Tuesday, 5 May 2020

KARL MARX , ECONOMIST BORN 1818 MAY 5 - 1883 ,MARCH 14






KARL MARX , ECONOMIST BORN 
 1818 MAY 5 - 1883 ,MARCH 14

காலங்களைக் கடந்த மனிதன் காரல் மார்க்ஸ்!
.

காலங்களைக் கடந்த மனிதன் காரல் மார்க்ஸ்!

ஆளும் வர்க்கத்துக்கும் அரசுகளுக்கும் எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால்ம், பல நாடுகளில் இருந்தும் துரத்தப்பட்ட அந்த மாபெரும் சிந்தனையாளர், அப்போது லண்டனில் குடியிருந்தார். அவரது மனைவி வசதியான ஒரு பிரபு குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் காதலுக்குரியவரை மணந்தபோது வறுமையையும் தன் வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்டார். நிரந்தரமற்ற வேலை, ஆளும் வர்க்கம் கொடுத்த நெருக்கடிகள், கொன்று தின்னும் வறுமை என வாழ்ந்தாலும் அதற்கிடையிலும் காதலை வளர்க்கத் தவறவில்லை அந்த லட்சியத் தம்பதிகள்.

ஒருநாள் இரவு குழந்தைகள் பசியினால் வீறிட்டு அழுதன. அந்தத் தாய் தன் குழந்தைகளுக்குப் பால் கொடுக்க முயற்சித்தாள். ஆனால் அவள் மார்புகளில் பால் சுரக்கவில்லை; ரத்தம்தான் சுரந்தது. தொடர்ச்சியான வறுமை துரத்திய நிலையில்,  ஒரு குழந்தை இறந்தபோது, அந்தக் குழந்தையின் உடலைப் புதைக்க அந்த மாபெரும் சிந்தனையாளனிடம் பணமில்லை. தன் மேல்கோட்டை விற்றுதான் தன் பிரியத்துக்குரிய குழந்தையின் உடலைப் புதைத்தார். நம்மைப் பொறுத்தவரை கோட் என்பது ஆடம்பரமாக இருக்கலாம். ஆனால் குளிர் நிறைந்த மேற்கத்திய நாடுகளில் கோட் அத்தியாவசியம். தனது கோட்டை விற்றுக் குழந்தையைப் புதைத்த அந்தத் துயரத்துக்குரிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்  காரல் மார்க்ஸ்!


உலகின் மாபெரும் சிந்தனையாளர்களில் எப்போதும் காரல்மார்க்ஸ்க்கு ஒரு முக்கிய இடமுண்டு. வறுமையும் நோயும் விடாது துரத்திக்கொண்டிருந்த காலத்தில்,  மார்க்ஸ் தனது ஏழ்மை குறித்து சிந்தித்து அதற்கான தீர்வுகளைத் தேடிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, உலகமெங்கும் ஒடுக்கப்பட்ட, வறுமையில் உழன்ற தொழிலாளர் வர்க்கம் குறித்து அவர் சிந்தித்தார். தனக்கு முன்பிருந்த தத்துவவாதிகளின் சிந்தனைகளைக் கரைத்துக் குடித்தவர்.

‘’எல்லாத் தத்துவங்களும் உலகம் எப்படித் தோன்றுகின்றன, இயங்குகின்றன என்று சிந்திக்கின்றன. நமது வேலை உலகம் எப்படி தோன்றியது என்று சிந்திப்பதில்லை, மாறாக உலகத்தை மாற்றியமைப்பதே!” என்றார். அதற்கு என்ன செய்வது? “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் உங்களுக்காகப் பொன்னான ஓர் உலகம் காத்திருக்கிறது!” என்ற புகழ்பெற்ற வாக்கியத்தை மார்க்ஸ் எழுதியது வரலாற்றின் பல திருப்பங்களுக்குக் காரணமானது.

காலங்களைக் கடந்த மனிதன் காரல் மார்க்ஸ்!

