World Wide Web EFFECTED FROM 1991 AUGUST 6



உலகளாவிய வலை (World Wide Web, www,
1991 AUGUST 6 முதல் செயல்பாட்டுக்கு வந்தது

பொதுவாக "'வலை" எனச் சுருக்கமாக அழைக்கப்படுவது) என்பது இணையத்தின் வழியாக அணுகப்படும், ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட மீயுரை ஆவணங்களைக் கொண்டுள்ள அமைப்பாகும். ஓர் வலை உலாவியைக் கொண்டு உரை, படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற பல்லூடகக் கூறுகளைக் கொண்டுள்ள வலைப் பக்கங்களைக் காணவும், மிகை இணைப்புகளைப் பயன்படுத்தி அவற்றில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு செல்லவும் முடியும். முன்னாளில் இருந்த மீயுரை முறைமைகளைப் பயன்படுத்தி, 1989 ஆம் ஆண்டு ஆங்கில இயற்பியல் ஆய்வாளரும் உலகளாவிய வலைச் சங்கத்தின் தற்போதைய இயக்குநருமான சர் டிம் பெர்னெர்ஸ்-லீ என்பவர் உலகளாவிய வலையைக் கண்டறிந்தார். பின்னாளில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள CERN நிறுவனத்தில் இவருடன் ஒன்றாகப் பணிபுரிந்த ராபர்ட் கயில்லியவ் என்ற பெல்ஜிய கணினி விஞ்ஞானி இதற்கு உதவியாளராக இருந்தார். இவர்கள் 1990 ஆம் ஆண்டு ஒரு பிணையத்தில்[1] "உலாவிகள்" மூலமாகக் காணக்கூடிய வகையில் "மீயுரைப் பக்கங்களைச்" சேகரித்து வைக்கக்கூடிய "வெப் ஆஃப் நோட்ஸ்" என்னும் அமைப்பிற்கான திட்டத்தை உருவாக்கி, அந்த


வலையை டிசம்பரில்[2] வெளியிட்டனர். முன்பே உள்ள இணையத்துடன் இணைக்கப்பட்டு, களப் பெயர்கள் மற்றும் எச்.டி.எம்.எல் (HTML) மொழிக்கான சர்வதேசத் தரநிலைகள் சேர்க்கப்பட்டு உலகளவில் பிற வலைத்தளங்களும் உருவாக்கப்பட்டன. அப்போது தொடங்கி, பெர்னெர்ஸ்-லீ (வலைப் பக்கங்களைத் தொகுக்கப் பயன்படும் மார்க்-அப் மொழிகள் போன்ற) வலைத் தரநிலைகளின் மேம்பாட்டுக்கு வழிகாட்டுவதிலும் வழிநடத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்து வந்தார், சமீபத்திய ஆண்டுகளில் தனது கவனத்தை பொருள் வலையில் செலுத்தி வருகிறார்.
உலகளாவிய வலையானது, தகவல்களை இணையத்தின் வழியே, பயன்படுத்த எளியதும் நெகிழ்தன்மையுள்ளதுமான வடிவமைப்புகளின் மூலம் பரப்புவதைச் சாத்தியமாக்கியது. இவ்வாறாக, உலகளாவிய வலையானது இணையத்தின்[3] பயன்பாட்டைப் பிரபலமாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. உலகளாவிய வலை மற்றும் இணையம் ஆகிய இரண்டு சொற்களும் வழக்கில் ஒரே


பொருள்படக்கூடியவையாகப் பயன்படுத்தப்பட்டாலும், உலகளாவிய வலை என்பது இணையம் என்ற சொல்லுக்குப் பொருள் ஆகாது.[4] வலை என்பது இணையத்தில் உருவாக்கப்பட்ட ஓர் பயன்பாடாகும்

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

PARAVAS OF TAMILNADU

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER