SUN YAT SEN , CHINA BECOMES REPUBLIC
MANJU DYNASTY FELL DOWN 1912 FEBRUARY 12
சன் யாட் ஸென். புதிய மக்களாட்சி சீனாவை மலர செய்த மாவீரர்
சீனா தொடர்ந்து ஜப்பானிடம் தோற்றது. பெரிய நாடான சீனா எதனால் ஜப்பானிடம் தோற்க வேண்டும்? என்று சீன மக்கள் கொதித்து போயினர். ஜப்பானை எதிர்கொள்ள மிக மிக மெதுவாக ஐரோப்பியர்களின் உதவியை நாடியது சீனா. எனினும் சீனா தோற்றது.
அப்போது தான் மலர்ந்து வந்தார், ஒரு சீன புரட்சியாளர். அவர் தான் சன் யாட் ஸென். புதிய மக்களாட்சி சீனாவை மலர செய்த மாவீரர் அவரே. சன் யாட் ஸென்னுக்கு ஒரு கனவு இருந்தது. மன்னர் ஆட்சி ஒழியவேண்டும். ஆண்டான் அடிமை மனோபாவம் தகர்த்தெறியப்படவேண்டும். உழைக்கும் மக்களின் ஆட்சி அமையவேண்டும் என்று, இளம் வயது முதலே விரும்பி வந்தார். சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த சன் யாட் சென், மருத்துவக் கல்வி பயின்று மருத்துவரானார்.
அக்காலத்தில் சீனா, அரச வம்சத்தின் ஆட்சியின் கீழ் மோசமான நிலையில் இருந்தது. பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடினர். இந்நிலையில் சன் யாட் சென், “குவாமின்டாங்” என்ற கட்சியைத் தொடங்கி சீன அரச வம்சத்துக்கு எதிராகப் போராடினார். தேசியம், குடியரசு, மக்கள் வாழ்க்கை நிலை ஆகிய மூன்று கொள்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினார்.
சீன முறைப்படி கல்வி கற்றவர், சன் யாட் சென். ஆனால் ஏனோ அந்தக் கல்வி முறை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த நேரத்தில் வடஅமெரிக்காவில் வாழ்ந்த அவர் அண்ணன் அழைக்க, அங்கு சென்றார். அங்கு ஆங்கிலக் கல்வி படித்தார். சன்யாட் சென்னுக்கு சீன அரசர் மஞ்சூ ஆட்சியின்மீது அதிருப்தியும், சுதந்திர சீனாவின் மீது பற்றும் அதிகமாகிக் கொண்டே வந்தன. ஒரு கட்டத்தில் அரசுக்கு எதிராக புரட்சி செய்யத் தீர்மானித்து, ஹாங்காங் சென்றார். அங்கு அவர் தங்கி இருந்தபோது அமெரிக்கப் பாதிரியார் ஒருவரோடு நட்பு ஏற்பட்டது. கிறிஸ்தவர்கள் உதவியுடன் மருத்துவ மேல் படிப்பு படித்தார். மருத்துவரான சன்யாட் சென், நாடு படும் அவமானங்களுக்கு முடிவுகட்ட விரும்பி, அரசியலில் நுழைந்தார்.
ஹாங்காங் ,ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்தது. எனவே அங்கிருந்தே சீன அரசுக்கு எதிராக பகிரங்கமாக பிரச்சாரம் செய்தார். “பல இடங்களிலிருந்து பெய்ஜிங் மீது படையெடுத்தால், சீனாவின் கொடுங்கோல் அரசு கவிழும்’’ என்று முடிவு செய்தார். இதன்பிறகு அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு “முற்போக்கு சீனர்கள் சங்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினார். 1911-ம் ஆண்டு அப்போதைய நான்கிங் நகரில் கூடிய சீனாவின் 14 மாகாணங்களைச் சேர்ந்த புரட்சியாளர்கள், ஒரு தற்காலிக குடியரசு நிறுவப்பட்டதாகவும், அதன் அதிபராக சன் யாட் சென் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அறிவித்தனர்.
சன் யாட் சென்னின் தொடர் போராட்டங்களால், மஞ்சு அரசு வம்ச ஆட்சியில் இருந்து விடுபட்டு, சீனா குடியரசானது. 1905 –ல், புரட்சி அணிகள் சன் யாட்-சென்னைத் தலைவராக ஏற்றுக்கொண்டன. ஒவ்வொரு மாகாணமாக, புரட்சியாளர்கள் கைகளில் விழுந்தது. கி.மு. 2852-ல் ஃப்யூ க்ஸீ (திu ஙீ) தொடங்கிவைத்த மன்னராட்சியை, கி.பி. 1912 -ல், பேரரசர் புயி முடித்துவைத்தார். மக்கள் பிரதிநிதியான சன் யாட்-சென்னிடம் சீனாவின் ஆட்சியை ஒப்படைத்தார். மன்னராட்சி முடிந்தது, மக்களாட்சி மலர்ந்தது, சீன நாட்டின் வரலாற்றில் புத்தம் புதிய பாதை தொடங்கியது. மாபெரும் புரட்சியின் மூலம் சீனாவில் புதிய அத்தியாயத்தை தொடங்கிய சன் யாட்-சென், “ நவீன சீனாவின் தந்தை” என போற்றப்பட்டார்.
சன் யாட் சென்னின் கட்சியான “குவாமின்டாங்”, சீனாவை ஆட்சி செய்து வந்தது. எனினும் இந்த ஆட்சியையும், மேற்கத்திய நாடுகளின் பொம்மை அரசாகவே இருந்து வந்தது. இது சீனர்களை சிந்திக்கச் செய்தது. இந்த நிலையில் தான் சோவியத் ரஷ்யாவில் 1917–ம் ஆண்டு பெரும் புரட்சி உருவாகி, உலகின் முதல் பொதுவுடைமை ஆட்சி லெனின் தலைமையில் உருவானது. விவசாயிகளும், தொழிலாளர்களும் பங்கு கொண்ட அந்த புரட்சி, சீனாவையும் தொற்றிக்கொண்டது. இதனால் சீனாவை ஆண்ட குவாமின்டாங் கட்சியை 1921–ம் ஆண்டில் தொடங்கப்பட்ட சீனப் பொதுவுடமைக் கட்சி கடுமையாக எதிர்த்தது. சன் யாட் – சென் உயிரோடு இருந்தவரை, பொதுவுடைமை கட்சியோடு நல்ல உறவு இருந்தது. 1925-ல் அவர் மறைந்து, சியான் கை ஷேக் தலைவரானார். கம்யூனிஸ்ட் கட்சியை இவர் அடக்க நினைத்தார்.
அதற்குள் ஆலமரமாகத் தழைத்து வளர்ந்துவிட்ட கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினார்கள். சியான் கை ஷேக் கம்யூனிஸ்ட்களுக்கு விரோதி ஆனார். மாவோ தலைமையிலான மக்கள் விடுதலைப் படை பிரிவால், 3 பெரும் நடவடிக்கைகளின் முடிவில், 15 லட்சம் குவாமின்டாங் படைகள் தகர்க்கப்பட்டு, மொத்த வடகிழக்குப் பகுதி, வடக்கு சீனத்தின் பெரும் பரப்பு, யாங்க்சியின் வடக்கில் பெரும் பகுதி ஆகியவை விடுதலை செய்யப்பட்டன. இது மக்கள் விடுதலைப்படைக்குத் தலைமை தாங்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ராணுவ வெற்றியை குறிப்பதாக அமைந்தது.
சீனப் பொதுவுடமைக் கட்சிக்கும், குவோமின்டாங் அல்லது சீனத் தேசியவாதக் கட்சிக்கும், இரண்டாவது சீன–ஜப்பானிய போருக்குப் பின்னர் முரண்பாடு நிகழ்ந்தது. இதில், சோவியத் ஒன்றியத்தில் இருந்து பொதுவுடமைக் கட்சி உதவி பெற்றது. ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து சீனத் தேசியவாதக் கட்சி உதவி பெற்றது. சீனாவில் இந்த இரு கட்சிகளுக்கும் உருவான மோதல் பெரும் புரட்சியாக உருப்பெற்றது. 1949–ம் ஆண்டு ஜனவரியில் மக்கள் விடுதலை படையின் தாக்குதலை தாங்க முடியாமல் ஷியாங்கே ஷேக் தனது பதவி ஓய்வை அறிவித்து, துணைத் தலைவரான லிஷசுங் ஷென்னிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இந்த புரட்சி சீன வரலாற்றில் இரண்டாவது மாபெரும் மக்கள் புரட்சி எனப்படுகிறது. மன்னர் ஆட்சியை எதிர்த்து எந்த கட்சி போராடியதோ, அந்த கட்சியை எதிர்த்தே சீனாவின் பொதுவுடைமை கட்சி இரண்டாம் முறையாக போராடி பொதுவுடமை சீனாவை உருவாக்கியது. இந்த இரண்டாம் புரட்சி எனும் பொதுவுடைமை சீனப்புரட்சியை தலைமை ஏற்று நடத்தியவர் தான் மாவோ எனப்படும் மா சே துங் அவர்கள்.
1949 -ம் ஆண்டில் சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றிபெற்று சீனத் தேசத்தில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது. இது உலக வரலாற்றில் ஒரு மாபெரும் முக்கிய சம்பவமாக கருதபப்ட்டது. சீனாவின் முதல் புரட்சியின் நாயகரான சன் யாட் சென்னின் படையில் இணைந்து பணியாற்றி பின்னர், அவருக்கு பிறகு உருவான மாபெரும் புரட்சியாளர் தான் மா சே துங்.!!!.
No comments:
Post a Comment