Saturday 10 February 2018

K.THAVAMANI DEVI -CEYLON ACTRESS DIED 2001 FEBRUARY 10




K.THAVAMANI DEVI -CEYLON ACTRESS
DIED 2001 FEBRUARY 10



கே. தவமணி தேவிborn 1922 - இறப்பு: பெப்ரவரி 10, 2001
(K. Thavamani Devi, இறப்பு: பெப்ரவரி 10, 2001) இலங்கைத் திரைப்பட நடிகை. 1940களில் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு]
யாழ்ப்பாணத்தில் இணுவிலில் பிறந்து கொழும்பில் வளர்ந்தவர். இவரின் தந்தை கார்த்திகேசு, ஒரு பிரபலமான வழக்கறிஞர். பெற்றோரின் விருப்பப்படி இவர் சிறு வயதிலேயே சென்னைக்குக் குடி பெயர்ந்தார்.[1]

திரைப்படங்களில்[மூலத்தைத் தொகு]
சென்னையில் இருக்கும் போது அவர் பரத நாட்டியம், கருநாடக இசை முறையாகப் பயின்றார். இதனால் இவருக்கு தமிழ்த் திரைப்படங்களில் பாடி நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1937 இல் தனது 15வது வயதில் திரைப்படத்துறையில் நுழைந்தார். அந்தக் கால கட்டத்திலேயே காற் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணி.

இவரது முதல் படம் சதி அகல்யா மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1937 ஆம் ஆண்டில் வெளிவந்தது. முதல் படத்திலேயே அகலிகை வேடத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். படமும் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இவர் நடித்து 1941 இல் வெளிவந்த வனமோகினியும் பெரும் வெற்றி பெற்றது. த ஜங்கிள் பிரின்செசு என்ற ஹாலிவுட் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் டொரத்தி லமூர் நடித்த வேடத்தில் தவமணி தேவி நடித்தார். மூலப் படத்தில் லமூர் உடுத்திய அவாய் நாட்டுப் பாணியிலான சாரத்தையே தவமனி தேவியும் உடுத்தி நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற 10 பாடல்களில் பெரும்பாலானவற்றை இவரே பாடியிருந்தார். இவரது பாடல் திறமையால் இவர் "சிங்களத்துக் குயில்" என அழைக்கப்பட்டார்.[1] 1941 இல் வெளியான வேதவதி (சீதா ஜனனம்) என்ற படத்தில் சீதை பாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார்.

1946 ஆம் ஆண்டில் வெளிவந்த வித்யாபதி இவரது மற்றொரு வெற்றிப் படம். இப்படத்தில் தேவதாசி மோகனாம்பாள் என்ற வேடத்தில் தவமணி தேவி நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் மேற்கத்திய பாணியிலான இவரது நடனங்களும் பாடல்களும் இடம் பெற்றிருந்தன.

கலைஞர் மு. கருணாநிதியின் வசனத்தில் 1947 இல் வெளிவந்த ராஜகுமாரி திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தார்.[2] இது இவருக்கு பெரும் புகழையும் வெற்றியையும் ஈட்டிக் கொடுத்தது. தவமணி தேவிக்கு ராஜகுமாரி திரைப்படத்தில் நாயகனை மயக்கும் ராணி வேடம். இவரின் மெய்ப் பாதுகாவலராக சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பாதேவர் நடித்திருந்தார்.

பிற்காலம்[மூலத்தைத் தொகு]

தவமணி தேவி 1962 ஆம் ஆண்டில் ராமேசுவரத்தைச் சேர்ந்த கோடிலிங்க சாஸ்திரி என்பவரைக் காதலித்து மணந்து கொண்டார். திருமணத்தின் பின்னர் திரைப்படத் துறையை விட்டு முற்றாக விலகி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இராமேசுவரத்தில் தனது இறுதிக் காலத்தைக் கழித்த அவர் தனது 76வது வயதில் 2001 பெப்ரவரி 10 இல் காலமானார்.

நடித்த திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]
சதி அகல்யா (1937)
சகுந்தலை (1940)
ஆரவல்லி சூரவல்லி
வேதவதி (சீதா ஜனனம்)
வனமோகினி
நாட்டிய ராணி
கிருஷ்ணகுமார்
பக்த காளத்தி
ராஜகுமாரி
சியாம் சுந்தர்
வித்யாபதி




கே.தவமணி தேவி

பிரபல தமிழ் கவர்ச்சி நடிகை. இவர் தமிழ் நாட்டின் முதல் கவர்ச்சி நடிகை. பல இளம் வாலிபர்களை [தற்போதைய பெரிசுகளை] தன் பால் கவர்ந்திழுத்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சீனியர் பி.ஏ., பட்டம் பெற்றவர். பிறப்பில் இவர் சிங்களப் பெண்ணாக இருந்தாலும் 14 வயதிலேயே [1931] சினிமாவில் நடிக்க தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டவர்.

கர்நாடக சங்கீதத்தையும், பரத நாட்டியத்தையும் முறையாகப் பயின்றவர். இவரது சிறந்த குரல் வளத்திற்காக இலண்டன் பிபிசி., வானொலி இவருக்கு ‘நைட்டிங் கேர்ள்’ என்ற பட்டத்தைத் தந்துள்ளது.
இலங்கை, கண்டியில் இவர் வீட்டிற்கு அருகிலிருந்த பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது புகழ் பெற்ற ஆங்கில பட இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் அவருடைய அடுத்த தயாரிப்பான ‘சதி அகல்யா’ வுக்காக சின்ன வயசு கதாநாயகியைத் தேடிக்கொண்டிருந்தார். அதே வேளை அவர் இலங்கைக்கும் வந்திருந்தார்.
’ஒரு விருந்தில் இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, யாரோ இவரைப் பற்றி அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். இயக்குநர் தேடிக்கொண்டிருந்தது போலவே பரத நாட்டியம், முறைப்படியான சங்கீத ஞானம் , சினிமாவுக்கு ஏற்ற முக பாவனை எல்லாம் இவரிடம் இருந்தது.  அதனால் உடனே காரை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூட வாசலில் போய் நின்று கவனித்துள்ளார். டங்கனுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.  இவரை அழைத்து விலை உயர்ந்த சாக்லேட் ஒன்றைக் கொடுத்துவிட்டு, ‘சினிமாவில் நடிக்கிறாயா?’ என்று கேட்டுவிட்டார். இவருக்கோ பயமாகிவிட்டது. புதிதாக ஒருவர் வந்து, திடுதிப்பென்று ‘சினிமாவில் நடிக்கிறாயா’ என்று கேட்டால்? ‘தன் தந்தையிடம் வந்து கேட்குமாறு சொல்லிவிட்டு வீட்டுக்கு ஓடி விட்டார்.
‘’மறுநாளே இவரது தாய்,தந்தையர் வீட்டிலிருக்கும் போது இயக்குநர் டங்கன் இவர் வீட்டிற்குச் சென்றுள்ளார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தான் வந்த விஷயத்தைக் கூறினார். அதைக்கேட்ட இவரது அம்மா, ‘தாம் தூம்’ என்று கத்த ஆரம்பித்துவிட்டார். மகளை நடிக்க வைக்க ஒரேயடியாக மறுத்துவிட்டார்.
’’ஆனா, சினிமா என்பது அந்த நேரத்தில் மிகப் பெரிய கனவுலகமாக இருந்தது. அதில் நடிக்கவேண்டுமென்பது இவரது ரொம்ப நாளைய ஆசை. அதனால் அப்பா பிள்ளையான இவர் அப்பாவிடம் ‘நைசாக’ பேசி அம்மாவிடம் சம்மதம் வாங்க வைத்தார்.

அப்படித்தான் இவருடைய சினிமா வாழ்க்கை ஆரம்பமானது. அந்த காலத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர்கள் இவருடைய கையைப் பிடிப்பதற்கே பயப்படுவார்கள். ஏனென்றால் இவரது தந்தை கதிரேச சுப்பிரமணியன் கண்டியில் நீதியரசராக இருந்தவர். அதனால்தான் அந்த பயம். ஆதலால் இவராகவே அவர்களது கையைப் பிடித்துக்கொள்வார். எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் போன்ற பெரிய நடிகர்கள் பலருடன் இவர் நடித்துள்ளார். 
இவ்வாறு நடித்துக்கொண்டிருந்தபோது ‘வன தேவதை’ படத்திற்காக இவரை ஒப்பந்தம் செய்தனர். அதில் இவர் காட்டுவாசிப் பெண். புலித்தோல் ஆடை [டூ பீஸ்] அணிந்துகொண்டு நடித்தார். படம் வெளிவந்த பிறகு பார்த்தால் அந்த உடை ரொம்ப கவர்ச்சியாகவும், செக்ஸியாகவும் இருந்தது. அதுவரை சினிமாவில் எல்லாரும் 16 முழம் சேலை முழுவதுமாக போர்த்தியபடிதான் நடிப்பார்கள். அதிலிருந்து இவரை எல்லோரும் ‘செக்ஸ் குயின்’ என்று பட்டம் சூட்டிவிட்டார்கள். ’’ஆனால் இத்தனைக்கும் அந்த உடை இடுப்புப் பகுதியும், கழுத்துப்பகுதியும்தான் தெரியும். அதற்கே அந்தக் காலத்தில் இப்படி பட்டம் சூட்டிவிட்டார்கள்.
இவர் 1940 களிலேயே ஒரு படத்திற்கு ரூ.16 ஆயிரம் சம்பளம் வாங்கியவர். இவரது காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதற்கே ஒரு படத்திற்கு சம்பளம் ரூ.4000/- மட்டுமே. இவர் ஒரு சொந்தப்படம் எடுத்தார். அது முடிவடையாமல் போனது. இந்த சமயத்தில் இவரது குடும்பத்தின் சாஸ்திரிகளாக இருந்தவரின் மகனான ‘கோடிலிங்க சாஸ்திரிகளுடன் இவருக்குக் காதல் உண்டானது.

அதற்குப்பின், 1956 இல் மதுரையில் வைத்து இவர்களுக்குத் திருமணம் நடந்தது. இரண்டு மகன்கள். பேரன் பேத்திகள் உள்ளனர்.
இவர் 10.2.2001 அன்று தனது 76 ஆவது வயதில் இராமேஸ்வரத்தில் வைத்து மரணமடைந்தார்.
இவர் நடித்த படங்கள்:-
சதி அகல்யா, வித்யாபதி, சகுந்தலை, ஆரவல்லி சூரவல்லி, வேதவதி [சீதா ஜனனம்], வனமோகினி, நாட்டிய ராணி, கிருஷ்ணகுமார், ராஜகுமாரி, பக்த காளத்தி, ஷியாம் சுந்தர்.
தினமலர் தீபாவளி மலர் 1997 இதழிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
கே.தவமணி தேவி சிறுபிராயத்தில்












மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர் சுந்தரம் இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கன் உதவியுடன் இலங்கையைச் சேர்ந்த தவமணி தேவியை சினிமாவிற்கு அழைத்து வந்தார்.

0

நீச்சல் உடையில் தோன்றும் தவமணியின் புகைப்படத்தைப் போட்டு " பதிவிரதை அகல்யையாக நடிக்க இலங்கையிலிருந்து வந்திருக்கும் தவமணி தேவி , குடும்ப ஸ்திரீகள் தாராளமாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கூறுகிறார்" என்ற பத்திரிகைச் செய்தியொன்று வெளிவந்தது , இதைத் தொடர்ந்து சதி அகல்யா(1937) என்ற படத்தில் தவமணி தேவி நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த முதல் படம் இது !

0

எல்லீஸ்.ஆர்.டங்கன் என்ற வெளிநாட்டவர் 30 களிலும் , 40 களிலும் இந்தியாவிற்கு வந்து சில படங்களை(தமிழ் , இந்தி) இயக்கினார் , 10 அடி தூரத்தில் எட்டி நின்று நடித்த காதல் ஜோடிகளைக் கட்டிப் பிடித்து நடிக்க வைத்த பெருமை இவருக்கு உண்டு.

டங்கன் தான் இயக்கிய பொன்முடி படத்தில் நரசிம்ம பாரதியையும் மாதுரிதேவியையும் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்க வைத்தார் , அந்நேரம் சில பத்திரிகைகள் டங்கன் விரசத்தைப் படமாக்குகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தன ,

தவமணி தேவி அறிமுகமான சதிஅகல்யா படத்தை இயக்கியவர் டங்கனே ! மார்டன் தியேட்டர்ஸின் ஆஸ்தான இயக்குநர் இவர்.

0

தவமணி தேவி, சதி அகல்யாவைத் தொடர்ந்து வித்யாபதி, சகுந்தலை, ஆரவல்லி சூரவல்லி, வேதவதி [சீதா ஜனனம்], வனமோகினி, நாட்டிய ராணி, கிருஷ்ணகுமார், ராஜகுமாரி, பக்த காளத்தி, ஷியாம் சுந்தர் போன்ற படங்களில் நடித்தார்.

0

துணிமணியைக் குறைத்து நடித்த தவமணிக்கு அந்தக் காலப் பெரிசுகள் தீவிர ரசிகர்ளாம்.

ராஜகுமாரி படத்தில் டி.எஸ்.பாலையாவை மயக்கும் நாட்டியப் பெண்ணாக தவமணி தேவி நடித்திருக்கிறார்.

மயக்கும் நாட்டியக் காரி என்பதால் அதற்கேற்றார் போல் தளர்ந்த மேலாடை அணிந்து வந்திருக்கிறார்.அதைக் கண்டதும் டி.எஸ்.பாலையா " ரொம்ப அசிங்கமா இருக்கும்மா " எனக் கூறியிருக்கிறார் .

அதற்கு " இப்படி இருந்தால் தானே மயங்குவீர்கள் " எனக் கூறியிருக்கிறார் தவமணி தேவி..

பின் ஜாக்கெட்டின் நடுவில் ஒரு பூவைச் சொருகி கிளிவேஜை மறைத்து கவர்ச்சியைக் குறைத்தார்களாம்..

0

வனமோகினி ( 1941) படத்தில் தவமணி தேவி இரட்டைத் துண்டு உடுப்புடன் இடுப்பு தெரிய நடித்த பொழுது முதல் அரை நிர்வாண நடிகை என்ற பட்டம் பெற்றார்.

0
வன மோகினியின் கதை இதோ..

ஒரு காட்டில் நாகரீகமும், உடையின் அவசியமும் தெரியாத கூட்டம் ஒன்று வசிக்கிறது , அந்தக் கூட்டத்தில் ஒருத்தி வனமோகினி( தவமணி தேவி) , அவளது தோழன் சந்துரு ( யானை ).

அந்தக் காட்டில் வசிக்கும் பூசாரி ஒருவன் அந்தக் கூட்டத்தில் இருக்கும் கன்னிப் பெண்களைக் கடத்திச் சென்று காளிக்குப் பலியிடும் வழக்கம் கொண்டவன்.

இதையறிந்த வனமோகினி பூசாரியிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள தனது தோழன் சந்துருவுடன் ஒரு குகைக்குள் மறைந்து வாழ்கிறாள் .

