LYRICS WRITER K.M. BALASUBRAMANIAM
BORN 1920 MAY 13 -1994 NOVEMBER 4
மறக்க முடியாத கவிஞர்-கு.மா.பாலசுப்பிரமணியம்.(13.05.1920--04.11.1994 )
--------------------------------------------------------------------------------
மறக்கமுடியாத இனிமையான இலக்கிய செறிவுடன் தேன் சொட்டும் பாடல்களை திரைக்கு அள்ளித் தந்தவர் கவிஞர்-கு.மா.பாலசுப்பிரமணியம்.அவர்கள்.
-
*அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ?,
*யாரடிநீ மோகினி கூறடி என் கண்மணி,
*சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி,
*உன்னைக் கண் தேடுதே உன் எழில் காணவே உள்ளம் நாடுதே,
*மலரும் வான்நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே,
*குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே,
* ஆடாத மனமும் ஆடுதே
-
மேலே குறிப்பிட்ட மறக்கமுடியாத பாடல்களை எழுதி திரையிசை வரலாற்றில் மங்காப் புகழ் பெற்றவர் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம். இவர் பாடல் எழுதிய முதல் படம் அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய ஓர் இரவு (1951). "புவிமேல் மானமுடன் உயிர்வாழ வழியேதும் இல்லையே' என்று தொடங்கும் இவரின் முதல் பாடலுக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம்.கவிஞர் கு.மா.பா., ஓர் இரவு படத் தயாரிப்பின் போது அண்ணாவுக்கு, வசனப் பிரதியெடுத்து துணை புரிந்ததுடன் அப்படத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். மகாகவி காளிதாஸ், கொஞ்சும் சலங்கை போன்ற புகழ் பெற்ற படங்களுக்குப் பாடல்களுடன் திரைக்கதை-வசனமும் எழுதியுள்ளார்.
-
பாரதியார் எழுதிய ராதைப் பாட்டிலுள்ள ஆறு தமிழ்க் கண்ணிகளை அடியொற்றி, சக்கரவர்த்தி திருமகள் (1957) படத்தில், காதலெனும் சோலையிலே ராதே ராதே என்று தொடங்கும் பாடலை எழுதிய கு.மா.பா., கன்னம் குழிவதிலே ராதே ராதே எந்தன் எண்ணம் சுழலுதடி ராதே ராதே -என்று பாடலின் அடி தோறும் ஈற்றிரு சீர்களும் ராதே ராதே என்று முடியும்படி இப்பாடலை அடியியைபினில் அமைத்துள்ளார்.காதலர்கள் காதலியை மலர், கனி போன்றவற்றுடன் ஒப்பிட்டு வர்ணித்துப் பாடுவது வழக்கம். ஆனால், கு.மா.பா., சிவனாரின் அவயங்களை காய்கறிகளுடன் ஒப்பிட்டு ஒரு வித்தியாசமான பாடலை எழுதியுள்ளார். சிவசக்தி (1956) என்ற மொழிமாற்று படத்தில் எஸ்.சி.கிருஷ்ணன் பாடும் "வெண்டைக்காய் என்று சொன்னாய்' என்ற பாடலே அது. வெண்டைக் காயை ஈசனாரின் விரலாகவும், முருங்கைக் காயை சடாமுடியாகவும், பூசணிக் காயை வயிறாகவும், வாழைக் காயை நெற்றியாகவும்,
சுண்டைக் காயை கண்ணாகவும் ஒப்பிட்டு, ஒரு அருமையான காய்கறி அமுது படையல் அளித்துள்ளார் கவிஞர்.கவிஞர் கு.மா.பா.,கடைசியாகப் பாடல் எழுதிய படம் கனவுகள் கற்பனைகள் (1982). இப்படத்தில், கங்கை அமரன் இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலில் "வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்கள்' என்று தொடங்கும் பாடலை எழுதியுள்ளார்.
