LOOSE MOHAN ,COMEDY ACTOR BORN 1928 FEBRUARY 8



LOOSE MOHAN ,COMEDY ACTOR
BORN 1928 FEBRUARY 8 





லூசு மோகன் என அழைக்கப்படும் ஆறுமுகம் மோகனசுந்தரம் (Arumugam Mohanasundaram, 8 பெப்ரவரி 1928 - 16 செப்டம்பர் 2012), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். சென்னைத் தமிழில் சரளமாகப் பேசி நடித்ததனால் இவர் பிரபலமானார்.[1] பல மேடை நாடகங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்[மூலத்தைத் தொகு]
காஞ்சிபுரத்தில் பிறந்தவர் மோகன். இவரது தந்தை ஆறுமுகமும் ஒரு நகைச்சுவை நடிகரே. 1944 ஆம் ஆண்டில் வெளியான ஹரிச்சந்திரா திரைப்படத்தில் பு. உ. சின்னப்பாவிடன் இணைந்து நடித்தார்.[1] ஆனாலும், இவர் பிற்காலத்தில் கமலகாசன், ரஜினிகாந்த் ஆகியோரின் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.[1]

1979 இல் வெளியான ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.[1] தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். தமிழ் தவிர மராத்தி, போச்புரி, இந்தி, துளு ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.[1] 2000 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1]

பிற்காலம்[மூலத்தைத் தொகு]
இவரது கடைசித் திரைப்படம் தங்கர் பச்சானின் அழகி (2002) ஆகும். இவரது மனைவி பச்சையம்மாள் 2004 ஆம் ஆண்டில் இறந்து விட்டார். லூஸ் மோகன் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் மகன் கார்த்திகேயனுடன் வசித்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக 2012 செப்டம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை காலமானார். மறைந்த லூஸ் மோகனுக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

PARAVAS OF TAMILNADU

INDIAN ACTRESS MADHAVI ,A LEGEND OVER 300 FILMS IN MAJOR LANGUAGES BORN 1962 SEPTEMBER 13