையில் நடந்து கொள்ளாமல் இருக்கின்றனர். அந்தவகையில் பாரதிராஜாவால் கிழக்கே போகும் ரயில் மூலம் அறிமுகமானவர் சுதாகர். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்கள் வெற்றி பெற்றது. நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டது. ரசிகைகள் சுற்றி வரத்தொடங்கினர்.
இதில் குடிப் பழக்கமும் ஆரம்பித்தது சுதாகருக்கு.. பாரதிராஜாவின் நிறம் மாறாத பூக்கள் பெரிய வெற்றி அடைந்த போதிலும் சுதாகர் கவனம் சிதறினார். சக்களத்தி என்கிற படத்தின் படப்பிடிப்புக்கு சுதாகர் போதையில் வந்தார் என்கிற வதந்தி காட்டுத்தீ போல பரவியது. இயக்குனர்கள் பயப்பட ஆரம்பித்தனர். நல்ல மார்க்கெட் இருக்கும் போதே புதுப்பட வாய்ப்புகள் மெல்ல குறைய ஆரம்பித்தது. பெண்கள் கூட்டமும் குறைந்தது. படங்கள் இல்லை. சம்பாதித்த பணம் எல்லாம் ஆடம்பர வாழ்க்கையில் கரைந்தது. முடிந்தது கதை. மூட்டை முடிச்சுக்களுடன் ஆந்திரா புறப்பட்டார் சுதாகர்.
அங்கு போயும் வாய்ப்புகள் தேடினார். ஹீரோ வாய்ப்பு கிடைக்கவில்லை. காமெடியன் ஆனார் சூப்பர் ஹீரோ சுதாகர்.
கோமாளி போல சேஷ்டைகள் செய்து நடிக்க ஆரம்பித்தார். பழக்க வழக்கங்கள் மட்டும் மாறவில்லை என்கிறார்கள்..! 600 படங்கள் வரை நடித்துள்ளாராம். கடந்த 10 வருடத்திற்கும் மேலாக எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்து வருகிறார். நடுவில் கோமாவுக்கும் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
.
No comments:
Post a Comment