-
இவர் 54 திரைப்படங்களில் 170 பாடல்கள் எழுதியுள்ளார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகிலுள்ள வேளுக்குடி என்ற ஊரில், மாரிமுத்து-கோவிந்தம்மாள் தம்பதியருக்கு 13.05.1920 இல் ஒரே மகனாகப் பிறந்தவர் கு.மா.பாலசுப்பிரமணியம். இவர்களின் பூர்வீகம் குறிச்சி என்ற சிற்றூரிலிருந்து குடிபெயர்ந்து வந்ததால், குறிச்சி மாரிமுத்து பாலசுப்பிரமணியம் என்பது கவிஞரின் முழுப்பெயரானது. கு.மா.பாலசுப்பிரமணியத்தின் இளம் வயதிலேயே அவரது தந்தை இறந்து விட்டதாலும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் இவரால் ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. இருப்பினும் எழுதப் படிக்கத் தெரிந்த இவரது தாய் இவருக்கு தேவாரம், திருவாசகம், திருவருட்பா போன்ற நூல்களை பயிற்றுவித்தார். கு.மா.பா., தனது பதினாறாவது வயதிலிருந்தே கதைகள், கவிதைகள் எழுதத் தொடங்கினார்.இவரது முதல் படைப்பான "இன்பத்துளி' என்ற சிறுகதை "சினிமா எக்ஸ்பிரஸ்' இதழின் முதல் ஆசிரியர் நவீனன் நடத்தி வந்த "நவயுவன்' என்ற பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து திருமகள், சண்டமாருதம், பிரசண்டவிகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளில் இவரது
படைப்புக்கள் பிரசுரமாயின. பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, உடுமலை நாராயண கவி, புதுமைப்பித்தன், தி.ஜ.ர., கு.ப.இராஜகோபாலன் ஆகியோரின் இயல் இசை ஆக்கங்களால் இவர் ஈர்க்கப்பட்டார்.
-
கு.மா.பா.வின் தமிழார்வத்தைக் கண்ட, சென்னையிலுள்ள சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் திருவேங்கடம், கு.மா.பாவிற்கு யாப்பிலக்கணதைப் பயிற்றுவித்தார்.07.09.1941 இல் இவருக்கும் சிதம்பரத்தைச் சேர்ந்த மரகதவல்லிக்கும் சீர்காழியில் திருமணம் நடைபெற்றது. 1942 இல் மரகதவல்லி காலமானார். நான்கு ஆண்டுகளுக்குப்பின், 26.05.1946 இல், திருவாரூர் ஜெயலட்சுமி என்பவரைக் கரம் பிடித்து மீண்டும் இல்லற வாழ்க்கையினைத் தொடங்கினார். கவி கா.மு.ஷெரிப்
இத்திருமணத்திற்கு வந்திருந்து மணமக்களை வாழ்த்தி, வாழ்த்துக் கவிதை வழங்கினார். 13.05.1979 இல் கவிஞரது மணிவிழா சிறப்புற நடைபெற்றது.கு.மா.பா., 1942 இல் மதுரையில் சி.பா.ஆதித்தனாரின் தமிழன் வார இதழிலும், 1944 இல் கோயம்புத்தூரில் வீரசக்தி மாத இதழிலும், 1945 இல் கொழும்பில் #வீரகேசரி நாளிதழிலும், தமிழரசு கழக ஏடுகளான தமிழ் முரசு, செங்கோல் ஆகிய பத்திரிகைகளிலும் துணையாசிரியராகப் பணியாற்றினார். தமது நண்பர் பி.எம்.சேவுகரத்தினம் என்பவருடன் சேர்ந்து தமிழ்க் குரல் என்னும் இதழையும் நடத்தினார். தமிழக எல்லைப் போராட்டங்கள், தலைநகர் போராட்டம், தமிழ்நாடு பெயர்மாற்றப் போராட்டம், மாநில சுயாட்சிப் போராட்டம் ஆகிய போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைசென்ற மொழிப்போர் தியாகி கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம். சென்னை மெரீனா கடற்கரை வள்ளுவர் சிலையின் பின்புறம் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறுவது கடற்கரை கவியரங்கம். இக்கவியரங்கத்தின் முதல் நிகழ்வை கவிஞர் பொன்னடியான் தலைமையில் தொடங்கி வைத்தவர் நமது கவிஞர் கு.