Thursday, 4 August 2016

MARILYN MONROE மர்லின் மன்றோ அழகு தேவதை



மர்லின் மன்றோ 20 ஆம் நூற்றாண்டு அழகு தேவதை விண்ணுலகம் சென்ற நாள் 


1962 ஆகஸ்ட் 5









1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் மர்லின் மன்றோ. உலக இளைஞர்களின் காமத்தின் குறியீடாக கட்டமைக்கப்பட்ட மர்லினின் பிம்பம், இன்றுவரை அதன் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது. 

மர்லினின் அபிரிதமான அழகும், பார்த்த கணம் கலங்கடிக்கும் கவர்ச்சியும்,
 36 வயதில்  
தற்கொலை செய்துகொள்ள நேர்ந்த அவரின் மன நெருக்கடியை, ஆழமான சோகத்தை மறைக்கும் கடினமான திரைச்சீலையாகவே இன்றும் உள்ளது. 


மர்லின் மன்றோ பிறக்கும்போது அவரது தாயார் கிளாடிஸ் மன்றோ பேக்கர் தனது முதல் கணவர் ஜாஸ்பர் பேக்கரை பிரிந்து எட்வர்ட் மார்டின்சன் என்பவருடன் வாழ்ந்து வந்தார். மர்லினின் தந்தை யார் என்ற குழப்பம் இன்று வரை நீடிக்கிறது. அப்பாவை தேடிய நீண்ட பயணமாக மர்லினின் வாழ்க்கையை எளிமையாகக் கூறலாம். 

நார்மா ஜீன் மார்டின்சென் (Norma Jeanne Mortenson) என்ற உண்மை பெயர் கொண்ட மர்லின் மன்றோ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஏழைகளுக்கான இலவச மருத்துவமனையொன்றில் 1926 ஆண்டு ஜூன் 1 ம் தேதி பிறந்தாள். அவளுடைய அம்மா க்ளாடிஸ் மன்றோ பேக்கர் (Gladys Monroe Baker). அவளது பிறப்பு சான்றிதழில் அப்பா என்று எட்வர்ட் மார்டின்சன் பெயர் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் அவளது ஞானஸ்நான சடங்கில் அவள் ஜாஸ்பர் பேக்கரின் மகள் என்று குறிப்பிடப்படுகிறாள். 

மர்லின் மன்றோவின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்களில் சிலர் அவளது உண்மையான அப்பா ஸ்டான்லி ஜிஃபோர்டு (Stanley Gifford) என்று குறிப்பிடுகிறார்கள். காரணம் க்ளாடிஸ் கிஃபோர்டுடன் ஹாலிவுட்டின் ஆர்கேஓ ஸ்டுடியோவில் பகுதி நேர ஊழியராக நெகடிவ் கட்டர் வேலை செய்து வந்திருக்கிறார். அந்த நாட்களில் இருவருக்குள்ளும் உடல்ரீதியான தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அதே நேரம் க்ளாடிஸ்க்கு வேறு சிலரோடும் தொடர்பு இருந்திருக்கிறது. அதனால் அவரது கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என்பதை துல்லியமாக அவரால் சொல்லவே முடியவில்லை.

அப்பா என்ற உறவு வாழ்க்கையில் ஏற்படுத்திய வெற்றிடம் மர்லினு‌க்கு இறுதிவரை ஒரு அலைக்கழிப்பாக தொடர்ந்தது. அறுபது வயதான ஆர்தர் மில்லரோடு மர்லின் உடல் ரீதியான உறவு வைத்துக் கொண்டிருந்தாலும் அவரை டாடி என்றே அழைத்து வந்ததை இவ்வாறுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. 

மர்லினின் இளமைப் பருவம் கொடியது. பிறந்த பன்னிரெண்டாவது நாளே வறுமை காரணமாக வளர்ப்பு பெற்றோர்களிடம் அவள் தாரை வார்க்கப்பட்டாள். பதினாறு வயது வரை வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு வளர்ப்பு பெற்றோர்கள் என அனாதைத்தனமான வாழ்க்கை. இடையில் மர்லினின் தாயார் மனச்சிதைவுக்கு உள்ளாகி மனநல காப்பாகத்தில் சேர்க்கப்பட, அவள், தான் ஒருபோதும் விரும்பாத அனாதை வாழ்க்கைக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

16 வயதில் நடந்த மர்லினின் முதல் திருமணமும் மகிழ்ச்சியானதாக இல்லை. வளர்ப்பு பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட அவசர திருமணம் அது. 





16 வயதில் நடந்த மர்லினின் முதல் திருமணம்












1944-ல் மர்லினின் வாழ்க்கை புதிய மாறுதலுக்குள்ளானது. டேவிட் கொனோவர் என்ற புகைப்படக் கலைஞர் Yank பத்திரிக்கைக்காக மர்லினை சில புகைப்படங்கள் எடுத்தார். மர்லினின் அபிரிதமான அழகை முதலில் கண்டுணர்ந்தவர் கொனோவரே.

மர்லின் இறந்து போய் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னும் அவள் பல்லாயிரம் மக்களின் நினைவில் வாழ்ந்து கொண்டேயிருக்கிறாள். அவளது பாதிப்பு உலகம் முழுவதும் நீக்கமற்று நிரம்பியிருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் தான் மேற்சொன்ன தமிழ்ப்பாடல். துலங்கும் அழகும், வெகுளித்தனமான முகமும், வாளிப்பான உடலும், கிறங்கச் செய்யும் பார்வையும் கொண்டிருந்த மர்லின் மன்றோ இருபதாம் நு¡ற்றாண்டின் நிகரற்ற கவர்ச்சிப்பாவையாகவும், பாலின்ப பிம்பமாகவுமே அறியப்பட்டாள். புகைப்படங்கள், திரைப்பட்ங்கள்,விளம்பரங்கள், கிசுகிசுப்புகள் போன்றவை வழியாக அவளது உடல் காமக்குறியீடாக முன்னிறுத்தப்பட்டது.

உலகமெங்குமுள்ள ஆண்களின் காமக்கனவுகளுக்கு து¡ண்டு கோலாகயிருந்தது அவளது உருவம். இந்நாள் வரை உலகம் மர்லின் மன்றோவை அழகுப் பதுமையாகவும், வெறும் கவர்ச்சிக் கன்னியாகவும் மட்டுமே அறிந்து வைத்திருக்கிறது.

சந்தேகத்திற்கு இடமின்றி மர்லின் உலகின் எக்காலத்தையும் சிறந்த  அழகிகளில் ஒருத்தியே. அவளது வனப்பில் எத்தனையோ முக்கிய கலைஞர்கள் மயங்கியிருக்கிறார்கள். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஒவியரான ஆன்டி வோரல் (Andy Warhol) மர்லின் மீதான தனது அபிமானத்தை எண்ணற்ற ஒவியங்களாக தீட்டியிருக்கிறார். அவளது கச்சிதமும் கவர்ச்சியுமான உடற்கட்டும் உடையும் நடையும் இன்று வரை எத்தனையோ நடிகைகளுக்கு ஆதர்சமாக உள்ளது. ஆனால் அழகு, இளமை, கவர்ச்சி என்ற புறத்தோற்றங்களுக்கு அப்பால் மர்லின் மன்றோ மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பாடக்கூடிய ஒரு சிறந்த பாடகியாகவும் இருந்தாள். உலக சினிமாவில் இவளைப் போன்று உணர்ச்சிகள் கொந்தளிக்கும் பாடும் திறன் கொண்ட வேறு நடிகைகளை காண்பது அரிது.


அமெரிக்க சினிமாவில் மர்லின் எப்போதுமே கவர்ச்சியின் அடையாளமாகத்தான் முன்னிறுத்தபட்டாள். மிகக் குறைவான உடையில் அவள் திரையில் தோன்றிய போதும் கூட அது எவரையும் அருவருப்படைய செய்யவில்லை. காரணம் அவளது ஒயிலான உடல்வாகும் அதை வெளிப்படுத்திக் கொள்ள தெரிந்த அவளது குழந்தமை கொண்ட முகபாவமுமே. ஒரு பாடகியாக அவளிடமிருந்த தனித்துவம் பொதுபுத்தியில் பதிவாகியிருந்த மர்லினின் சித்திரத்திலிருந்து பெரிதும் மாறுபட்டது. ஆனால் தேர்ந்த பாடகியாக அவள் ஒரு போதும் அங்கீகரிக்கபடவேயில்லை. அதற்கு காரணம் அவள் மீதிருந்த கவர்ச்சி படிமமே.

இந்நாள் வரை நான் மர்லின் மன்றோவின் பெயரை, சிறந்த பாடும் நடிகைகள் பட்டியல் எதிலும் பார்த்ததேயில்லை. அத்தகைய பல பட்டியல்களில் பார்பரா ஸ்ட்ரைஸன்ட் (Barbara Streisand), ஜூடி கார்லன்ட் (Judy Garland) போன்ற நல்ல பாடகிகளின் பெயர்கள் தான் இடம் பெற்றிருக்கின்றன. எனக்கு பார்பரா ஸ்ட்ரைஸன்டின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். ஆனாலும் இவர்களில் எவரும் பிரதானமாக நடிகைகள் இல்லை, பாடகிகள் தான். மர்லின் மன்றோ நடிகைகளில் ஒரு உயர் நட்ச்த்திரம். ஆனால் ஒரு பாடகியாக அவள் பாடியது நாற்பதுக்கும் குறைவான பாடல்கள்தான். ஆனால் முதல்படமான 'லேடீஸ் ஆஃப் த கோர்ஸ்' இல் [Ladies of the Chorus] அவளுக்கு வாய்ப்பு கிடைத்ததற்கான காரணமே பாடத்தெரியும் என்பது தான். 



அது சிறந்த படமில்லை என்றபோதும் 'ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அப்பா தேவை' [Every Baby Needs a Daddy], 'நான் உன்னை காதலிப்பது எவருக்கும் தெரியும்' [Anyone Can See I Love You] போன்ற மூன்று மறக்கமுடியாத மர்லின் பாடல்கள் அப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

. மர்லின் மன்றோ குரல் மிக இனிமையானதாகவும், உணர்ச்சி பாங்கோடு தனித்துவமானதாகவுமிருந்தது. ஆனாலும் அவளது பாடும் திறன் உரிய முறையில் கண்டுகொள்ளப்படவேயில்லை.அவள் உடல் மீது கொண்டிருந்த ஈடுபாட்டை, யாரும் அவளது குரல்மீது காட்டவில்லை.

திரையில் அவள் தோன்றும் கவர்ச்சிபடிமத்திற்கு துணை செய்வது போன்றே அவளது பெரும்பான்மையான பாடல்களும் அமைந்திருந்தன. சரசமாடும் காட்சிகளுக்கான பாடல்கள் என்ற போதும் அதை மர்லின் ரசித்து பாடியுள்ள விதம் இந்நாள் வரை வேறு எந்த திரைப்பாடகியாலும் பாட முடிந்ததேயில்லை என்றே சொல்வேன். Teach me Tiger என்ற பாடலை ஒரு முறை கேட்டுபாருங்கள். நீங்களே அதை உணர்வீர்கள். என்வரையில் மர்லின் மன்றோவின் பாடலை கேட்பது ஒரு நெகிழ்வூட்டும் அனுபவம். அவள் பாடும் முறை அகவுணர்ச்சியை து¡ண்டக்கூடியது. ஒரு சாதாரணப் பாடலை ஒரு நல்ல பாடகி தன் உணர்ச்சிப்பூர்வமான பாடும்முறையால் எந்த அளவு உயரத்திற்குகொண்டு செல்ல இயலும் என்பதற்கான அடையாளம் அது.

மர்லின் மன்றோ பாடிய 'புல்வெளிக்குள்' [Down in the Meadow] மற்றும் 'நான் காதலைக்கடந்ந்துள்ளேன்' [I'm Through with Love] போன்ற பாடல்களை உதாரணங்களாகச் சொல்லலாம். 'ஓர் இனிய காதல்' [A Fine Romance] என்ற என்றைக்குமான சிறந்த பாடலை அவள் பாடிய விதம் இதுவரை பாடப்பட்டய அப்பாடலின் வடிவங்களில் மிகவும் தனித்துவமானது. தீராத துயரத்தை வெளிப்படுத்தும் 'திரும்பி வராத நதி' [River of No Return] மர்லினின் மிகச்சிறந்த் பாடல்களில் ஒன்றாகும். தன் மீது படிந்திருந்த கவர்ச்சிபடிமத்தை தன் பாடல்களின் வழியாக எளிதாக தாண்டிச் செல்ல மர்லினால் முடிந்திருக்கிறது. 

தன்னியல்பாக அவளிடமிருந்த ஈடுபாடும் தனித்திறனும் அவள் பாடல்களுக்கு நேர்த்தியான கலைத்தன்மையை உருவாக்கின. குறுகிய குரலளவு கொண்டிருந்த போதிலும் மர்லினால் தன் பாடல்களில் இதயப்பூர்வமான லயிப்பை உருவாக்க முடிந்திருக்கிறது. 

மர்லின் மன்றோ அமெரிக்காவின் பிரபலமான கறுப்பின பாடகியான எல்லா பிட்ஸ்ஜெரால்டின் (Ella Fitzgerald) 'ப்ளூஸ்' [Blues]இசைப்பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவள். அந்த பாதிப்பை அவள் பாடும் முறையில் நேரடியாக காணமுடிகிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற ப்ளூஸ் இசை வடிவமே மர்லின் மன்றோவிற்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கிறது. ப்ளூஸ் இசை ஆற்றாமையையும், அடங்கிய துக்கத்தையும், காதலின் தீராதவலியையும், மனிதவாழ்வின் அர்த்தமற்ற புதிர்தன்மையையும் பகிர்ந்து கொள்வதாகும். பகட்டும் புகழும் தன்னை சுற்றியிருந்த போதும், மர்லின் தீராத மனத்துயரோடுதானிருந்தாள். தன் வாழ்வு குறித்து அவள் குறிப்பிடும் போது

 "சந்தோஷம் என்பதை என் வாழ்வில் நான் அறிந்திருக்கவேயில்லை. ஒரு சிறுமியாக நான் வளர்க்கபட்ட விதம் வேதனையானது. சாதாரண அமெரிக்க குடும்பம் ஒன்றில் வளர்க்கபடும் சிறுமிக்கு கிடைக்கும் எவ்விதமான மகிழ்ச்சியும் எனக்கு கிடைக்கவேயில்லை"ன்றாள்.

உண்மை தான், அநாதைகளின் சந்தோஷத்தைப் பற்றிக் கவலைப்பட யார் இருக்கிறார்கள்? யாருமில்லாமல் வளர்ந்து யாருமில்லாமல் சாகும்படியாக கைவிடப்பட்டவர்கள் தானே அவர்கள். 

மர்லின் மன்றோவும் அது போன்ற அநாதைகளில் ஒருத்தி தான். வறுமையும் பசியும் பீடித்த சிறுமியாக வளர்ந்து, வாலிபம் தந்த உடற்கவர்ச்சியால் பின்னாளில் அமெரிக்க சினிமாவின் தாரகையாக மின்னினாள். எந்த திரைக்கதையாசிரியனாலும் கற்பனை செய்ய முடியாத உண்மைக் கதைதான் அவளது வாழ்க்கை.




க்ளாடிஸ் ஒரு பக்கம் தீவிரமான மதநம்பிக்கை கொண்டிருந்தார். அதே நேரம் ஹாலிவுட் சினிமாவின் மீதும் அவருக்கு அதீத விருப்பம் இருந்தது. தனக்கு பிடித்தமான நடிகையான நார்மா தால்மேஜ் [Norma Talmadge] நினைவாகவே தன் மகளுக்கு நார்மா என்று பெயரிட்டார். முதல் கணவர் ஜாஸ்பர் பேக்கர் வழியாக அவருக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட சச்சரவால் ஜாஸ்பர் தன்னுடைய குழந்தைகளை அவளிடமிருந்து பிரித்து கொண்டு சென்றுவிட்டார். அதன் பிறகு எட்வர்ட் மார்டின்சன் உடன் சேர்ந்து வாழ துவங்கினார். ஆனால் அந்த கசப்பான மணவாழ்வும் சில மாதங்களிலேயே முடிந்து போனது. நார்மாவிற்கு மூன்று மாதங்கள் நடந்து கொண்டிருந்த போது எட்வர்ட் ஒரு சாலை விபத்தில் பரிதாபமாக இறந்து போனார்.