‘’ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே” என்ற மார்க்ஸ், உலக மனிதகுலத்தின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்தார். ஒவ்வொருகாலகட்டத்திலும் மனித இனம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது, இந்த மாற்றங்களுக்கு எப்படி மனித உழைப்பு காரணமாக இருக்கிறது என்ற ஆழமான ஆய்வுகளை முன்வைத்தார். உழைப்பினால் கிடைத்த பயன்களை அனைவரும் சமமாகப் பகிரும்வரை பேதங்கள் இருந்தது இல்லை. ஆனால் பகிர்ந்ததுபோக, மிஞ்சியிருந்தது ‘உபரி மதிப்பு’ என்றும் இந்த உபரி மதிப்பே மீண்டும் ‘மூலதனம்’ ஆகிறது என்றும் மூலதனத்தின் மூலமே வர்க்கங்கள் தோன்றின என்றும் வரலாற்றின் முடிச்சுகளை அவிழ்த்தார்.

இப்படியான ஆய்வு முடிவுகளை வந்தடைவதற்கு மார்க்ஸ் உழைத்த உழைப்பு கொஞ்சநஞ்சமல்ல. அதற்கு அவர் கொடுத்த விலைகளும் கொஞ்சமல்ல.

காலங்களைக் கடந்த மனிதன் காரல் மார்க்ஸ்!

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட சம்பவம், மார்க்ஸின் வாழ்க்கையில் ஒரு சின்ன துயரக்கீற்று மட்டுமே. தன் காதல் கணவன் மாபெரும் சிந்தனையாளன் என்பதைப் புரிந்துகொண்டு, எல்லாவிதத் துயரங்களையும் ஏற்றுக்கொண்ட ஜென்னி மார்க்ஸ், உலகின் அற்புதமான காதலிகளின் வரலாற்றில் நிரந்தரமாக நினைவுகூரப்படுவார், அதேபோல்தான் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் இருவருக்கும் இடையிலான நட்பும்கூட. ஏங்கெல்ஸும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்தான். மார்க்ஸின் சிந்தனைகளும் நூல்களும் வெளிவருவதற்குப் பொருளாதார அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர் ஏங்கெல்ஸே.

மார்க்ஸ் பல நாடுகளில் இருந்து துரத்தப்பட்டார். வாடகை கொடுக்க முடியாமல் பல வீடுகளில் இருந்தும் துரத்தப்பட்டார், ஆனாலும் அவர் தன் சிந்தனைகளையோ செயல்பாடுகளையோ நிறுத்திக்கொள்ளவில்லை. மார்க்சின் சிந்தனையால் இந்த மனித குலத்துக்குக் கிடைத்த நிகரற்ற அறிவுக் களஞ்சியம் ‘மூலதனம்’. அதற்குப் பின் கோடிக்கணக்கான புத்தகங்கள் உலகின் பல பாகங்களில் இருந்து உருவாகிவிட்டபோதும் ‘மூலதனம்’ எப்போதும் உலகின் ஆகச் சிறந்த நுால்களில் ஒன்றாக இன்றும் இருக்கிறது.

உற்பத்தி உறவுகள், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், அரசு என்னும் வர்க்க நலன் பேணும் கருவி, கருத்தை முதலாகக் கொண்டுதான் சமூகம் இயங்குகிறது என்னும் பார்வைக்கு மாறாக பொருளின் அடிப்படையில் சமூக மாற்றத்தை ஆராயும் பொருள்முதல்வாதம், மதம் மனிதனுக்கு அபினாக இருந்ததோடு எப்படி இரக்கமற்ற உலகத்தின் இரக்கமுள்ள ஆன்மாவாக மாறியது என்னும் சிந்தனை முன்னெடுப்பு, அந்நியமாதல் என மார்க்சின் ஆய்வுகள் விரிந்து பரந்தவை. மார்க்சின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட அவசியம் படித்து விவாதிக்கப்பட வேண்டியவை அவரது சிந்தனைகள். ‘தொழிலாள வர்க்கம் ஒன்றிணைந்து புரட்சி செய்து,  முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் கருவியான அரசையும் தூக்கியெறிந்து, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும்’ என்ற அவரது கனவை லெனின் ரஷ்யாவில் நடத்திக்காட்டினார்.

