WORLD CANCER DAY
FEBRUARY 4
உலக புற்றுநோய் தினம் பெப்ரவரி 4
புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?[மூலத்தைத் தொகு]
செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பணித்தளங்கள் போனறவற்றிற்கு உட்படும்போது இது போன்ற மாற்றங்கள் மரபிகளில் ஏற்படுகிறது. எச்.ஐ.வி நோய் தொற்றுவில் இது போன்ற திடீர் மாற்றம் ஏற்படும். சில வேளைகளில், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.
புற்றுநோய் வராமல் தடுத்துக்காக்க முடியமா?[மூலத்தைத் தொகு]
புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்
புகையிலை பயன்படுத்தக்கூடாது.
கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.
முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினைக் கைக்கொள்ள வேண்டும்.
சூரிய ஒளியினை-10 மணியிலிருந்து 4 மணிவரை- தவிர்க்க வேண்டும்.
நல் நடத்தை.
40 வயதினைக் கடந்தவர்கள் மருத்துவரைக் கலந்து,உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை?[மூலத்தைத் தொகு]
புற்றுநோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன:
மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்
புதிய மச்சம் அல்லது ஏற்கனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.
குணப்படாத புண்கள்.
கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.
மலம் மற்றும் மூத்திரம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்.
தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.
விவரிக்கமுடியாத விதத்தில உடல் எடையில் மாற்றம்.
இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு
பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்த வலி
புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?[மூலத்தைத் தொகு]
அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும்., புற்றுநோயின் வகை, பாதிப்படைந்த இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.
புற்றுநோய் எப்போதும் வலியை ஏற்படுத்துமா?[மூலத்தைத் தொகு]
புற்றுநோய் எப்பொழுதும் வலியை ஏற்படுத்தும் என்று அர்த்தமல்ல. புற்றுநோயின் வகை, நோயின் அதிகரிப்புதன்மை மற்றும் நோயாளியின் வலி பொறுத்துக் கொள்ளும் தன்மையைப் பொறுத்து வலி இருக்கும். பெரும்பாலும் புற்று நோய் வளர்ந்து, எலும்புகள், உறுப்புகள் அல்லது நரம்புகளை அழுத்தும் போது வலி ஏற்படுகிறது.
புற்று நோய் வகைகள்[மூலத்தைத் தொகு]
புற்றுநோயில் பலவகைகள் உள்ளன. புற்றுக்கலன்கள் உள்ள இடத்தைக் கொண்டு அவை தொண்டைப்புற்றுநோய், குடல் புற்று, இரத்தப்புற்று என வழங்குகின்றன. புகை பிடித்தல், கதிர் வீச்சுக்கு ஆட்படுதல், குடிப்பழக்கம், சில வகை நுண்மங்கள் (வைரஸ்) போன்றவை புற்று நோய் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.
மார்பகப் புற்று நோய்
இரத்தப்புற்று நோய்.....இன்னும் பல
இரத்தப்புற்று நோய்[மூலத்தைத் தொகு]
லுகிமியா அல்லது லுகேமியா என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்றுநோய். இரத்த செல்கள் குறிப்பாக, வெள்ளை இரத்த அணுக்கள் இயல்புக்கு மாறாக அதிகளவில் பெருகும் நிலை காணப்படும்.
அறிகுறிகள்
அதிகளவில் இரத்தம் வடிதல்
இரத்தசோகை
காய்ச்சல், குளிர், இரவுநேரத்தில் வேர்த்தல் மற்றும் ப்ளு போன்ற அடையாளங்கள்
பலவீனம் மற்றும் சோர்வு
பசியின்மை மற்றும் /அல்லது எடை குறைதல்
பல் ஈறுகள் வீக்கமடைதல் அல்லது இரத்தம் வடிதல்
நரம்பியல் சம்பந்தமான அடையாளங்கள் (தலைவலி)
ஈரல் மற்றும் கணையம் வீக்கமடைதல்
காயங்கள் சுலபமாக ஏற்படுதல் மற்றும் அடிக்கடி நோய்தொற்று ஏற்படுதல்
மூட்டு வலி
உள்நார்தசைகள் வீக்கமடைதல்
மார்பகப் புற்றுநோய்[மூலத்தைத் தொகு]
மார்பகப்புற்று நோய் என்பது பெண்களில் ஏற்படும் பொதுவான வகை புற்றுநோயாகும். பெண்களில், மரணத்தை கண் முன் நிறுத்தும் புற்றுநோய் வகைகளில் இரண்டாம் மிக பொதுவான காரணமாகும்.