மா.பா.தான். 2015 மே மாதம் நடைபெறுவது 529 ஆவது கவியரங்கமாகும்.உடுமலை நாராயண கவியைப் போலவே, கவிஞர் கு.மா.பா.வும் வெள்ளித் திரையில் வெண்பாவை விரவ விட்டவர். மகாகவி காளிதாஸ் (1966) படத்தில், இரு விகற்பங்களில் அமைந்த நேரிசை வெண்பாவினை நேர்த்தியாக எழுதியுள்ளார் இவர்.பூவில் இடங்கொள்ளப் போதாமல் என்னுடைய நாவில் இடங்கொண்ட நாயகியே நோவில்முடக்குற்ற தாயிவளும் முன்போல் எழுந்துநடக்கத் தருவாய் நலம்.வெள்ளித் திரையில் வெண்பாவை விரவ விட்ட கவிஞர் கு.மா.பா.வைப் பாராட்டி கிருபானந்த வாரியார் பாடிய வெண்பா இது:புகழ்பால சுப்பிரமணிப் புண்ணிய சீலன்தகவார் தணிகைச் சதகம் மிகவினிதாய்ப்பாடி வழங்கினான் பாரெலாம் போற்றியே நாடி உவக்கும் நயந்து."தே மா'வுக்கு சீரளித்தவர் "கு.மா.பா'.
-
25.01.1975 இல் தமிழக அரசால் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. 13. 05.1975 இல் ஈரோடு தமிழ்க் கவிஞர் மன்றம் இவருக்கு கவிக்குயில் என்ற பட்டம் அளித்தது. தமிழக அரசின் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் கவிஞர் பணிபுரிந்துள்ளார். 1989 இல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் காரியதரிசியாகவும் பணியாற்றியுள்ளார் கவிஞர்.
-
04.11.1994 அன்று காலை 9 மணியளவில் கவிஞர் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஏற்பட்ட நெஞ்சடைப்பு வலியினால் காலமானார். காலத்தால் அழியாத கவிகள் அளித்தவரை காலதேவன் அழைத்துக் கொண்டான்.கவிஞரின் துணைவியார் கு.மா.பா.ஜெயலட்சுமி சென்னை,மயிலாப்பூரில் நலமுடன் வசித்து வருகிறார். இவருடன் இவரின் புதல்வர்கள் கு.மா.பா.இளங்கோவன், கவிஞர் கு.மா.பா.திருநாவுக்கரசு (பணி ஓய்வு வங்கி அலுவலர்), கவிஞர் கு.மா.பா.கபிலன் (பணி ஓய்வு வங்கி அலுவலர்) ஆகிய மூவரும் நலமுடன் வசித்து வருகிறார்கள். கவிஞரின் புதல்விகளாகிய மங்கையர்க்கரசி கலியமூர்த்தியும், அங்கயற்கண்ணி கிருஷ்ணகுமாரும் நலமுடன் வாழ்ந்து வருகின்றனர்.
-
படங்கள்: ஞானம்கு.மா.பா. எழுதிய புகழ்பெற்ற பாடல்களில் சில*அமுதைப் பொழியும் நிலவே - தங்கமலை ரகசியம்
*ஆடாத மனமும் ஆடுதே - களத்தூர் கண்ணம்மா
*ஆடவாங்க அண்ணாத்தே - சக்கரவர்த்தி திருமகள்
* இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே - வீரபாண்டிய கட்டபொம்மன்
*உ ன்னைக் கண் தேடுதே -கணவனே கண்கண்ட தெய்வம்
* ஏமாறச் சொன்னது நானோ -நானும் ஒரு பெண்
*கனவின் மாயா லோகத்திலே -அன்னையின் ஆணை
*காதலெனும் சோலையிலே ராதே ராதே - சக்கரவர்த்தி திருமகள்.
*குங்கும பூவே கொஞ்சும் புறாவே -மரகதம்.
