Tuesday 13 February 2018

Y.V.RAO DIRECTOR / FATHER OF ACTRESS LAKSHMI DIED 1973 FEBRUARY 13




Y.V.RAO DIRECTOR / FATHER OF ACTRESS LAKSHMI DIED 1973 FEBRUARY 13






ஒய். வி. ராவ் எனப்படும் எறகுடிப்பட்டி வரத ராவ் (Yaragudipati Varada Rao, 30 மே 1903 – 13 பெப்ரவரி 1973),[1] என்பவர் ஒரு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், மேடை நாடக நடிகர், திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர், நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார். தெலுங்கு சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான, ராவ் ஊமைப்படங்களில் நடிப்பதற்காக கோலாப்பூர் மற்றும் மும்பை செல்லும் முன் ஒரு சில மேடை நாடகங்களில் நடித்தார்.[2]

பம்பாயிலிருந்து மதாராசுக்குத் திரும்பிய. ராவ் அந்நாளின் மவுனப்பட இயக்குநர் ரகுபதி பிரகாஷ் என்பவரால் கதாநாயகனாக ராவை அறிமுகமானார். சிவகங்கை ஏ. நாராயணன் என்ற புகழ்பெற்ற தமிழ் மவுனப் பட முன்னோடி தயாரித்த அந்தப் படம் கருட கர்வ பங்கம் அதன்பிறகு கஜேந்திர மோட்சம், ரோஸ் ஆப் ராஜஸ்தான் போன்ற படங்களில் நடித்த ராவ், அதன் பிறகு மவுனப் படங்களை இயக்க ஆரம்பித்தார் பாண்டவ நிர்வணா (1930),
பாண்டவ அஞ்ஞாதவாசா (1930), ஹரி மாயா (1932) போன்ற படங்களை இயக்கினார். 1940 இல் தெலுங்கின் தலைசிறந்த படைப்பான விஸ்வ மோனி படத்தை இயக்கினார்.[2] ராவ் மற்றும், ஆர் எஸ் பிரகாஷ் ஆகியோர் இணைந்து பல புராணத் திரைப்படங்களை தயாரிப்பது வெளியுட்டனர்; நந்தனார், கஜேந்திர மோட்சம், மச்சவதாரம் போன்ற படங்களை வெளியிட்டனர். தங்கள் தெலுங்கு தயாரிப்புகளில் சமயப் பாத்திரங்கள் , நீதி, ஒழுக்க நெறிகள் ஆகிய மூன்று விசயங்கள் இருக்கக்கூடியவாறு படங்களை தயாரித்தனர்.[3]
தனிப்பட்ட வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

வை. வி. ராவ் அப்போதைய சென்னை மாகாணத்தின் நெல்லூரில் 1903 இல் பிறந்தவர். 1920களின் பிற்பகுதியில், சென்னைக்கு இடம் பெயர்ந்து கன்னடத் திரைப்படங்களில் தீவிரமாக இயங்கினார்.[2] இவர் லவங்கி படத்தில் இயங்கியபோது குமாரி ருக்மணியை திருமணம் செய்து கொண்டார். திரைப்பட நடிகை லட்சுமி இவர்களின் மகளாவார்.[4]

கன்னட திரைப்படம்[மூலத்தைத் தொகு]

1932, இல் பெங்களூரில் இருந்த மார்வாடி தொழிலதிபரான, சாமனல் டோங்ரி என்பவர் மூவி டோன் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கினார். இவரின் நிறுவனம் கன்னடத்தின் முதல் பேசும் திரைப்படமான சதி சுலோக்‌ஷனா என்ற வெற்றிப்படத்தை ராவின் இயக்கத்தில் வெளியானது.[5] இது ரூபாய் 40,000 செலவில் தயாரிக்கப்பட்டது. கோலாபூரின் சத்திரபதி சினிடோனில் எட்டு வாரங்கள் படப்பிடிப்பு நடத்தி ராவ் இப்படத்தை இயக்கினார். இதன் பிறகு இவர் ஹரி மாயா (1932) என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் ராவின் முதல் மனைவியான ராஜம் நடித்தார்.[2]

தமிழ்த் திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]

ராவ் 1937 இல் சிந்தாமணி இயக்கி, அதில் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது. இந்தப் படத்தில் நடித்த தியாகராஜ பாகவதர் அதன்பிறகு தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமானார். இதன் பிறகு இவர் லவங்கி (1946), என்ற படத்தை இயக்கினார் இது கவிஞர் பண்டித ஜெகன்னாதர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வரலாற்றுப் படமாகும். 1948 இல் ராம்தாஸ் தமிழ்த் திரைப்படத்தை இயக்கி அதில் முக்கிய பாத்திரமேற்று நடித்தார். பின்னர் இவர் தமிழில் இயக்கிய பல படங்கள் வெற்றிப்படங்களாகும்.[2]

பாமா பரிணயம் (1936)
சிந்தாமணி (1937)
சுவர்ணலதா (1938)
சாவித்திரி (1941)
லவங்கி (1946)
ராம்தாஸ் (1948)

No comments:

Post a Comment