GEMINI K.CHANDRA ACTRESS

 


GEMINI K.CHANDRA ACTRESS



உத்தம புத்திரன் படத்தில் சிவாஜிகணேசனுடன் சேர்ந்து “யாரடி நீ மோகினி” என்ற பாடலுக்கு நடனமாடியவர் தான் ஜெமினி சந்திரா. நாகமலை அழகி என்ற படத்தில் கதாநாயகியாகவும் “தெய்வத்தாய்” படத்தில் எம்.என்.நம்பியார் அவர்களின் ஜோடியாகவும் நடித்தவர் பட்டினத்தார் படத்தில் ரி.எம்.சௌந்தரராஜனுடன்  ஜோடியாக நடித்தார். மற்றும் கப்பலோட்டிய தமிழன், தாய் சொல்லைத் தட்டாதே, சந்திரோதயம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது கணவர் கஜபதி. எம்.ஆர்.ராதா அவரது மகன் எம்.ஆர்.ராதாரவி ஆகியோரின் மேக்கப் கலைஞராவார். இத்தம்பதிகளுக்கு  சந்தியா என்ற ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.




இவர் ஓராள் கூடி கள்ளனாயி என்ற மலையாளப் படம் உள்ளிட்ட சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

ஜெமினி சந்திரா கடந்த 02.06.1998 அன்று உடல் நலம் சரியில்லாமல் தனது 62-ஆவது வயதில் மரணமடைந்தார்.

இவர் நடித்த மேலும் சில படங்களின் பட்டியல்:-

மாடப்புறா [1962], பாகப்பிரிவினை [1959], இந்திரா என் செல்வம் [1962], மாதவி [1959], அமுதவல்லி [1959], புதையல் [1957]

கப்பலோட்டிய தமிழன் படத்தில் ஜெமினிச்சந்திரா

Image  Image

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER