LONDON NATWEST BANK MONEY DISPUTE - INDIA VS PAKISTAN
"லண்டன் வங்கிப்பணம்'
இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்னொரு பேச்சு வார்த்தை நடக்கப்போகிறது. காஷ்மீர் பிரச்னை முதல் பயங்கரவாதிகளை ஒப்படைப்பது வரை பேசிப் பேசி எந்த பலனும் இல்லாத நிலையில், இந்தியாவின் அடுத்த கட்ட பேச்சு இது! ஐதராபாத் நிஜாம் பணத்தை பிரித்து கொள்வது பற்றிய பேச்சு இது. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், ஐதராபாத் நிஜாம் அவசர அவசரமாக லண்டன் நாட்வெஸ்ட் வங்கியில் ஏழு கோடி ரூபாய் பணத்தை போட்டார். இது மத்திய அரசு கவனத்துக்கு வந்தபோது, உடனே தகவல் அனுப்பி, அந்த பணத்தை யாருக்கும் தர வேண்டாம் என்று லண்டன் வங்கிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, இந்த பணம் முடக்கப்பட்டு விட்டது. அந்த பணத்தை எதற்காக போட்டார் என்ற சர்ச்சை இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. அப்போது போட்ட ஏழு கோடி ரூபாய் பணம், அறுபது ஆண்டுக்குபின், இப்போது 250 கோடியாக குட்டி போட்டிருக்கிறது.
"இந்த பணத்தை எங்களிடம் தர வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு ஒரு பக்கமும், ஐதராபாத் நிஜாம் வாரிசுகள் இன்னொரு பக்கமும் கோர்ட்டில் வழக்கு போட்டு காத்திருந்தனர்.ஐதராபாத் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட், லண்டன் கோர்ட் என்று, எல்லாவற்றிலும் இது தொடர்பான வழக்கு இருந்து வருகிறது. இத்தனை ஆண்டுக்கு பின், இதில் சமரசம் செய்து கொள்ள இந்தியா - பாகிஸ்தான் அரசுகள் முன்வந்துள்ளன.இது தொடர்பாக, கோர்ட்டுக்கு வெளியே சமரச தீர்வு காணும் முயற்சியாக, வரும் 21ம் தேதி முதல்கட்ட பேச்சு வார்த்தை நடக்கிறது. இதில் இரு அரசுகளும் பணத்தை பிரித்து கொள்வது பற்றி முடிவு செய்யப்படும்;
வாரிசுகளுக்கு எவ்வளவு பணம் தருவது என்பதும்
தீர்மானிக்கப்படும்.இந்தியா சுதந்திரம் அடைந்தபின், ஐதராபாத் நிஜாம் மட்டும், மத்திய அரசுக்கு தலைவலியாக இருந்து வந்தார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்து கொண்டு வந்த அவரை அரசு சந்தேகிக்க ஆரம்பித்தது.
ஐதராபாத்தை ஆண்ட கடைசி நிஜாம், மிர் ஓஸ்மான் அலி கான். இவருக்கு பின், இவரது மூத்த மகன் அசம் ஜாவை தான் பதவியேற்க வைத்திருக்க வேண்டும். ஆனால், அவரை அரியணை ஏற்றாமல், பேரன் முகரம் ஜாவை தனக்கு பின் அரசு வாரிசாக அறிவித்தார் ஓஸ்மான் அலி கான்.ஓஸ்மான் அலி கானுக்கு அதிகாரப்பூர்வமாக 12 மனைவிகள் இருந்தனர். அவர்களின் மூலம் 16 மகன்கள், 17 மகள்கள் பிறந்தனர். அவர்களின் வாரிசுகளும் இப்போது உள்ளனர். இவர்களுடன் பேரன் முகரம் ஜா, அவர் தம்பி முபகான் ஜா வாரிசுகளும் உள்ளனர்.இவர்கள் அத்தனை பேரும், நிஜாம் பணத்துக்காக காத்திருக்கின்றனர். ஏற்கனவே, நிஜாம் நகைகளை குறைந்த விலைக்கு அரசு எடுத்து கொண்டது குறித்து பல வழக்குகளை இந்த வாரிசுகள் போட்டுள்ளனர். அந்த வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. நகைகள் தொடர்பான சர்ச்சை நீண்டு கொண்டிருக்கும் போது, இப்போது லண்டன் வங்கி பணம் புது சர்ச்சையை கிளப்பும் என்பது உறுதி. இதுவரை கோர்ட்டில் போராடி வந்த இந்த வாரிசுகள், மத்திய அரசு சமரச தீர்வு காண முன்வந்ததை
விரும்பவில்லை. "எங்களுக்கு பதில் சொல்லிவிட்டு, பாகிஸ்தானுடன் பேச வேண்டும்' என்று போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.மத்திய அரசு பேச ஆரம்பித்ததும், மீண்டும் புதிய வழக்கை போட சில வாரிசுகள் தயாராக உள்ளனர். ஆனால், பாகிஸ்தானுடன் பேசியபின், அந்த பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்படும் தொகையை வாரிசுகளுக்கு பிரித்து கொடுப்பது என்ற முடிவில் அரசு தீவிரமாக உள்ளது.
