SINGER K.B.SUNDARAMBAL WITH MGR
பாடகி K B சுந்தராம்பாள் அவர்கள்
இப் பதிவில் இணைத்துள்ள படத்தைப் பற்றி The Hindu சஞ்சிகையில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது;
"சந்திரலேகா" படத்தைப் போலவே ஜெமினி எஸ்.எஸ். வாசன் அவ்வையாரின் வாழ்க்கை வரலாற்றைப் பிரம்மாண்டமாகத் தயாரித்தார். அன்று அவ்வையாராக நடிக்க ஒரே சாய்ஸாகவிருந்தது கே.பி.சுந்தராம்பாள். ஐந்து ஆண்டுகள் படப்பிடிப்பு நடத்தி உருவான அந்தப் படம் 1953-இல் வெளியாகிக் காவிய வெற்றியைப் பெற்றது. படத்தில் அவ்வையாராகவே வாழ்ந்து காட்டியிருந்தார் கே.பி.சுந்தராம்பாள். அவருடைய குரலும், பாடல்களும், நடிப்பும் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றன.
1965-இல் வெளியான "திருவிளையாடல்" படத்தில் மீண்டும் அவ்வையாராகவும் நடித்து தமிழர்கள் மத்தியில் அவ்வையாகவே அடையாளம் பெற்று விட்ட கே.பி.எஸ். மறைந்த போது அவரைத் "தேசிய நட்சத்திரம்" என்று புகழ்ந்தார் எம்.ஜி.ஆர். ஒரு முறை கோவை கொடுமுடியிலுள்ள கே.பி.எஸ். வீட்டுக்குச் சென்றிருந்தார் எம்.ஜி.ஆர். தனது வீட்டின் பூஜையறைக்கு அழைத்துச் சென்று அவரது நெற்றியில் திருநீறும், குங்குமமுமிட்டார் கே.பி.எஸ். பிறகு கே.பி.எஸ்ஸுடன் தரையில் அமர்ந்து எம்.ஜி.ஆர் உரையாடியதைக் க்ளிக்கியவர் அந் நாளையப் புகைப்படக்காரர் கதிரவன்.....நன்றி The Hindu.
PS:
மேலேயுள்ள வரிகளில் மாத்திரமன்றி, முகநூலில், மற்றைய சமூக வலைத் தளங்களில், தமிழாக்கங்களில் அநேகமான நேரங்களில் ஒளவையாரை "அவ்வையார்" என்றே எழுதுவதைக் காண்கிறேன். உயிரெழுத்துகளில் ஒன்றான "ஒள" என்னும் எழுத்தில் ஆரம்பிக்கும் "ஒளடதம்" (ஒளஷதம்) என்னுமொரு சொல்லுண்டு. "ஒளடதம்" என்றால் மருந்து. இதே போல் "ஒளவியம்" (அவ்வியம்) என்றொரு சொல்லுமுண்டு. "ஒளவியம்" என்றால் பொறாமை. ஆனால் ஒளடதம், ஒளவியம் போன்ற சொற்கள் அதிகம் பயன்பாட்டிலில்லாமையால், "ஔ" என்னும் உயிரெழுத்து ஒளவையார் மூலம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment