Sunday 10 June 2018

COMBINATION OF VYJEYANTHIMALA +PADMINI = SAROJADEVI




COMBINATION OF VYJEYANTHIMALA +PADMINI = SAROJADEVI


ஒருபுறம் பார்த்தா, வைஜயந்தி மாலா போன்றும், இன்னொருபுறம் பத்மினி மாதிரியான முகச் சாயல்
பெயர், சரோஜாதேவி;

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

என் அம்மாவின் ஆசைக்காக சொந்த வீடு வாங்கினோம்.

தாயின் ஆசை நிறைவேற காரணமாயிருந்த இந்த வீட்டில் வாழ்ந்த காலத்தில் தான் எத்தனை எத்தனை நிகழ்வுகள்... பட வாய்ப்பு கிடைக்காதா...' என்று, ஏங்கி தவித்ததும், நிறைய படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால், நேரம் போதவில்லையே என்று கவலைப்பட்டதும் இவ்வீட்டில் தான்.

நண்பரிடம் கடன் வாங்கி, காலம் கழித்ததும், என்னை வைத்து படமெடுத்த பட முதலாளிக்கே, கடன் கொடுத்ததும் உண்டு. படத் தயாரிப்பாளர்கள் ஒப்பந்ததாளில் எப்படிப்பட்ட ஷரத்துக்களை குறிப்பிட்டிருந்தாலும், மறுப்பு கூறாமல் கையெழுத்திட்டதும், அதேபோன்று, என் இஷ்டத்துக்கு, 'ஷரத்து'க்கள் எழுதப்பட்டு, பட முதலாளிகள், என்னோடு ஒப்பந்தம் செய்து கொண்டதும் உண்டு.

திரைப்பட கம்பெனி ஒன்றில், நானும் ஒரு பங்குதாரராக ஆனதும், படம் வெளியிடப்பட்டதும், அதிலிருந்து வெளியேறி, சொந்தமாக ஒரு திரைப்பட நிறுவனத்தை துவங்கி, படம் எடுத்து வெற்றி பெற்றதும், இங்கு வசித்த காலத்தில் நிகழ்ந்தவைகளே!

ஒரே குடும்பமாக, நானும், என் அண்ணனும், பல ஆண்டுகள் வாழ்ந்த இவ்வீட்டில் தான், 'வாழ்வு அவ்வளவு தான்...' என, மருத்துவரால் கைவிடப்பட்ட என் மனைவி, பல ஆண்டுகள் உயிரோடு இருந்து, பின், இறந்து போனதும்!

தி.மு.கழகம் தேர்தலில் ஈடுபட்டு, தமிழக சட்டசபையில், கழக உறுப்பினர்கள் இடம் பெற்றது; முதன் முதலில் நான், தமிழக மேல் சபை உறுப்பினன் ஆக்கப்பட்டதும், பின், அப்பதவியை ராஜினாமா செய்தது போன்றவைகள் இங்கு வாழ்ந்த போது நடந்தவையே!

அதேபோன்று, தென்னிந்திய நடிகர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு, அதற்கு, கலைவாணர் தலைவரானதை கண்டு களிப்புற்று மகிழ்ந்ததும், பின், கலைவாணரை இழந்து, கண்ணீர் சிந்தியதும் இங்கு தான்.

எம்.ஜி.ஆர்., நாடக மன்றம் துவக்கப்பட்டு, பின், அது நிறுத்தப்பட்ட நிகழ்வும், சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடிக்கிறேன் என்று போற்றப்பட்டதும், விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட போது, 'கால் ஒடிந்து விட்டது; இனிமேல் நடக்கவே முடியாது...' என்று ஏளனங்களை கேட்டதும் இங்கு வாழ்ந்த போது தான்!

ஆர்.எம்.வீரப்பன், என்னுடைய நாடகம் மற்றும் திரைப்பட நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று, என்னிடம் சம்பளம் வாங்கி வேலை செய்ததும், பின், அவரே பட முதலாளியாகி, சத்யா மூவீஸ் நிறுவனத்தை அமைத்து, அதன் மூலம் தயாரித்த படங்களில், நான், அவரிடம் சம்பளம் வாங்கி, வேலை செய்தது என, ஏகப்பட்ட சம்பவங்களை என்னுள் பதிவு செய்தது, இவ்வீட்டில் வசித்த காலகட்டத்தில் தான்!