இப்போதுள்ள நிலவரப்படி, 250 கோடியில் இரண்டு அரசுகளும் பிரித்து கொண்டது போக, மீதி 70 கோடி ரூபாய், வாரிசுகளுக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. அந்தப் பணத்தை வாரிசுகளுக்கு பிரித்து கொடுக்க அரசு தயாராக உள்ளது.ஆனால், இந்த தொகையிலும் பிரச்னை செய்ய வாரிசுகள் திட்டமிட்டுள்ளனர். அப்படியிருந்தால், இந்த பேச்சுவார்த்தையில் இன்னும் இழுபறி நீடிக்கும்."வரும் 21ம் தேதி பேச்சு வார்த்தையில், பாகிஸ்தான் கருத்து கேட்கப்படும். அவர்களின் அறிக்கையை படித்தபின் தான், அடுத்தகட்ட பேச்சு வார்த்தை ஆரம்பமாகும், இந்த பேச்சு வார்த்தையில் பல விஷயங்கள் பரிமாற வேண்டியிருப்பதால், மாதக்கணக்கில் இழுக்கும். எங்களை பொறுத்தவரை, பிரச்னை இல்லாமல் பேச்சு வார்த்தை சென்றால், மூன்றாண்டில் முடிந்து, பணம் பிரித்து தரப்படும்' என்று மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.இந்திய - பாக்., பேச்சு வார்த்தையின் அடுத்த அவதாரம் இந்த "லண்டன் வங்கிப்பணம்' பற்றிய பேச்சு. ஏற்கனவே உள்ள பிரச்னைகளுடன் இந்த புது பிரச்னையும் நுழைந்துள்ளதால், புது பரபரப்பு ஏற்படும்; திடுக்கிடும் தகவல்களும் வெளிவரலாம்.
இந்தியாவுடன் போரிட ஆயுதம் வாங்க அனுப்பப்பட்ட பணம் ;திகில் தகவல்கள் அம்பலம் : பாகிஸ்தான் மீது பரிவும், ஆதங்கமும் கொண்டவர் ஐதராபாத் நிஜாம். அதனால் தான், பல கட்டங்களில், இந்தியாவின் பணத்தை பாகிஸ்தானுக்கு அளித்து வந்துள்ளார். பாகிஸ்தான் பிரிந்து சென்றபோது, பணக்கஷ்டத்தில் தத்தளித்தது. ஊழியர்களுக்கு சம்பளம் தரவும், அடிப்படை வசதிகளுக்கு செலவழிக்கவும் கூட பணத்தட்டுப்பாடு. அப்போது, 1947ம் ஆண்டில் இருந்து, ஓராண்டு, பலமுறை நிஜாம் உதவியிருக்கிறார். ஆனால், வெளியில் தெரியாமல் இருந்தது. அரசை ஒப்படைத்து, சொத்துக்களை சரண்டர் செய்யும்படி நிஜாமிடம் மத்திய அரசு பலமுறை கோரியது. ஆனால், நிஜாம் காலம் தாழ்த்தி வந்தார். இப்படியே ஓராண்டு ஆகிவிட்டது. அப்போது தான், லண்டன் நாட்வெஸ்ட் வங்கியில், 10 லட்சம் பவுண்ட் பணத்தை போட்டார்.
பாகிஸ்தான் அரசு கணக்கில் அவர் பணம் போட்டதை மத்திய அரசு கண்டுபிடித்துவிட்டது. இதை கண்டுபிடித்த அப்போதைய உள்துறை அமைச்சர், இரும்பு மனிதர் வல்லபாய் படேல், அதிரடி நடவடிக்கை எடுத்தார். அரசை ஒப்படைக்காத ஓஸ்மான் அலி கான் மீது போலீஸ் படையை ஏவி, அரசை வலுக்கட்டாயமாக ஒப்படைக்க வைத்தார். லண்டன் வங்கியில் போட்ட பணத்தை, பாகிஸ்தான் அரசு எடுக்க அனுமதிக்கக்கூடாது என்று கடிதம் அனுப்பினார். இதைத்தொடர்ந்து அந்த பணம், வங்கியில் முடக்கப்பட்டது. இந்த பணத்தை, லண்டன் வங்கியில் நிஜாம் போட்டதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக பல வரலாற்று ஆசிரியர்கள் அப்போது எழுதிய குறிப்புகள், இப்போதும் புத்தகங்களில் உள்ளன. பாகிஸ்தான் கஷ்டப்பட்டபோது அதற்கு உதவியது நிஜாம் தான். அதே நோக்கத்தில் தான் லண்டன் வங்கியில் பணத்தை போட்டார் என்று பலரும் எழுதியுள்ளனர். இன்னும் சிலரோ, "மத்திய அரசிடம் தன் அரசை ஒப்படைக்க விரும்பவில்லை நிஜாம். அதனால், மத்திய அரசுடன் மோத தயாரானார். அதற்காக தான் பாகிஸ்தான் அரசின் ஆதரவை கோரி, பணத்தை அனுப்பியிருக்கலாம்' என்று எழுதியுள்ளனர்.
இவர்களில் முக்கியமான வரலாற்று நிபுணர் முகமது சைபுல்லா; அவர் எழுதிய புத்தகத்தில் இதுபற்றி கூறியிருப்பதாவது: இந்தியாவுடன் ஐதராபாத் நிஜாம் சமரசம் செய்ய தயாராக இருந்ததில்லை. பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது, அத்துடன் தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியையும் இணைக்க தயாரானார். ஆனால், அதற்கான சாத்தியம் இல்லை என்பதை அவர் அறியவில்லை. இருந்தும், மத்திய அரசை எதிர்க்க ஆரம்பித்தார்.அதனால் தான் ஓராண்டு வரை ஆட்சியை ஒப்படைக்காமல் தாமதித்து வந்தார். அரசுடன் போரிடத்தான், பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க பணத்தை அனுப்பினார். அதனால் தான், லண்டன் வங்கியில் உள்ள பாக்., அரசு கணக்கில் பணத்தை போட்டார்.பிரச்னை பெரிதான பின், தனக்கு தெரியாது என்று கைவிரித்துவிட்டார். " எனக்கு இந்த பணம் போட்டது பற்றி தெரியாது. என் நிதியமைச்சர் தான் பணத்தை போட்டுள்ளார்' என்று சமாளித்து விட்டார்.இவ்வாறு சைபுல்லா கூறியுள்ளார். இப்படி பல காரணங்கள் கூறப்பட்டுள்ளதால், இந்திய - பாக்., பேச்சு வார்த்தையில், அது தொடர்பான சர்ச்சை எழக்கூடும். அதனால், இரு நாட்டு பேச்சு வார்த்தையில் இன்னொரு தலைவலியை உருவாக்கப்போகும் பேச்சாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
60:20:10 என பிரிப்பு; மீதம் யாருக்கு?: லண்டனில் உள்ள நேஷனல் வெஸ்ட் மினிஸ்டர் பேங்க் என்பது தான் நாட்வெஸ்ட் வங்கி. இந்த வங்கியில் தான் நிஜாம், அறுபது ஆண்டுகளுக்கு முன், 10 லட்சம் பவுண்டு போட்டு வைத்திருந்தார். அப்போதிருந்த இரு நாட்டு கரன்சி மதிப்புக்கு ஏற்ப அதன் ரூபாய் மதிப்பு ஏழு கோடி ரூபாய்; இப்போது 250 கோடி ரூபாய். இவ்வளவு மதிப்பு அதிகரித்ததால் தான் வாரிசுகளும் போட்டி போடத்துவங்கி விட்டனர். ஏற்கனவே நகைகளுக்கு போட்ட வழக்குகளில் இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில், பணம் கிடைக்கவும் போட்டி போடத் தயாராகி விட்டனர். மத்திய அரசு திட்டமிட்டபடி, பாக்., அரசுடன் நடக்கும் பேச்சு வார்த்தையில், இந்தியாவுக்கு 60 சதவீதம்; பாகிஸ்தானுக்கு 20 சதவீதம்; வாரிசுகளுக்கு 10 சதவீதம் என்று பிரிக்கலாம் என யோசனை கூறப்பட உள்ளது. இதை பாகிஸ்தான் ஏற்குமா என்பது தான் இப்போதுள்ள முதல் கேள்வி.மீதம் 10 சதவீதம் எங்கே போகப்போகிறது என்பது தான் மர்மமான விஷயம். நிஜாம் சொத்துக்களை பராமரிக்க அரசிடம் ஒப்படைக்கப்படலாம் என்பது நிபுணர்கள் கருத்து.
அப்போதே ஆரம்பித்தது அரசியல் கூத்து: லண்டன் வங்கியில் நிஜாம் அரசுக்கு ஏழு கணக்குகள் இருந்தன. அவற்றில் எப்போதும் பணம் இருக்கும். ஒவ்வொரு கணக்கும், ஒவ்வொரு வித செலவுகளுக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்படி ஒரு கணக்கில் இருந்து தான் இந்த ஏழு கோடி பணம் மாறியுள்ளது. இந்த வங்கியில் பாகிஸ்தான் அரசுக்கும் கணக்குகள் உள்ளன. நிஜாம் கணக்கில் இருந்து அவ்வப்போது பணம், பாகிஸ்தான் கணக்குக்கு மாறும். அப்படித்தான் ஏழு கோடி ரூபாய் பணம் மாறியுள்ளது.நிஜாம் ஒப்புதல் இல்லாமல் பணம் மாற்றப்பட முடியாது. நிதியமைச்சர் தெரியாமல் செய்து விட்டார் என்று நிஜாம் சொன்னாலும், அது உண்மையல்ல.உண்மையில் ஏதோ காரணத்துக்காக தான் அவர் பாக்., கணக்குக்கு பணம் மாற்றியுள்ளார் என்பது என்னவோ உண்மை.
நிஜாம் நகைகள் 3,500 கோடி ரூபாய் : ஐதராபாத் நிஜாம் ஓஸ்மான் அலி கான், பகட்டான மனிதர். உடைகள், நகைகள் ஆகியவற்றில் மிகுந்த ஆசை வைத்திருந்தவர். நகைகளை அணிந்து அழகு பார்ப்பதில் வல்லவர். பெண்களிடம் மிகவும் பிரியம் உள்ளவர். அதனால் தான் அவர் மனைவியர் எண்ணிக்கை பற்றி கணக்கில்லை. அதிகாரப்பூர்வமாக அவர் மனைவிகள் எண்ணிக்கை 12 என்று வரலாற்று ஆதாரங்களில் தெரியவந்துள்ளது. அவர் வைத்திருந்த நகைகளில் வைரங்கள் தான் அதிகம். கோகினூர் வைரம் உட்பட, பல விலை உயர்ந்த அபூர்வ வைரங்கள் பொருத்தப்பட்ட நகைகள் அதிகம் இருந்தன.நாடு சுதந்திரம் அடைந்தபின், நிஜாம் நகைகள் எல்லாம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. நிஜாமிடம் இருந்து அந்த நகைகளை அரசு விலை கொடுத்து வாங்கிக்கொண்டது. மொத்தம் 173 நகைகள்; அவற்றின் விலை 218 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டது.ஆனால், நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி, அரசு மோசம் செய்துவிட்டது என்று வாரிசுகள் இன்னமும் சொல்லி கொண்டிருக்கின்றனர். அது தொடர்பாகவும் வழக்குகள் உள்ளன. சர்வதேச சந்தையில் அதன் இப்போதைய மதிப்பு 3,500 கோடி ரூபாய்.நகைகளில் மட்டுமின்றி, வாள்கள், கத்திகள் போன்றவற்றிலும் வைரங்களை பதித்து வைத்திருந்தார் நிஜாம்.
மூத்த மகனுக்கு முடிசூட்ட மறுத்தார் : மிர் ஓஸ்மான் அலி கான், தனக்கு பின் அரசு வாரிசாக தன் மூத்த மகனை அமர்த்தவில்லை. தன் மகள் வயிற்றுப் பேரன்களில் மூத்தவன் முகரம் ஜாவை தான் பிரகடனப்படுத்தினார். அதனால், தனக்கு அதிக பங்கு அளிக்க வேண்டும் என்று முகரம் ஜா கோரி வருகிறார்.மூத்த மகனுக்கு முடி சூட்ட மறுத்தது ஏன் என்பது தான் தெரியவில்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.இதனால், பணத்தை பிரிக்கும் போது, முகரம் ஜா, அவர் தம்பி முபாகம் ஜாவுக்கு கூடுதல் தொகை அளிக்கப்பட வேண்டிய நிலை வரலாம். இதனால் சர்ச்சை அதிகமாகும்.ஓஸ்மான் அலி கானின் மற்ற பேரன்கள் இதை ஒப்புக்கொள்ள தயாரில்லை. அவர்கள் இதை எதிர்க்க தயாராகி உள்ளனர்.
மற்ற பேரன்கள் போர்க்கொடி: நிஜாமுக்கு பிறந்த 16 மகன்கள், 17 மகள்கள் மூலம் பிறந்த பேரன், பேத்திகளில் சிலர் மட்டும் இப்போது உள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் நவாப் மிர் மிராஜ் அலி கான், நவாம் முகமது மொய்னுதீன் கான். இவர்களை தவிர, முகரம் ஜா, முபாகம் ஜா ஆகியோர் உள்ளனர்.இவர்களுக்கு இடையே தான் கடும் போட்டி இருக்கிறது. இவர்களை தவிர, ஷாமத் ஷா உட்பட வேறு சில பேரன்களும் இப்போது தலைதூக்கி உள்ளனர்.தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பா.ஜ., எடுத்த முடிவு ; இப்போ அமல் இதற்கே ஆறாண்டானது :லண்டன் வங்கியில் போடப்பட்டுள்ள நிஜாம் பணம் தொடர்பாக பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று, மத்திய அமைச்சரவை கடந்த மாதம் 11ம் தேதி ஒப்புதல் அளித்தது; ஆறாண்டு இழுபறிக்கு பின் இந்த முடிவுக்கு அரசு ஒப்புக்கொண்டது.மத்தியில், பா.ஜ., ஆட்சி இருந்தபோது, இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. "நிஜாம் பணத்தை பிரித்து கொள்வது தொடர்பாக கோர்ட்டில் பிரச்னையை இழுபறிப்பதில் அர்த்தமில்லை. அதனால், சமரசமாக பேசி முடிவெடுக்கலாம்' என்று அப்போதிருந்த பா.ஜ., அமைச்சரவை முடிவு செய்தது.ஆனால், அதற்கு பின் வந்த காங்கிரஸ் அரசு அதுபற்றி கண்டுகொள்ளவில்லை. கோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடந்துவந்த நிலையில், பாகிஸ்தான் கேட்டு கொண்டதற்கு இணங்க, பேச்சு வார்த்தை ஆரம்பிக்க ஒப்புக்கொண்டது.ஏற்கனவே, நிஜாம் நகைகளில் பங்கு கேட்டும், பிரச்னை கிளப்பியும் நிஜாம் வாரிசுகள் கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளனர்.