காலங்களைக் கடந்த மனிதன் காரல் மார்க்ஸ்!
சோவியத் யூனியனின் அனுபவங்களில் இருந்து சற்றே வேறுபட்டு, உள்நாட்டு அனுபவங்களுடனும்,  படிப்பினைகளுடனும் பாட்டாளி வர்க்கத்தையும், விவசாய வர்க்கத்தையும் ஒன்றிணைத்து சீனாவில் புரட்சியை ஏற்படுத்தினார் மாவோ. வியட்நாம், கியூபா எனப் பல நாடுகளிலும் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். எல்லா நாடுகளிலும் மார்க்ஸ் விரும்பியபடி ஒரு முழுமையான, வர்க்கபேதங்கள் அற்ற சமுதாயம் உருவானது என்று சொல்ல முடியாது. சோவியத் யூனியன் உடைவு என்பது உலகம் எங்கிலும் மார்க்சியச் சிந்தனையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் சோர்வை ஏற்படுத்தியது. ஆனாலும் 90களுக்குப் பிறகு உருவான உலகமயமாக்கலும் புதிய பொருளாதாரக் கொள்கையும் எந்த அற்புதங்களையும் விளைவிக்கவில்லை.

விவசாயிகளின் தற்கொலை, அந்நிய மூலதனங்கள் உள்ளூர்த் தொழிலாளர்களைச் சுரண்டுவது, முன்னேறிய நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, கொடூரமான நுகர்வுக் கலாசாரம், சுற்றுச்சூழல் சீர்கேடு, ஏகாதிபத்தியத்தின் குழந்தையாய் வளர்ந்துள்ள மதத் தீவிரவாதம் ஆகியவை முதலாளித்துவத்தின்மீது கடுமையான விமர்சனங்களைத் தற்போது ஏற்படுத்தியுள்ளன என்பதை மறுக்கமுடியாது.

மார்க்ஸின் சிந்தனைகள் எப்போதும் இறுதியானவை. மார்க்ஸுக்குப் பிறகு உலகின் பல்வேறு நாடுகளில் தோன்றிய மார்க்சியச் சிந்தனையாளர்கள் காலத்தின் பாடங்களைக் கணக்கெடுத்து, மார்க்சியத்தைச் செழுமைப்படுத்தத்தான் செய்கின்றனர். ஒதுக்கப்பட்ட மக்களுக்காக எந்தத் தியாகங்களையும் செய்யும் செம்படை எல்லா நாடுகளிலும் இருக்கிறது.

மனிதகுலம் உள்ளளவும் மார்க்ஸ் நினைக்கப்படுவார். ஏனெனில் அவர் தேசியம், மொழி, இனம் என எல்லாவற்றுக்கும் அப்பால் உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்காகச் சிந்தித்த மாமனிதன்.

இன்று அவரது நினைவுநாள்!

- ரீ.சிவக்குமார்
கார்ல் மார்க்ஸ் 

உலகுக்கு புது புது சித்தாந்தங்களை தன் அறிவின் மூலம் பேசிய ஒரு பொதுவுடைமை அறிஞர், பொருளாதார ரீதியாக நிறைய கண்டுபிடிப்புகளும் கட்டுரைகளும் வெளியிட்டவர், அவர்தான் காரல்மார்க்ஸ். முதன்முதலில் தன் காதலிக்காக காதல் கடிதங்கள் எழுதியதே  ஆரம்பப்புள்ளி என்றால் யாரால் நம்ப முடியும். காரல் மார்க்ஸ், உலகுக்கு கம்யூனிச சித்தாந்தங்களை வெளிக்கொண்டுவந்தவர். இப்படி அனைத்தையும் உலகுக்கு கொண்டுவந்தவருக்கு வாழ்கை முழுவதும் யார் உறுதுணையாக இருந்திருப்பார் என்றால் அது அவரது மனைவி ஜெனியாகத்தான் இருக்கமுடியும். "மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு. ஒரு மனிதனை இப்படி ஒருவர் காதலிக்க முடியுமா என்று தெரியவில்லை, வறுமையின் காரணமாக தங்கள் குழந்தைகள் இறக்கும்போது கூட, மார்க்ஸ் மீது எந்த கோபமும் இல்லாமல் நீங்கள் நினைப்பதையே செய்யுங்கள் அதற்கு நான் பக்க பலமாக இருக்கிறேன் என்றவர்தான் ஜெனி. இது ஆணாதிக்கத்தால் நடந்ததில்லை, மார்க்ஸ் ஜெனி மீதும், ஜெனி மார்க்ஸ் மீதும் வைத்திருந்த புரிதலினால் அமைந்தது. இவர்கள் கல்யாணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதில்லை, அவர்களே சிறுவயதிலிருந்து நண்பர்களாகி பின் வாழ்க்கை துணைவர்களாய் நிச்சயித்து கொண்டது. இது ஒரு புரிதலால் உண்டான இருவரின் கதை.