'நல்லதையே நினைக்கிறேன்; நல்லதையே செய்கிறேன்...' என்ற நம்பிக்கையில் ஒருவருக்கு ஒரு யோசனையை, நிபந்தனையை விதித்தேன். ஆனால், அதுவே, பிற்சமயம் அவர்களால் எனக்கு விதிக்கப்பட, அதற்கு கீழ்ப்படிந்து நடக்க நேர்ந்த போது, நான் அடைந்த அனுபவம் இருக்கிறதே அப்பப்பா...
பாக்கெட் மார் என்ற இந்திப் படத்தை எனக்கு காட்டிய ஏ.எல்.சீனிவாசன், அப்படக்கதையை தழுவி, தமிழில் படமெடுக்க விரும்புவதாகவும், அதில் நான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

எனக்கும் அப்படத்தில் நடிக்க விருப்பம் இருந்தது.
ஏற்கனவே, அவருடைய தயாரிப்பில், ரத்னாவளி என்ற படத்தில், நடித்துக் கொண்டிருந்தேன்; இப்படத்தில் கதாநாயகி, பத்மினி. அத்துடன், அஞ்சலி தேவி மற்றும் பானுமதி போன்ற பெரிய நடிகையரோடு, வேறு சில படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தேன்.
மேலும், இப்போது உள்ளது போல், அப்போது, எனக்கு நிறைய படங்கள் இல்லை. அத்துடன், சம்பளமும் குறைவு.

ஆனாலும், நிறைய நாடகங்களில் நடித்து வந்ததுடன், பொதுப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தேன். அதனால், படப்பிடிப்புக்கு கால்ஷீட் கொடுப்பதில் கஷ்டம் இருந்தது. இந்நிலையில் தான், திருடாதே எனும் அப்படத்தில் நடிக்க அழைத்தார், ஏ.எல்.சீனிவாசன்.
எனது அருமை நண்பரான ஏ.எல்.எஸ்., எவ்வளவு கஷ்டம் என்றாலும், எப்போதும் சிரித்த முகத்துடன் பேசும் குணமுள்ளவர்.

எதிராளியை அவமானப் படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணம் இல்லாமல், கள்ளம் கபடமின்றி, மனதில் பட்டதை பட்டென்று கூறி விடும் இயல்பு கொண்டவர்.
இக்குணத்தால், அவரை விரோதியாக கருதுவோரைக் கூட வெறுக்க மாட்டார்.

'விளையாட்டாக பேசினோம்; அதிலென்ன விபரீதம் வந்து விடும்...' என்று எண்ணும் வெள்ளை மனம் கொண்டவர். இத்தகைய குண அம்சம் கொண்ட ஏ.எல்.எஸ்., என்னை, திருடாதே படத்தில் நடிக்க அழைத்த போது, 'என்னை, கதாநாயகனாக போட நினைப்பதற்கு ரொம்ப மகிழ்ச்சி; கதாநாயகி வேடத்திற்கு பெரிய நடிகையரைப் போட்டால் கால்ஷீட் பிரச்னை வரும். என் கால்ஷீட்டுகளை, வீணாக்காமல் பயன்படுத்தினால் தான் படம் விரைவில் எடுக்க 
முடியும்...' என்றேன்.

'அப்படியே செய்றேன்... கதாநாயகி யாக யாரை போடலாம், நீங்களே சொல்லுங்க; புதுமுகம்ன்னாலும் பரவாயில்ல...' என்றார், ஏ.எல்.எஸ்.,அருகில் இருந்த இயக்குனர் ப.நீலகண்டன், 'புதுமுகத்தையே போடலாம்...' என்றார்.

உடனே நான், 'அந்த புதுமுகம், நான் கொடுக்கிற கால்ஷீட்டுகளில் வந்து நடிக்க தயாராக இருக்கணும். சேர்ந்தாற் போல், பத்து நாட்கள் கால்ஷீட் தந்தாலும், நேரம் காலம் பாக்காமல் நடிக்க வரணும்; இந்த நிபந்தனையோட, அந்த புதுமுகத்தை ஒப்பந்தம் செய்யுங்கள்...' என்றேன்.

என் நிபந்தனைக்கு சம்மதித்தார், ஏ.எல்.எஸ்., உடனே இயக்குனர், ப.நீலகணடன், 






'பத்மினி பிக்சர்ஸின் தங்கமலை ரகசியம் படத்துக்காக, குரூப் டான்ஸ் காட்சி ஒன்றை இயக்கினேன். அதில் ஆடின ஒரு பெண்ணுக்கு நல்ல முகவெட்டு இருந்தது...' என்று, என்னிடம் சிபாரிசு செய்தார்.

யார் என்று விவரம் கேட்ட போது, 'அப்பெண்ணின் பெயர், சரோஜாதேவி; ஒருபுறம் பார்த்தா, வைஜயந்தி மாலா போன்றும், இன்னொருபுறம் பத்மினி மாதிரியான முகச் சாயல் இருக்கு. தாய்மொழி கன்னடம்; தமிழ் அவ்வளவாக தெரியாதுன்னாலும் நாளடைவிலே பேசிப் பேசி பழக்கிடலாம்...'என்றார்.









No comments:

Post a Comment