GEMINI GANESAN AND
SAVITHRI LOVE / DEATH STORY
``ஜெமினியின் வருகை சாவித்திரியின் பணத்தை அனுபவித்துக்கொண்டிருந்தவர்களுக்கு இடைஞ்சலாக இருந்திருக்கிறது.’’
சினிமா நட்சத்திரங்களுடைய காதல், கல்யாணம் என்ற வார்த்தைகளைக் கேட்கும்போதெல்லாம், சாவித்திரி - ஜெமினி கணேசன் ஜோடியின் பெயரும் கட்டாயம் நினைவில் வரும். அதுவும் சென்ற வருடம் `நடிகையர் திலகம்’ படம் வந்த பிறகு, இந்த ஜோடியின் காதல் வாழ்க்கை பற்றிய பேச்சுகள் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் காதலர் தினமான நேற்று `காதலின் மென்பொருள் சாவித்திரி கணேஷ்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் எழுத்தாளர் மு.ஞா.செ.இன்பா. சாவித்திரி - ஜெமினி தம்பதியரின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். ஒரு சக்ஸஸ்ஃபுல் கதாநாயகி என்ற பிம்பத்தைத் தாண்டி, சாவித்திரி தன் கணவர் ஜெமினி மீதான காதலை, எப்படியெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று இன்பா நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவற்றில் சில இங்கே...
``மனம் போல் மாங்கல்யம் படத்தில் நடிப்பதற்காகச் சாவித்திரி வரும்போது, அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தது ஜெமினி கணேசன்தான். சாவித்திரிக்கு அப்போது பதினாறு வயது. ஜெமினியின் நாசுக்காக பழகும் விதம் அவரை ஈர்த்துவிடுகிறது. அதுதான் பின்னாளில் காதலாக மலர்கிறது. காதல் கணவருக்காக அவர் கட்டிய வீட்டில் இருந்த நீச்சல் குளத்தை, அதே காதலுக்காக உடைத்து நொறுக்கிய சம்பவமும் சாவித்திரி வாழ்க்கையில் நடந்திருக்கிறது. `அந்த நீச்சல் குளத்தைக் கட்டிய விதத்தில் வாஸ்து சரியில்லை. அதனால்தான், உங்களுக்கும் கணவருக்குமிடையில் பிரச்னைகள் வருகின்றன’ என்று ஜோதிடர் ஒருவர் சொல்ல, மறுநாளே, அத்தனை காலம் குழந்தைகளுடன் ஆனந்தமாக ஆடிப்பாடிய அந்த நீச்சல் குளத்தையே இடித்து மூடியிருக்கிறார். அந்த அளவுக்குக் கணவர் மேல் காதல் கொண்ட மனைவியாக இருந்திருக்கிறார் நடிகையர் திலகம்’’ என்றவர் தொடர்ந்தார்.
`` `தேனிலவு’ பட ஷூட்டிங். `ஓஹோ எந்தன் பேபி' பாடல் ஒத்திகையின்போது நடிகை வைஜெயந்தி மாலா ஜெமினியின் மீது விளையாட்டாகக் காலால் தண்ணீரை வாரியிறைத்து விளையாடியிருக்கிறார். அப்போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த சாவித்திரி, வைஜெயந்தி மாலாவிடம் பெரிதாகச் சண்டை போட்டிருக்கிறார். இந்த மாதிரி சம்பவம், பல படங்களுடைய ஷூட்டிங்கின்போதும் நடந்திருக்கிறது. கணவர் விஷயத்தில், தான் ஒரு மகா நடிகை என்பதை மறந்து சராசரிப் பெண்ணாகத்தான் இருந்திருக்கிறார் சாவித்திரி.