பால்யவயதில் அடாவடியாக சுற்றித்திரிந்த மார்க்ஸ், ஒரு பக்கம் வீட்டின் வறுமையில் சிக்கித்தவித்துள்ளார். ஆனால்  ஜெனியின் வீடோ பணக்கார குடும்பம். காரல் மார்க்ஸ் தன் உயர்படிப்பிற்காக படிக்கச்செல்லும்வரை அவருக்கு சமூகத்தின் மீது எந்த ஒரு அக்கறையும் இருந்ததில்லை. அவருக்கு இருந்த ஒரே அக்கறை ஜெனி மட்டும்தான். கல்லூரிக்கு சென்றவுடன் ஜெனிக்காக மதுகுடித்துவிட்டு நண்பர்களுடன் காதல் பாட்டு, கவிதை, ஜெனிக்கு காதல் கடிதம் என அனைத்தையும் எழுதிவிட்டு ஜெனியின் பதில் கடிதத்திற்காக காத்திருந்திருந்தார். இப்படி போய்க்கொண்டிருந்தவர் வாழ்ககையில்தான் சமூகத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. இதுவரை காதலுடன் மட்டும் பயணித்த காரல், அதன்பின் சமுகத்தையும் தன்னுடன் சேர்த்து பயணிக்கத்தொடங்கினார்.


மார்க்ஸுக்கு படிப்பு முடிந்தது. இங்கு ஊரில் அழகியான ஜெனியை திருமணம் செய்ய வரன்கள் வந்துகொண்டே இருக்கிறது. ஜெனி அதை எல்லாவற்ரையும் நிராகரிக்கிறார். மார்க்ஸை மட்டும்தான் திருமணம் செய்வேன் என்கிறாள். நீங்கள் நினைப்பது போன்று இவர்கள் குடும்பத்தில் பணக்கார, ஏழை சண்டை எதுவும் இவர்கள் காதல் கதைகளில் இல்லை. ஜெனியின் அப்பாவுக்கு மிகவும்பிடித்தமான ஒருவர் காரல்மார்க்ஸ். ஜெனியின் வீட்டில் காதலுக்கு பச்சைக்கொடிதான். ஆனால், மார்க்ஸின் வீட்டில்தான் பிரச்சனையே. மார்க்ஸின் குடும்பம் கிறிஸ்துவர்களாக மதம் மாறியிருந்தாலும் பூர்விகமாக யூதர்கள். அதுதான் இங்கு பிரச்சனையே, மார்க்ஸின் அம்மா "ஒரு யூதன் ஜெர்மன் பெண்ணை திருமணம் செய்வதா நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்" என சொல்லிவிட்டார். இதனையடுத்து காரல் மார்க்ஸ் ஜெனியை திருமணம் செய்யவேண்டுமென்றால் முதலில் ஒரு வேலை ஒரு சின்ன சம்பாத்தியம் வேண்டும் என நினைக்கிறார். ஆதலால், ஜெனியிடம் எனக்காக காத்திரு நான் உன்னை வேலைகிடைத்தவுடன் அழைத்து செல்கிறேன் என்கிறார். ஜெனியும் காத்துக்கொண்டே இருக்கிறாள் ஏழு வருடங்கள் ஓடிவிடுகிறது. பின்னர் நண்பர்கள் உதவியுடன் பாரிஸில் வேலை கிடைக்க ஜெனியை திருமணம் செய்துகொள்கிறார், சில நிபந்தனைகளுடன். "நம் திருமணம் ஆடம்பரமாக இல்லாமல் சிறிய முறையில் தேவாலயத்தில் பதிவுசெய்தால் போதுமென்று" கூறுகிறார். வெறும் ஐந்து பேர் கொண்டு நடக்கிறது அவர்கள் திருமணம். பொதுவாக பெண்கள் தனக்கு திருமணம் ஆடம்பரமாக நடக்கவேண்டும் என நினைப்பார்கள். ஆனால் இங்கு ஜெனியோ "எனக்கு நீ கிடைத்தால் போதும், உன்னுடன் நான் வாழ்ந்தால் போதும்" என்று நினைத்திருப்பார் போல அதற்கு சரி என்று சொல்லிவிட்டார்.