அறிகுறிகள்
மார்பு வீங்குதல்
மார்புக் காம்பிலிருந்து வடிதல்
மார்பகக் காம்பு உள் நோக்கி இழுத்தல்
சிவந்த / வீக்கமடைந்த மார்புக் காம்பு
மார்பகம் பெரியதாகுதல்
மார்பு சுருங்குதல்
மார்பகம் கல்போல் கடினமாதல்
எலும்பு வலி
முதுகு வலி
இடர் காரணிகள்
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மார்பக புற்று நோய் இருத்தல் (பெரும்பாலான நெருங்கிய உறவினர்களுக்கு)
பெண்களுக்கு வயதாகும் போது ஆபத்து அதிகமாகிறது.
ஏற்கனவே பாதிப்படைந்த மார்பக புற்றுநோய், இயல்புக்கு மாறுபட்ட மாற்றங்கள், ஏற்கனவே உள்ள மார்பக நோய்கள்.
மரபுவழிக் கோளாறு அல்லது மாற்றங்கள் (அரிதான மாற்றங்கள்)
12 வயதிற்கு முன்பாகவே வயதுக்கு வருதல்
குழந்தை இல்லாமை.
மது வகைகள், அதிக கொழுப்பான உணவு, அதிக நார்பொருள் உள்ள உணவு, புகைப்பழக்கம், உடற்பருமன் மற்றும் ஏற்கனவே உள்ள கருவக அல்லது பெருங்குடல் புற்றுநோய்.
சிகிச்சை முறை
மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை, மூன்று முக்கிய காரணிகளைப் பொறுத்துள்ளது:
பெண்ணுக்கு மாதவிடாய் காலங்கள் நின்றுவிட்டதா?
மார்பகப் புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது?
மார்பகப் புற்றுநோய் செல்லின் வகை.
புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது என்பதை கீழ்க்கண்டவாறு வரையறுத்துள்ளது :
புற்று நோய் எந்த இடத்தில் உள்ளது?
எந்த அளவு புற்றுநோய் நிணநீர் சுரப்பி கணுக்களுக்கு பரவியிருக்கிறது?
புற்றுநோய் மார்பகத்தின் உள்பகுதியில் உள்ள தசை வரை பரவியுள்ளதா?
மற்றொரு மார்பகத்திற்கும் புற்றுநோய் பரவியிருத்தல்
புற்றுநோய் மற்ற உடல் உறுப்புகளுக்கு பரவியிருத்தலும் எலும்பு அல்லது மூளைக்கு பரவுதலும்
புற்றுநோய் செல்களின் வகையைப் பொறுத்து சிகிச்சை முறை வேறுபடுகிறது
மோர் அக்ரஸிவ் செல் (அதிக ஆக்கிரமிக்கும் செல்)
லெஸ் அக்ரஸிவ் செல் (குறைவாக ஆக்கிரமிக்கும் செல்)
மேற்கூறிய காரணிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் என்ன செய்யலாம் என முடிவு செய்வர்:
கதிர்வீச்சு மருத்துவத்தினை பயன்படுத்தி அல்லது பயன்படுத்தாமல் வீக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள திசுக்களை அகற்றுவது.
முழு மார்பக பகுதியையும் அகற்றுவது.
தடுத்துக் காத்தல்
மாதாமாதம் மார்பகத்தினை தற்பரிசோதனை செய்தல்.
உங்கள் மருத்துவரிடம் வருடத்திற்கு ஒரு முறை சென்று மார்பகப் பரிசோதனை செய்தல்.
சத்தான உணவுகளை உட்கொள்ளுதல்.
உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்குமோ என சந்தேகம் ஏற்படும்போது உடனடியாக மருத்துவரை அணுகவும். மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தக்கூடிய ஒன்று. ஆனால் கண்டறியப்படவில்லையென்றால் மரணத்திற்கு நேராக வழி நடத்தும்.
உலக அளவிலான புற்று நோய் மருத்துவ மையங்கள்[மூலத்தைத் தொகு]
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை - சென்னை, இந்தியா.
புற்று நோயாளிகளுக்கு இலவசக் காப்பகம்[மூலத்தைத் தொகு]
ஸ்ரீமாதா டிரஸ்ட்
No comments:
Post a Comment