*சித்திரம் பேசுதடி -சபாஷ் மீனா
*சிங்கார வேலனே தேவா -கொஞ்சும் சலங்கை
*மலரும் வான்நிலவும் -மகாகவி காளிதாஸ்
*மாசிலா நிலவே நம் -அம்பிகாபதி
*யாரடி நீ மோகினி -உத்தம புத்திரன்
-
கவிஞர் கு.மா.பா. பாடல் எழுதிய படங்களில் குறிப்பிடத்தக்கவைஓர் இரவு (1951), ரத்தபாசம் (1954), கணவனே கண்கண்ட தெய்வம் (1955), அம்பிகாபதி (1957), சக்கரவர்த்தி திருமகள் (1957), தங்கமலை ரகசியம் (1957), அன்னையின் ஆணை (1958), உத்தம புத்திரன் (1958), பூலோக ரம்பை (1958),சபாஷ் மீனா (1958), மரகதம் (1959), களத்தூர் கண்ணம்மா (1960), விடிவெள்ளி (1960), வீரபாண்டிய கட்டபொம்மன் (1960), அரசிளங்குமரி (1961), திருடாதே (1961), கொஞ்சும் சலங்கை (1962), பட்டினத்தார் (1962), சித்தூர் ராணி பத்மினி (1963), நானும் ஒரு பெண் (1963), மகாகவி காளிதாஸ் (1966), தூரத்து இடிமுழக்கம் (1980), கனவுகள் கற்பனைகள் (1982)
கு.மா.பாலசுப்பிரமணியம்
1950-கள் தொடங்கி 1980-கள் வரையிலான காலப் பகுதியில் திரையிசைப் பிரியர்களின் இதயங்களில் கொள்ளை கொண்ட பல பாடல்களை எழுதியவர், இலக்கிய எழுத்தாளர்.
குறைந்த அளவில் பாடல்கள் புனைந்தாலும் ரசிகர்கள் மனதில் நிறைந்த அளவில் முத்திரை பதித்த கவிஞர் இவர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகிலுள்ள வேளுக்குடி கிராமத்தில் 1920-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் திகதி பிறந்தவர் கு.மா.பாலசுப்பிரமணியம். தந்தையார் குறிச்சி மாரிமுத்து. இவரது 4 வயதிலேயே தந்தை காலமாகிவிட்டதால் 6-ஆம் வகுப்பிற்கு மேல் படிப்பைத் தொடரமுடியவில்லை. தாயார் தமிழ், இலக்கிய ஆர்வலராக இருந்தபடியால் தாயாரிடமே தமிழும், ஆன்மீகமும் கற்றுக்கொண்டார்.
தனது 16-ஆவது வயதிலேயே சிறு கதைகளைத் தமிழ் வார மஞ்சரியில் எழுதிவந்தார். இவரது தமிழ் ஆர்வத்தைத் தெரிந்துகொண்ட சென்னைத் தமிழ் ஆசிரியர் ஒருவர் இவருக்குத் தமிழ் இலக்கணம் சொல்லிக் கொடுத்தார். பிரபல தமிழ்ப் பத்திரிகைகளான தமிழ் முரசு, தமிழ்க்குரல் போன்றவற்றில் வெளிவந்த இவரது கட்டுரைகளைப் பார்த்த அறிஞர் அண்ணாவின் பாராட்டை இவர் பெற்றார்.
1951-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் சொந்தத் தயாரிப்பான ‘ஓர் இரவு’ பாடல் சந்தர்ப்பம் இவருக்குக் கிடைத்தது. பெண்ணினத்தின் துன்பம் வெளிப்படுத்தும் வகையில் ’பெண்ணாக பிறந்தாலே வாழ்வில் எந்நாளும் துயர் தானோ’ என்ற பாடல் எழுதினார். 1952-இல் ஆர்.சுதர்சனத்தின் இசையில் ‘வேலைக்காரன்’ படத்தில் 5 பாடல்கள் எழுதினார். ’ஆனந்தமே ஆஹா ஆனந்தமே அறியாமல் மனதில் பொங்கும் ஆனந்தமே’ என்ற பாடல் எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலில் ஒலித்தது.
1953-இல் ஜி.ராமனாதனின் இசையில் ’இன்ஸ்பெக்டர்’ திரைப்படத்திற்காக எழுதினார், ‘மூடியிருந்த விழியில் வந்த மோகனக் கண்ணன் விளையாடினான் என்ற பாடல். 1954-இல் ‘ரத்த பாசம்’, 1955-இல் ‘செல்லப்பிள்ளை’க்காக 4 பாடல்கள் எழுதினார். ‘காவியக் காதல் வாழும் ஓவியம் நானே’ பாடல் சுதர்சனத்தின் இசையில் ஒலித்தது. ஜிக்கியின் குரலில் ’மதனா எழில் ராஜா நீ வாராயோ’ மிகப் பிரபலமான பாடல். இப்போதும் இலங்கை வானொலியில் கேட்கலாம். இப்பாடலில் பாடலின் இடையே கே.ஆர்.ராமசாமி, கே.சாவித்திரி, ரி.எஸ்.பாலையா ஆகியோரின் குரல்களும் ஒலிப்பது சிறப்பு. இதே ஆண்டில் ‘கோமதியின் காதலன்’, ‘கணவனே கண் கண்ட தெய்வம்’, இந்தியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட ’சாம்ராட்’ என்ற 3 படங்களில் பாடல்களை எழுதினார். பிற மொழிகளிலிருந்து தழுவி எடுக்கப்படும் படங்களுக்குப் பாடல்கள் எழுதுவது மிகவும் சிரமம். ‘இன்பக் கண்ணாளன் உனை நான் காணவில்லை, எந்தன் கண்ணோடு இமையே மூடவில்லை’ என்ற பாடலை அப்படத்திற்காக எழுதினார். இந்தியில் ஹேமந்த்குமார் இசையமைத்த அதே மெட்டில் அதே உச்சரிப்பை வெளிப்படுத்தும் வகையில் வார்த்தைகள் அமையவேண்டும். அதே வேளையில் பொருளும் விளங்கும் வகையில் இருக்கவேண்டும். கு.மா.பா. மிக அழகாக பாடல் வரிகளைத் தந்திருக்கிறார். அதற்கு உதாரணம் லக்ஷ்மி சங்கர் பாடிய ’நிலா வானிலே மேகமாய்’.
1951-இல் அறிமுகமான பிரபல பாடகி பி.சுசீலாவிற்கு 1955-இல் மிகப் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த பாடல் ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ படத்தில் இடம்பெற்ற ‘உன்னைக் கண் தேடுதே’. 1955-இல் வெளிவந்த இப்படத்தில் அடப்பள்ளி ராமராவின் இசையில் அந்தப் பாடலை இயற்றியவர் கு.மா.பாலசுப்பிரமணியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் காந்தம்போல் கவர்ந்திழுத்த பாடல்கள் இது.
1957-இல் 3 படங்கள். ‘அம்பிகாபதி’,’சக்கரவர்த்தித் திருமகள்’, ‘தங்கமலை ரகசியம்’. அம்பிகாபதியில் ரி.எம்.சௌந்தரராஜன், பி.பானுமதி பாடிய ‘மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே’ என்ற பாடலை அழகு தமிழ் கொஞ்சி விளையாட எழுதியவர் கு.மா.பாலசுப்பிரமணியம். எஸ்.ராமனாதன் வித்தியாசமான முறையில் அக்காதல் கீதத்தை முஹாரி ராகத்தில் இசை வடிவம் கொடுத்திருந்தார். ‘சக்கரவர்த்தித் திருமகள்’ படத்தில் ‘காதல் என்னும் சோலையிலே ராதே ராதே’, ’எல்லையில்லா இன்பத்திலே’ பாடல்கள். 1958-இல் ‘சபாஷ் மீனா’, ‘உத்தம புத்திரன்’, ‘பூலோக ரம்பை’, ‘எங்கள் குடும்பம் பெரிசு’ என்ற படங்கள். ‘சபாஷ் மீனாவில் 3 பாடல்கள். ‘சித்திரம் பேசுதடி’, ’ஆணாக பிறந்ததெல்லாம்’ , ‘அலங்கார வல்லியே அல்லியே’ பாடல்கள் நேயர் நெஞ்சங்களில் சுவடுகள் பதித்த பாடல்கள்.
1959-இல் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக ஜி.ராமனாதன் இசையில் பதினொரு பாடல்கள் எழுதினார் கு.மா.பாலசுப்பிரமணியம். அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதே ஆண்டில் மேலும் ஆறு படங்களுக்குப் பாடல்கள் எழுதும் சந்தர்ப்பம் கிடைத்தது கு.மா.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு. அவை ‘கல்யாணிக்குக் கல்யாணம்’, ‘நல்ல தீர்ப்பு’, ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’, ’புதுமைப் பெண்’, ‘யானை வளர்த்த வானம்பாடி’, ‘மரகதம்’ ஆகிய படங்களில் இவரது பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ‘மரகதம்’ படத்தில் ஜே.பி.சந்திரபாபு பாடிய ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே. பாடல் ‘சபாஷ் மீனா’ படத்திற்காக கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதினார். ஆனால் அந்தப் பாடல் அப்படத்தில் இடம்பெறாமல் போனதால் சந்திரபாபு அப்பாடலை ‘மரகதம்’ படத்திற்கு சிபாரிசு செய்து அதில் பாடி நடித்தார்.
1960-இல் எட்டுப் படங்களில் அவரது பாடல்கள் இடம் பிடித்தன. அவை சவுக்கடி சந்திரகாந்தா, ’எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’, ’கடவுளின் குழந்தை’, ‘களத்தூர் கண்ணம்மா’ , ‘குழந்தைகள் கண்ட குடியரசு’, ’பெற்றவள் கண்ட பெரு வாழ்வு’, ‘சங்கிலித் தேவன்’ , ‘விடி வெள்ளி’ ஆகியன. 1961-ஆம் ஆண்டு அரசிளங்குமரி’, ’கானல் நீர்’ , ’திருடாதே’ படங்களில் ஒவ்வொரு பாடல்கள் எழுதினார். 1962-இல் ’தெய்வத்தின் தெய்வம்’, ‘கொஞ்சும் சலங்கை’ , ‘பட்டினத்தார்’ என 3 படங்களில் அவரது பாடல்கள் இடம்பிடித்தன. எஸ்.ஜானகிக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்த ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடலை எழுதியவர் கு.மா.பாலசுப்பிரமணியம்.
புகழ் பெற்ற பாடல்களைப் பாடியவர்கள் பிரபலமடையும் அதே நேரம் பாடலுக்கு முகம் கொடுத்தவர்களை எவரும் கண்டுகொள்வதில்லையென்பது வருத்தப்பட வேண்டிய ஒரு விடையம்.
1963-இல் ‘சித்தூர் ராணி பத்மினி’, ‘நானும் ஒரு பெண்’ ஆகிய படங்கள். நானும் ஒரு பெண் படத்தில் ‘ஏமாறச் சொன்னது நானோ என் மீது கோபம் தானோ’ பாடலை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். 1964-இல் ‘சித்திராங்கி’, 1966-இல் ‘மகாகவி காளிதாஸ்’ படத்தில் மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் என்ற அற்புதமான பாடல். 1967-இல் ‘பக்த பிரகலாதா’ , 1980-இல் சலீல் சௌத்ரி இசையில் தூரத்து இடி முழக்கம் என்ற படத்திற்காக இவர் எழுதிய பாடல் ‘மணி விளக்கே’ என்று ஆரம்பிக்கும் பாடல்.
கு.மா.பாலசுப்பிரமணியம் கடைசியாக எழுதிய பாடல் ‘கனவுகள் கற்பனைகள்’ படத்தில் கங்கை அமரன் இசையில் ‘வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே’ என்று ஆரம்பிக்கும் பாடல். 54 படங்களில் 170 பாடல்களை எழுதியவர் கு.மா.பாலசுப்பிரமணியம். 1975-ஆம் ஆண்டு தமிழக அரசினால் கலைமாமணி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1994-ஆம் ஆண்டு நவம்பர் 4 அன்று இப்பூவுலகை நீத்தார். அவர் மறைந்தாலும் அவரது பாடல்களில் நம்மோடு வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவையில் ஒலிபரப்பாகும் ‘இன்னிசைச் சுவடுகள்’ நிகழ்ச்சியிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது. நிகழ்ச்சியை வழங்கியவர் சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி. விசாலாக்ஷி ஹமீத்’ அவர்கள். தயாரிப்பு:- திருமதி.ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்கள்.
