Thursday 22 February 2018

DUMPS OF TAMILNADU ASSEMBLY KARUNANIDHI ,STALIN,VIJAYAKANT








DUMPS OF TAMILNADU ASSEMBLY
KARUNANIDHI ,STALIN,VIJAYAKANT


5 ஆண்டுகளில் 918 மணி நேரம் நடந்த சட்டசபை: கேள்வியே கேட்காத கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த்

197 நாட்கள் நடந்த சட்டசபை 
ஐந்து ஆண்டுகளில், 197 நாட்கள் சட்டசபை கூடி உள்ளது. 918 மணி நேரம் 31 நிமிடங்கள் சபை நடந்துள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கான பதில் உரையில் 7 மணி 28 நிமிடங்கள் முதல்வர் பேசி உள்ளார். பட்ஜெட் விவாதங்கள் 26 நாட்கள் நடந்தன; 177 உறுப்பினர்கள் பேசினர். அமைச்சர்கள், 138 மணி நேரம் பதில் அளித்துள்ளனர்.

சென்னை: வெளிநடப்புகள்...வெளியேற்றங்கள்... அமளி துமளிகள் என கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டசபை 197 நாட்கள் கூடி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஒரு நாள் கூட சபை நடவடிக்கையில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை. திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 29 எம்.எல்.ஏக்கள் ஒரு கேள்வி கூட சட்டசபையில் கேட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை மொத்தம் 918 மணி நேரம் 31 நிமிடங்கள் சபை நடந்துள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கான பதில் உரையில் 7 மணி 28 நிமிடங்கள் முதல்வர் பேசி உள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 14வது சட்டசபையில் 2011 மே 23 முதல் 2016 பிப்ரவரி 20 வரை 11 கூட்டத் தொடர்கள் நடந்துள்ளன. பட்ஜெட் விவாதங்கள் 26 நாட்கள் நடந்தன; 177 உறுப்பினர்கள் பேசினர். அமைச்சர்கள், 138 மணி நேரம் பதில் அளித்துள்ளனர்.
ஓட்டு போட்டு மக்கள் தேர்வு செய்த எம்.எல்.ஏக்களுக்கு மாதந்தோறும் சம்பளம் ரூ.8,000, ஈட்டுப் படி ரூ.7,000, தொலைபேசிப் படி ரூ.5,000, தொகுதிப் படி ரூ.10,000, அஞ்சல் படி ரூ.2,500, தொகுப்புப் படி ரூ.2,500, வாகனப் படிரூ.20,000 ஆக மொத்தம் ரூ.55,000 தரப்படுகிறது.
சட்டசபையில் எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டால், நாளொன்றுக்கு ரூ.500 தினப்படி, ரயிலில் 2 டயர் ஏஸி பெட்டியில் பயணிக்க ஆண்டுக்கு ரூ.20,000, அரசு பஸ்களில் ஒருவருடன் விலையில்லா பயணம், ரூ.250 மாத வாடகையில் சட்டமன்ற விடுதியில் அறை, அரசு மருத்துவமனைகளில் குடும்பத்தினருக்குக் கட்டணமின்றி மருத்துவச் சிகிச்சை, முக்கியமான அறுவைச்சிகிச்சைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

அரசு லெட்டர் பேடுகள், கவர்கள் என ஸ்டேஷனரி பொருட்கள், விடுதியில் 24 மணிநேர மருந்தகம், ஏஸி ஜிம், சிறுவர் பூங்கா, இறகுப் பந்து விளையாட்டுத் திடல், கார் பாஸ்கள், மரணமடைந்தால் எம்.எல்.ஏ குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி, குடும்பத்துக்கு மாதம் ரூ.6,000 ஓய்வூதியம், முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்

No comments:

Post a Comment