சாவித்திரியுடன் மகளிர் அமைப்பைச் சேர்ந்த சில பெண்கள் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். சாவித்திரி தன் வீட்டில் இருக்கிற நகை, பணம் எதற்குமே கணக்கு வைத்துக்கொள்ளாதவர் என்பதால், அவர்கள் எல்லாம் அதை தங்கள் இஷ்டத்துக்கு அனுபவித்து வந்திருக்கிறார்கள். சாவித்திரிக்கு இதெல்லாம் தெரியாது. ஆனால், ஜெமினி சிக்கனவாதி. எவ்வளவு வருமானம், எவ்வளவு செலவு, என்னென்ன செலவழித்தீர்கள் என்று கேள்வி கேட்கிற கேரக்டர். அதனால், ஜெமினியின் வருகை சாவித்திரியின் பணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடைஞ்சலாக
இருந்திருக்கிறது. அதனால், அவர்கள் சாவித்திரியைத் தூண்டிவிட்டு, ``நீ எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட். நீ ஒரு படம் டைரக்ட் பண்ணு. புரொடியூஸ் பண்ணு' என்று உசுப்பேற்றிவிட்டிருக்கிறார்கள். ஜெமினியோ, `இதெல்லாம் உனக்குச் சரிப்பட்டு வராது' என்று கடுமையாகச் சொல்ல, கணவர் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வர ஆரம்பித்திருக்கின்றன. இதற்கிடையில் அந்த மகளிர் அமைப்பைச் சேர்ந்த பெண்கள், `நீ பெரிய ஆளாகிடுவேன்னு உன் கணவருக்கு பொறாமை’ என்று ஏற்றிவிட, அதன் விளைவாகத்தான் ஜெமினியை தன் வீட்டுக்குள் வரக் கூடாது என்று சொல்லிவிடுகிறார் சாவித்திரி. அதன் பிறகு சமாதானமாகிறார்கள். ஜெமினி வேறொரு நடிகையுடன் பழகுவதை தெரிந்துகொண்ட பிறகுதான், கணவரை கூர்க்காவை விட்டு விரட்டிய சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது.
இந்தோனேசியாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக, `மிஸ்ஸியம்மா’, `பாவ மன்னிப்பு’, `பாசமலர்’ ஆகிய மூன்று படத்தையும் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த விழாவில் சாவித்திரி - ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைக் கலைஞர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். அந்த விழாவில் நாகரிகம் கருதியும் கணவரின் வேண்டுகோளுக்காகவும் சிறிதளவு ட்ரிங்க் எடுத்துக்கொண்டிருக்கிறார் சாவித்திரி. பின்னாளில் ஜெமினி வேறொரு கதாநாயகியுடன் நெருக்கமாகப் பழகுவதாக கிசுகிசுக்கள் வர, அதன் பிறகுதான் வெறும் நாகரிகத்துக்காகத் தொட்ட மதுவை அடிக்கடி தொட ஆரம்பித்திருக்கிறார். அதுவே, அவரை மரணம் வரை அழைத்துச் சென்றிருக்கிறது’’ என்று முடித்தார் இன்பா.
Jamuna reveals the last days of Savithri garu!
.
In a recent interview, yesteryear Actress Jamuna revealed some interesting facts about the last stages of all-time great and legendary actress Savithri. In her own words:
‘I and Savithri are very close to each other. I used to call her Akka (elder sister). She got addicted to drinking towards the end of her life. I, Akkineni Nageshwar Rao, Nagi Reddy, Chakrapani have intervened in her marriage and advised her not to. But she still went ahead. Post that, she came to my son’s ‘Barasala’ function. She hugged me and cried that day. I consoled her and gave her moral support.
I told her, Akka you know what kind of a man he is [referring to her husband, Gemini Ganesan]. So don’t try to think about him anymore. Try to forget the past and move ahead. Your two kids are your life.By that time, itself, Savithri Akka has lost a lot of money due to thefts and robberies. Many people deceived her. I visited her while she was in Kodaikanal. I advised her, ‘Akka listen to me. Sell your house and take a fixed deposit of one crore. You will once again lead the high-life that you led in the past.’
Shortly after that, she went into a coma. Then Andhra Pradesh CM Anjaiah garu, even arranged medical assistance for Savithri garu in the US on my request. But the doctors said it was too late by then,’ said Jamuna.
....
A day after Gemini Ganesan’s death anniversary, we remember his life and work
It was literally over a chopping board that Tamil actor Gemini Ganesan decided to lay bare the details of his life. When journalist and writer Jayashree Viswanath first met him in 1999, Ganesan was not interested in working on his autobiography, immersed as he was in watching a cricket match. A few weeks later, though, he changed his mind.
“His daughter, Dr Kamala Selvaraj, was keen on getting her `appa’ to pen his autobiography. Since he didn’t have enough time to do it himself, she roped me in and also persuaded him,“ recalls 62-year-old Viswanath on the superstar’s death anniversary .
When Viswanath next met Ganesan, he was busy chopping vegetables. Asking her to take a seat, he asked if she knew why he had married his first wife, Alamelu, whom he fondly called Bobji. “He said he had wanted to become a doctor and his fatherin-law promised to help him do MBBS in London, so he agreed to the marriage,“ says Viswanath. His frankness set the tone for his autobiography , `Vaazhkai Padagu’.
Ironically, soon after their marriage, Alamelu lost her father and Ganesan had to abandon his dreams and shoulder the re sponsibility of a family. Moving to Madras, he first worked as a lecturer at Madras Christian College before landing a job in the administrative section at Gemini Studios.
Popularly known as the romantic hero, Ganesan began his career as a villain in `Thai Ullam’. His handsome looks and charming attitude soon got him a slew of offers and he soon earned the title `Kadhal Mannan’ (King of Romance). Despite this stereotyping, Ganesan did not shy away from different roles. When he was cast in `Kanavaney Kankanda Deivam’, directed by T R Raghunath, Ganesan visited the producer’s house dressed as a beggar.“They thought he was a real beggar, only later did they recognise Ganesan and were very impressed by his acting skills,“ says Viswanath.
Even as his film career put him in the spotlight, his personal life also came under scrutiny . Though he remained married to Bobji till death, several women entered his life. In his book, Ganesan has admitted that he seemed to attract women who were in distress. It was while acting in `Moonru Pillaigal’, that he met his second wife Pushpavalli, sister of co-star Suryaprabha.“They used to go to the beach, and one evening, she confided in him her problems. He consoled her and they slowly became close,“ says Viswanath.
Ganesan and Pushpavalli had three children -Rekha, who went on to become a famous actor, Radha and a son who died young. But their union was short-lived and the couple separated after four years.
Co-star of his hit film `Missiamma’, Savithri, was the next woman in his life.Ill-treated by her uncle, Savithri found refuge in the Ganesan. “He had four daughters with Alamelu -Revathi, Kamala, Jayalakshmi and Narayani, and a daughter Vijayachamundeeswari, and son Satheesh with Savithri,“ says Viswanath.
Though the late superstar made no secret about his dalliances, he remained a family man trying to be a good father to his children. While Bobji did show her anger and displeasure, she remained by his side and accepted his other children. “The children maintained cordial relationships.Bobji too remained dignified despite the emotional trauma she must have gone through,“ says Jayashree.
In some ways Bobji went beyond the duties of a wife. Though Ganesan and Savithri separated, when Savithri fell sick and went into coma, Bobji took in Savithri’s children and visited her in hospital. “When Savithri died, Bobji brought her body back to her house in Chennai and held the funeral,“ says Viswanath. “She also brought Satheesh home and looked after him.“ In fact, when Vijayachamundeeswari got married, Bobji and Savithri did the `kanyadaanam’ as Ganesan was away .
Despite the many women in his life, Bobji was the pillar of strength for Ganesan till he passed away on March 22, 2005.“He was a great star but also a good human being,“ says Viswanath, who remained in touch with the actor and his family after the book was published in 2000. “He was approachable, kind hearted and always ready to help.“
No comments:
Post a Comment