இதழ் : விவேக போதினி (1920), கவிதை இயற்றியவர்: ச.தா. மூர்த்தி முதலியார்.
தமிழன் நாட்டிலே தமிழன் ஆட்சியே
தழைத்திடச் செய்யடா தமிழா - உடனே (தழை) தமிழ னுக்கென தனிக்கொடி யொன்றினைத் தந்து மகிழடா தமிழா நீ (தந்து)
படம் : கஞ்சன் (1947), பாடலாசிரியர் : கோவை அ. அய்யாமுத்து,
பாடியவர் : எம்.எம். மாரியப்பா, இசை : எஸ்.எம். சுப்பையா நாயுடு.
கு.மா. பாலசுப்பிரமணியன் கன்னியே மாமரித்தாயே
என் - காணிக்கை கண்ணிரே இன்னல் கடல்தனிலே
இறகில்லா பட்சிபோல் வீழ்ந்தேன் மின்னல் நிகரான வாழ்வில் -
மீளாத சோகம் கொண்டேனே. படம் : சிட்டாடல் ஞானசெளந்தரி (1948), பாடலாசிரியர் : கம்பதாசன், பாடியவர் : பி.ஏ. பெரியநாயகி, இசை : எஸ்.வி. வெங்கட்ராமன்.
காசு இல்லையே பூஜைபண்ண உனக்கு கண்ணி தனையே காணிக்கை தந்தேன் கண்யமும் புண்யமும் அடையுமுன்னால் மண்மீதில் என்னைக் காப்பாற்று அன்புடன்
படம் : இது நிஜமா (1948), பாடலாசிரியர் : கு.மா. பாலசுப்ரமணியம், பாடியவர் : ஜிக்கி. -
崇 கல்யாணம் செய்து வையுமே அந்தக் கானகத்தில் கிடைத்த ஞான செளந்தரியைக் (கல்) படம் : ஞானசொளந்தரி (1935), பாடல் : உடுமலை நாராயண கவி, பாடியவர் : சி.வி.வி. பந்துலு.
கல்யாணம் செய்து பாரடி - என்னைக் கல்யாணம் செய்து பாரடி - அடி கல்யாணி கல்யாணம் செய்து பாரடி - என்னைக் (கல்யாணம்) படம் : வேலைக்காரன் (1952), பாடலாசிரியர் : கு.மா. பாலசுப்ரமணியம், பாடியவர் : டி.எஸ். பகவதி, எம்.எஸ். ராஜேஸ்வரி.
விஜய்காந்த் பூர்ணிமா ஜோடியில் ‘தூரத்து இடி முழக்கம்’ திரைப்படத்திற்காக.. கே.விஜயன் இயக்கத்தில் வார்க்கப்பட்ட இப்பாடல் வரிகளாலும் இசையாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது!
.
திரைப்படம்: தூரத்து இடி முழக்கம்
இயக்கம்: கே.விஜயன்
பாடல்: கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியன்
இசை: சலீல் சௌத்திரி
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி
உள்ளமெல்லாம் தள்ளாடுதே..
உள்ளுக்குள்ளே ஏதோ எண்ணங்கள் போராடுதே..
துள்ளுமலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளிநிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே!!
உள்ளமெல்லாம் தள்ளாடுதே..
உள்ளுக்குள்ளே ஏதோ எண்ணங்கள் போராடுதே..
அன்புமொழிபேசி என் ஆசைவலைவீசி
கன்னிமீனை அள்ளிக்கொள்ள கை தாவுதே!
வாய்மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா
வண்டுவந்து தீண்டாமல் பூவாகுமா
கொண்ட ஆசைகள் கை கூடுமா?..
எல்லையில்லா இன்பங்கள் கொண்டாட்டமா
எண்ணும் யோகங்கள் உண்டாகுமா?
ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா
நம்பியுள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா
எந்தன் சொந்தங்கள் வீணாகுமா?
தாலிகட்டி வேலிகட்டி காப்பாற்றுவேன்
தங்கம் போல் உன்னைப் பாராட்டுவேன்!
.
No comments:
Post a Comment