அநநேரம் அவ்வானாந்திரம் வழியே ஒரு ராஜகுமாரன் (எம்.கே.ராதா) வருகிறான், அவனிடம் வனமோகினி பூசாரியின் கொடுமைகளைக் கூறுகிறாள்.

இராஜகுமாரன் பூசாரியை அழிக்கத் திட்டம் தீட்டுகிறான் , இதையறிந்த பூசாரி அடியாட்களை ஏவி ராஜகுமாரனைத் தாக்குகிறான் , எனினும் ராஜகுமாரன் ,பூசாரியுடன் போராடி காட்டுவாசி மக்களைக் காப்பாற்றுகிறான்

0--சுபம்--0

0

வனமோகினி படத்தை இயக்கியவர் பகவான் , இந்தப் படத்தைத் தயாரித்த விஸ்வநாத ஐயர் " டஜன் கணக்கான அழகு பொருந்திய பெண்களும் , நூற்றுக் கணக்கான காட்டு மிராண்டிகளும் " என்ற வாசகத்துடன் இந்தப் படத்தை வெளியிட்டார்.

வாத்ய டைரக்டர் சி.ராமச்சந்திரா, அந்தக் காலத்தில் இசையமைப்பாளரை இப்படித்தான் சொல்வார்கள் , ஒரு சில படங்களில் சங்கீதம் எனப் போட்டு கீழே இசையமைப்பாளரின் பெயரைக் குறிப்பிடுவார்கள்.

வசனம் : ஆர்.சாரங்கன்

10 பாடல்களும் முத்தான பாடல்கள் , எழுதியவர் யானை வைத்தியநாதய்யர்.

இந்தப் படத்தில் இடபெற்ற அலை மோதுதே பாடலை அந்தக் காலத்து ஆட்கள் அடிக்கடி முணுமுனுப்பார்களாம்.

ராஜகுமாரன் தன்னைத் தொட்டதும் வனமோகினி பாடும் பாடல்..

ஆடவரை நான் தொட்டதுமில்லை
ஆடவர் கை மேல் பட்டதுமில்லை
ஆஹா என்ன புதுமை கண்டேன்

மார்புக் கச்சையுடன் நீந்தி நீந்தி நீராடுவேன் என குளத்தில் நீந்திக் கொண்டே வனமோகினி பாடும் பாடல்

தவமணிதேவி சொந்தக் குரலில் பாடிய இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டாடியவர்கள் தவமணிக்கு இலங்கைக் குயில் என்ற பட்டமளித்தனர்

கொக்கோ - அம்பி ஜோடி காமெடியில் கலக்கியது.

காட்டுவாசிகளின் தலைவனாக கொளத்துமணி நடித்தார்.







சிங்களத்துக் குயில் என்று அழைக்கப் பட்ட யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த தவமணி தேவியின் தென்னிந்தியத் திரைப் பிரவேசம் உண்மையில் தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 1930களிலே அதாவது ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தமிழ்த் திரையுலகில் புகுந்து கவர்ச்சி காட்டி நடித்து பலரது புருவங்களை உயர வைத்தவர். ஆடல், பாடல், நடிப்பு ஆகியவற்றுடன் கவர்ச்சியையும் சேர்த்துக் கொடுத்தவர். இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரையுலகிற்கு முதன் முதலில் கவர்ச்சியை அறிமுகப் படுத்தியவர் இவராகத்தான் இருக்கவேண்டும். இவரின் வரவிற்குப் பின்னரே பின்னாளில் திரையுலகில் ஒளிவீசிய சிலரது திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்திருக்கிறது. ரி.ஆர். ராஜகுமாரி, மாதுரிதேவி, அஞ்சலி தேவி... எனப் பலரை இந்த வரிசையில் சேர்க்கலாம்.

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தையார் இலங்கையில் பாரிஸ்ரர் தொழிலில் முன்னணியில் திகழ்ந்தவர். தவமணி தேவியின் திறமையை அவதானித்த பெற்றோர்கள் இவரை பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் படிப்பதற்காக ஊக்குவித்தார்கள். உடுத்தியிருக்கும் பாவாடை நிலத்தைக் கூட்ட, மண் பார்த்துப் பெண்கள் நடந்த காலம் அது. அந்தக் கால கட்டத்திலேயே காற் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணி. அழகான குரலும், பார்த்தவுடன் கவரும் தோற்றமும், பழகும் விதமும், கதைக்கும் தன்மையும் தவமணி தேவிக்கு திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ரி.ஆர்.சுந்தரம் மொடேர்ன் தியேட்டர்ஸ் என்ற சினிமா கலையகத்தை உருவாக்கி அந்த நிறுவனத்துக்கான முதல் திரைப்படத்தை தயாரிக்கும் வேளையில் அதில் நடிக்கும் வாய்ப்பு தவமணி தேவிக்குக் கிடைத்தது.

சதிஅகல்யா என்ற அந்தத் திரைப்படத்தில் அவருக்கு அகலிகை வேடம். இந்தத் திரைப்படத்தை தயாரிக்கும் வேளையில் ரி.ஆர்.சுந்தரம் பத்திரிகையாளர்களை அழைத்து தனது படத்தின் கதாநாயகியான தவமணிதேவியை அறிமுகப் படுத்தினார். பத்திரிகையில் பிரசுரிப்பதற்காக ரி.ஆர்.சுந்தரம் கொடுத்த தவமணியின் புகைப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் ஆச்சரியப் பட்டுப் போனார்கள். நீச்சல் உடையில் ஒய்யாரமாக சாய்ந்திருந்த தவமணி தேவியின் அந்தப் புகைப்படம் அவர்களது புருவங்களை உயர வைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைத்தான் ஏனெனில் பெண்கள் இழுத்துப் போர்த்தி சேலை உடுத்தும் காலம் அதுவாக இருந்தது.

தவமணி தேவியின் அந்தப் புகைப்படம் பத்திரிகைகளில் பிரசுரமானபோது அது பலரது பார்வையைக் கவர்ந்தது. வசிட்டரின் மனைவியான அகலிகையாக நடிக்கப் போகும் பெண் இப்படி உடுத்தலாமா? என்பது போன்று பல விதமான விமர்சனங்களும் கூடவே எழுந்தன. 1930களில் ஒரு ஆசியப் பெண்ணை நீச்சல் உடையில் பத்திரிகைகளில் காண்பது அதுவே முதல் தடவையாக இருந்திருக்கும். இது போதாதா தவமணி தேவி பிரபல்யமாவதற்கு?

சதிஅகல்யா படப்பிடிப்பு தொடங்க முன்னரே தவமணி தேவி மிகப் பிரபல்யமாகி விட்டிருந்தார். ஆகவே 1937இல் வெளியான மொடேர்ன் தியேட்டர்ஸின் சதிஅகல்யா பெரு வெற்றி பெற்றதுக்கு தனியாகக் காரணம் எதுவும் சொல்லத் தேவையில்லை. சதி அகல்யா வெற்றிக்குப் பின் தவமணி தேவி நடித்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம் வனமோகினி. இந்தத் திரைப்படம் 1940 இல் வெளிவந்தது. கொலிவூட்டில் டோர்தி லமோர் நடித்துப் பிரபல்யமான யங்கிள் என்ற திரைப்படத்தினையே தமிழில் வனமோகினி என்று எடுத்தார்கள். இதில் வனமோகினியாக ஆங்கிலத்தில் டோர்தி லமோர் உடுத்த கவாய் நாட்டுப் பாணியிலான உடையை இடுப்பில் கட்டி இவர் நடித்திருந்தார். இவர் தனது நடிப்போடு காற்றில் ஆடும் சிறு உடையின் மத்தியில் தனது உடல் அழகையும் காட்டிக் கொண்டது அன்றைய கால கட்டத்தில் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்திருக்கும். இவரது இந்தத் திரைப்படம் பரபரப்பாகப் பேசப்பட்டது மட்டுமல்லாமல் பெரு வெற்றியையும் ஈட்டிக் கொண்டது. அறுபது வருடங்கள் கழிந்தாலும் தென்னகத் திரையுலகில் இன்னமும் வனமோகினி பேசப்படுகிறதென்றால் அன்றைய காலகட்டத்தில் வனமோகினி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?

1941இல் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான மற்றுமொரு திரைப்படம் வேடாவதி அல்லது சீதாஜனனம். இதில் இவர் சீதையாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தை திரையுலகம் தனது முக்கியமான குறிப்பில் இட்டிருக்கின்றது. காரணம் என்னவெனில் அன்று திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்காத எம்.ஜி.ஆர். இதில் இந்திரஜித்தாக சிறு வேடம் ஏற்று நடித்திருந்தார். ஆக எம்.ஜி.ஆர். படப்பட்டியலில் வேடாவதியும் இணைந்து கொண்டது.

தவமணி தேவி நடித்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம் வித்யாபதி. யூபிட்டர் பிக்ஸர்ஸ் சார்பில் ஏ.ரி.கிருஸ்ணசாமி எழுதி இயக்கியிருந்தார். ஆண்களைக் கவருவதற்காகவே இந்தத் திரைப்படம் தயாரிக்கப் பட்டதாக அன்று இந்தத் திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்தன. இந்தத் திரைப்படத்தில் தேவதாசி மோகனாம்பாள் என்ற பாத்திரத்தில் தவமணி தேவி நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் மேற்கத்திய பாணியிலான இவரது நடனங்களும் பாடல்களும் இடம் பெற்றிருந்தன. இப்பொழுது வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களின் ஆங்கிலத் தலைப்புகளுக்காவும் பாடல்களில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்காவும் பட்டிமன்றங்களும் விவாதங்களும் வைத்துக் கொள்கிறோம். தமிழ் இனி செத்துவிடும் என்று தலையில் வேறு அடித்துக் கொள்கிறோம். 1946இல் வெளிவந்தை வித்யாபதி படத்தில் தவமணி தேவி பாடி ஆடிய பாடல் இப்படி வருகிறது,

அதோ இரண்டு Black eyes!
என்னைப் பார்த்து Once, twice!
கண்ணைச் சிமிட்டி Dolly!
கை கட்டி Calls me!
Is it true your eyes are blue?
I'll fall in love with you!
I will dance for you!

இந்தப் பாடலில் வரும் ஆங்கில வரிகளை தவமணி தேவியே எழுதியதாக பின்னாளில் இயக்குனர் ஏ.ரி.கிருஸ்ணசாமி அவர்கள் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவர் நடித்து பெரும் புகழையும் வெற்றியையும் ஈட்டிக் கொடுத்த அடுத்த திரைப்படம் 1948இல் வெளியான ராஜகுமாரி. இந்தத் திரைப்படத்தினை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதி இயக்கியிருந்தார். இலங்கையின் தலைநகர் கொழும்பில்தான் ஏ.எஸ்.ஏ.சாமி தனது படிப்பினை முடித்திருந்தார். ஏ.எஸ்.ஏ.சாமி அவர்கள் பின்னாளில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியதொன்று. ராஜகுமாரி திரைப்படத்தையும் யூபிட்டர் நிறுவனமே தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்துக்கு ஒரு பெருமையிருக்கிறது. பின்னாளில் தமிழகத்தை ஒன்றன் பின் ஒன்றாக ஆண்ட மூன்று தமிழக முதலமைச்சர்களின் திரையுலகப் பிரவேசம் இந்த நிறுவனத்தினூடாகத்தான் நிகழ்ந்திருக்கின்றது. 1949இல் வெளியான யூபிட்டர் நிறுவனத்தின் வேலைக்காரி திரைப்படத்திற்கு கதை எழுதியவர் அறிஞர் அண்ணா ஆவார். யூபிட்டரின் ராஜகுமாரி திரைப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதியிருந்தார். அதில் முதன் முதலாக எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

தவமணி தேவிக்கு ராஜகுமாரி திரைப்படத்தில் நாயகனை மயக்கும் ராணி வேடம். இவரின் மெய்ப் பாதுகாவலராக சான்டோ எம்.எம்.சின்னப்பாதேவர் நடித்திருந்தார். இந்தத் திரைப்படமே இவரின் திரையுலகப் பிரவேசமாக அமைந்தது.

ராஜகுமாரி திரைப்படத்தில் தவமணி தேவி உடுத்தியிருந்த ஆடை பெரும் கவர்ச்சியாக இருந்ததால் படப்படிப்பு நடந்து கொண்டிருந்த இடத்திலேயே இவருக்கும் இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமிக்கும் இடையில் பெரும் சர்ச்சைகள் நடந்திருக்கின்றன. அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற தவமணி தேவியின் சில காட்சிகள் தணிக்கைக் குழுவின் கத்தரிக்கு இரையானது. ராஜகுமாரி திரைப்படம் பெரும் வெற்றியை ஈட்டிய போது அதில் நாயகனாக நடித்த எம்.ஜி.ஆரின் புகழை மேலும் உச்சிக்குக் கொண்டு போனது. அதன் கதை வசன கர்த்தாவான கலைஞர் மு.கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகம் சிறந்த வசன கர்த்தா என்னும் ஒரு அங்கீகாரத்தையும் தந்தது. ஆனால் இந்தத் திரைப்படத்தின் வெற்றி தவமணி தேவிக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. இந்தத் திரைப்படத்தின் பின்னர் அவரது திரையுலக வரலாறு இறங்கு முகமாகவே இருந்திருக்கின்றது. இந்த நிலையில் இவரில் பெரும் மாற்றங்கள் தென்படத் தொடங்கியது.

இந்த நிலையில் தவமணி தேவி 1962இல் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கோடிலிங்க சாஸ்திரியை காதலித்து மணந்து கொண்டார். திரைப்படத் துறையை விட்டு முற்றாக விலகி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இராமேஸ்வரத்தில் தனது இறுதி வாழ்க்கையைக் கழித்த தவமணி தேவி அவர்கள் தனது 76வது வயதில் 10.02.2001இல் காலமானார்.

1990களில் அதாவது திரைப்படத்துறையை விட்டு தவமணிதேவி அவர்கள் வெளியேறி பல ஆண்டுகளுக்குப் பின் தென்னிந்தியாவில் இருந்து வெளிவரும் ஒரு பிரபல வார இதழ் தவமணி தேவியைப் பற்றி இப்படி எழுதியிருந்தது.

´சுதந்திரத்திற்கு முன் தமிழ்த் திரைப்படவுலகில் புதிதான பூங்காற்று ஈழத்திலிருந்து ஜிவ்வென்று பிரவேசித்தது. தமிழ்ப்பட இரசிகர்கள் அந்த புதுமுகத்தைக் கண்டு ஆனந்தித்தனர், அதிசயித்தனர், பரவசப்பட்டுப் போயினர். படத்தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்குக் கதாநாயகியாக ஒப்பந்தச் செய்ய ஆவலாக இருந்தனர். ´

1937இல் தனது 15வது வயதில் திரைப்படத்துறையில் நுழைந்த தவமணி தேவியின் படங்கள் இன்றும் பேசப்படுகின்றதென்றால் அவர் எந்தளவு பதிவுகளை தமிழ்த் திரையுலகில் விட்டுச் சென்றிருக்கின்றார் என்பதை உணர முடிகின்றது.



No comments:

Post a Comment