Tuesday 20 February 2018

Tutankhamun GRAVE FOUND 1923 FEBRUARY 16 AND ITS MYSTERY




Tutankhamun GRAVE FOUND 

1923 FEBRUARY 16 AND ITS MYSTERY




3ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் மன்னராக இருந்த துட்டன்காமன் என்பவரின் கல்லறை 1923-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி கண்டுபிடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.எகிப்தின் நைல் நதி அருகில் இருக்கும் தீப்ஸ் பகுதியில் 3000 ஆண்டு களாக, உலகின் கண்களில் இருந்து மறைந்து கிடந்த துட்டன்காமனின் கல்லறையை, பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹாவர்டு கார்ட்டர், அவரது நண்பருமான் லார்டு கார்னர்வோன் ஆகியோர் திறந்தனர்.

1923-ல் அந்தக் கல்லறையின் நான்காவது மற்றும் கடைசி அறை, பல அதிகாரிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டது. ஒன்றுக்குள் ஒன்றாக வைக்கப் பட்டிருந்த மூன்று சவப்பெட்டிகளின், கடைசிப் பெட்டியில், மன்னர் துட்டன்காமன் மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தார். 18-வது வயதில் மர்மமான முறையில் இறந்த மன்னர் அவர். அவரது இறப்புக்கான காரணம் பற்றி இன்றுவரை ஆய்வுகள் தொடர் கின்றன. ஒரே நாளில் இந்தச் செய்தி உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது. இந்தச் சம்பவத்தை வைத்து புனையப்பட்ட கதைகள் ஏராளம். தனது கல்லறையைத் திறப்பவர்களுக்கு மரணம் நிச்சயம் என்று துட்டன்காமனின் கல்லறையில் எழுதப்பட்டிருந்தது.

கல்லறையைத் திறந்து 6 வாரங்களுக்குப் பிறகு, கொசுக்கடியால் ஏற்பட்ட தொற்றால், கெய்ரோ நகரில் கார்னர்வோன் மரணமடைந்தார். இதேபோல், அதே ஆண்டில் அந்தக் கல்லறையைப் பார்வையிட்ட ஜார்ஜ் ஜே கவுல்டு என்பவர் சில மாதங்களில் மர்மக் காய்ச் சலால் உயிரிழந்தார். துட்டன்காமனின் உடலை எக்ஸ்-ரே மூலம் ஆய்வுசெய்த சர் ஆர்ச்சிபால் டக்ளஸ் அடுத்த ஆண்டு மர்ம நோயால் இறந்தார்.

அதே போல இந்தப் பணியில் ஈடுபட்ட 58 பேரில் 8 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். அதற்கு மன்னரின் ஆவி தான் காரணம் என்று கூறப்பட்டது.இப்படிப் பலர் மர்மமாக உயிரிழந்தது பலரின் கற்பனையைப் பயங்கரமாகத் தூண்டிவிட்டது.

மன்னர் துட்டன்காமன் கல்லறையைத் தோண்டிய கார்னர்வோனுக்குச் சொந்தமாக இத்தாலியில் பிரமாண்டமான பங்களா இருந்தது. மன்னர் துட்டன்காமன் ஆவி பயம் காரணமாக இங்கு யாரும் குடி வராமல் இருந்தார்கள். ஆனால் இத்தாலியின் முன்னாள் கால்பந்து வீரர், சாமுவெல் எடோ, அதைப் பொருட்படுத்தாமல் ரூ.178 கோடிக்கு அந்த பங்களாவை வாங்கி குடியேறிவிட்டார்.

No comments:

Post a Comment