marx and jenny

இவர்களின் தேன்நிலவுக் கதைகளை கேட்டால் கேலிக்கூத்தாகத்தான் இருக்கும். பத்து பெரிய பெட்டிகள் நிறைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் மார்க்ஸ். அதற்கு ஜெனியும் நாம் இருவரும் சேர்ந்தே படிப்போம் என்று கூறியுள்ளார். எத்தனை காதலிருந்தால் இப்படி ஒரு சொல் இங்கே வந்திருக்கும். இயற்கையை ரசிக்க சென்ற மார்க்ஸ் வீட்டை பூட்ட மறந்துவிட திருடன் வீட்டில் இருக்கும் அத்தனை பணத்தையும் திருடிவிடுகிறான். இந்த நிகழ்வை ஜெனியிடம் அவர் சொல்ல, ஜெனி விழுந்து விழுந்து சிரிக்கிறார். சிரித்துக்கொண்டே, " நாமும் இனி உழைக்கும் வர்க்கம் ஆகிவிட்டோம் என்கிறார். காரல் மார்க்ஸுக்கு போக, போக சமூகத்தின் மீது பற்று அதிகமாகிறது. இவர் செய்யும் வேலைகளுக்கு எங்குபார்த்தாலும் எதிர்ப்புகளாக இருக்க நாட்டை விட்டு வெளியனுப்பப்படுகிறார். உடன் மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள் என்று எந்த யோசனையும் இல்லாதவராக இருக்கிறார் மார்க்ஸ். இவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் எதுவும் சொல்லாமல் ஜெனியும் இருக்கிறார். காதலனை பார்த்து எந்த நேரத்திலும் "வீட்டை மட்டும் கவனித்தால் போதும், நீங்கள் நாட்டுக்கு ஒன்று செய்யவேண்டாம்" என சொல்லியதே இல்லை. வறுமையினால் இவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகள் இறந்திருக்கிறது. சுற்றிலும் கடன் நண்பர்கள் உதவியுடன்தான் வாழ்க்கையை ஒட்டியிருக்கிறார்கள். இதுபோன்று நடக்கும்போது கூட மார்க்ஸ் எதோ ஒரு சமூக யோசனையில்தான்  இருந்திருக்கிறார்.

இத்தனை துயரங்களிலும் உடன் இருந்த ஜெனி, மார்க்ஸ் இறக்கும் ஓராண்டுக்கு முன், நோயுற்று கிடக்கிறார். ஒரு அறையில் ஜெனியும், மறு அறையில் மார்க்ஸும்  இருவரும் பார்க்கக்கூட முடியாமல் இருக்கின்றனர். ஜெனி இறந்து கல்லறையில் புதைக்கும் வரை மார்க்ஸை ஜெனியின் உடலை பார்க்க யாரும் அனுமதிக்கவில்லை. அவளின் நோய் தொற்றிவிடும் என அஞ்சினர். இறுதி அஞ்சலிக்கு கடிதம் எழுதி அனுப்பினார் மார்க்ஸ். காதல் கடிதங்களில் ஆரம்பித்த அவர்களின் காதல்,  அதே காதல் கடிதத்தோடு முடிகிறது. . அதில் "அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்கு கிடைத்தது ஒரு வரம்" என்று அதில் எழுதியுள்ளார். நான்கு நாட்கள் கழித்து கல்லறையில் பூ வைத்திவிட்டு கண்ணில் நீர் வழிய கதறியிருக்கிறார். அதன் பின்னரும் சமூகத்துக்காக போராடவேண்டும் என சமூகப்பணிக்கு வந்திருக்கிறார் இருந்தாலும் மார்க்ஸின் நெருங்கிய நண்பரான ஹெங்கல்ஸ் கூறுகிறார்," ஜெனி இறந்த பின்பு, மார்க்ஸ் ஒரு ஆவியாக மட்டும்தான் இருக்கிறார்" என்று. ஒருவேளை தன் பாலிய வயதில் ஜெனியிடம் உரையாடிய ஷேக்ஸ் ஸ்பியர் காதல் கதைகளை கேட்டுக்கொண்டிருந்திருப்பாரோ? தன்னை விட நான்கு வயது பெரியவரான ஜெனி மார்க்ஸிடம் அடிக்கடி சொல்வாராம், " நான் உன்னை குழந்தையாக இருக்கும்பொழுதிலிருந்து பார்த்து வருகிறேன் மார்க்ஸ்" என்று. மார்க்ஸ் என்ற மாமேதையை உலகறிய செய்த பெருமைக்கு அவரது சித்தாந்தங்கள் எப்படி ஒரு காரணமாக  இருந்ததோ, அதேபோல ஜெனியும் ஒரு காரணமே...



Karl Marx to Resign, Ditch Legacy Due to Sexual Misconduct
.
The father of scientific socialism and an inspirational figure to many leading Democrats, Karl Marx has announced that he is resigning as a seminal thinker and is asking all his followers, especially women, to forgive him and forget his doctrine of class conflict and communist internationalism due to allegations of sexual abuse of his female aide and a criminal conspiracy to cover it up.

In his remarks, the author of the Communist Manifesto stated,

“This decision is not about me. It’s about the workers of the world. It’s become clear that I can’t both continue to deal with my history of sexual misconduct (some of which I remember differently) and at the same time remain an effective messianic leader of the oppressed in their struggle against capitalist exploitation.”

Marx continued,

“As a white cisgendered heterosexual male, I have cheated on my wife, sexually assaulted my subordinate, and otherwise abused my power and privilege to hurt and victimize women. I therefore feel that I no longer have the right, nor the moral authority to defend my philosophy of class victimization, to incite class hatred, provoke violent anti-bourgeois revolutions, and establish proletarian dictatorships.”

The pressure on the leader of the exploited masses to step down has been mounting for days, ever since the New York Times broke the story about how Mr. Marx, a husband and a father of three, sexually exploited his longtime family maid, Helen Demuth. Fearing to lose her job in a volatile capitalist economy, Ms. Demuth yielded to her employer’s sexual harassment. What started as inappropriate touching and groping, soon escalated into what legally amounts to sexual assault in the workplace, which continued daily for years in Mr. Marx’s home, where Mrs. Marx and their daughters also resided.

According to The New York Times, the repeated sexual abuse of Ms. Demuth by her employer, compounded by the unavailability of women’s health services, resulted in the birth of a male child. Fearing that this would destroy his reputation of a rebel against bourgeois morals, Karl Marx organized a conspiracy to cover up both the affair and the baby. His co-conspirators were his close friend and collaborator Friedrich Engels and Ms. Demuth – a powerless victim who was intimidated into silence by the men in positions of power.

The conspiracy involved abandoning the child, Freddy Demuth, who ended up being one of the many fatherless inner-city clients of foster care. Upon discovering the truth, Karl Marx’s wife, Jenny Marx, committed suicide. Their daughter, Laura, killed herself several years later.

Some House Democrats called on Karl Marx to leave office last Thursday, increasing pressure on the veteran revolutionary thinker to abandon his theories of social justice and economic equality amid serious allegations about his sexual transgressions, child abandonment, the cover-up, and infidelity that caused his wife and daughter to kill themselves.

Sunday on NBC’s “Meet the Press,” House Minority Leader Nancy Pelosi (D-CA) tried to defend Mr. Marx by blaming the attacks on Prussia’s meddling, adding that “Karl Marx is an icon in our academia.” Even if some of it is true, she said, “this episode only shows us how essentially human Marx is. He has the same fears, despairs, and guilts that afflict everyday Americans. That doesn’t mean, of course, that we can equate Karl Marx with Donald Trump or Roy Moore.”

On Monday, however, more than half of the Democrats in the Senate, including party leadership, called for Marx to step down, fearing that “creepy” evidence of his duplicity and hypocrisy might tarnish their political futures and weaken efforts to unseat President Trump.

“I consider Karl Marx a beacon of progress and greatly respect his accomplishments, but he has a higher obligation to his followers, and he should step down immediately,” Sen. Chuck Schumer (D-NY) said in a statement.

In a change of heart, Pelosi later clarified her position. “Zero tolerance means consequences for everyone,” she said at Tuesday’s news conference. “No matter how great the legacy, it is no license to harass or discriminate. In fact, it’s even more disappointing.”

Some observers have pointed out the historical inevitability of Marx’s downfall as the leading political theorist, whose teachings about a worldwide conspiracy of oppressors against their victims have given birth to modern feminism, without which renouncing Karl Marx’s legacy due to his sexual misconduct and his overall creepiness would have been impossible.





.




.

No comments:

Post a Comment