Wednesday 28 February 2018

RAJENDRA PRASAD , FIRST RASHTRAPATHY OF INDEPENDENT INDIA DIED 1963 FEBRUARY 28



RAJENDRA PRASAD ,
FIRST  RASHTRAPATHY OF 
INDEPENDENT INDIA DIED 
1963 FEBRUARY 28




டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் Dr. Rajendra Prasad இந்தி: डा॰ राजेन्द्र प्रसाद; 
3 டிசம்பர் 1884 – 28 பிப்ரவரி 1963) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர்.
இளமை[மூலத்தைத் தொகு]

இவர் 1884ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பீகாரின் சிவான் எனுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை மகாவீர சாகி பெர்சிய மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் தேர்ந்திருந்தார். இவரது தாயார் கமலேசுவரி தேவி சமயப் பற்றுள்ள ஒரு மாது ஆவார். சிறு வயதில் தன் குடும்பத்தாராலும் நண்பர்களாலும் ‘ராஜன்’ என அழைக்கப்பட்டார். தனது 12 ஆம் வயதில் ராஜவன்சி தேவி என்ற பெண்ணை மணந்தார். திருமணத்திற்குப் பின்பு பிரசாத் தனது தமையனார் மகேந்திர பிரசாத்துடன் வசித்து வந்தார்.

கல்வி[மூலத்தைத் தொகு]

இராஜேந்திர பிரசாத்திற்கு ஐந்து வயதானபோது ஒரு இஸ்லாமிய மௌல்வியிடம் (tutelage of a Moulavi) பெர்சியம், இந்தி மற்றும் கணிதம் கற்க இவருடைய பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.சாப்ரா மாவட்டத்திலுள்ள பள்ளியில் பிரசாத் தனது தொடக்கக் கல்வியை முடித்தார். பின்னர் டி. கே கோஷ் அகாடமியில் இரண்டாண்டு பயின்றார். கல்கத்தா பல்கலைக் கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி மாதம் ரூ.30 உதவித் தொகைப் பெற்று தனது இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்று 1907ம் ஆண்டு பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். படிக்கும் காலத்தில் பீகார் மாணவர் அவையை உருவாக்கினார் இராசேந்திர பிரசாத். பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும் பின்னர் கல்லூரி முதல்வராகவும் செயலாற்றியுள்ளார். பேராசிரியராக பணியாற்றிக்
கொண்டிருக்கும்போதே சட்டத்தில் மேற்படிப்பு படித்து தேர்வில் முதல் மாணவனாக தங்கப் பதக்கத்தை வென்றார். பின்னர் சட்டத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

விடுதலைப்போரில் ஈடுபாடு[மூலத்தைத் தொகு]
மிகப் புகழ் பெற்ற வழக்குரைஞராக பணியாற்றி வந்த இவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு தன் வேலையைத் துறந்து, அவ்வியக்கத்தில் இணைந்தார்.தரையைத் துடைப்பது ,கழிவறையைக் கழுவுவது,பாத்திரம் துலக்குவது போன்ற பணிகளை ஆசிரமத்தில் செய்து வந்தார். பீகார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நிதி திரட்ட கிளம்பினார் ஆங்கிலேய கவர்னர் திரட்டியது மாதிரி மூன்று மடங்கு அதிகமாக முப்பத்தி எட்டு லட்சம் திரட்டினார்.[1] 'வெள்ளையனே வெளியேறு' என்ற போராட்டத்தில் கலந்து கொண்டதால் 1942ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மூன்றாண்டு கால சிறைவாசத்திற்குப் பின் 1945ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி விடுதலையானார்.

பதவி[மூலத்தைத் தொகு]

1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் இராசேந்திர பிரசாத். 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஒரே குடியரசுத் தலைவரான இராஜேந்திரப் பிரசாத் 1962ம் ஆண்டு வரை பதவியிலிருந்து, பின் ஓய்வு பெற்றார்.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார் என எந்த பணியிலும் ஈடுபடக் கூடாது என அரசு விதித்த தடையை மீறி, சிந்து மற்றும் பஞ்சாப் மாகணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். காந்தியின் அழைப்புக்கு இணங்கி ஆங்கிலேய கல்விக்கூடத்தை விட்டு மகனை வெளியேற்றினார். காங்கிரசின் தலைவராகப் போஸிற்குப் பின் ,கிருபாளினிக்குப் பின் பதவியேற்றார்.

விருது[மூலத்தைத் தொகு]

இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்திய முதல் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் 1963ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி காலமானார்.

No comments:

Post a Comment