GHANTASALA ,SINGER DIED 1974 FEBRUARY 11




GHANTASALA ,SINGER DIED 1974 FEBRUARY 11




கண்டசாலா (Ghantasala Venkateswara Rao, 4 டிசம்பர் 1922 – 11 பிப்ரவரி 1974) தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். இவரது முழுப்பெயர் கண்டசாலா வேங்கடேஸ்வர ராவ். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், துளு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். சில திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இளவயதுக் காலம்[மூலத்தைத் தொகு]

1922-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ம் நாள் கிருஷ்ணா மாவட்டம், குடிவாடா தாலூக்காவிலுள்ள சௌதப்பள்ளி என்னும் ஊரில் கண்டசாலா வேங்கடேஸ்வர ராவ் பிறந்தார். தந்தையார் பெயர் சூரய்யா கண்டசாலா. தாயார் பெயர் ரத்தம்மா.[1]

தந்தையார் ஒரு பாடகர். நாராயண தீர்த்தரின் தரங்கிணிகளைப் பாடுவார். மிருதங்கமும் வாசிப்பார். கண்டசாலா சிறு பையனாக இருக்கும்போது தந்தை மிருதங்கம் வாசிக்க, அந்தத் தாளத்திற்கேற்ப நடனமாடுவார்.[2]

இசைப் பயிற்சி[மூலத்தைத் தொகு]

விசாகப்பட்டினத்தில் துவாரம் வேங்கடசுவாமி நாயுடு முதல்வராக இருந்த இசைக்கல்லூரியில் இசை பயின்றார். அங்கு ஆசிரியராக இருந்த பி. சீதாராம சாஸ்திரி அவருக்கு இசை கற்றுக்கொடுத்தார். (இவர் பின்னாளில் கண்டசாலா திரைப்படங்களில் பாடிய காலத்திலும் உதவியாக இருந்தார்.)[2]

பாடகர்/இசையமைப்பாளர்[மூலத்தைத் தொகு]

அனைத்திந்திய வானொலியில் இவர் பாடிவந்தார். பின்னர் ஹெச். எம். வி. இசைத்தட்டுக் கம்பெனிக்காகச் சில பாடல்கள் பாடினார். அதனையடுத்து 1944-ஆம் ஆண்டு வெளியான சீதா ராம ஜனனம் என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். அப்போது இசையமைப்பாளர் சி. ஆர். சுப்பாராமன் போன்றோருடன் தொடர்பு ஏற்பட்டது. அதனையடுத்து திரைப்படங்களில் பின்னணி பாடிவந்தார். முதன்முதலாக லக்ஸ்மம்மா என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[3]

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]

மாயக்குதிரை (1949) தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது.
பாதாள பைரவி (1951)
நிரபராதி (1951) இணை இசையமைப்பாளர் ஹெச். ஆர். பத்மநாப சாஸ்திரி
கல்யாணம் பண்ணிப்பார் (1952) இணை இசையமைப்பாளர் மாஸ்டர் வேணு
பரோபகாரம் (1953)
சந்திரகாரம் (1954)
குணசுந்தரி (1955)
கள்வனின் காதலி (1955) இணை இசையமைப்பாளர் ஜி. கோவிந்தராஜுலு நாயுடு
அமரகீதம் (1956) (சிரஞ்சீவுலு தெலுங்கு படத்தின் தமிழாக்கம்)
மாயா பஜார் (1957) இணை இசையமைப்பாளர் எஸ். ராஜேஸ்வரராவ்
பாலநாகம்மா (1959) தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது.
சபாஷ் ராமு (1959) தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது.
வாழ்க்கை ஒப்பந்தம் (1959)
மனிதன் மாறவில்லை (1962)

லவ குசா (1963) (பின்னணி வாத்திய இசை) (பாடல்கள் இசை: கே. வி. மகாதேவன்

பாடல்கள் இடம்பெற்ற தமிழ்த் திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]
பாதாள பைரவி (1951)
காதல் (1952)
தேவதாஸ் (1953)
சண்டி ராணி (1953)
கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி (1954)
புது யுகம் (1954)
குண சுந்தரி (1955)
கள்வனின் காதலி (1955)
அனார்கலி (1955)
நாட்டிய தாரா (1955)
எல்லாம் இன்ப மயம் (1955)
அலிபாபாவும் 40 திருடர்களும் (1956)
தெனாலி ராமன் (1956)
சம்பூர்ண இராமாயணம் (1956)
பிரேம பாசம் (1956)
அமர தீபம் (1956)

