HANSIKA ,MOTWANI ,HINDI ACTRESS BORN 1991 AUGUST 9



HANSIKA MOTWANI ,HINDI ACTRESS BORN 1991 AUGUST 9



ஹன்சிகா மோட்வானி (ஆங்கில மொழி: Hansika Motwani, பிறப்பு: ஆகத்து 9, 1991) ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார்.
சொந்த வாழ்க்கை
இவர் இந்தியாவில் மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர்.[1] ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார். மும்பையில் போடார் சர்வதேசப் பள்ளியில் கல்வி பயின்றார்.

தொழில் வாழ்க்கை

ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார் (இது சஞ்சு என்ற பையனைப் பற்றியும் அவனது மந்திரப் பென்சிலைப் பற்றியதுமான கதையாகும்). அதே நேரத்தில் தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத் என்ற இந்தியத் தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்தார். இதற்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை அவர் பெற்றார். கோய் மில் கயா திரைப்படத்தில் வரும் குழந்தைகளில் ஒருவராகவும் நடித்திருந்தார்.

ஹன்சிகா, பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் தேசமுதுருவில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக முதன்முதலில் அறிமுகமானார். இது குற்றப் பத்திரிகை நிருபர் ஒருவர் ஒரு சன்யாசியின் மேல் காதல் கொள்வதைப் பற்றியத் திரைப்படமாகும். இதில் சன்யாசியாக ஹன்சிகா நடித்திருந்தார்.[2]

பாலிவுட்டில் ஒரு முக்கிய நடிகையாக ஆப் கா சரூர் - த ரியல் லவ் ஸ்டோரி யில் இமேஷ் ரெஷிமியாவுடன் ஹன்சிகா அவரது முதல் தொடக்கத்தைத் தந்தார். இதில் இமேஷ் ரெஷிமியாவின் காதலி ரியாவாக பாத்திரம் ஏற்றிருந்தார். 29 ஜூன் 2007 அன்று இத்திரைப்படம் வெளியானது, இத்திரைப்படம் இடைப்பட்ட வெற்றியைக் கொடுத்தது. இதன் பின்னர் ஹீ: த ஒன்லி ஒன் எனத் தலைப்பிடப்பட்ட இந்தித் திரைப்படத்தில் அவரது குடும்பத்திற்காகப் பழிவாங்கும் தயக்கமற்ற ஒரு கொலைகாரி பாத்திரத்தில் நடிக்க கையொப்பமிட்டிருந்தார்,[3] இப்படம் இடைநடுவில் கைவிடப்பட்டது.

புனித் ராஜ்குமாருடன் பிந்தாஸ் எனும் கன்னடத் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் 15 பிப்ரவரி 2008 அன்று வெளியானது, இது ஹன்சிகா இதுவரை நடித்த ஒரேயொரு கன்னடத் திரைப்படமாக இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு மே மாதம் வெளியான காண்ட்ரி திரைப்படத்தில் அவர் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடித்தார். இத்திரைப்படம் மிதமான வெற்றியைப் பெற்றது. மேலும் மஸ்கா எனும் தெலுங்குத் திரைப்படத்தில் ராமுடன் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார்.

நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

திரைப்பட விவரங்கள்
. 


சிறுவயதில் விளம்பர நிகழ்ச்சிகள், சின்னத்திரை நாடகங்கள் தொடங்கி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக தோன்றி பின்னர் முன்னணி நடிகையாக மாறியவர் தான் ஹன்சிகா மோட்வானி. 'ஹவா' என்ற ஹிந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமா அறிமுகமான இவர் 2007ம் ஆண்டு வெளியான அல்லு அர்ஜுனின் 'Desamuduru' படத்தின் மூலம் கதையின் நாயகியாக உயர்ந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு Film Fare வழங்கும் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ஹன்சிகா 2011ம் ஆண்டு வெளியான தனுஷின் 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகமான குறுகிய நாட்களில் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஹன்சிகா. பிரபு தேவா, விஜய், சிம்பு, ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். தற்போது தமிழில் இவர் நடித்து வரும் படம் “மஹா”. 

இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஹன்சிகா அவர்களுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பிறந்தநாளை இன்னும் சிறப்பிக்க 'மஹா' திரைபடக்குழுவுனர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மும்பை : இருட்டில் பளீரென தெரியும் முகம், டிராகன் போட்டோஷூட் செய்து அசத்தி வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி.

லாக்டவுனில் பல்வேறு விளம்பரங்களுக்கு பிஸியாக போட்டோஷூட் நடத்தி வரும் ஹன்சிகா மோத்வானி, அதை தற்பொழுது சமூக வலைதளங்களில் தவறாமல் பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில் மேலாடை அணியாத போட்டோ ஷூட் ஒன்று நடத்தி அந்த புகைப்படங்களில் பல்வேறு க்யூட்டான எக்ஸ்பிரஷனில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஹன்சிகா மோத்வானி தற்போது ஜொலிஜொலிக்கும் உடையில் இருட்டு அறையில் நின்று கொண்டு வெளியிட்டுள்ள டிராகன் போட்டோஷூட் புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
தூற்றியவரெல்லாம் போற்றட்டும்.. குறை சொல்ல மட்டுமல்ல நிறை செய்யவும் தெரியும் #Jyothika.

தனித்துவமான திரைக்கதைகளை தேர்தெடுத்து தனது க்யூட்டான நடிப்பின் மூலம் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சி படுத்தி வரும் ஹன்சிகா மோத்வானி, தற்பொழுது பல்வேறு போட்டோ ஷூட்களில் வித விதமான கோணங்களில் எடுத்து அதை சமூக வலைதளங்களில் தாராளமாகப் பகிர்ந்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி இதுவரை 49 படங்களில் வெற்றிகரமாக நடித்து தற்பொழுது ஐம்பதாவது திரைப்படத்தை மிக நேர்த்தியாக உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்.ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் பல்வேறு கதாநாயகிகளும் லீட் ரோலில் நடித்து வரும் நிலையில் ஹன்சிகா மோத்வானியும் தற்பொழுது தனது 50-வது திரைப்படமான மஹா படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார்.

.
பெண் சாமியார் போன்ற வேடம் அணிந்து, கையில் சுருட்டு வாயில் புகையுடன் பார்க்கவே மகரிஷி போன்று படுபயங்கரமாக வெளியான மஹா படத்தின் போஸ்டர்கள் அனைவரையும் கவர்ந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்தப்படத்தில் ஹன்சிகாவின் முன்னாள் காதலரும் நடிகருமான சிம்பு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார் என்பது இந்த படத்திற்கு கூடுதல் பலமாக மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

.
இவ்வாறு படு சுவாரசியமான கதை அம்சத்தை கொண்டு உருவாகி வரும் மஹா திரைப்படத்தை தொடர்ந்து, "பார்ட்னர்" உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி சமூக வலைதளங்களில் லாக்டவுனில் எடுத்த விதவிதமான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டுக்கொண்டு வருகிறார்.

.

அந்த வகையில் தற்போது ஜொலிஜொலிக்கும் உடையில், பார்க்க கடல்கன்னி போல மின்னும் அழகில் ஒரு இருட்டு அறையில், சிறிய மின் விளக்கு வெளிச்சத்தில், பளீரென தெரியும் பளபளப்பான தேகத்தை காட்டியவாறு மயக்கும் மந்திர பார்வையால் பல்வேறு வித்தியாசமான கோணங்களில் எடுக்கப்பட்டுள்ள இந்த ட்ராகன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ள நிலையில், ஹன்சிகாவின் இந்த லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் வேற லெவலில் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.





திரைப்பட விவரங்கள்[தொகு]

திரைப்படம்
ஆண்டுதலைப்புபாத்திரம்மொழிகுறிப்புகள்
2003எஸ்கேப் ஃப்ரம் தாலிபான்கன்சாஇந்திகுழந்தை நட்சத்திரம்
2003ஹவாசஞ்சனாவின் மகள்இந்திகுழந்தை நட்சத்திரம்
2003கோயி...மில் கயாபிரியா சிக்ஸ்இந்திகுழந்தை நட்சத்திரம்
2003ஆப்ரா கா டாப்ராபிங்கிஇந்திகுழந்தை நட்சத்திரம்
2004ஜாகோசுருதிஇந்திகுழந்தை நட்சத்திரம்
2004ஹம் கோன் ஹேசாரா வில்லியம்ஸ்இந்திகுழந்தை நட்சத்திரம்
2007தேசமுதுருவைசாலிதெலுங்குவெற்றியாளர் , ஃபிலிம்பேரின் சிறந்த அறிமுக நாயகி (தெற்கு)
2007ஆப் கா சரூர்ரியாஇந்திபரிந்துரைக்கப்பட்டார், ஃபிலிம்பேரின் சிறந்த அறிமுக நாயகி விருது
2008பிந்தாஸ்பிரீத்திகன்னடம்
2008கந்திரிவரலக்‌ஷ்மிதெலுங்கு
2008மனி ஹே தோ ஹனி ஹேஆஷிமா கபூர்இந்தி
2009மஸ்காமீனுதெலுங்கு
2009பில்லாபிரியாதெலுங்குகௌரவத் தோற்றம்
2009ஜெயீபவாஅஞ்சலி நரசிம்காதெலுங்கு
2010சீதாராமுல கல்யாணம்நந்தினிதெலுங்கு
2011வேலாயுதம்வைதேகிதமிழ்
2011மாப்பிள்ளைகாயத்ரிதமிழ்
2011எங்கேயும் காதல்kayel viliதமிழ்
2011ஓ மை பிரண்ட்ரிடுதெலுங்கு
2012ஒரு கல் ஒரு கண்ணாடிமீராதமிழ்
2012தேனிகைனா ரெடிஷர்மிலாதெலுங்கு
2013சேட்டைமதுமிதாதமிழ்
2013வேட்டை மன்னன்தமிழ்படப்பிடிப்பில்
2013சிங்கம் 2சத்யாதமிழ்
2013பிரியாணிபிரியங்காதமிழ்
2013தீயா வேலை செய்யணும் குமாருசஞ்சனாதமிழ்
2014மான் கராத்தேயாழினிதமிழ்
2014அரண்மனைசெல்விதமிழ்
2015ஆம்பளமாயாதமிழ்
2015ரோமியோ ஜூலியட்ஐஸ்வர்யாதமிழ்
2015வாலுபிரியா மகாலட்சுமிதமிழ்
2015அரண்மனை 2மாயாதமிழ்
2015புலிமந்தாகினிதமிழ்
2015இஞ்சி இடுப்பழகிஅவரேதமிழ்
2015சைஸ் சீரோஅவரேதெலுங்கு
2016போக்கிரி ராஜாசுனிதாதமிழ்
2016உயிரே உயிரேபிரியாதமிழ்
2016மனிதன்பிரியாதமிழ்
2016போகன்மகாலட்சுமிதமிழ்
தொலைக்காட்சி
ஆண்டுதலைப்புபாத்திரம்மொழிகுறிப்புகள்
2003கியான்கி சாஸ் பி கபி பாகு திபாவ்ரி விரானிஇந்தி
2003தேஸ் மெய்ன் நிக்கிலா ஹோகா சந்த்டினாஇந்தி
2003கரிஷ்மா கா கரிஷ்மாஇந்தி
2003ஷாகலகா பூம் பூம்கருணாஇந்தி
2004ஹம் 2 ஹெயின் நாகரீனா / கோல்இந்தி
2004சிராஸ்ஹனிஇந்தி

குறிப்புகள்



.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

PARAVAS OF TAMILNADU

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER