Posts

Image
டெல்லி அதிரும் போது டெல்லி அப்பளம் கேட்கும் ஸ்டாலின்   38 திமுக+ எம்.பி ஜெயிச்சது வெஸ்டனு சில விஷமிங்க சொல்லிட்டு இருக்குங்க. கனிமொழி ,திருச்சி சிவா, இந்த ரெண்டு திமுக எம்.பி கொண்டு வந்த தனிநபர் தீர்மானம் மட்டும் 7.  இந்த, 7 தீர்மானத்துல, பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு, தமிழ் மொழி உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழி அங்கீகாரம், திருங்கையர் மசோதானு கொண்டு வந்திருக்கு.  இப்போ கையில 38 எம்.பி, பார்லிமென்ட ஸ்தம்பிக்க வைக்கலாம். தமிழ்நாட்டு வாழ்வாதார பிரச்சனைக்கு குரல் எழுப்பலாம் ; தனிநபர் சட்டம் கொண்டு வரலாம்.  இன்னும் சொல்லனும்னா, இந்தியா முழுவதும் இருக்கும், தலித், முஸ்லீம், கிறித்தவ மற்றும் அடித்தட்டு மக்களுக்கு குரல் எழுப்பப்போறது, இந்த 38 பேர் தான்.  ஒரு அறிஞர் அண்ணா தான், 1962களில் டெல்லியை அதிர வைத்தார் ; இன்று, அண்ணாவின் தம்பிகள் 39 பேர் (வைகோ உட்பட)  டெல்லிக்கு செல்கிறார்கள் , டெல்லி மீண்டும் அதிரும்
Image
யாரும் வாய் திறக்க வில்லை. இந்தி மொழி பற்றி அறிஞர் அண்ணா அவர்கள்  நாடாளு மன்றத்தில் கேட்ட கேள்வி ! இந்தியாவின் தேசிய மொழி எது ? கேள்விக்கு பதில் இந்தி என்று வந்தது அறிஞர் அண்ணா : ஏன் ? இந்தியை வைத்தார்கள் ? இந்திதான் இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்றார்கள். அறிஞர் அண்ணா ;இந்தியாவின் தேசிய பறவை எது ? மயில் என்று பதில் வந்தது. அறிஞர் அண்ணா : மயில் இனம் இந்தியாவில் குறைவு , இந்தியாவில் அதிகம் இருக்கும் பறவை காகம் அந்த காகத்தை தேசிய பறவையாக வைக்க வேண்டியது தானே? யாரும் வாய் திறக்க வில்லை. எது வேண்டும் வேண்டாம் என்பது எங்களுக்கு தெரியும். இந்தி தெரிந்தால் நாடு முன்னேறும் என்றால்,   ஏன் பிகார், ஒரிசா ,,இன்னும் சொல்லி கொண்டே போகலாம் . இந்தி பேச தெரிந்த இவர்கள் வாழ்க்கை தரம்  ஏன் முன்னேற்றம் காணவில்லை ?  யாரும் வாய் திறக்க வில்லை.

கமலா தாஸ் BIOGRAPHY

Image
கமலா தாஸ்  மனிதர்களின் அறிவுப் பசிக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கும் ஒரு சர்வசக்தி வாய்ந்த செயலி கூகுள். எதைப் பற்றி வேண்டுமானாலும் கூகிளிடம் கேட்கலாம். விரல் நுனித் தீண்டலில் பதிலுரைக்கும். மனிதத் தேடலின் மகத்தான களமாக மாறிவிட்டது கூகுள் எனலாம். இந்நிலையில் கூகுள் செய்து கொண்டிருக்கும் சில நல்ல விஷயங்களுள் ஒன்றுதான் கூகுள் டூடுல். ஆம் கூகிள் தனது தேடல் பக்கத்தில் வரைபடங்களை டூடுலாக வெளியிடுவது வழக்கம். அது ஆளுமைகளின் உருவச் சித்திரமாக இருக்கலாம் அல்லது உலகின் முக்கிய நிகழ்வுகளாகவும் இருக்கலாம். உலகமெங்கிலும் வாழ்ந்து மறைந்த மாமனிதர்களின் பிறந்த நாள் அல்லது நினைவு தினத்தன்று கூகிள் இப்படி தனது லோகோவில் அவர்கள் நினைவை போற்றும் வகையில் அவர்களின் உருவப் படத்தை அழகிய சித்திரமாக்கி வெளியிடும் வழக்கத்தை கொண்டுள்ளது. இந்த ஓவியங்களே டூடுல் என சொல்லப்படுகிறது. இன்று (பிப்ரவரி 1, 2018) ஓவியர் மன்ஜித் உருவாக்கிய டூடுல் கவிஞர் மற்றும் எழுத்தாளர் கமலா தாஸை சிறப்பிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. கமலாதாஸ் 1934-ல், கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' என்ற ஊரில் பிறந்தா...

wincent churchil

Image
சர்ச்சிலிடம், 'இவ்வளவு அருமையாக மேடை பேச்சு, உங்களுக்கு தடையின்றி எப்படி வருகிறது?' என, வினவினார், ஒரு நிருபர். அதற்கு அவர், 'நான் மேடையில் ஏறியதும், முன்வரிசையில் இருப்பவர்களை எல்லாம், மூடர்கள் என்று எண்ணிக் கொள்வேன். அப்படி எண்ணிக் கொள்வதால், என் உள்ளத்திலிருந்து தங்கு தடையின்றி வார்த்தைகள் வெளிப்படும். 'அதே நேரத்தில், ஆங்காங்கே நின்று, என் சொற்பொழிவுகளை கேட்போரை, அறிவாளியாக எண்ணிக் கொள்வேன். அப்படி எண்ணிக் கொள்வதால், வரலாற்று பிழையின்றி பேச முடிகிறது. 'மொத்தத்தில், மூடர்களும், அறிவாளிகளும் நிறைந்த அவையில் பேசுவதாக, எண்ணிக் கொள்வதால், இரண்டு தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில், என் சொற்பொழிவை அமைத்துக் கொள்கிறேன்...' என்றார்.

BIOGRAPHY OF VOLTAIRE

Image
BIOGRAPHY OF VOLTAIRE பிராங்கோவிசு-மாரீ அரூவேட் (François-Marie Arouet) என்ற பிரெஞ்சு அறிவொளி இயக்க எழுத்தாளர் பெரும்பாலும் வோல்டேர் அல்லது வோல்டயர் எனப்படும் புனைப்பெயரால் அறியப்படுகிறார் [1]. 21 நவம்பர் 1694 முதல் 30 மே 1778 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த இவர் கட்டுரையாளராகவும் மெய்யியலாளராகவும் இயங்கினார். இவர் நையாண்டி செய்வதில் வல்லவராகவும், நிறுவப்பட்ட கத்தோலிக்க பேராலயம் தொடர்பான எதிர்ப்பாளராகவும், மத சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், மதச்சார்பற்ற நாடு போன்றவற்றை ஆதரிப்பவராகவும் செயல்பட்டார். வால்ட்டேர் ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாகரிக எழுத்தாளர் ஆவார். நாடகங்கள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள், வரலாறு மற்றும் விஞ்ஞான படைப்புகள் உட்பட கிட்டத்தட்ட எல்லாவகையான இலக்கிய வடிவங்களிலும் இவர் படைப்புகள் உருவாக்கியுள்ளார். வோட்டேர் 20,000 க்கும் அதிகமான கடிதங்களையும் 2,000 க்கும் அதிகமான புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களையும் எழுதினார் [2]. அந்த நேரத்தில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான தணிக்கை விதிகளின் கீழ் அவருக்கு ஆபத்து இருந்தபோதிலும், குடிமக்களுக்கான ஒரு வெளிப்படையான வழ...

BRA ,THE INTERESTING FACTS

Image
BRA ,THE INTERESTING FACTS பெண்களின் ஆடைகளில், குறிப்பாக உள்ளாடைகளில் பிரா மிக அத்தியாவசியமான ஒன்று. பிரா தான் பெண்களின் உடலை நல்ல வடிவமைப்புடனும் கவர்ச்சியாகவும் காட்டக்கூடியது. அந்த பிராக்கள் எப்போது தங்களுடைய பொலிவை இழக்கிறதோ அப்போது பெண்களின் உடல் அழகையும் பொலிவிழக்கச் செய்யும். பிராக்களைப் பார்த்துப் பார்த்து அழகாக வாங்கினால் மட்டுமே போதாது. அதை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். சிலருக்கு தங்களுடைய பிராக்களை எப்போது தூக்கி எறிந்துவிட்டு, புதியதை மாற்ற வேண்டுமெனத் தெரியாது. சிலர் தங்களுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான உள்ளாடை இருப்பின் அதை அவ்வளவு எளிதாக மாற்றிவிட மனது வராது. ஆனால் அது முற்றிலும் தவறான பழக்கம். அடுத்து புதிதாக வாங்கும் ஏதேனும் ஒன்றை நம்முடைய மனதுக்குப் பிடித்த ஒன்றாக மாற்றிக் கொள்ள வேண்டியது தான். பிராக்கள் விஷயத்தில் நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா? அவை வெறும் அழகு சார்ந்த விஷயத்துக்கானது மட்டுமல்ல. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்னையும் அதில் அடங்கியிருக்கிறது. நாம் அஜாக்கிரதையாக இருந்தால் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல ஆரோக்...

பி.கே.ராஜா சாண்டோ- வட இந்தியாவில் கோலோச்சிய முதல் தமிழக கலைஞர்

Image
பி.கே.ராஜா சாண்டோ- வட இந்தியாவில் கோலோச்சிய முதல் தமிழக கலைஞர் அக்காலத்தில் திரைப்பட தயாரிப்புகளுக்கு முக்கிய கேந்திரமாக சென்னை விளங்கியது. இந்திய அளவில் புகழ்பெற்றிருந்த கலைஞர் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னையில் முகாமிட்டு தங்கள் படைப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக பம்பாயும், கல்கத்தாவும் சினிமா தயாரிப்புகளுக்கு உகந்ததாக விளங்கியது. திரைப்பட தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப காரணங்களுக்காக பம்பாய், கல்கத்தா என அக்காலத்தில் கலைஞர்கள் உழலவேண்டியிருந்தது. அப்படி பம்பாய் செல்லும் தமிழக கலைஞர்களுக்கு நெருடலான ஒரு விஷயம் உண்டு. அது அங்குள்ளவர்கள் அவர்களை "சாலா மதராஸி" என அழைத்து கேலி செய்வது. தமிழர்கள் என்றால் அத்தனை இளக்காரம் பம்பாய் ஸ்டுடியோவாசிகளுக்கு. மும்பைவாசிகளின் இந்த கேலி வார்த்தை சென்னையிலிருந்து செல்பவர்களை மிகுந்த எரிச்சலாக்கும். ஒருமுறை தமிழக கலைஞர் ஒருவர், மும்பைவாசி ஒருவரால் இப்படி அவமானப் பட்டதை நேரில் கண்டார் ஒரு மனிதர். குஸ்திக்கலைஞரும் விளையாட்டு வீரருமான அந்த மனிதர், கிண்டல் செய்த அந்த மும்பைவாசிக்கு தன் பாணியில் பதில்கொட...