யார் பையன் (1957)
மணமகன் தேவை (1957)
மகலநாட்டு மேரி (1957)
மணாளனே மங்கையின் பாக்கியம் (1957)
மாயா பஜார் (1957)
எங்க வீட்டு மகாலட்சுமி (1957)
பலே ராமன் (1957)
கலைவாணன் (1959)
மஞ்சள் மகிமை (1959)
அன்பு சகோதர்கள் (1973)
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்[மூலத்தைத் தொகு]
மறைவு[மூலத்தைத் தொகு]
கண்டசாலா 11 பிப்ரவரி 1974 அன்று காலமானார்[3]. சென்னையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் மாரடைப்பால் காலமாவதற்கு முதல்நாள், ஆவணப் படம் ஒன்றிற்காக மருத்துவமனைப் படுக்கையிலிருந்தபடியே அவர் பாட, ஒலிப்பதிவு செய்யப்பட்டது.





தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகரும், இசையமைப் பாளருமான கண்டசாலா (Ghantasala) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே உள்ள சவுதப்பள்ளி கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் (1922) பிறந்தார். முழுப் பெயர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ். தந்தை ஹரிகதை கூறுவதில் வல்லவர். சிறு வயதிலேயே அவருடன் சென்று பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் கண்டசாலா.

* தந்தை இறந்த பிறகு, தாய் மாமனிடம் வளர்ந்தார். ஒரு இசைக் கலைஞனாக வரவேண்டும் என்ற அடங்காத ஆசை கொண்டிருந்தார். பத்ரயானி சீதாராம சாஸ்திரியிடம் இசை கற்றார். உறவினர்களின் எதிர்ப்பை மீறி, விஜயநகரத்தில் உள்ள இசைப் பள்ளியில் சேர்ந்து ‘சங்கீத வித்வான்’ பட்டம் பெற்றார்.

* 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். விடுதலையான பிறகு, திரைப்படங்களில் பின்னணி பாட முயற்சித்தார். அகில இந்திய வானொலி, ஹெச்எம்வி இசைத்தட்டு நிறுவனத்தில் பாடினார். 1944-ல் ‘சீதா ராம ஜனனம்’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்ததோடு, கோரஸ் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.

* பிரபல இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பாராமன் உட்பட பல பிரபலங்களுடன் தொடர்பு ஏற்பட்டது. திரைப்படங்களில் பாடும் வாய்ப்பும் தேடிவந்தது. முதன்முதலாக ‘சொர்க்க சீமா’ என்ற படத்தில் பாடினார். இசையிலும் வல்லவரான இவர், முதன்முதலாக ‘லக்ஸ்மம்மா’ என்ற படத்துக்கு இசையமைத்தார்.

* ‘பாதாள பைரவி’ திரைப்படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. ‘மாயக்குதிரை’, ‘பாதாள பைரவி’, ‘லவகுசா’, ‘மாயா பஜார்’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கின் அத்தனை முன்னணி கதாநாயகர்களுக்கும் பின்னணி பாடியுள்ளார்.

* கன்னடம், மலையாளம், துளு, இந்தியிலும் பாடியவர். இவர் பாடிய தெய்வீகப் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இந்தியாவிலும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ஐ.நா. சபையில் பாடும் வாய்ப்பும் பெற்றார்.

* தென்னிந்திய திரையுலகில் முன்னணிப் பாடகராக சுமார் 30 ஆண்டுகாலம் வலம் வந்தவர். பிரபல இசையமைப்பாளர் எம்.பி.நிவாசனுடன் சேர்ந்து திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் தொடங்கப்படக் காரணமாக இருந்தார். அதன் முதல் தலைவராகவும் பதவி வகித்தார்.

* தெலுங்கில் 3 திரைப்படங்கள் தயாரித்துள்ளார். இளைய தலைமுறைக் கலைஞர்களை ஆதரித்து, ஊக்குவித்து வந்தவர். ‘அமைதியில்லாதென் மனமே’, ‘துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே’, ‘கனவிதுதான்’, ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’, ‘ஆஹா இன்ப நிலாவினிலே’, ‘நீதானா என்னை அழைத்தது’ ஆகிய இவரது பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சத்தில் நீங்கா இடம்பிடித்தவை.

* பாடலில் காதல், கருணை, இரக்கம், மகிழ்ச்சி, சோகம் உள்ளிட்ட மென்மையான உணர்வுகளையும் அநாயசமாக வெளிப்படுத்தக் கூடியவர். பத்ம விருது பெற்றவர். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான வித்வானாக கவுரவிக்கப்பட்டார்.


* இறுதிவரை தனது இசையாலும், குரலாலும் லட்சக்கணக்கான வர்களை மகிழ்வித்துவந்த கண்டசாலா 52-வது வயதில் (1974) மறைந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் 2003-ல் தபால்தலை வெளியிடப்பட்டது..

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER