Saturday 11 November 2017

BONEY KAPOOR PRODUCER OF HINDI CINEMA BORN 1955 NOVEMBER 11



BONEY KAPOOR 
PRODUCER OF HINDI CINEMA 
BORN 1955 NOVEMBER 11


போனி கபூர் BORN 1955 NOVEMBER 11

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தனது மகன் அர்ஜுன் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள தேவர் படம் வெளியான பின் தனது மனைவி ஸ்ரீதேவியுடன் இணைந்து அடுத்த படத்தில் பணியாற்ற உள்ளதாக கூறியுள்ளார். நீண்ட நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து கடந்த 2012ம் ஆண்டு மீண்டும் நடிக்க வந்த ஸ்ரீதேவி இங்கிலீஷ் விங்லீஷ் என்ற படத்தால் ரசிகர்களை ஈர்த்தார். அவர் தனது கணவருடன் இணைந்து மிஸ்டர் இந்தியா, ரூப் கி ராணி சோரன் கா ராஜா மற்றும் ஜுடாய் ஆகிய படங்களில் ஒன்றாக பணியாற்றியுள்ளார்.

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தனது மகன் அர்ஜுன் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள தேவர் படம் வெளியான பின் தனது மனைவி ஸ்ரீதேவியுடன் இணைந்து அடுத்த படத்தில் பணியாற்ற உள்ளதாக கூறியுள்ளார்.

நீண்ட நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து கடந்த 2012ம் ஆண்டு மீண்டும் நடிக்க வந்த ஸ்ரீதேவி இங்கிலீஷ் விங்லீஷ் என்ற படத்தால் ரசிகர்களை ஈர்த்தார். அவர் தனது கணவருடன் இணைந்து மிஸ்டர் இந்தியா, ரூப் கி ராணி சோரன் கா ராஜா மற்றும் ஜுடாய் ஆகிய படங்களில் ஒன்றாக பணியாற்றியுள்ளார்.
பெண்களை பற்றிய கதை
இது குறித்து 59 வயதாகும் போனி கபூர் கூறும்போது, வருகிற வெள்ளி கிழமை திரையரங்குகளில் தேவர் திரைப்படம் வெளியாகிறது. இதனை தொடர்ந்து ஸ்ரீதேவியின் படத்தில் கவனம் செலுத்த போகிறேன். படத்தில் ஸ்ரீதேவி நடிக்கிறார்.

இது பெண்களை பற்றிய கதை என்றாலும் இங்கிலீஷ் விங்லீஷ் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதனுடன் நோ என்ட்ரி மெய்ன் என்ட்ரி என்ற படத்தையும் தொடங்க உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். கடந்த 2005ம் ஆண்டில் வெளியான நோ என்ட்ரி என்ற படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருடத்தில் தொடங்கும்.
மிஸ்டர் இந்தியா
நோ என்ட்ரி மெய்ன் என்ட்ரி படத்திற்கு பின், எனது மகன் அர்ஜுனுடன் ஒரு படத்தை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளேன். மிஸ்டர் இந்தியா படத்தின் தொடர்ச்சியாக மற்றொரு படத்தையும் எடுக்க உள்ளேன். இந்த படங்கள் எனது எண்ணத்தில் உள்ளவை.
வேறு படங்கள் ஏதேனும் எனது கவனத்திற்கு வந்து அது சுவாரஸ்யமான ஒன்றாக எனக்கு தெரிந்தால், அந்த படங்களிலும் பணியாற்றுவேன் என்று அவர் கூறியுள்ளார். போனி கபூர் பெரும்பாலும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளார்.
போனி கபூர் பேட்டி

அவரது சகோதரர்கள் அனில் மற்றும் சஞ்சய் அல்லது அவரது மனைவி ஸ்ரீதேவி ஆகியோருடன் இணைந்து அவர் பணியாற்றியுள்ளார். தனது மகனுடன் இணைந்து தேவர் என்ற படத்தில் முதல் முறையாக பணியாற்றியுள்ள போனி கபூர் கூறுகையில், படத்தின் கதாபாத்திரம் மற்றும் கதை ஆகியவற்றை அர்ஜுன் தேர்வு செய்தார்.

இந்த படத்திற்கு அர்ஜுன் போன்ற சிலர் தேவைப்பட்டனர். அதனுடன் இந்த படத்தில் நடிப்பதற்கு மிக ஆர்வமுடன் அர்ஜுன் இருந்தார். படத்தின் உரிமை என்னிடம் உள்ளது. உண்மையில், வேறு 3 படங்களின் கதை என்னிடம் இருந்தது. ஆனால் இதனையே அர்ஜுன் தேர்வு செய்தார் என்று கூறியுள்ளார்.
மும்பை: நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருக்கு ஒரு காலத்தில் ராக்கி கட்டிவிட்டுள்ளார். பெண்கள் தங்களின் சகோதரர்கள் மற்றும் தாங்கள் சகோதரர்களாக நினைப்பவர்களுக்கு கையில் ராக்கி கட்டும் ரக்ஷா பந்தன் இன்று கொண்டாடப்படுகிறது. பெண்கள் எங்கே தங்கள் கையில் ராக்கி கட்டிவிடுவார்களோ என்ற பயத்தில் தெறித்து ஓடும் ஆண்களும் உண்டு. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருக்கு ராக்கி கட்டிய விஷயம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

மிதுன் ஸ்ரீதேவி ஏற்கனவே திருமணமான இந்தி நடிகர் மிதுன் சக்ரபர்த்தியை காதலித்தார். ஏன் அவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் என்று அப்போது செய்திகள் வெளியாகின.
முதல் மனைவி மிதுன் தனது முதல் மனைவியை பிரியவில்லை என்றும், அவரை பிரிய மனம் இல்லை என்றும் அறிந்த ஸ்ரீதேவி அவரை விட்டுவிலகி வந்துவிட்டாராம்

ராக்கி ஸ்ரீதேவி மிதுனுடன் தொடர்பு வைத்திருந்தபோது போனி கபூருக்கு ராக்கி கட்டிவிட்டுள்ளார். அந்த போனி கபூர் தான் தற்போது ஸ்ரீதேவியின் கணவர்.
போனி கபூர் மிதுனை பிரிந்த ஸ்ரீதேவி போனி கபூர் மற்றும் அவரது மனைவி மோனாவுடன் நெருக்கமானார். காலப்போக்கில் ஸ்ரீதேவி போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் மோனா, போனி கபூர் விவாகரத்து பெற்றனர்.

No comments:

Post a Comment