இந்நிலையில், லண்டன் வங்கி பணம் தொடர்பான பேச்சு வார்த்தைக்காக, மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்னும் திடமான முடிவு எடுக்கவில்லை. "முதலில் பாகிஸ்தானுடன் பேசி தொகையை பிரித்து கொள்வது பற்றி முடிவு எடுக்க வேண்டும். அதன்பின் தான், வாரிசுகளுக்கு பிரித்தளிப்பது தொடர்பாக அவர்களுடன் பேச முடியும்' என்று வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.லண்டன் பணம் தொடர்பாக இதற்கு முன் மத்திய அரசுடன் பேச்சு நடந்துள்ளது. நரசிம்மராவ் தலைமையிலான அரசில் நிதி அமைச்சராக இருந்தவர், இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங். நிஜாம் சொத்து தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த டிரஸ்ட்டை சேர்ந்தவர்கள் சிலர், அவருடன் பேச்சு நடத்தினர். ஆனால், பேச்சின் எந்த முடிவும் வெளியாகவில்லை.நிஜாம் சொத்து மட்டுமின்றி, நகைகள் தொடர்பாகவும் டிரஸ்டிக்கள் பேச ஆரம்பித்ததால், இந்த பேச்சு முறிந்தது. நிஜாம் நகைகள் தொடர்பாக, அவரின் பேரன்கள் இப்போதும் கோர்ட்டில் வழக்கு போட்டு, விசாரணை பல ஆண்டாக நடந்து வருகிறது.
நிஜாம் நகைகள், இப்போது மத்திய அரசு வசம் உள்ளது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள நகைகள் எண்ணிக்கை 173. தங்கம், வைரம் போன்ற பல புராதன நகைகளை நிஜாம் வம்சத்தினர் வைத்திருந்தனர். அவற்றை மத்திய அரசு விலை கொடுத்து வாங்கியது.நிஜாம் அமைத்திருந்த டிரஸ்டியினர், 1995ம் ஆண்டு, அந்த நகைகளை 218 கோடி ரூபாய்க்கு விலை பேசி விற்றனர். ஆனால், "இந்த நகைகள் மதிப்பு 1,500 கோடி ரூபாய்; அரசு ஏமாற்றி விட்டது' என்று நிஜாம் வாரிசுகள் கூறி வருகின்றனர்.நிஜாம் வாரிசுகளுக்கு சாதகமாக வழக்காடிய பிரபல வக்கீல் கபில் சிபல், இப்போது மத்திய அமைச்சர். வாரிசுகளுக்காக வாதாடியவர் இப்போது அரசு தரப்பில், நடவடிக்கை எடுத்து வருகிறார்.
ஐதராபாத்: ஐதராபாதின், ஏழாவது நிஜாமாக பதவி வகித்தவர், மிர் ஓஸ்மான் அலி கான். இவருக்கு, 34 குழந்தைகள். இவர்களில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் வாரிசு மட்டும் உயிருடன் இருந்தனர். நிஜாமின் கடைசி ஆண் வாரிசான, நவாப் பசல் ஜா பகதுார், 72, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் வசித்து வந்தார். உடல்நிலை சரியில்லாததால், சமீபத்தில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் 2018 february 18 காலமானார்
His Highness Nizam Sir Mir Osman Ali Khan Siddiqi Asaf Jah VII, more commonly known as Mir Osman Ali Khan Asaf Jah VII was the last Nizam of the princely state of Hyderabad. While there are a lot of stories about his palaces and his riches and his grandeur, he was also a man of tremendous power, eccentricity and class; all rolled into one. Here’s taking a look at some interesting facts about the Last Nizam of Hyderabad
1. RICHEST MAN IN THE WORLD:
nizamswag
Mir Osman Ali Khan, Asaf Jah VII was the world’s richest man in the 1930s and the 1940s, with a wealth of over $2 Billion. That was 2 percent of the entire American economy at that time!
2. EXTREMELY LARGE FAMILY:
2
He had 7 wives, countless concubines and mistresses, 34 legitimate children and countless illegitimate children.
3. VAST EMPIRE:
3
The last Nizam was the ruler of India’s largest princely state – the size of Scotland and England combined.
4. INTEREST IN ARCHAEOLOGY:
4
The last Nizam took keen interest in the restoration of the then newly-discovered Ajanta and Ellora Caves at Aurangabad. He also initiated the Archaeology department of Hyderabad.
5. THE ECCENTRIC NIZAM:
5
He knitted his own socks, wore the same patched clothes for months and borrowed cigarettes from his guests.
6. THE DIAMOND PAPERWEIGHT:
diamondSource
He had a £ 50million ostrich-egg sized diamond, which he used as a paperweight
7. THE ECCENTRICITY CONTINUES:
Screen Shot 2016-04-29 at 2.12.09 pm
One story goes that at one instance, he wanted a new blanket. So he ordered a servant to buy him a new one – with strict orders not to spend more than 25 rupees (32p at today’s rates).
8. THE PARANOIA:
8
The Nizam, terrified of a revolution or takeover of his state, made plans to transport his wealth out of the country. But later he grew bored with the idea.
9. THE BRAINS BEHIND THE CITY OF HYDERABAD:
9
It was under his rule that Hyderabad started taking steps towards becoming one of the biggest cities in India.
10. HIS WEIRDNESS WAS WELL KNOWN:
10
A British politician’s wife who visited him at his peak and described him as someone who was “mad as a coot”
11. THE REVERED RECOGNITION HE GOT:
11
When TIME magazine featured him and the erstwhile rulers of other former princely states like Kashmir, Jodhpur Bikaner, Indore, and Bhopal; he was the only one who was addressed as ‘His Exalted Highness’; while all the others were addressed as ‘His Excellency’.
12. THE CONSERVATIVE SPENDER:
Screen Shot 2016-04-29 at 2.02.59 pm
Despite his riches, he liked being frugal. He disciplined himself to live on the equivalent of £1 a day and smoked the cheapest brand of cigarettes, relighting and smoking the discarded butts. He once took a cigarette from an adviser, cut it in half and offered the man half back.
13. HIS LOVE:
13
It is said that he loved his concubines so much that he didn’t want them to be seen by anyone else; and hence, they were under strict ‘purdah’; with all the best luxuries possible.
14. HIS HOSPITALITY:
14
When the Prince of Wales, later King Edward VIII and, after his abdication, the Duke of Windsor visited him in 1922 he wanted to make sure he felt at home. So he arranged for his chamber pot lid to play the National Anthem when it opened.
15. THE QUEEN’S NECKLACE:
15
An exquisite diamond necklace was gifted by him to Queen Elizabeth II; as a wedding present and the necklace is called the Nizam of Hyderabad necklace. It is one of the jewels in the Queen’s exquisite collection.
16. PAKISTAN CONNECTION:
Web
After the partition of India in 1947, the Nizam considered making Hyderabad join Pakistan.
17. MILITARY ACTION AGAINST THE NIZAM:
17
The Nizam’s refusal to join the Indian in 1947 triggered the military action against him on September 18, 1948.
18. END OF RULE:
19
Mir Osman Ali Khan, Asaf Jah VII continued to rule Hyderabad until the state was merged with the Union of India in 1948.
19. HYDERABAD’S RAJPRAMUKH:
20
The Nizam signed the Instrument of Accession and the State was integrated into the Indian Union. Though deposed, he was allowed to stay on in Hyderabad wherein he accepted the position of Rajpramukh when the state government was established in 1950. He occupied this office till the formation of Andhra Pradesh in November 1956.
20. INVOLVEMENT IN WORLD WAR II:
The Nizam lent his support to the British during the second World War and remained faithful to the King of England.
21. FLEET OF ROLLS ROYCE CARS:
21
He had a fleet of 50 Rolls Royce cars, which included a Barker-Coach built Rolls Royce Silver Ghost acquired in 1912.
22. PEARL COLLECTION IN THE CITY OF PEARLS:
22
His collection of pearls alone could fill up an Olympic size swimming pool.
23. THE WORLD’S FIFTH LARGEST DIAMOND:
23
He is reported to have found the Jacob Diamond -which is the world’s fifth largest diamond- in the toe of one of his late father’s shoes.
24. JEWELLERY WORTH £200 MILLION:
24
The Nizam’s 173-piece jewellery collection had an estimated worth of £200 million but it was bought by the Indian government in 1995 for a low price of £33m.
25. TITLE:
25
His official Title was – Rustam-i-Dauran, Arustu-i-Zaman, Wal Mamaluk, Asaf Jah VII, Muzaffarul- Mulk-Wal-Mumilak, Nizam-ul- Mulk, Nizam ud Daula Nawab Mir Sir Osman Ali Khan Bahadur, Sipah Saula, Fateh Jung, Nizam of Hyderabad and of Berar, Knight Grand Commander of the Most Exalted Order of the Star of India, Knight Grand Cross of the Most Excellent Order of the British Empire, Honorable General in the Army, Faithful Ally of the British Government. We wonder how it will fit on his Adhaar Card, if he were alive today…
No comments:
Post a Comment