BRA ,THE INTERESTING FACTS
பெண்களின் ஆடைகளில், குறிப்பாக உள்ளாடைகளில் பிரா மிக அத்தியாவசியமான ஒன்று. பிரா தான் பெண்களின் உடலை நல்ல வடிவமைப்புடனும் கவர்ச்சியாகவும் காட்டக்கூடியது. அந்த பிராக்கள் எப்போது தங்களுடைய பொலிவை இழக்கிறதோ அப்போது பெண்களின் உடல் அழகையும் பொலிவிழக்கச் செய்யும்.
பிராக்களைப் பார்த்துப் பார்த்து அழகாக வாங்கினால் மட்டுமே போதாது. அதை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். சிலருக்கு தங்களுடைய பிராக்களை எப்போது தூக்கி எறிந்துவிட்டு, புதியதை மாற்ற வேண்டுமெனத் தெரியாது. சிலர் தங்களுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான உள்ளாடை இருப்பின் அதை அவ்வளவு எளிதாக மாற்றிவிட மனது வராது. ஆனால் அது முற்றிலும் தவறான பழக்கம். அடுத்து புதிதாக வாங்கும் ஏதேனும் ஒன்றை நம்முடைய மனதுக்குப் பிடித்த ஒன்றாக மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.
பிராக்கள் விஷயத்தில் நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா? அவை வெறும் அழகு சார்ந்த விஷயத்துக்கானது மட்டுமல்ல. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்னையும் அதில் அடங்கியிருக்கிறது.
நாம் அஜாக்கிரதையாக இருந்தால் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல ஆரோக்கிய பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
நீங்கள் பிறந்த நாள் கொண்டாடுவது போல, நிச்சயம் 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்கள் பழைய பிராக்களைத் தூக்கியெறிந்துவிட்டு புதிய பிராக்களை வாங்குங்கள்.
மெட்டல் ஹூக் உள்ள பிராக்களை 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தினால், அது சருமத்தில் உராய்ந்து அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும்.
நன்கு கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும், நிச்சயம் உங்களின் பிராக்களின் கப் சைஸ் ஒரு வருடத்துக்கு ஆறு முறையாவது மாற்றமடையும். அதனால் குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய மார்பளவை அளவெடுத்து, அதற்கேற்றாற் போல் பிராக்களை அணிந்திடுங்கள்.
அளவுக்கு அதிகமாக இறுக்கமுடைய பிராக்களை அணிவதும் தவறு தான். அதனால் வியர்வை வெளியேற முடியாமல் போகும். அது பாக்டீரியா தொற்றுக்களை உண்டாக்கிவிடும்.
பெண்களில் பலருக்கு `பிரா’ பற்றிய சந்தேகங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. சரியான அளவை தேர்வு செய்யாமல் பிராவை அணிந்து பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.
அப்படிபட்டவர்களுக்கு, இந்த கேள்விகளும், பதில்களும் நல்ல தீர்வை தரும்!
பிராக்களின் தோள் பட்டையில் உள்ள ஸ்ட்ரிப் லேசாக தளர்ந்தாலும் உங்களுடைய அளவில் மாற்றம் உண்டாகும். மார்பகம் தளர்ந்து போகும். அதனால் ஸ்ட்ரிப் தளர ஆரம்பிப்பது உங்களுடைய பிராக்களை நீங்கள் உடனடியாக மாற்ற வேண்டியதற்கான அறிகுறிகளில் ஒன்று.
கேள்வி: அணிந்து வருவது தவறான பிரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
பதில் : உங்கள் உடலில் பிராவின் ஸ்ட்ரா பதிந்த இடங்கள் சிவந்துபோய் காணபட்டால் நீங்கள் அணிந்திருக்கும் பிரா இறுக்கமானது, அதாவது தவறான சைஸ் என்பதை தெரிந்துகொள்ளலாம். முதுகு பக்கம் உள்ள ஸ்ட்ரா ஒரே இடத்தில் இருக்காமல் மேலே ஏறிக்கொண்டு வந்தாலும் நீங்கள் சரியான பிராவை அணியவில்லை என்று அர்த்தம். மார்பகத்தின் அளவைவிட, பிராவின் கப் சைஸ் சிறிதாக இருந்தால் மார்பகம் ஒன்றின் மேல் ஒன்று இருப்பதுபோல் இரண்டாகத் தோன்றும். அதனால், இதுவும் தவறான சைஸ் பிராதான்.
கேள்வி: மார்பகங்களின் கீழே கறுப்பாக உள்ளது. ஏன் இப்படி ஏற்படுகிறது?
பதில் : தவறான சைஸ் பிராவை அணிந்தால் இந்த பிரச்சினை வரும். அணியும் பிராவின் சைஸை மாற்றுவதுதான் இதற்கு சரியான தீர்வு.
கேள்வி: குண்டாக 36 சைஸ் உள்ளவர்கள் எலாஸ்டிக் ஸ்ட்ரா வைத்த பிரா அணியலாமா?
பதில் : அணியக்கூடாது. மார்பகம் இன்னும் தளர்வடையவே இது வழிவகுக்கும்.
கேள்வி: முதுகுவலி வர பிராவும் காரணமாக இருக்கலாமா?
பதில் : தோள் பட்டை வலி, முதுகு வலி வந்தால், உங்கள் பிராசைஸ் சரியானதுதானா என்பதை உறுதி செய்யுங்கள். சரியில்லை என்றால், சரியானதை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால், டாக்டரிடம் செல்லுங்கள்.
கேள்வி: கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிரா அணியலாமா?
பதில் : இது தவறான அணுகுமுறை. கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிராவும், வெள்ளை நிற ஆடைக்கு கறுப்பு நிற பிராவும் அணிந்தால், அந்த பிரா பளிச்சென்று பிறருக்கு தெரியும். அதனால், பிளாக், ஒயிட் பிராக்களுடன் ஸ்கின் கலர் பிராவையும் வாங்கி வைத்து, அணியும் ஆடைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அணிந்து அழகு பாருங்கள். புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு என்றே கவர்ச்சியான விதவிதமான கலர்களில் பிராக்கள் கிடைக்கின்றன. அவர்கள் அதை அணியலாம். இளம்பெண்கள் விரும்பினால், இந்த வகை கலர் பிராக்களை அணிந்து அழகு பார்க்கலாம்.
கேள்வி: இரவில் பிரா இல்லாமல் தூங்கலாமா?
பதில் : பெரும்பாலான பெண்களுக்கு இந்த சந்தேகம் உள்ளது. இரவில் பிரா அணியலாமா? வேண்டாமா? என்பது உங்கள் சவுகரியத்தை பொறுத்ததுதான். 34 இஞ்ச் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் மார்பகம் கொண்ட பெண்களுக்கு, கனமான மார்பகத்தால் அவை தளர்ந்துபோய்தான் இருக்கும். இவர்கள் பிராவுடன் உறங்குவதே நல்லது. அதைவிட்டுவிட்டு, பிரா இன்றி உறங்கினால் மார்பகம் இன்னும் தளர்ந்துபோய்விடும். சில பெண்கள், பகல் முழுவதும் பிரா அணிந்திருப்பதால், இரவில் அதை கழற்றி விடலாமே என்று எண்ணுவார்கள். அப்படிபட்டவர்கள் வேண்டுமானால் பிராவை கழற்றி வைத்துவிடலாம். சிறிய மார்பகம் உள்ளவர்கள் இரவில் பிரா அணிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அணிந்தாலும் பிரச்சினை இல்லை. கர்ப்பிணி பெண்களும் தாய்பால் கொடுபவர்களும் அதற்குரிய பிராக்களை அணிந்து மார்பழகை பாதுகாக்க வேண்டும்.
பெண்களின் உடல் நலனை பொறுத்துதான் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது. குடும்பத்தில் உள்ள பெண்கள் சுகமாக இருந்தான் அவர்கள் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரையும் அவர்களால் சுகமாக வைத்துக் கொள்ளமுடியும்.
அப்படிப்பட்ட பெண்கள் தாங்கள் உடுத்தும் உடைகளைப் பற்றிய நன்மை தீமைகளை தெரிந்து வைத்துள்ளனரா என்றால் அது சந்தேகமே. குறிப்பாக அவர்கள் உடுத்தும் உள்ளாடைகளை பற்றிய விழிப்புணர்வு கண்டிப்பாக அவர்களுக்கு தேவை.
பெண்களிடம் உள்ளாடை தொடர்பான விழிப்புணர்வு குறைவுதான். எல்லோரும் அணிகிறார்களே நாமும் அணியலாம் என்று தான் பலர் எண்ணுகின்றனர். அந்த உள்ளாடைகள் நமக்கு உண்மையாகவே தேவைப்படுகிறதா என்பதனை அவர்கள் ஆராய்வதில்லை. குறிப்பாக பெண்கள் அணியும் உள்ளாடையான பிரா பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு கட்டாயம் தேவை. ஏனெனில் அதுதான் அவர்களுடைய உடலோடு இறுக்கமாக ஒட்டிக்கொள்ளும் ஒரு ஆடை
இது குறித்து நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நடந்துள்ளன. நிச்சயம் குழப்பம் நிறைந்த ஆய்வுகள் பட்டியலில் பெண்களின் உள்ளாடை தொடர்பான ஆய்வையும் காணலாம்.
பிரா அணிவதால் பெண்களுக்கு நிறைய ஆரோக்கிய கேடுகள் ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரவில் மட்டும் பிரா அணியாமல் உறங்குவது நல்லது என பலவிதமான ஆலோசனைகள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கின்றது. ஆய்வு முடிவுகள் எதுவும் பெண்களை விழிப்புணர்வு அடையச் செய்யும் வகையில் இல்லை. அவர்களை மேலும் குழப்பதில் ஆழ்த்தும் வகையிலேயே இருக்கின்றன.
இதற்கு முடிவுகட்டும் நோக்கத்துடன், ஜீன் டெனிஸ் ரௌலியன் என்ற ஆய்வாளர் ஒருவர் 15 ஆண்டுகள் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். மருத்துவம், உளவியல், மார்க்கெட்டிங் என பல விதங்களில் அவர் ஆய்வை மேற்கொண்டுள்ளார். அதனால், ஓரளவுக்கு நம்பும்படியாக இருக்கிறது. இதை ஏற்பதா இல்லையா என்பதை மருத்துவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
► அவரது ஆய்வின்படி, பிரா அணிவதன் மூலம் பெண்களின் மார்பகங்களுக்கு கூடுதல் நன்மை எதுவும் கிடைப்பதில்லை. இதற்கு மாறாக தீய விளைவுகள் தான் ஏற்படுகின்றன.
► பெண்கள் பிரா அணியாமல் இருந்தால் என்ன ஆகும்? என்பதற்கு இந்த ஆய்வில், பிரா அணியாமல் வாழ்ந்து வரும்18-35 வயதுக்குட்பட்ட பெண்களிடமிருந்து சில தரவுகளை பெற்றுள்ளார். அதன்படி, இவர்களுக்கு மார்பக பகுதியில் இயற்கையாக வளரக் கூடிய திசுக்கள் ஆரோக்கியமாக வளர்ந்து, அவர்கள் மார்பகத்திற்கு ஆரோக்கிய நன்மைகள் விளைவித்துள்ளன என அவர் கூறியுள்ளார்.
► தினமும் பிரா அணிபவர்களை கேட்டபோது, அவர்களுக்கு பிரா அணிவதனால் அதன் இறுக்கம் காரணத்தால், இயற்கையாக வளரும் அந்த திசுக்களின் வளர்ச்சி தடைப்பட்டு, மார்பகத்தின் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
► இதனால், பிரா அணிவதால் மேலும், மார்பகங்கள் தொங்கும் நிலையை தான் அடையும் என்றும் ரௌலியன் கூறியுள்ளார்.
எனவே, பெண்கள் பிரா அணியவே கூடாதா என ரௌலியனிடம் கேட்ட போது, "பல ஆண்டுகளாக பிரா அணிந்து வருவதால் பெண்களின் மார்பகங்களுக்கு எந்தவொரு நல்ல விளைவும் ஏற்படவில்லை, ஏற்பட போவதும் இல்லை. மேல் உள்ளாடை அணிவதற்கும் ஆரோக்கியத்துக்கும் சம்பந்தம் இல்லை. இதை அணிவதால் ஆரோக்கியமாக வாழலாம் என்று கூறுவது எல்லாம் வியாபார யுக்தி மட்டுமே' என்று தெரிவித்துள்ளார்.
பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறைகாட்டுவதைவிட அழகுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுப்பது உண்மைதான். இதை மூலதனமாக வைத்துத்தான் பல அழகுசாதன நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. மார்பங்கள் இறுக்கமாக வைத்திருக்க, கவர்ச்சியாக இருக்க என்று விதவிதமான பிராக்கள் விற்பனைக்கு வந்துகொண்டே இருக்கின்றன. இவை எல்லாம் உண்மையில்லை என்று ரௌஸியன் கூறுகிறார். எனவே, இதுபோன்ற மூளைச் சலவையில் ஏமாந்து, உடல் நலனை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்கிறார் அவர்.
வயது அதிகரித்தல், குழந்தைப் பேறு, குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது போன்ற காரணஙகளால் மார்பகங்களின் இறுக்கம் குறையும். இது இயற்கையானது என்று அவர் கூறியுள்ளார்.
பெண்கள் அணியும் பிரா என்பது சாதாரணமாக மார்பை தாங்கி பிடிக்கும் ஒரு உடை என்ற அளவில் மட்டுமே பலர் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு பிரிவினர்களுக்கும் என தனித்தனியாக பிரா மார்க்கெட்டில் வந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து தற்போது பார்ப்போம்
டீசர்ட் பிரா: தையல் இல்லாமல் டீசர்ட் போன்று அமைந்திருக்கும் இந்த பிராவை அப்படியே கழுத்து வழியே அணிந்து கொள்ளலாம். பிரா கொக்கியை சரியாக போட்டோமா, திடீரென முக்கியமான நேரத்தில் கொக்கி அவிழ்ந்து தர்ம சங்கடத்தை ஏற்படுத்துமா என்ற கவலை இல்லை.
டீன் ஏஜ் பிரா: 13 முதல் 19 வயது வரையிலான இளம்பெண்களுக்கு என்றே தயாரிக்கப்பட்டது இந்த பிரா. இந்த வயதில் பெண்களின் மார்புப்பகுதி நாளுக்கு நாள் வளர்ச்சி அடையும் என்பதால் இந்த வகை பிரா மார்பை இறுக்காமல் அதில் உள்ள எலாஸ்டிக் நெகிழ்ந்து கொடுத்து அளவுக்கு தகுந்தவாறு மாறிக்கொள்ளும்
நாவல்டி பிரா: திருமண நாளில் கிட்டத்தட்ட அனைத்து பெண்களும் அணியும் பிரா இதுதான். பேப்ரிக், லெதர், லேஸ், சாட்டின் என பலவிதங்களில் கிடைக்கும் இந்த பிராவை அணியும் பெண்கள் திருமணத்தன்று கசகசப்பு இல்லாமல் மென்மையான உணர்வை அனுபவிக்கலாம்.
நர்சிங் பிரா: இந்த வகை பிராக்கள் கைக்குழந்தைகள் வைத்திருப்பவர்கள் அணிந்து கொள்ளலாம். குழந்தைக்கு பால் கொடுக்கும்போது கஷ்டப்படாமல் கப்பில் உள்ள கொக்கியை மட்டும் நீக்கி குழந்தைக்கு பால் கொடுக்க வசதியாக இருக்கும்.
இன்னும் இதேபோல் சுமார் இருபது வகை பிராக்கள் உள்ளது. ்
No comments:
Post a Comment