தன் வாழ்நாள் முழுவதுமே மர்லின் மன்றோ ஒரு தந்தையின் பரிவிற்காக ஏங்கிக் கொண்டிருந்தாள். அப்பாவின் அன்பிற்கான அவளது தேடுதல் தான் பல்வேறு ஆண்களுடனான அவளது உறவிற்கு ஆதார காரணமாக அமைந்திருக்கிறது. மர்லினின் உண்மையான அப்பா என கருதப்படும் ஸ்டான்லி ஜிஃபோர்டு பிரபல ஹாலிவுட் நடிகரான கிளார்க் கேபிளின் ஜாடையில் இருந்த காரணத்தால் பல நேரங்களில் கிளார்க் கேபிளையே தன்னுடைய அப்பா என்று மர்லின் கனவுகாணத்துவங்கினாள். 

பின்னாளில் தன் பதின்வயதில் ஒருமுறை அவள் ஜிஃபோர்டுடன் போனில் பேசுவதற்கு முயன்றாள். பயந்து தயங்கி, அச்சத்துடன் "அப்பா... நான் க்ளாடிஸின் மகள் நார்மா பேசறேன்....என தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். 

மர்லின் மன்றோவின் நிஜ தகப்பனார் இவர் தான் 












உடனே ஜிஃபோர்டு கோபத்துடன் 'எந்த க்ளாடிஸ்' என்று கேட்டபடி போனை துண்டித்து விட்டார். தன் வாழ்நாள் முழுவதும் தகப்பனின் புறக்கணிப்பிற்கு உள்ளான ஆறாத வடுவோடு வாழ்ந்த அவள் தன் குழந்தைப்பருவம் முழுவதையும் அடர்ந்த இருட்டிலேயே கழிக்க நேர்ந்தது.


வறுமையில் வாடிய க்ளாடிஸ் தன்னுடைய மகள் பிறந்த பனிரெண்டே நாட்களில் அவளை ஆல்பெரட் மற்றும் இடா போலண்டர் தம்பதியிடம் ஒப்படைத்துவிட்டாள். அவர்களும் தீவிரமான மதப்பற்றாளர்கள் என்பதால் தன் மகளை அவர்கள் முறையாக வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கை க்ளாடிஸ்க்கு இருந்தது. வளர்ப்பு பெற்றோர்களால் வலிந்து திணிக்கபட்ட மத ஈடுபாடு நார்மாவிற்கு வெறுப்புணர்வையே தோற்றுவித்தது. தேவாலயத்தை பயமுறுத்தும் கூடமாகவே அவள் உணர்ந்தாள். இர்விங் வாலஸ் [Irving Wallace] எழுதிய பிரபலங்களின் அந்தரங்க பாலியல் வாழ்க்கை [intimate sex life of famous people] எனும் நூலில் மர்லின் மன்றோவிற்கு தன் பதின்வயதில்தொடர்ச்சியாக ஒரு கனவு வந்தது என்றும் அக்கனவில் அவள் தேவாலயத்தில் தன்னுடைய ஆடைகளை களைந்து நிர்வாணமாக நிற்பதாகவும், அதை பிரார்த்தனைக்கு வந்தவர்கள் அத்தனை பேரும் உற்சாகத்துடன் வேடிக்கை பார்த்தாகவும் கூறப்பட்டுள்ளது.


சிறுவயதில் நார்மா தன்னுடைய அம்மாவை வார விடுமுறை நாளில் அரைமணி நேரம் மட்டுமே சந்தித்து வந்தாள். சில வருடங்களின் பின்னால் ஒரு நாள் க்ளாடிஸ், தான் ஒரு வீடு வாங்கியிருப்பதாக சொல்லி மகளைத் தன்னோடு அழைத்து கொண்டாள். அந்த வீட்டில் தாயோடு சில மாதங்கள் தங்கி கொண்டிருந்த போதும் மர்லினால் தன்னுடைய சொந்த அம்மாவோடு ஒட்டுறவாக இருக்க முடியவில்லை. ஒரு நாள் க்ளாடிஸ் நினைத்தாற் போல பாடவும் ஆடவும் கூச்சலிடவும் துவங்கினாள். நார்மாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் பயத்தோடு ஒடுங்கிபோயிருந்தாள். இரண்டு நாட்களுக்குபின் அண்டைவீட்டார்கள் நிலைமையை அறிந்து க்ளாடிஸை மனநல காப்பகம் ஒன்றில் சிகிச்சை செய்ய அனுமதித்தனர். மனச்சிதைவிற்கு உள்ளான க்ளாடிஸ் நீண்ட நாட்கள் காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலையில் நார்மா யாருமற்ற அநாதையானாள். லாஸ் ஏஞ்சலஸில் உள்ள அநாதைகள் காப்பகத்தில் நார்மா சேர்க்கப்பட்டாள். அங்கிருந்து ஒவ்வொரு வளர்ப்பு வீடாக மாறியலைந்தாள்.

ஐந்து வயது முதலே பாலியல் தொல்லைகளுக்கு உள்ளான நார்மாவிற்கு பால்யகாலம் முழுவதும் வேதனையும் அலைக்கழிப்பும் கண்ணீருமே துணையாக இருந்தது. அவளின் வளர்ப்பு பெற்றோர்களில் சிலரே அவளோடு பாலியல் உறவு கொள்ள முயற்சித்தனர். எட்டு வயதில் கிம்மல் என்ற வயதானவர் அவளோடு வன்புணர்ச்சியில் ஈடுபட முயன்றதை அவரது மனைவியிடம் நார்மா தெரிவித்த போது கிம்மல் மிகவும் நல்லவர் என்றும் அவள் பொய்யாக குற்றசாட்டுகள் சொல்கிறாள் என்றும் மறுக்கபபட்டது. 


"அந்த வயதில் என்னை சுற்றிய உலகம் முழுவதுமே இருண்டு கிடந்தது. வெளியேறும் வழியில்லாமல் பயந்துபோயிருந்தேன்"ன்று பின்னாளில் மர்லின் மன்றோ அந்த நாட்களை பற்றி குறிப்பிடுகிறாள்.

இதற்க்கிடையில் பல்வேறு பள்ளிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்ப கல்வியை முடித்தாள் மர்லின். 1942ல் நார்மாவின் அப்போதைய வளர்ப்பு பெற்றோர் இடம் மாறி செல்ல இருந்த காரணத்தால் அவர்கள் வீட்டின் அருகாமையில் வசித்து வந்த ஜிம் டோஹெர்டியை அவளுக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். நார்மாவிற்கு வேறு வழியில்லை. திரும்பவும் தன்னால் அநாதைகள் காப்பகத்திற்கு செல்ல முடியாது என்ற காரணத்தால் மட்டும் அவள் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாள். அப்போது அவளுக்கு பதினாறு வயதே நடந்து கொண்டிருந்தது. 1942 ஆண்டு ஜூன் 19ம் தேதி அவர்கள் திருமணம் நடைபெற்றது.

ஜிம் டோஹெர்டி வணிகக்கப்பல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தான். தனித்து வீட்டிலிருந்த வெறுமையை போக்கிக் கொள்ள நார்மா உள்ளுரில் இருந்த விமானவியல் பட்டறை ஒன்றில் தரநிர்வாகப்பிரிவில் வேலைக்கு சேர்ந்தாள். அங்கே 1944ல் அவளுக்கு டேவிட் கொனோவர் [David Conover] என்ற புகைப்பட கலைஞரின் அறிமுகம் கிடைத்தது. 



                                                         டேவிட் கொனோவர் 



டேவிட் நார்மாவின் அழகில் மயங்கி அவளை பெண்கள் வார இதழ் ஒன்றிற்கான மாடலாக புகைப்படம் எடுத்துக் கொள்ள ஒரு மணி நேரத்திற்கு ஐந்து டாலர் வீதம் ஒப்பந்தம் செய்து கொண்டார். புகைப்படம் எடுப்பதற்காக இருவரும் ஒன்றாக சுற்றுப்பயணம் செய்தனர். இந்த புகைப்படங்கள் வழியாக அவள் மீது பத்திரிக்கை உலகின் பார்வை விழுந்தது. ஒரே வருடத்தில் அவள் அமெரிக்காவின் 33 முக்கிய இதழ்களில் அட்டைபட அழகியாக வெளியாகினாள்.




அவள் தன்னுடைய ஒவ்வொரு புகைப்படத்தையும் கவனமாக ஆராய்ந்து தன்னுடைய குறைகளை அறிந்து சரி செய்து கொள்கின்றவளாக யிருந்தாள்.  அவளால் தன் உடலை எப்படி அழகாக வெளிப்படுத்துவது என்று தெரிந்திருந்தது என்று அவளோடு பணியாற்றிய புகைப்படக் கலைஞர்கள் பலரும் தெரிவிக்கிறார்கள். தான் எவ்விதமாக காட்சியளிக்க வேண்டும் என்று ஆண்கள் ஆசைப்படுகிறார்கள் என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. நார்மா பிரபலமாக துவங்கினாள், ஆனால் அவளது தனிப்பட்ட வாழ்க்கை தனிமையும் துயரமும் நிரம்பியதாகவே இருந்தது. அவளால் அந்த வெறுமையை தாங்க முடியவேயில்லை. ஆகவே மணவிலக்கு கோரி அவள் நீதிமன்றம் சென்றாள். அப்பாவியான தன் மனைவியை பத்திரிக்கைகளும் புகைப்பட கலைஞர்களும் சேர்ந்து, சூதும் வாதும் கொண்டவளாக மாற்றியிருப்பதாக அவளது கணவன் கண்டனம் தெரிவித்தான். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதன்பிறகே நார்மாவிற்குள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவு துளிர்க்கத் துவங்கியது.

அவளது இருபதாவது வயதில் 20th செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற ஸ்கிரின் டெஸ்டில் அவள் தேர்வு செய்யப்பட்டு வாரம் 75 டாலர் ஊதியத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டாள். அந்த ஒப்பந்தத்தின் படியே அவளது பெயர் மாற்றி வைக்கபட வேண்டியதாகியது. 

மர்லின் என்ற பெயரை தயாரிப்பு நிர்வாகி சிபாரிசு செய்தார். அத்தோடு தன்னுடைய தாயின் பெயரில் ஒருபகுதியான மன்றோவை இணைத்து மர்லின் மன்றோ என பெயர் சூட்டிக் கொண்டாள் நார்மா ஜீன். புகழ்பெற்ற நடிகையாக வேண்டும் என்று மர்லின் கனவுகாண துவங்கினாள். 

மற்ற பெண்களை போல வெறுமனே காத்துகிடக்காமல் தன் கனவை நனவாக்குவதற்கான வழிகளை அவள் தேர்வு செய்ய துவங்கினாள். அந்த நாட்களில் அவளுக்கு நடிப்பு பயிற்சி அளித்தவர் அவளை போன்ற முசுடுகளால் ஒரு போதும் சிறந்த நடிகையாக முடியாது என்றே நம்பினார்.

அவள் நினைத்தது போல நடிகையாகும் கனவு எளிதாகயில்லை. முதலாண்டிற்குள்ளாக 20th செஞ்சுரி ஃபாக்ஸ் காரணமின்றியே ஒப்பந்தத்தை ரத்து செய்து அவளை விலக்கியது. பிழைக்க வழியின்றி மதுக்கூடங்களில் விரச நடனமாடி வாழும்படியாக நேர்ந்தது. 

நீலத்திரைப்படம் ஒன்றில் கூட அந்த நாட்களில் மர்லின் மன்றோ நடித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இது நிரூபிக்கப்படவில்லை. அவளது தொடர்ந்த முயற்சியின் காரணமாக 1948 ஆண்டு கொலம்பியா பிக்சர்ஸ் அவளை வாரம் 75 டாலர் சம்பளத்தில் ஆறு மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்தது. ஹாலிவுட்டின் தயாரிப்பு நிர்வாகியான ஜோ ஷென்க் [Joe Schenck] என்ற முதியவரின் பார்வையை ஈர்த்த மர்லின் மன்றோ, அவர் வழியாக 'லேடீஸ் ஆஃப் த கோரஸ்' படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டாள்.

கொலம்பியா பட நிறுவனத்தின் இசையமைப்பாளராக பணியாற்றிய ஃப்ரெட் கேர்கர் [Fred Karger] படத்திற்கான பாடல்களை இசையமைப்பு செய்து பயிற்சி தந்த போது மர்லினுக்கும் அவருக்குமிடையில் காதல் உருவானது. மர்லின் படுமோசமான சூழலில் வாழ்வதை அறிந்த கேர்கர் அவளை தன்னுடைய பராமரிப்பின் கீழே வைத்து கொண்டு பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டான். அந்த உறவால் பலமுறை கர்ப்பச்சிதைவிற்கு ஆளானாள் மர்லின் மன்றோ. உடற்சோர்வும் வெறுமையும் அவளை தற்கொலைக்கு பலமுறை து¡ண்டியிருக்கின்றன.


அதன்பிறகும் முறையான படங்கள் கிடைக்காமல் தடுமாறிய மர்லினிற்க்கு ஆதரவு தர முன்வந்தார் ஜானி ஹைடு [Johnny Hyde].  ஹாலிவுட்டின் தயாரிப்பு நிறுவனங்களுக்கான முதலீடுகள் ஏற்பாடு செய்யும் செல்வாக்கான ஜானி ஹைடு மர்லினின் தோற்றத்தையும் அவளது உடல் குறைபாடுகளையும் சரி செய்வதில் மிகுந்த கவனம் எடுத்தார். 














அவளது முகவாய் மற்றும் மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றியமைத்ததில் ஹைடுக்கு மிக முக்கிய பங்கிருக்கிறது. அதற்கான முழுமையான மருத்துவசெலவை அவரே ஏற்றுக் கொண்டார். அத்தோடு புதிய பட வாய்ப்புகளையும் அவளுக்காக உருவாக்கி தரத் துவங்கினார். பாலிவுட்டில் ஸ்ரீதேவி செய்து கொண்டது போன்ற பிளாஸ்டிக் சிகிட்சைகள் மர்லின் மன்றோவை பின்பற்றியதே. 



நிஜ வாழ்வை போலவே, அவளது ஆரம்ப கால படங்களில், பணக்காரர்களின் ஆசைநாயகியாகவே மர்லின் நடித்த வேஷங்களும் அமைந்திருந்தன!

மர்லின் மன்றோவிற்கு பாலின்பத்தில் ஈடுபாடு இருந்ததில்லை. ஆண்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே அவள் கலவியில் அதீத நாட்டம் கொண்டவள் போல நடிக்கக் கூடியவளாகயிருந்தாள். 

இது போன்ற காமபாவனை நடிப்புககளுக்கு ஆஸ்கார் விருது வழங்கபப்டுவதாக இருந்தால் அது தனக்கே கிடைக்கும் என்று வேடிக்கையாக கூறிய மர்லின் பாலுறவை தன் வளர்ச்சிக்கான வழியாக பயன்படுத்திக் கொண்டாள். 

அழகான உடல்கொண்ட பெண்கள் மிகுந்த காம இச்சை கொண்டவர்கள் என்றே ஆண்களின் பொதுப்புத்தி வரையறுத்திருக்கிறது. கவர்ச்சியாக தோற்றமளித்த போதும் மர்லின் மன்றோவிற்கு பாலின்பத்தில் துளிகூட நாட்டமேயில்லை. 1940 களின் ஹாலிவுட் ஒரு பரத்தையர் விடுதி போலவே இருந்தது என்று ஒரு நேர்காணலில் மர்லின் தெரிவித்திருக்கிறார்.


 1950 ஆண்டு ஹைடு மாரடைப்பால் இறந்து போனார். அவரது மரணத்திற்கு காரணம் மர்லினோடு கொண்டிருந்த மிதமிஞ்சிய பாலுறவே என்று பலரும் வெளிப்படையாக அவது¡று பரப்பினார்கள். 
1951 ஆண்டு அவளுக்கு ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்திற்குமான ஒப்பந்தம் ஏழாண்டு காலத்திற்கு நீட்டிக்கபட்டது.

1951 ஆண்டு பிரபல நாடக ஆசிரியரான ஆர்தர் மில்லரை மர்லின் மன்றோ சந்தித்தாள். அப்போது மில்லருக்கு அறுபது வயதுக்கும் மேலே. அறிவுஜீவியான அவரை மர்லின் விரும்பி காதலிக்கத் துவங்கினாள். அவரும் அவளது வாளிப்பில் மயங்கி அவளோடு வாழத் துவங்கினார். மில்லரை தனது தந்தையின் பிம்பம் போலவே உணர்ந்த மர்லின் அவரை 'டாடி' என்றே அழைத்தாள். ஒரு ஆண்டிற்குள் அவளது ஒன்பது திரைப்படங்கள் வெளியாகி ஹாலிவுட்டின் ஒப்பற்ற தாரகையானாள் 
















மர்லின் மன்றோ. ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கடிதங்கள், செல்லுமிடம் எல்லாம் பாராட்டு, புகழ்மழை என்று அவளது உலகம் தலைகீழாக மாறியது. 

1952 ஆண்டு அவளது பழைய நிர்வாண புகைப்படங்கள் சில வெளியாகி அவள் மீதான சச்சரவை ஏற்படுத்தியது. ஆனால் தன்னுடைய வறுமையின் காரணமாகவே அன்று தான் அது போன்ற புகைப்படங்கள் எடுக்க சம்மதிக்க வேண்டியதாகியது என்று அவள் ஒளிவுமறைவற்று தெரிவித்தவுடன் குற்றசாட்டுகள் மறைந்து அவள் மீது பொதுமக்களுக்கு பரிவும் அன்பும் உண்டானது.

தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், தாமஸ் மன் மற்றும் சிக்மன்ட் ஃப்ராயிட் என்று தீவிரமான இலக்கிய பரிச்சயம் கொண்டிருந்த அறிவாளியாக இருந்த போதும் மர்லின் மன்றோ தன்னை ஒரு கவர்ச்சிபதுமையாகவே காட்டிக் கொண்டாள். 

அவளது புகழ்பெற்ற திரைப்படங்களான 

Niagara, 



















Gentlemen Prefer Blondes, 
















There's No Business Like Show Business 


























[Joe Di Maggio




போன்றவை வெளியாகி அவளை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. இன்னொரு பக்கம் அவளது சொந்த வாழ்க்கையில் புதிய காதலர்கள் மாறிக் கொண்டேயிருந்தனர். 

ஜோ டி மாஜியோ [Joe Di Maggio] என்ற புகழ்பெற்ற அமெரிக்க பேஸ்பால் விளையாட்டு வீரரை திருமணம் செய்து அவரோடு வாழத்துவங்கினாள் மர்லின். 



அவரையும் 'டாடி' என்று தான் மர்லின் அழைத்து வந்தாள். தன் மனைவி பெண்களிடம் பேசுவதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க மனநிலையில் இருந்த ஜோ டி மாஜியோவின் விருப்பத்திற்கு எதிராக 'தி செவன் இயர் இட்ச்' [The seven year itch] படத்திற்கான படப்பிடிபிற்காக நியூயார்க் சென்றார். 

அங்கே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னால் காற்றில் அவளது ஆடைகள் பறந்து உள்ளாடை தெரிவது போன்ற காட்சி ஒன்றில் நடித்ததை ஜோவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த காட்சி திரும்ப திரும்ப படமாக்கப்பட்ட விதமும், பொதுமக்கள் அவள் உடலை கண்களால் உரித்து தின்று கொண்டிருந்ததையும் கண்ட ஜோ அன்றிரவு அவளை அடித்து மிகவும் துன்புறுத்தியிருக்கிறான். அவனோடு சேர்ந்து வாழ விருப்பமற்று நீதிமன்றம் சென்றாள் மர்லின். ஒன்பது மாதங்களே அவர்களது திருமண வாழ்வு நடந்துள்ளது. ஆனால் மணவிலக்கிற்கு பிறகும் ஜோவோடு அவளுக்கான நட்பு தொடர்ந்து இருந்தபடியே தானிருந்தது.

பணமும் புகழும் நிரம்பிய போதும் மர்லினால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தன்னை காண்பவர்கள் அத்தனை பேரும் காம கண்ணோட்டத்திலே பழகுவது அவளுக்கு அருவருப்பு ஊட்டியது. 

நியூயார்க்கிற்கு இடம்மாறிய மர்லின் அங்கே தன்னுடைய பெயரில் ஒரு படக்கம்பெனி துவங்கினாள். ஆர்தர் மில்லரோடு உள்ள உறவு வலுவடைய ஆரம்பித்தது. 1956 ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டாள். ஆனால் அவர்களுக்குள்ளும் சில மாதங்களிலேயே மனவேற்றுமை வளர துவங்கியது. மில்லர் அவளோடு தன்னால் சேர்ந்து வாழ முடியாது என்று பகிரங்கமாகவே அறிவித்தார். 

அவர் திரைக்கதை எழுதிய 
The Misfits என்ற படமும் 

















@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



Some Like it Hot, 




















The Bus Stop, 

























The Prince and the Show Girl 



















போன்ற மற்ற படங்களும் வெளியாகி மிகப் பெரும் வெற்றிகளாக அமைந்தன.

ஏமாற்றமான மணவாழ்வும் தொடர்ந்த கருச்சிதைவுகளும் காரனமாக 1960 ல் மர்லின் மன்றோவிற்கு நரம்பு சீர்கேடு ஏற்பட்டது. அவளது வீழ்ச்சி துவங்கியது. அதிகமான மதுவோடு து¡க்கமாத்திரைகளை சாப்பிடவும் பழகிக் கொண்டாள். 

படப்பிடிப்பிற்கு மிக தாமதமாக வருவது, படத்தில் கவனம் செலுத்தாதது என்ற குறைபாடுகள் அதிகரிக்க துவங்கின. நான்கு வருட மணவாழ்க்கைக்கு பிறகு அவளும் மில்லரும் மணவிலக்கு பெற்றுப் பிரிந்தனர். துயரமான மனநிலையிலிருந்து மீண்டு வருவதற்காக ரால்ப் க்ரீன்ஸன் [Ralph Greenson] என்ற மனநல மருத்துவரிடம் சிகிட்சை எடுத்துக் கொள்ளத் துவங்கினாள் மர்லின் மன்றோ. 

பிரபல பாடகரும் ஹாலிவுட் நடிகருமான பிராங்க் சினாட்ராவோடு அவளது வெளிப்படையான உறவு குற்றசாட்டாக எழுந்தது. அந்த நாட்களில் அமெரிக்காவின் பணக்கார குடும்பங்களோடு விருந்தில் ஏற்பட்ட நெருக்கமும் நட்பும் அவளுக்கு புதிய சுற்றம் ஒன்றை உருவாக்கியது. 

1962 ஆண்டு ஒரு விருந்தில் அமெரிக்க ஜனாதிபதியான ஜான் எப். கென்னடிக்கும் அவரது சகோதரர் ராபர்ட் கென்னடிக்கும் மர்லின் மன்றோ அறிமுகம் செய்து வைக்கபட்டாள். கென்னடி சகோதர்களுக்கு அவள் மீது காமகண்ணோட்டம் உருவானது.



















சகோதரர்கள் இருவரோடும் ஒரே நேரத்தில் நெருக்கமாக இருந்தபோதும் மர்லினிற்க்கு விருப்பமாக இருந்தது ஜனாதிபதியான ஜான் கென்னடியே என்று கூறுகிறார்கள். அவர்கள் இருவரின் ரகசிய சந்திப்புகள் தொடர்ந்தன. ஜான் கென்னடி தொலைபேசியிலும் அவளோடு தொடர்ந்து உரையாட துவங்கினார். 

அவர்களது உறவை கண்டு பயந்த அரசியல் வட்டாரம் ஒரு வேளை கென்னடி தன்னுடைய மனைவியை மணவிலக்கு செய்துவிட்டு மர்லின் மன்றோவை மணந்து கொள்வார் என்றே நம்ப துவங்கினார்கள். அவளது மனநல மருத்துவர்கள் தொடர்ந்து அவளை சந்தித்து சிகிச்சை அளித்த போதும் அவளுக்குள் ஏற்பட்டிருந்த மனச்சோர்வு நீங்கவேயில்லை. 

கென்னடிகளோடு அவளுக்கிருந்த பாலியல் தொடர்பு அவளை பல சிக்கல்களில் மாட்டி வைத்தது. அமெரிக்காவின் உளவு நிறுவனங்கள் அவளை கண்காணிக்க துவங்கின. நிழல்உலகத்தை சேர்ந்தவர்கள் அவளை பகடையாக பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தார்கள். ஜான் எப்.கென்னடியின் பிறந்த நாள் விழாவில் மர்லின் பகிரங்கமாக கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடியது பெரிய சர்ச்சையை உருவாக்கியது.

தேசத்தின் எதிர்காலம் கருதி கண்காணிக்கவும் அப்புறப்படுத்தவும் வேண்டியவர்களின் பட்டியலில் மர்லின் மன்றோவின் பெயரும் இடம்பெற்றது. மர்லின் மன்றோவோடு நெருக்கமாக இருந்த தருணங்களில் ஜனாதிபதி குடிபோதையில் நிறைய அரசாங்க ரகசியங்களை பகிர்ந்து கொண்டிருப்பதாகவும் அவை வெளியானால் தேசத்தின் நலனிற்கு ஆபத்தாக முடியும் என்றும் அரசியல்வட்டாரங்கள் எச்சரிக்கை செய்தன. ஆனால் அவர்கள் நினைத்தது போல மர்லின் மன்றோ கென்னடிகளின் பெயரை கெடுக்க எவ்விதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை.






1962 ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மர்லின் மன்றோ தன்னுடைய வீட்டில் இறந்து கிடந்தாள். அவளது படுக்கையில் து¡க்கமாத்திரைகளும் வலியுணரா மருந்துகளும் கிடந்தன. மனச்சோர்வின் காரணமாக தேவைக்கு அதிகமான மருந்துகளை ஒரே வேளையில் எடுத்துக் கொண்டதால் மர்லின் மன்றோ இறந்து போயிருப்பதாக தெரிவிக்கபட்டது. அது தற்கொலை என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அப்போது அவளுக்கு வயது 36. அவள் உடலை வாங்க எவரும் முன்வரவில்லை. சவக்கிடங்கில் உறைந்து கிடந்த அவளது உடல் அப்போது யாருக்குமே தேவைப்படவில்லை! அவளது அம்மா அப்போதும் மனநலகாப்பகத்தில் தான் அடைபட்டிருந்தார்.


1962 ஆகஸ்ட் 8 தேதி அவளது உடல் லாஸ் ஏஞ்சலஸில், வெஸ்ட்வுட் பூங்காவில் உள்ள நீத்தார் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அன்று அமெரிக்க தெருக்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேதனையோடு தங்களின் கனவுகன்னிக்கு விடைதந்தார்கள். 

"சிறுவயதில், நீ அழகாக இருக்கிறாய் என்று யாருமே எனக்கு சொன்னதில்லை. நீ ஒரு அழகான குழந்தை என்று அழகில்லாத சிறுமிகளிடம் கூட நாம் சொல்லவேண்டும். அந்த சொல்லில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தன்னம்பிக்கை வாழ்நாள் முழுவதும் அவர்களை வழிநடத்தும்". ஒரு முறை மர்லின் மன்றோ கண்ணீர் மல்க கூறினாள்.


இருபதாம் நூற்றாண்டின் இனிய தேவதை மர்லின் மன்றோ 1.6.1926-ல் பிறந்தார்
நடிப்பில் மிகச்சிறந்து விளங்கிய ஹாலிவுட் நடிகைகள் பலர் உண்டு. ஆனால் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களை, தன் அழகாலும், கவர்ச்சியாலும் கட்டிப் போட்ட கட்டழகி மர்லின் மன்றோ மட்டுமே.
அகில உலகக் 'கனவுக் கன்னி' அவர் ஒருவரே.
இவ்வளவு புகழ் பெற்றிருந்தும் அவர் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. இளமையில் வறுமையின் கொடுமையை அனுபவித்தார். பல போராட்டங்களைச் சந்தித்த பிறகே, திரை உலகில் புகழ்பெற முடிந்தது.
தந்தை யார்?
மர்லின் மன்றோ அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பொது மருத்துவமனையில் 1.6.1926-ல் பிறந்தார். குழந்தையின் பெயர் நார்மா ஜீனே மார்டென்சன் என்று மருத்துவமனை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தந்தை பெயர் எட்வர்டு மார்டென்சன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் நிஜமான தந்தை அல்ல. மர்லின் மன்றோ பிறந்த பிறகு, அவரது தாயை அவர் திருமணம் செய்து இருந்தார்.
மர்லின் மன்றோவின் தந்தை சி. ஸ்டான்லி ஜிப்போர்டு என்பவர் ஆவார். மர்லின் மன்றோ கருவில் இருந்தபோது அவர் குடும்பத்தை பிரிந்து சென்று விட்டார். மர்லின் மன்றோ உயிரோடு இருந்தவரை, அவர் தனது மகள் என்று கூறியதில்லை. மன்றோவை சந்திக்கவும் முயற்சி செய்யவில்லை. ஆனால் மர்லின் மன்றோ இறந்த பிறகு, அவர் தனது மகள் என்று கூறினார்.
மன்றோவின் தாய் வழிப்பாட்டியும் பாட்டனாரும் மன நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவளது தாயார் பார்ப்பதற்கு அழகானவள்தான். ஆனால் குணத்தில் கோளாறானவள். வைத்தியத்திற்கு மனநல மருத்துவமனைக்கு வந்து போகும் ஒரு வாடிக்கையாளர்.
மன்றோவின் மாமா தற்கொலை புரிந்து கொண்டார்.
பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு, ஏழ்மையில் மன்றோ வாழ்க்கை கழிந்தது.
தனித்துவிடப்பட்ட மன்றோவின் மனம் தவித்து வாடியது. குடும்ப மனநோய் வாடை, அவள் மீதும் லேசாக வீசியது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆதரவற்றவர் இல்லத்தில் மன்றோ சேர்க்கப்பட்டாள். அங்கு இரண்டு ஆண்டுகள் சென்றது. எஞ்சிய அவளது குழந்தை பருவமும், இளமைப்பருவமும் பல வளர்ப்பு இல்லங்களில் கழிந்தன.
தனது ஒன்பதாவது வயதில், ஹாஸ்டல் நிர்வாகி ஒருவனால், தான் MOLESTED பின்னாளில் மன்றோ ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
மன்றோ தன் 16-வது வயதில், புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுக்கும் மாடல் அழகியாகப் பணிபுரிந்தார். அப்போது அவர், பிறந்த கோலத்தில் தோன்றிய சில படங்கள் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டு, பெரும் பரபரப்பை உண்டாக்கின.
குழந்தையாக மர்லின் மன்றோ
அந்தப் படங்களின் மூலமாக அவர் திரை உலகில் நுழைந்தார்.
பெயர் மாற்றம்
மர்லின் மன்றோ, தன் இயற்பெயர் நார்மா ஜீனே மார் டென்சன் என்பதனை சினிமாவுக்காக 'மர்லின் மன்றோ' என்று மாற்றிக் கொண்டார்.
வாரம் 125 டாலர் சம்பளத்திற்கு நடிக்கத் தொடங்கிய அவரை, பின்னர் வாரம் 3,500 டாலர் சம்பளத்தில் 'டு வெண்டியத் செஞ்சுரி பாக்ஸ்' நிறுவனம் 7 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்தம் செய்தது.
தொடக்கத்தில் சிறிய வேடங்களில் நடித்து வந்த மர்லின், புகழ்பெற்ற பிறகு கதாநாயகியாக பிரபல நடிகர்களுடன் நடிக்கலானார்.
மர்லின், நல்ல அழகி. கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர். அவர் நடை அழகில் மனதைப் பறி கொடுத்தவர்கள் ஏராளம். ரசிகர்கள் அவரை Òசெக்ஸ் பாம்' என்று அழைத்தனர்.
மன்றோவுக்கு உலகப் புகழ்பெற்றுத் தந்த படங்களில் சில:
ஹவ் டு மேரி ய மில்லியனர் (1953),
பஸ் ஸ்டாப் (1956),
பிரின்ஸ் அண்டு தி ஷோ கேர்ள் (1957),
சம் லைக் இட் ஹாட் (1959).
நயாகரா
'ரிவர் ஆப் நோ ரிட்டர்ன்
தி மிஸ்ப் பிட்' (1961)
மர்லின் நடித்த'நயாகரா' என்ற படம், நயாகரா நீர் வீழ்ச்சியை மையமாக வைத்து, முழுக்க முழுக்க அந்த நீர் வீழ்ச்சியைச் சுற்றியே படமாக்கப்பட்டது. கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்ணாக அவர் நடித்தார். ஒரு மாதா கோவிலில், கணவனால் குத்திக் கொல்லப்படுவார். மர்மங்களும் திகிலும் நிறைந்த படம் இது.
தாயுடன் சமையல் செய்யும் மர்லின் மன்றோ
'ரிவர் ஆப் நோ ரிட்டர்ன்' என்ற படத்தில், மர்லின் மன்றோ ஒரு பயங்கரமான ஆற்றில், படகில் பயணம் செய்யும் காட்சிகள் மெய்சிலிர்க்கும் வகையில் படமாக்கப்பட்டு இருந்தன.
போதை மருந்துக்கு அடிமை
மன்றோவின் வாழ்க்கையில் பின்பகுதி இருள் சூழ்ந்ததாகும். மாத்திரைகள் இல்லாமல் அவரால் தூங்க முடியாது, விழித்திருக்க முடியாது - ஏன் செயல்படவே முடியாது. மருந்தைச் சார்ந்தே வாழ வேண்டிய உடல்நிலை, மனோ நிலைக்கு தள்ளப்பட்டார். அம்மாவிடம் இருந்த மனநல பாதிப்பு, மன்றோவிடம் தலைகாட்ட ஆரம்பித்தது.
படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் இருப்பது, மூர்க்கமாக நடப்பது, மறதியால் தவிப்பது போன்றவற்றால், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோரின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார். 'ஸம் லைக் இட் ஹாப்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த டானி கர்டீஸ் கூறும்போது, 'மர்லின் மன்றோவை முத்தமிடுவது ஹிட்லரை முத்தமிடுவது போலுள்ளது' என்று வெறுப்புடன் கூறினார்.
கடைசியாக மிகுந்த சிரமத்துடன் மன்றோ நடித்துக் கொடுத்த படம் 'தி மிஸ்ப் பிட்' (1961). இந்தப் படம் சினிமா உலகில் மன்றோவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
இப்படத்தின் கதாசிரியரும் மன்றோவின் கணவருமான ஆர்தர்மில்லர் பெரும் சங்கடத்திற்குள்ளானார். பெருமையின் சிகரமான டைரக்டர் ஜான் அவுஸ்டன் பொறுமையை மன்றோ சோதித்தார்.
போதைப் பொருளின்றி நடிக்க முடியாமலிருந்த மன்றோ அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே போனது. படம் முடிவடைந்த சமயம் கதாநாயகன் கிளார்க்கேபிள் மாரடைப்பால் காலமானார்.
1. இருமுறை திருமணம் செய்த ஆர்தர் மில்லருடன் மர்லின் மன்றோ
2. ஜான் எப் கென்னடியுடன்
திருமணங்கள்
வெளி உலகத்தில் மர்லின் மன்றோ பெரும் புகழ் பெற்றிருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை துயர் சூழ்ந்தது. மர்லின் மன்றோ தன் தினசரி வாழ்க்கையிலே மன அமைதிக்கும், செயல்திறனுக்கும் மாத்திரை மருந்துகளையே நம்பியிருந்தார். அதற்கு அடிமைப்பட்டுக்கிடந்தார்.
அக்காலப் பெரும் பணக்காரர்கள் மன்றோவின் ஒரு கண் வீச்சுக்கு காத்து கிடந்தும், அவரது திருமண வாழ்க்கை கண்ணாடித் துண்டுகள் போல உடைந்து சிதறியது.
மர்லின் 16 வயதிலேயே தன் வீட்டருகே வசித்த ஜீம் என்ற வாலிபனை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். அவனோ மன்றோ மாடலிங்காக வேலை செய்வதை எதிர்க்க, கணவன்-மனைவியிடையே சச்சரவு மூண்டு விவாகரத்தில் முடிந்தது.
பின் 'ஆஸ் எங்க் ஆஸ் யூ பீல்' என்ற படத்தில் நடித்து வந்தபோது கதாசிரியர் ஆர்தர் மில்லரை சந்தித்தார். அவர் துணையில் மனஅமைதி கிடைத்ததால் 1951-ம் ஆண்டில் அவரைத் திருமணம் செய்து கொண்டார் மர்லின். இத்திருமணம் 1953-ம் ஆண்டு வரை தொடர்ந்தது.
பின் 'ரிவர் ஆப் நோ ரிட்டர்ன்' என்ற படத்தில் நடித்தபோது, அப்போதைய முன்னணி பேஸ்பால் விளையாட்டு வீரர் ஜோ டிமாகியோவை சந்தித்தார். ஜோ-மன்றோ சந்திப்பு, அடிக்கடி நிகழ்ந்தது. காதலால் கட்டுண்ட இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
மன்றோ, ஆர்தர் மில்லரை விவாகரத்து செய்துவிட்டு 1954-ம் ஆண்டு ஜோ டிமாகியோவை திரு மணம் செய்து கொண்டார். இது மன்றோவுக்கு மூன்றாவது திருமணம்.
தம்பதிகள் ஹோனலூலுத் தீவில் தங்கள் தேனிலவை கொண்டாடினார்கள். ஆனால் இந்த காதல் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. ராணுவ வீரர்கள் உற்சாகப்படுத்த அவர்கள் முன் நடனமாட மன்றோவுக்கு அழைப்பு வந்தது. ஜோவுக்கு இதில் விருப்பமில்லை. எனினும் நடனமாடி கணவரின் வெறுப்புக்கு ஆளானார்.
போதாததற்கு, 1955-ல் 'தி செவன் இயர் இட்ச்' என்ற திரைப்படத்தில் மிகவும் செக்சியாக நடனம் ஆடினார், மன்றோ. இதனால் கோபமுற்ற ஜோ, மன்றோவை விவாகரத்து செய்துவிட்டார்.
முன்னாள் கணவரை மணந்தார்
இப்போது மன்றோவை தனிமை தொடர்ந்தது. டு வெண்டியத் செஞ்சுரி பாக்ஸ் படமான 'பஸ் ஸ்டாப்' என்ற படத்தில் மன்றோ நடித்தார். அப்போது தனது முன்னாள் கணவரான ஆர்தர் மில்லரை திரும்பவும் சந்திக்க வாய்ப்பு வந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் வார்த்தைகள் பேசி ஒன்றானார்கள்.
பின் 1956-ம் ஆண்டு மர்லின் மன்றோ தன் முன்னாள் கணவரையே மறுமணம் செய்து கொண்டார்!
அவ்வகையில் இது மர்லின் மன்றோவின் நான்காவது திருமணமாகிறது.
எனினும் வாழ்க்கை நிம்மதியற்று இருந்தது. வருடக்கணக்கில் மாத்திரைகளால் உயிர் வாழ்ந்தார் மர்லின். இம்மாத்திரைகள் கொஞ்சம் கொஞ்சமாக அவரது உயிரைக் குடித்தது.
1962-ம் ஆண்டில் தனது 36-வது வயதில் படுக்கை அறையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார், மன்றோ. சுற்றிலும், தூக்க மாத்திரைகள் சிதறிக் கிடந்தன. மன வேதனை தாங்காமல், தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று முடிவு செய்யப்பட்டது.
பிரதே பரிசோதனை செய்த டாக்டர்களும் இதையே தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்தக்காலம் முதல் சொல்லப்பட்டு வருகிறது.
மர்லின் மன்றோவுக்கும் அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜான் எப் கென்னடிக்கும் ரகசிய தொடர்பு இருந்தது. அதே நேரத்தில் அவரது சகோதரர் ராபர்ட் கென்னடியுடனும் மன்றோவுக்கு தொடர்பு இருந்தது. இந்த தொடர்புகள் மூலம் ஜான் எப் கென்னடியை மர்லின் மன்றோ 'பிளாக் மெயில்' செய்ததாகவும் அப்போது கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் சி.ஐ.ஏ. மற்றும் எப்.பி.ஐ. போன்ற ரகசிய உளவு அமைப்பு மூலம் மர்லின் மன்றோ கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதேபோல மர்லின் மன்றோவுக்கு சிகிச்சை அளித்த மன நல மருத்துவர் ரால்ப் கிரின்சன் என்பவர், சதிசெய்து மர்லின் மன்றோவை கொன்று விட்டதாகவும் அப்போது கூறப்பட்டது. ஆனால் இவற்றை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
மர்லின் மன்றோவுக்கு புத்திசாலித்தனம் மிகுந்த ஆண்களை மிகவும் பிடிக்கும். அவர் தனக்கு பிடித்த ஆண்கள் பட்டியலில் அவரது கணவர் ஆர்தர் மில்லர் மற்றும் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஆகியோருக்கு இடம் கொடுத்து இருந்தார். மர்லின் மன்றோவின் புகைப்படம் ஒன்றில் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கையெழுத்துப்போட்டு கொடுத்திருந்தார். அதை பொக்கிஷம் போல அவர் பாதுகாத்து வந்தார்.
அதுபோல மர்லின் மன்றோ ஒரு புத்தகப்பிரியை. அவரிடம் 400-க்கும் அதிகமான புத்தகங்கள் இருந்தன.
மர்லின் மன்றோ சுவையாக சமைக்கத்தெரிந்தவர். குறிப்பாக இவர் தயாரிக்கும் ஒரு வகை மீன் சூப் மிகவும் சுவையாக இருக்கும். இந்த சூப் தயாரிக்கும் முறையை அவரிடம் கேட்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அப்போது பெரிய செய்தியாக வெளியிட்டது.
மர்லின் மன்றோ நடித்த படங்களில் அவர் மரணம் அடைவது போல காட்சி இடம் பெற்ற ஒரே படம் நய£கரா.
பிளாஸ்டிக் சர்ஜரி
தனது முகத்தின் அழகை மெருகூட்டும் வகையில் 1950-ம் ஆண்டு இரண்டு பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்து கொண்டார் மர்லின் மன்றோ. இதன் மூலம் லேசாக வளைந்திருந்த அவரது மூக்கு மற்றும் நீண்டிருந்த நாடிப்பகுதி ஆகியவை சரிசெய்யப்பட்டன.
மர்லின் மன்றோ நிர்வாணமாக இருப்பதை பெரிதும் நேசிப்பவர். மேக்அப் போடும் முன்பும், படத்துக்கான உடைகளை அணியும் முன்பும் அவர் நிர்வாணமாகவே இருக்க விரும்புவார். பெரும்பாலும் இரவில் அவர் தூங்கும்போது நிர்வாணமாகவே இருப்பார். அதனால் தான் மரணம் அடைந்த போது அவர் தனது படுக்கையில் நிர்வாணமாகவே கிடந்தார்.
மர்லின் மன்றோவின் கல்லறை
வித்தியாசமான இறுதி ஆசை
1954-ம் ஆண்டு விளையாட்டு வீரர் டிமகியோவை மர்லின் மன்றோ திருமணம் செய்து கொண்டபோது, அவரிடம் மன்றோ ஒரு வாக்குறுதியைப்பெற்றுக்கொண்டார். அதாவது, 'முதலில் தான் இறந்து விட்டால், டிமகியோ வாரம் தோறும் தனது கல்லறைக்கு வந்து மலர் கொத்து வைக்க வேண்டும்', என்று கேட்டுக்கொண்டார். இதற்கு டிமகியோவும் சம்மதித்தார்.
இதன்படி மர்லின் மன்றோ மறைந்த பிறகு அவரது கல்லறைக்கு வாரம் தோறும் மலர் கொத்து அனுப்பி வைத்தார் டிமகியோ.
இத்தனைக்கும் அவர்கள் இருவருக்கும் இடையே திருமணம் ஆன சில மாதங்களிலேயே விவாகரத்து ஏற்பட்டு விட்டது. இருப்பினும் தனது உறுதி மொழிக்கு ஏற்ப தான் உயிரோடு இருந்த காலம் வரை, அதாவது சுமார் 20 ஆண்டு காலம், வாரம் தோறும் மர்லின் மன்றோ கல்லறைக்கு பூங்கொத்து அனுப்புவதை அவர் வழக்கமாக கொண்டு இருந்தார்.




அதிபர் ஜான் எஃப் கென்னடிக்கும் மன்றோவுக்கும் காதல் ஏற்பட்டது. நடி கரும்,கென்னடியின் மைத்துனருமான பீட்டர் லாஃபோர்டின் வீட்டில் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். அதிபர் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை மணந்துகொள்வார் என்று மன்றோ நம்பினார்.

அதிபர் தன் சகோதரர் ராபர்ட் கென் னடியை அழைத்து மன்றோவைச் சந் தித்து, ‘இனிமேல் வெள்ளை மாளி கைக்கு போன் செய்து தன்னை அழைக் கக் கூடாது’ என்று எச்சரித்து விட்டு வரச் சொன்னார். எச்சரிக்கை செய்வதற்காக சென்ற ராபர்ட்டுக்கு மன்றோவைப் பிடித்துவிட்டது.

ராபர்ட்டுடன் மன்றோவுக்கு புதிய காதல் ஆரம்பித்தது. ராபர்ட்டுக் கும் அவரை திருமணம் செய்து கொள்ளும் நோக்கம் இல்லை. மன்றோ, ‘‘உங்கள் இருவரைப் பற்றிய ரகசியங்களை பத்தி ரிகை யாளர்கள் சந்திப்பு நடத்தி பகிரங்கப்படுத்துவேன்’’ என்று ராபர்ட்டை மிரட்டினார்.

மன்றோ இறந்த தினத் துக்கு முதல் நாள் மன்றோ வுக்கும் ராபர்ட் கென்னடிக்கும் வாக்குவாதம் உச்சத்துக்குச் சென்றது. அருகில் பீட்டர் லாஃபோர்டும் இருந்தார். கோபத்தின் உச்சத்தில் மன்றோ கத்தி எடுத்து ராபர்ட் கென்னடியைக் குத்த முற்பட்டார். கத்தி வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டது.

இந்த ஊகங்களுக்கு ஆதாரமாக பலர் குறிப்பிடும் அம்சங்கள்:
அந்தப் படுக்கையின் விரிப்பு கசங்காமல் இருந்தது. மேஜையில் காலியாக இருந்த மாத்திரை பாட்டி லின் மூடி சரியாக மூடப்பட்டிருந்தது. மாத்திரைகளை விழுங்க ஒரு கண்ணாடி டம்ளரோ, தண்ணீரோ, மது வகைகளோ எதுவும் இல்லை.

போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்ட ரின் அறிக்கையின்படி மன்றோ வயிற்றில் கிட்டத்தட்ட 60 மாத்திரை கள் அளவுக்கு மருந்து இருந்தது. அது வாய்வழியாக உட்கொள்ளப் படவில்லை.

மன்றோவின் வழக்கு விசாரணைத் தொடர்பான பல மருத்துவ அறிக்கை களும், விசாரணை அறிக்கைகளும் பிறகு காணாமல் போயின.
ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட போது மருத்துவர் க்ரீன்சன் மன்றோ வுக்கு முறையான முதலுதவிகள் செய்யவில்லை.

1985-ல் பி.பி.சி தொலைக்காட்சி நடத் திய ஒரு பேட்டியில் மன்றோவின் உதவியாளர் முர்ரே போலீஸிடம் தெரி வித்ததையே சொல்லிவிட்டு, விளக்கு கள் அணைக்கப்பட்டதும் (ஆனால் மைக் அணைக்கப்படாததைக் கவனிக் காமல்) சலிப்புடன், ‘‘இந்த வயதி லும் நான் பொய் சொல்ல வேண் டுமா? மன்றோவுக்கு இரண்டு கென்னடி களோடும் தொடர்பு இருந்தது’’ என்று உளறிவிட்டார்.

சமீபத்தில் 2014-ம் வருடம் ‘தி மர்டர் ஆஃப் மர்லின் மன்றோ கேஸ் க்ளோஸ்ட்’ என்கிற புத்தகம் வெளியிடப்பட்டு, விற்பனையில் சாதனை படைத்தது. அதை எழுதியவர்கள் ஜாய் மார்க்லோஸ் மற்றும் ரிச்சர்ட் பஸ் கின். இதில், பீட்டர் லாஃபோர்ட் மனம் விட்டு சொன்ன பல ரகசிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

மன்றோவை மனசுக்குள் காதலித் தவர்கள் பலர். அதில் ‘பிளேபாய்’ பத்திரிகையின் ஆசிரியரான ஹக் யஹஃப்னர் முக்கியமானவர். அவர் மன்றோவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் மன்றோவின் கல்லறைக்கு அருகில் தனக்காக இடம் வாங்கினார்.
‘முதுமையை நினைத்தால் பயம்’ என்று அடிக்கடி சொன்ன மன்றோ, தன் 36-வது வயதில் முதுமையைக் காணாமலேயே மறைந்தார். ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்த அவரின் மரணத்தின் பக்கங்கள் மட்டும் மூடப்

In recent decades, there have been a number of conspiracy theories about her death, most of which contend that she was murdered by John and/or Robert Kennedy, with whom she allegedly had love affairs. These theories claim that the Kennedys killed her (or had her killed) because they feared she would make public their love affairs and other government secrets she was gathering. On August 4, 1962, Robert Kennedy, then attorney general in his older brother’s cabinet, was in fact in Los Angeles. Two decades after the fact, Monroe’s housekeeper, Eunice Murray, announced for the first time that the attorney general had visited Marilyn on the night of her death and quarreled with her, but the reliability of these and other statements made by Murray are questionable.

No comments:

Post a Comment