NAMITA PRAMOD ,MALAYALAM ACTRESS BORN 1996 SEPTEMBER 19




NAMITA PRAMOD ,MALAYALAM ACTRESS 
BORN  1996 SEPTEMBER 19


.நமீதா பிரமோத் என்பவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார்.[3] டிராபிக் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.[4]

திரைத் துறை
இவர் வேளாங்கண்ணி மாதாவு, என்றெ மானச புத்ரி, அம்மே தேவி உள்ளிட்ட திரைத் தொடர்களில் நடித்தார்.[5][6] இவர் குஞ்சாக்கோ போபனுடன் புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் என்ற திரைப்படத்தில் நடித்தார்.[7]
வளர்ந்து வரும் இருபத்தி மூன்று வயதே நிரம்பிய மலையாள நடிகை நமீதா பிரமோத். நிறைய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் நிமிர் படத்தில் நடித்தார். தன் அழகு ரகசியம் குறித்தும், திருமணம் குறித்தும் அவர் ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது அழகுக்கான ரகசியம் என்ன என்று எல்லோரும் கேட்கின்றனர். அப்படி எந்த ரகசியமும் என்னிடம் கிடையாது. நிறைய சாப்பிடுவேன்; ஆனால், 58 கிலோ எடையை தாண்ட மாட்டேன். அதற்காக, உணவுக் கட்டுப்பாடெல்லாம் இல்லை. எல்லா வீடுகளிலும், என்னை ஒத்த பருவப் பெண்கள், அழகுக்காக என்ன செய்வார்களோ, அதையே தான், நானும் செய்கிறேன். தயிர், கடலைப் பருப்பு மாவு, சிறுபயறு பருப்பு மாவு போன்றவைகளை பூசி குளிக்கிறேன். வாரத்தில் ஒருநாள், கட்டாயம் எண்ணெய் மசாஜ் செய்து கொள்வேன்.

எனது திருமணம் குறித்தும் நிறைய கேள்வி எழுப்பப்படுகிறது. திருமணத்துக்கு இப்போது அவசரம் எதுவும் இல்லை. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் தான் என்னுடைய திருமணம். பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் தான் நடக்கும். திருமணம் செய்து கொண்ட கையோடு, சினிமாவை விட்டு விடுவேன். பிசினஸ் தொடங்கி விடுவேன்.

எனது தாயாரைப் போன்று, சிறந்த குடும்பத் தலைவியாக இருக்க ஆசைப்படுகிறேன். உடனே, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்களை மிகச் சிறந்த முறையில் வளர்க்க வேண்டும். இதெல்லாம் என் திட்டங்கள். கட்டாயம் நிறைவேறும்.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER