SANGHAVIசங்கவி தமிழ் நடிகை
பிறப்பு 4 அக்டோபர் 1975
சங்கவி (பிறப்பு: அக்டோபர் 4, 1975) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் காவ்யா ரமேஷ். திரையுலகிற்காக தன் பெயரை சங்கவி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ்த் தொலைகாட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். இவருடைய தந்தை மைசூர் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மட்டும் அல்லாமல் காது, மூக்கு, தொண்டை மருத்துவரும் ஆவார். சங்கவி தன்னுடைய பள்ளி படிப்பை மைசூரில் உள்ள மரியப்பா பள்ளியில் பயின்றார்.
1993-ம் ஆண்டில் வெளிவந்த ‘அமராவதி’ என்ற படத்தில் அஜித்குமார் ஜோடியாக அறிமுகமானவர் சங்கவி. விஜய் ஜோடியாக ‘ரசிகன்,’ ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து, ‘நாட்டாமை,’ ‘கட்டுமரக்காரன்,’ ‘லக்கிமேன்,’ ‘சேலம் விஷ்ணு,’ ‘மன்னவா,’ ‘உளவுத்துறை,’ ‘ரிஷி’ உள்பட பல படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்தநிலையில் தொழில் அதிபர் வெங்கடேஷ் என்பவருடன் சங்கவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சங்கவி-வெங்கடேஷ் திருமணம் பெங்களூரில் நடைபெற்றது. ‘‘இது, காதல் திருமணம் அல்ல.
இரண்டு பேரின் பெற்றோர்களாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம். திருமணத்துக்குப்பின், நான் தொடர்ந்து நடிப்பேன். அதற்கு என் கணவர் அனுமதி கொடுத்து இருக்கிறார்’’ என்று சங்கவி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கி வந்த நாயகி தான் நடிகை சங்கவி.இவர் தமிழ் சினிமாவின் அன்றைய கலாகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்.இவர் தமிழ் திரையுலகில் தனது முதல் படமான அமராவதி படத்தில் தல அஜித் அவர்களுடன் இணைந்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர்.இவர் பின்பு தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து இன்று வரைக்கும் பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.நடிகை சங்கவி அவர்கள் பஞ்சதந்திரம், ஆணை போன்ற படங்களில் முன்னணி பிரபலங்களுடன் நடித்து வெற்றி படமாகவே இருந்தது.
தற்போது இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.இவர் பல படங்களை நடித்து திருமணம் செய்து கொண்ட பிறகு பின்பு படங்களில் நடிக்க வில்லை.நடிகை சங்கவி அவர்கள் 38 வயதில் பெங்களுரு வை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.இவர் தற்போது கணவருடன் பெங்களுருவில் வசித்து வரும் இவர் அதிக படியான படங்களில் நடிக்காமல் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினர்.இவர் திருமணமாகி தற்போது 42வயதில் குழந்தையை பெற்றுள்ளார்.இவர் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது தனது குழந்தையுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அந்த புகைப்படத்திற்கு கேப்சன் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் இவர் அழகான தேவதை என குறிப்பிட்டுள்ளார்.மேலும் அந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகினறனர்.மேலும் அந்த புகைப்படத்தை இணையதளத்தில் பரப்பி மற்றும் லைகுகளை குவித்த வண்ணம் வருகின்றனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
No comments:
Post a Comment