Saturday 13 October 2018

thamarai ,LYRICS WRITER BORN 1975 NOVEMBER 10





thamarai ,LYRICS WRITER 


BORN 1975 NOVEMBER 10

தாமரை, தமிழ்ப் பெண் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார்.

கோவையில் பிறந்த தாமரை, இயந்திரப் பொறியியல் பட்டதாரி. இவரின் தந்தை, கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கியுள்ளார். "ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்" என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். "சந்திரக் கற்கள்", "என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியப் படைப்புகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகியவற்றையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

"வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ...” எனப் புகழ்மிக்க பாடல்கள் உட்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார். இலங்கை, சிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணித்துள்ளார். இவர், ஆங்கிலச் சொற்களைக் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என உறுதி கொண்டுள்ளார்[1]. திரையிசைத்துறையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ், இயக்குநர் கௌதம் மேனன் ஆகியோர் படங்களில் தாமரை அதிக பாடல்களை எழுதியுள்ளார். இம்மூவர் கூட்டணி வெற்றிப் பாடல்களை தந்துள்ளது.

பணிவாழ்வு

தாமரை கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் உற்பத்திப் பொறியியலில் பட்டம் பெற்று ஆறு ஆண்டுகள் கோவையில் பணி புரிந்தார். கவிதையில் ஏற்பட்ட நாட்டத்தால் சென்னைக்கு குடிபெயர்ந்த தாமரை, அங்கு கட்டற்ற எழுத்தாளராக கட்டுரைகள், கவிதைகள்,கதைகள் எழுதி வந்தார். அவரது இலக்கிய ஆக்கங்களால் கவனிக்கப்பட்டு திரைப்படத்துறையில் அறிமுகமானார். இயக்குனர் சீமானின் "இனியவளே" திரைப்படத்திற்காக தென்றல் எந்தன் நடையைக் கேட்டது என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் பெண் பாடலாசிரியராக[2] தாமரை அறிமுகமானார்.[3] தொடர்ந்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ("மல்லிகைப் பூவே"), தெனாலி ("இஞ்சேருங்கோ இஞ்சேருங்கோ") போன்ற திரைப்படங்களில் பாடல்கள் எழுதினார். ஹாரிஸ் ஜயராஜ் இசையில் மின்னலே திரைபட்டத்தில் இவரது பாடல் "வசீகரா" மிகவும் புகழ் பெற்று அவரது வாழ்வில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது.

மின்னலேக்குப் பிறகு இயக்குனர் கௌதம் மேனன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ், தாமரையின் மூவர் கூட்டணி (காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் & வாரணம் ஆயிரம்) போன்ற படங்களில் வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. ஜெயராஜ் கௌதமை விட்டு விலகிய நேரத்தில் தாமரை இசையமைப்பாளர் ரகுமானுடன் கூட்டு சேர்ந்தார். சூலை 2014இல் மீண்டும் கௌதம் மேனன் , ஹாரிஸ் ஜயராஜ் தாமரை கூட்டணியாக இணைந்து அஜித் குமார் நடித்த 'என்னை அறிந்தால்..' திரைப்படத்தில் பங்காற்றினர். சனவரி 1, 2015இல் வெளியான இதன் இசைத்தொகுப்பு மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. [4][5][6][7] தாமரை ரகுமான், ஜெயராஜ், கௌதம் தவிர யுவன் சங்கர் ராஜா (நந்தா, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், போஸ், பேரழகன், கண்ட நாள் முதல் & கண்ணாமூச்சி ஏனடா), ஜேம்ஸ் வசந்தன் (சுப்பிரமணியபுரம் & பசங்க) போன்ற இசையமைப்பாளர்களுடனும் பாலா, ஏ. ஆர். முருகதாஸ், வி. பிரியா, சசிகுமார் போன்ற இயக்குநர்களுடனும் பணியாற்றி உள்ளார்.

தனிவாழ்வு
தாமரை மனித உரிமைப் போராளியும் தமிழ் தேசியவாதியுமான தியாகுவை திருமணம் புரிந்துள்ளார். இருவருக்கும் சமரன் என்ற மகன் உள்ளார்.[8] 2015 பெப்ரவரியில் தனது கணவர் 2014, நவம்பரிலிருந்து தன்னை நிராதரவாக விட்டுப் பிரிந்ததாக அறிக்கை விடுத்து தன்னைக் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி உண்ணாநோன்பு போராட்டம் தொடங்கினார். [9]முதலிரண்டு நாட்கள் சென்னையில் தியாகுவின் கட்சி அலுவலகத்தின் முன்னர் போராடிய தாமரை பின்னர் அடுத்த இரண்டு நாட்கள் வேளச்சேரியில் உள்ள தியாகுவின் மகளின் இல்லத்தின் முன் போராட்டத்தைத் தொடர்ந்தார். அடுத்து கோடம்பாக்கத்திலுள்ள பூங்கா ஒன்றில் தனது போராட்டத்தைத் தொடர்கிறார்.[10] இந்தச் சர்ச்சையில் இருதரப்பினருக்கும் பலர் ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தோழர் தியாகு தாமரையுடன் இணைந்து வாழ்வதற்கு இனி வாய்ப்பிலை என்றும் மகனிடம் மன்னிப்புக் கேட்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.





Aa Hah Malai (ஆஹா மழை மனதுக்குள்) - Kandaen (கண்டேன்) — 2011
Adiyae Adiyae (அடியே அடியே) - Gethu (கெத்து) — 2016
Adiye Kolluthey (அடியே கொல்லுதே) - Vaaranam Aayiram (வாரணம் ஆயிரம்) — 2008
Alay Paayum (அலைபாயும் பார்வை) - Irumbu Kuthirai (இரும்பு குதிரை) — 2014
Anbae Anbae (அன்பே அன்பே) - Idhu Kathirvelan Kadhal (இது கதிர்வேலன் காதல்) — 2013
Anbil Avan (அன்பில் அவன்) - Vinnaithaandi Varuvaayaa (விண்ணைத்தாண்டி வருவாயா) — 2010
Ange Ippo Enna (அங்க என்ன) - Irumbu Kuthirai (இரும்பு குதிரை) — 2014
Annal Mele Panithuli (அனல் மேலே பனித்துளி) - Vaaranam Aayiram (வாரணம் ஆயிரம்) — 2008
Arjuna Arjuna (என் அர்ஜுனா அர்ஜுனா) - Settai (சேட்டை) — 2013
Ava enna enna (அவ என்ன என்ன தேடி) - Vaaranam Aayiram (வாரணம் ஆயிரம்) — 2008
Bombay Ponnu (நான் பாம்பே பொண்ணு) - Vedi (வெடி) — 2011
Chikki Mukki Uyala (சிக்கி முக்கி உய்யாலா) - Aval Varuvaala (அவள் வருவாளா) — 1998
Enadhuyire Enadhuyire (எனதுயிரே எனதுயிரே) - Bheemaa (பீமா) — 2008
Engae Endru Povathu (எங்கே என்று போவது) - Thaanaa Serndha Koottam (தானா சேர்ந்த கூட்டம்) — 2018
Enkeyum Kadhal (எங்கேயும் காதல் .. விழிகளில்) - Engeyum Kaadhal (எங்கேயும் காதல்) — 2011
Ennai Konjam (என்னை கொஞ்சம்) - Kaaka Kaaka (காக்க காக்க ) — 2003
Ennai Saaithaalae (என்னை சாய்த்தாளே) - Endrendrum Punnagai (என்றென்றும் புன்னகை) — 2013
Epodhum Unmael Nyabagam (எப்போதும் உன் மேல்) - Nimir (நிமிர்) — 2018
Hosanna (கொசன்ன) - Vinnaithaandi Varuvaayaa (விண்ணைத்தாண்டி வருவாயா) — 2010
Idhayathai Yedho Ondru (இதயத்தை ஏதோ) - Yennai Arindhaal (என்னை அறிந்தால்) — 2015
Idhuthaanaa (இதுதானா இதுதானா) - Saamy (சாமி) — 2003
Injerungo Injerungo (இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ) - Thenali (தெனாலி) — 2000
Ippadi Malai (இப்படி மழை அடித்தால்) - Vedi (வெடி) — 2011
Kadhal Enna Kannamoochi (காதல் என்ன கண்ணாமூச்சி) - Aval Varuvaala (அவள் வருவாளா) — 1998
Kanchana Mala (காஞ்சனமாலா..) - Vanthaan Vendraan (வந்தான் வென்றான்) — 2011
Kanda Naal Mudhalai (கண்ட நாள் முதலாய்) - Kanda Naal Mudhal (கண்ட நாள் முதல்) — 2005
Kangal Neeyae (கண்கள் நீயே) - Muppozhudhum Un Karpanaigal (முப்பொழுதும் உன் கற்பனைகள்) — 2012
Kannaththil Kannam (கன்னத்தில் கன்னம்) - Watchman Vadivelu (வாச்மான் வடிவேலு) — 2004
Karu Karu (கரு கரு விழிகளால்) - Pachaikili Muthucharam (பச்சைக்கிளி முத்துச்சரம்) — 2007
Kelamal Kaiyile (கேளாமல் கையிலே) - Azhagiya Tamil Magan (அழகிய தமிழ் மகன்) — 2007
Lolita (பொன்மஞ்சள் மஞ்சள்) - Engeyum Kaadhal (எங்கேயும் காதல்) — 2011
Maalai Mangum Neram (மாலை மங்கும் நேரம்) - Rowthiram (ரௌத்திரம்) — 2011
Maelae Maelae (மேலே மேலே தன்னாலே) - Idhu Kathirvelan Kadhal (இது கதிர்வேலன் காதல்) — 2013
Malargale (மலர்களே மலர வேண்டாம்) - Pudhukottaiyilirundhu Saravanan (புதுக்கோட்டையிலிருந்து சரவணன்) — 2004
Mannipaaya (கடலினில் மீனாக) - Vinnaithaandi Varuvaayaa (விண்ணைத்தாண்டி வருவாயா) — 2010
Maya Bazaar (கட கட கட கடோத்கஜன்) - Yennai Arindhaal (என்னை அறிந்தால்) — 2015
Mazhai Poliyum (மழை பொழியும்) - Muppozhudhum Un Karpanaigal (முப்பொழுதும் உன் கற்பனைகள்) — 2012
Mazhai Vara Pogudhae (மழை வர போகுதே) - Yennai Arindhaal (என்னை அறிந்தால்) — 2015
Mazhaiyin Saaralil (மழையின் சாரலில்) - Aaha Kalyanam (ஆஹா கல்யாணம்) — 2014
Merke Merke (மேற்கே மேற்கே) - Kanda Naal Mudhal (கண்ட நாள் முதல்) — 2005
Mudhal Murai (முதல் முறையாக) - Singham 3 (சிங்கம் 3) — 2017
Mundhinam Parthene (முன்தினம் பார்த்தேனே) - Vaaranam Aayiram (வாரணம் ஆயிரம்) — 2008
Naan Pogiren (நான் போகிறேன் மேலே மேலே) - Naanayam (நாணயம்) — 2010
Nakku Mukka (நாக்கமுக்க நாக்கமுக்க) - Kadhalil Vizhunthen (காதலில் விழுந்தேன்) — 2008
Nee Vandhu Ponadhu (நீ வந்து போனது) - Yaan (யான்) — 2014
Neeraambal Poovae (நீராம்பல் பூவே) - Nanbenda (நண்பேண்டா) — 2015
Neeyum Nannum (நீயும் நானும் சேர்ந்தே) - Naanum Rowdydhaan (நானும் ரவுடிதான்) — 2015
Nenjil Mamazhai (நெஞ்சில் மாமழை) - Nimir (நிமிர்) — 2018
Nenjukkul Peidhidum (நெஞ்சுக்குள் பெய்திடும்) - Vaaranam Aayiram (வாரணம் ஆயிரம்) — 2008
Nenjukkulle (நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன்) - Sundarapandian (சுந்தரபாண்டியன்) — 2012
Oh Maya (ஓஹோ மாயா) - Iru Mugan (இரு முகன்) — 2016
Oh Shanthi Shanthi (ஒ சாந்தி சாந்தி) - Vaaranam Aayiram (வாரணம் ஆயிரம்) — 2008
Oh Sunanda (சுனந்தா சுனந்தா) - Muppozhudhum Un Karpanaigal (முப்பொழுதும் உன் கற்பனைகள்) — 2012
Omana Penne (ஓமனப்பெண்னே) - Vinnaithaandi Varuvaayaa (விண்ணைத்தாண்டி வருவாயா) — 2010
Ondra Renda (ஒன்றா ரெண்டா) - Kaaka Kaaka (காக்க காக்க ) — 2003
Ore Nyabagam (இரு விழி உனது) - Minnale (மின்னலே) — 2001
Oru Maalai (ஒரு மாலை இளவெயில்) - Ghajini (கஜினி) — 2005
Oru Murai (ஒரு முறை) - Muppozhudhum Un Karpanaigal (முப்பொழுதும் உன் கற்பனைகள்) — 2012
Oru Ooril (ஒரு ஊரில் அழகே) - Kaaka Kaaka (காக்க காக்க ) — 2003
Pani Thuli (பனி துளி பனி துளி பனி துளி) - Kanda Naal Mudhal (கண்ட நாள் முதல்) — 2005
Penne Penne (பெண்ணே பெண்ணே) - Irumbu Kuthirai (இரும்பு குதிரை) — 2014
Pondicherry (பாண்டிச்சேரி வழியில) - Irumbu Kuthirai (இரும்பு குதிரை) — 2014
Ragasiya Kanavugal (ரகசிய கனவுகள்) - Bheemaa (பீமா) — 2008
Rasaali (ராசாளியே) - Achcham Yenbadhu Madamaiyada (அச்சம் என்பது மடமையடா) — 2016
Semparuthi Semparuthi (செம்பருத்தி செம்பருத்தி) - Vasanthakala Paravai (வசந்தகால பறவை) — 1991
Sentoora (செந்தூரா) - Bogan (போகன்) — 2017
Solladi Enthan (சொல்லடி எந்தன்) - Kadhalil Vizhunthen (காதலில் விழுந்தேன்) — 2008
Thaen Kaatru (தேன் காற்று) - Gethu (கெத்து) — 2016
Thoodhu Varuma (தூது வருமா தூது வருமா) - Kaaka Kaaka (காக்க காக்க ) — 2003
Thozhiya En Kadhaliyaa (தோழியா என் காதலியா) - Kadhalil Vizhunthen (காதலில் விழுந்தேன்) — 2008
Un Sirippinil (உன் சிரிப்பினில்) - Pachaikili Muthucharam (பச்சைக்கிளி முத்துச்சரம்) — 2007
Un Thalai Mudi (உன் தலைமுடி) - Kadhalil Vizhunthen (காதலில் விழுந்தேன்) — 2008
Unakkenna Venum Sollu (உனக்கென்ன வேணும் சொல்லு) - Yennai Arindhaal (என்னை அறிந்தால்) — 2015
Uyirin Uyirae (உயிரின் உயிரே) - Kaaka Kaaka (காக்க காக்க ) — 2003
Vanthathu Penna (ஓ வந்தது பெண்ணா) - Aval Varuvaala (அவள் வருவாளா) — 1998
Vaseegara En (வசீகரா என் நெஞ்சினிக்க) - Minnale (மின்னலே) — 2001
Venmathi Venmathiye (வெண்மதி வெண்மதியே) - Minnale (மின்னலே) — 2001
Verenna Vendum (வேறென்ன வேறென்ன) - Minnale (மின்னலே) — 2001
Vizhiyae Vizhiyae (விழியே விழியே) - Idhu Kathirvelan Kadhal (இது கதிர்வேலன் காதல்) — 2013
Yaar Aval Yaaro (யார் அவள் யாரோ) - Muppozhudhum Un Karpanaigal (முப்பொழுதும் உன் கற்பனைகள்) — 2012
Yaaro Yaaro Nan (யாரோ யாரோ நான்) - Maatraan (மாற்றான்) — 2012
Yaen Ennai (ஏன் என்னை வெல்ல) - Yennai Arindhaal (என்னை அறிந்தால்) — 2015
Yennai Arindhaal (என்னை அறிந்தால்) - Yennai Arindhaal (என்னை அறிந்தால்) — 2015
Yeno Yeno Panithuli (ஏனோ ஏனோ பனித்துளி) - Aadhavan (ஆதவன்) — 2009

No comments:

Post a Comment