CHARLES II , EMPEROR OF BRITISH EMPIRE
DIED 1685 FEBRUARY 6
இரண்டாம் சார்லசு (Charles II, 29 மே 1630 – 6 பெப்ரவரி 1685)[1] இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து இராச்சியங்களின் பேரரசராக 1660 முதல் 1685 வரை இருந்தவர்.
இங்கிலாந்து உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இரண்டாம் சார்லசுவின் தந்தையும் இங்கிலாந்தின் பேரரசருமான முதலாம் சார்லசு 1649 சனவரி 30 அன்று வைட்ஹால் அரண்மனையில் தூக்கிலிடப்பட்டார். இசுக்கொட்லாந்தின் நாடாளுமன்றம் இரண்டாம் சார்லசை இசுக்கொட்லாந்தின் அரசராக 1649 பெப்ரவரி 5 இல் அறிவித்தது.[2] ஆனால், இங்கிலாந்து நாடாளுமன்றம் பொதுநலவாய இங்கிலாந்து என்ற இடைக்கால அரசை அமைத்து, [ஆலிவர் கிராம்வெல்]]லின் தலைமையில் குடியரசானது. கிராம்வெல் 1651 செப்டம்பர் 3 இல் வூஸ்டர் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையில் இரண்டாம் சார்லசுவைத் தோற்கடித்தார்.[3] இதனை அடுத்து சார்லசு பிரான்சுக்குத் தப்பி ஓடினார். கிராம்வெல் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளினதும் ஆட்சியாளராக இருந்தார். இரண்டாம் சார்லசு அடுத்த ஒன்பதாண்டு காலம் நாடு கடந்த நிலையில் பிரான்சு, டச்சுக் குடியரசு, எசுப்பானிய நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தார்.[4]
1658 இல் கிராம்வெல்லின் இறப்பை அடுத்து இடம்பெற்ற அரசியல் சிக்கல் நிலையில், முடியாட்சி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு,[5] முடிக்குரியவராக இருந்த இரண்டாம் சார்லசு பிரித்தானியாவுக்கு அழைக்கப்பட்டார்.[6] 1660 மே 29 இல் அவரது 30வது அகவையில் இலண்டனில் அவருக்குப் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 1660 முதல், அனைத்து அரச ஆவணங்களும் அவர் 1649 இல் தந்தைக்குப் பின்னர் ஆட்சிப் பொறுபை ஏற்றவர் என்று மாற்றப்பட்டன.
சார்லசுவின் இங்கிலாந்து நாடாளுமன்றம் இங்கிலாந்து திருச்சபையின் நிலையை உயர்த்திக் கொள்ள கிளாரண்டன் குறியீடு என அறியப்படும் சட்டங்களை இயற்றியது. சார்லசு மதசகிப்புத் தனமைக் கொள்கைக்கு ஆதரவளித்தாலும், கிளாரண்டன் குறியீட்டு சட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டியதாயிற்று.[7] இவரது ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் இரண்டாம் ஆங்கிலேய-டச்சுப் போர் இடம்பெற்றது. 1670 இல், அவரது தாய்-வழிச் சகோதரரான பிரான்சின் பதினான்காம் லூயி அரசனுடன் டோவரில் ஓர் இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இதன்படி மூன்றாம் ஆங்கில-இடச்சுப் போரில் லூயி சார்லசுவிற்கு உதவியளிக்க முன்வந்தார்.[8] பதிலுக்கு சார்லசு தான் கத்தோலிக்கத்துக்கு நாள் குறிப்பிடப்படாத பின்னொரு நாளில் மதம் மாறுவதாக லூயியிற்கு இரகசிய வாக்குறுதி அளித்தார். இரண்டாம் சார்லசு தனது 1672 ஆம் ஆண்டு அரசப் பிரகடனம் மூலம் கத்தோலிக்கர்களுக்கும் புரட்டத்தாந்து எதிர்பாளர்களுக்கும் சமயச் சுதந்திரம் அளிப்பதற்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால், ஆங்கிலேய நாடாளுமன்றத்தின் வற்புறுத்தலின் பேரில் அப்பிரகடனத்தைத் திரும்பப் பெற்றார். 1679 இல் சார்லசுவின் சகோதரரும், அடுத்த முடிக்குரியவருமான யோர்க் இளவரசர் இரண்டாம் ஜேம்சு ஒரு கத்தோலிக்கர் என்பது தெரிய வந்தது. இந்த நெருக்கடியின் மூலம் நாடாளுமன்றத்தில் முடியாட்சிக்கு எதிரான விக் கட்சியும், சார்பான டோடி கட்சியும் உருவாயின. 1683 இல் சார்லசையும், ஜேம்சையும் படுகொலை செய்வதற்கான திட்டமும் வெளிக்கொணரப்பட்டது. விக் கட்சியினர் சிலர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். வேறு சிலர் நாடு கடத்தப்பட்டனர். சார்ல்ஸ் 1781 இல் நாடாளுமன்ரத்தைக் கலைத்து, 1685 பெப்ரவரி 6 இல் இறக்கும் வரை தனியாக ஆட்சி நடத்தினார். இவர் இறக்கும் தறுவாயில் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறினார்.
ஆலிவர் கிராம்வெல், மற்றும் பியூரித்தான்களின் பத்தாண்டுகளுக்கும் மேலான கடுமையான ஆட்சிக் காலத்தின் பின்னர் சார்லசுவின் ஆட்சிக்காலத்தில் நாடு வழமை நிலைக்குத் திரும்பியதன் மூலம் சார்லசு ஒரு "களிப்பு மிக்க பேரரசன்" என மக்களால்
அறியப்பட்டார். சார்லசின் மனைவி கேத்தரினுக்குப் பிள்ளைகள் எவரும் இல்லை.[9] ஆனாலும், சார்லசுசிற்கு வேறு தகாத உறவுகளின் மூலம் 12 பிள்ளைகள் இருந்தனர். சார்லசிற்குப் பின்னர் இரண்டாம் ஜேம்சு பேரரசான முடி சூடினார்.
No comments:
Post a Comment