WORLD KINDNESS DAY NOVEMBER 13
உலக இரக்க குண நாள்
இரக்கம் (pity) என்பது வேறொருவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவர்பால் காட்டும் உணர்வாகும். இரக்க உணர்வு இல்லாத வேளைகளிலும் தன் ஆளுமையினை காட்ட இவ்வுணர்வினை உபயோகப்படுத்துவர்
உயிர்கள் இழப்போ, அல்லது மாபெரும் பொருள் இழப்போ நேருகையில், தலைவர்களும் பெரியோரும் இரங்கல் தெரிவிப்பது அவர்களின் இரக்க உணர்வினை வெளிப்படுத்தும் முறையாகும்
யுத்த காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று‚ அன்று ஊரே மயானம்போல் வெறிச்சோடிப் போயிருந்தது. வீதியில் செல்ல முடியாத நிலை. தொலை தூரத்துக்குச் செல்ல வேண்டியவர்கள் தங்குவதற்கு இடம் தெரியாமல் விழி பிதுங்கியிருந்தனர்.
அந்த வீதியில் இரண்டு நண்பர்கள் பயந்தவாறே நடந்து வந்துகொண்டிருந்தனர். திடீரென வீதியில் வந்த ஒரு வாகனம் அவர்களைக் கடந்து மீண்டும் திரும்பி வந்தது. உள்ளே இருந்த ஒருவர் தனது நண்பர் வந்ததைக் கண்டதுமே வாகனத்தை நிறுத்தி, உடனே ஏறுங்கள்; ஓர் இருக்கை மட்டுமே உள்ளது என்றார்.
ஆனால் அவரோ, நான் எப்படியோ சமாளிப்பேன். எனது நண்பரை எனக்காக ஏற்றிச் செல்லுங்கள் என்று வற்புறுத்தி அதில் ஏற்றி விட்டார்.
சிலநாட்களின் பின்னர் வாகனத்தில் ஏற்றப்பட்ட நண்பர், நண்பரைக் கேலியுடன், நான் சுகமாக வந்து விட்டேன். உனக்குத்தான் ஒன்றும் தெரியாது என்றார்.
இரக்கம் பலவீனம் அல்ல; பலம்!
No comments:
Post a Comment